அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் —11
நாடிக்கியானம் ….. சீவ நிலை சில இடத்தில் நாபியைப்போல் சக்கிராகாரமாயும், சில இடங்களில் ஆமாதிசயம் முதலிய கோசாகாரமாயும், சில இடங்களில் இருதயாதி ஜீவகிருஹங்களாகவும் இருக்கும். இந்த சரீரத்தில் ஜீவன் தனது ஆகாமி சஞ்சித பிராப்தத்திற்கு சரியாக வசித்து இருப்பான். சிலந்தை தான் பிள்ளையை கூண்டில் விடாது வசிக்கிறதுப்போல் இந்த ஜீவன் பஞ்ச பிராணங்களுடன் கலந்து வசித்திருக்கிறான். யாராவது மேற்கூறிய ஜீவனை யோகாப்பியாசத்தால் பரப்பிரம்மமாக அறிகின்றார்களோ அவர்கள் காலபாசத்தில் சிக்காமல் வாழ்வார்கள். பிராணவாயு இருப்பிடம் ….. நாபி, தாது,…