சுண்டக்காய் மகத்துவம்

சுண்டக்காய் அன்றாட உணவில் சுண்டைக்காய் எடுத்துகொள்ளவதால் கிடைக்கும் பயன்கள் காடுகளில் தானாகவே வளருவதை மலைசுண்டை என்றும், தோட்டங்களில் நாம் வளர்ப்பதை பால் சுண்டை என்றும் அழைக்கிறோம். பால் சுண்டையை பற்றிதான் இதில் காண இருக்கிறோம். இந்த சுண்டைக்காய் சிறியதாக இருந்தாலும் இதில் அதிக மருத்துவகுணம் உள்ளது. ஆஸ்துமா, வறட்டு இருமல், மார்புசளி, காசநோய் தொந்தரவு இருப்பவர்கள், தினம் இருபது சுண்டைவற்றலை சிறிது நல்லெண்ணெயில் வறுத்து சாப்பிடவேண்டும். நோய் கட்டுப்படும். இது வயிற்றில் உள்ள பூச்சிகளை நீக்கும் இயல்புடையது.…