அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 24
வாத பித்த சிலேஷ்மங்களில் எந்த தோஷத்தை நாடியானது நாடியிருக்குமோ அதன் செய்கையை தான் மற்றவைகளுக்கும் உண்டாகும். நாடியானது வாத பித்த சிலேஷ்மத்தில் ஏதாவது ஒன்றில் சார்ந்திருக்கும் வாத பிரகோபத்தில் தீவிரம் ஆகும்போது தீவிரமாயும் சாந்தமாகும் போது சாந்தமாயும் நாடி நடக்கும். எண்ணெய், வெல்லம், உளுந்து, பால், தேன் இவைகளை தின்றவனுடைய நாடி ….. எண்ணை குடித்தவனுடைய நாடி வலிவாயும், வெல்லம், உளுந்து இவைகளை தின்றவனுடைய நாடி பெரிய தடியைப் போல் நீளமாயும், பால் குடித்தவனுடைய நாடி ஸ்திமிதமாயும்…