தலைமை பண்பை வளர்த்துக் கொள்ளும் வழிமுறைகள். 1
மற்றவர்வகளின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள். புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களை சொல்லவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள். அற்ப விஷயங்களை பெரிதுபடுத்தாதீர்கள், நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள். புரிந்து கொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள். மற்றவர்களை விட உங்களையே உயர்த்தி கர்வப்படாதீர்கள். கண்டிக்கக் கூடிய அதிகாரமும், நியாயமும் உங்கள் பக்கம் இருந்தாலும், எதிர்தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள். எந்த கட்டத்திலும் சந்தேகம் வேண்டாம். எந்த விஷயத்தை- யும், நேர்மையாகக் கையாளுங்கள்.…