கோள்களின் கோலாட்டம் -1.24 .2 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள். 1

 2 – க்குடையோர், நீச்ச, சத்துருஸ்தானங்களிலிருந்து நீச்ச, சத்துரு அம்சத்தை அடைந்தால், அல்லது நீச்ச கிரகத்தால் பார்க்கப்பட்டால் தனக்கு இல்லாமையால், அடுத்தவரிடம் வாங்கி உண்பான். அடுத்தவர்களை நீச்ச வழியில் உடன்டச் செய்து, அவ்வகை வருமானங்களை வைத்து ஜீவிப்பான்.  2 – க்குடையவர் 3, 6, 8, 12 – ல் இருந்து ராகுவின் தொடர்ரபை பெற்றாலும், 2- க்குரியவர் சனியாகி நீச்சம் பெற்று, செவ்வாய் சேர்க்கை இருப்பினும் மேற்கண்ட பலனே உண்டாகும்

யோக மஞ்சரி.6

மேஷ ராசியில் சந்திரனும், மீன ராசியில் புதனும்,விருஷபத்தில் அங்காரகனும் இருப்பதாக வைத்துக்கொள்வோம். புதன் மீன ராசியில் நீசம்பெற்றதாலும் சுக்கிரனுடைய ராசியில் அங்காரகன்இருப்பதாலும் இந்த அங்காரக புதர்களால் ஏற்படும்குற்றங்குறைகள் ஜாதகனிடத்தில் அதிகப்படியாகஇருக்குமென்று ஊகிக்கலாம்.அங்காரகன் சுக்கிரனுடைய ராசியிலோ,சுக்கிரனுடைய நவாம்சத்திலோ சுக்கிரன் இருந்தாலும்,ஜாதகன் பொதுவாக அதிகாமியாகவும், பரஸ்திரீகமனமுள்ளவனாகவும் இருப்பானென்பது இவ்விதம்அங்காரக புதர்களால் ஏற்படும் தோஷ பலன்கள்அவர்கள் தங்களுக்குரிய அசுபராசிகளில் இருந்தால் அதிக்கிரமித்தும், அவர்கள் தங்களுக்குரிய சுபராசிகளிருந்தால் தோஷங்கள் ரொம்பவும் குறைந்தும்நடைபெறும். கிரகங்களின் ராசி, பாவ சம்பந்த, வீக்ஷண, சுபா சுபத் தன்மையைக்கவனித்தே…

பராசராஹோரை 6-வது அத்தியாயம். பிராணபதனுடைய துவாதச பாவபலன்.1

1. ஜென்ம லக்கினத்தில் பிராணபதன் இருந்தால் ஜாதகன் ஊமையாவன், பயித்தியம் பிடித்துவிடும். ஜடனாவன், அங்கவீனனாவன். துக்கமுடையவன் கிரசன் அதாவது மெலிந்தவனாவன். குறைவுடையவன், ரோகியாவன். 2. ஜென்மலக்கினத்திற்கு இரண்டாம் பாவத்தில் பிராணபதன் இருந்தால் வெகு தனம், ‍ வெகு தான்னியம், வெகு வேலையாட்கள், வெகு குழந்தைகள், நற்பெயர் இவற்றையுடையவன் ஆவான். 3. மூன்றாமிடத்தில் பிராணபதன் இருந்தால் ஜாதகன் கொலை செய்வோன் காதகன், கர்வத்துடன் கூடியவன், நிஷ்டூரமுடையவன், அதிக திருடன் ( பிராம்மணனாயின் யாகாதிகர்மங்களை விட்டொழிந்தவன் ), குரு பக்தியில்லாதவன்.…

கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு மேஷ லக்னம் 1

மேஷ லக்னம் :- பஞ்சமாபதி சூரியனும், பாக்கியாதிபதி குருவும் சுபத்தன்மை பெற்றவர்கள். இவர்கள் இருவரும் எங்கு கூடியிருப்பினும், அத்தன்மைகளுக்கேற்ப யோக பலன்களை விருத்தி செய்கின்றனர். எவ்வளவு கஷ்டங்கள் வந்த போதிலும் வீழ்ச்சி பெற வைக்காது. காப்பாற்றி விடுகின்றனர். சூரியன் – குருவானவர் சுப வர்க்கத்தன்மை பெற்று இருப்பின், அவர்கள் தசா – புத்தி – அந்த காலங்களில் யோக பலன்களைத் தந்து விடுகின்றனர். புதன், சுக்கிரன், சனி கொடி தன்மை பெற்றவர்கள் ஆவர். இவர்கள் 2, 7,…