புத்தியின் குதியல்கள்.

சண்டை, கோபம், அதீத வருத்தம், புலம்பல், அழுகை, தனக்குதானே பேசிக்கொள்வது போன்றவை பாதி புத்தியின் குதியல்கள். அதனால் புத்தியை முழுதாய் வைத்தால் இதிலிருந்து எல்லாம் தப்பிக்கலாம் எப்படி புத்தியை முழுதாய் வைப்பது மனதை அமைதியாய் வைத்தால் புத்தி முழுதாய் இருக்கும் புத்தி முழுதாய் இருந்தால் தேவை இல்லாத குதியல்கள் இருக்காது

ஒற்றுமை பற்றி சாதுவின் கண்ணோட்டம்

இரு அரசர்களுக்கிடையில் எப்போதும் சண்டை வந்து கொண்டேயிருந்தது. சாது ஒருவர் இவர்களின் ஒற்றுமைக்காக  பெரிதும் முயற்சி எடுத்துக் கொண்டார் இதைப் பார்த்த அவர்கள  அவரைத் திட்டினார்கள். இவர்கள் திட்டுவதைப் பார்த்த சாது மௌனமாக சிரித்துக்கொண்டார். நாங்கள்  உங்களைத் திட்டிக் கொண்டிருக்கிறோம். நீங்கள் சிரிக்கிறீர்கள் என்றார்கள். அதற்கு அந்த சாது என்னைத் திட்டுவதிலேயாவது உங்களுக்கு ஒற்றுமை இருக்கிறதல்லவா அது போதும் என்றார்..