கிரகங்களின் எதிரிடை பலன் அறியும் விதி ராகு – கேது

ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் ராகு – கேது நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரமானது ஜாதகரின் பிறந்த நட்சத்திரமாக வந்தால் ராகு – கேதுவால் கிடைக்கும் பலன்கள் கிடைக்காமல் போகும். ராகு – கேதுவின் எதிரிடையான நட்சத்திரத்தில் 2 – 3 – 5 – 8 – 12 – க்குரியவர், இருந்தால் ஜாதகரை கீழ்த்தரமாக செயல்படுத்தும்.

கோள்களின் கோலாட்டம் 1 -1.7 12 லக்னங்களில் ஆய்வு விருச்சிக லக்கினம். 1

”தேளினிற் செனித் தோற்கிரு சுடரோடுந் தேவர்கட்கிரை வனுஞ்சுபராய் கோளாறு சேய் மாலுசனனுமதர் குபேரனுமி ரவியும் யோகர் கேளுடன் கூடிலி ராஜயோக மதாங் கிளத்தியவசுபர் மாரகராய் நாளுமே கொடுப்பர் குருசனி கொல்லார் நங்கையற்கினிய தெள்ளமுதே ” (யவண காவியம் ). ”புந்தியஞ்சேயும் புகரும் பொல்லாக் கொடியர் இந்து வாரத்தனே யேந்தினழயாய் – சந்ததமும் நல்லனிஞ் ஞால நலனறிப்போன் ஞாயிறுடன் அல்லவனுமாகவறு ” ( தாண்டவமாலை ) ” ஏய தேள்புதன் சேயும்பளிங்கே இயன்ற பாவர் இந்து சுபன் ”…

நட்சத்திரங்களின் எதிரிடை சாதக நிலை.. 6 ஆதிக்கம் செலுத்தும் கிரகம்..2

ஆதிக்கம் செலுத்தும் கிரகம் ஜாதகரின் பிறந்த கிழமை நாதன்   சந்திரன். ஜாதகரின் பிறந்த நட்சத்திரநாதன்    சந்திரன். ஜாதகரின் பிறந்த ராசி நாதன்    சுக்கிரன். ஜாதகரின் லக்கின நாதன்     சுக்கிரன். ஜாதகரின் லக்கினம் நின்ற நட்சத்திர நாதன்.  குரு சந்திரன், சுக்கிரன், குரு போன்றவர்கள் மூலமே ஜாதகருக்கு பலன்கள் கிடைத்து வரும். ஆதிக்கம் செலுத்தும் கிரகங்களோடு ராகு, கேது தொடர்பு பெற்றால் அவர்களும் சேர்ந்து நல்ல, தீய பலன்களை தங்கள் மூலம் தர தகுதி…

கோள்களின் கோலாட்டம் 1 -1.7 12 லக்னங்களில் ஆய்வு துலா லக்கினம்4

பூரண பாவியான சனி, துலாம் லக்கினத்திற்கு பூரண சுபராகி விடுவதால் யோகத் தன்மை பெற்று நல்ல பலன்களைத் தரவல்லவராகி விடுவதாக நூல்களில் சொல்லப்பட்டு உள்ளது. அனால், இவர் தசா புத்திகள் நடக்கும்போது ஏற்படும் பலன்களை அனுபவிப்பவர்களுக்குத் தான் தெரியும். பலவிதமான சோதனைகளுக்கு உட்பட்டு வருபவர்களுக்கு தெரியும். பலாபலன்களில் பாதிப்பை எழுத இடம் தராத சனி இங்கு பாபியாக செயல்படும் காரணம் ? கிருத்திகை, உத்திரம், உத்திராடம், ரோகிணி, அஸ்தம், சித்திரை, மிருகசீரிடம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, நட்சத்திரம்…

கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு கன்னி லக்னம் 2

4 – 7 – க்குடைய குரு மிகவும் பாதிப்பைத் தருவார் என்றும் குரு நின்ற வீட்டின் அதிபதி, குருவிற்கோ, லக்கினத்திற்கோ, அல்லது சந்திரனுக்கு 5 – 9 – ல், இருப்பின் லட்சுமியே வீட்டில் வாசம் செய்வாள். மனையில் தெய்வம் உண்டு என ஆணித்தரமாக சொல்கிறார் ” புலிப்பாணி  முனிவர். இது மறுக்க முடியாத உண்மை, உண்மையே.. சுக்கிரன் – புதன் – சனி ஆகியவர்கள், செவ்வாய் – சூரியன் – குரு ஆகியோரின் நட்சத்திரம்…

கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு சிம்ம லக்கினம்.3

5, 8 க்குரிய குரு இந்த லக்கினத்திற்கு சமநிலையில் நின்று தன்னோடு சேர்ந்த கிரகங்களுக்கு தக்கபடி நன்மை தீமைகளைத் தருகிறார். 6, 7 – க்குரிய சனி மாரகாதிபதி என்ற நிலையில் சுக்கிரன், புதன், குரு இவர்களோடு சந்திரன்இணைவு பெறும் போது பெரும் தீமைகளை தருகிறார். சனி, செவ்வாய், புதன், கேது சேர்க்கையில் சுக்கிரன்,தொடர்பு இல்லாமல் இருந்தால் மிக நல்ல பலன்களைத் தருகிறது. சனி, சுக்கிரன், சந்திரன் சேர்க்கை தொடர்பு அவர் தசாபுத்தி காலங்களில் மிகவும் பாதிப்பான…

கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு மிதுன லக்கினம்.3

மிதுன  ராசி லக்கினத்தில் பிறந்த இவர்களுக்கு சூரியன் குரு, செவ்வாய், இவர்களின் சேர்க்கை (அ) பார்வைக்கு மாரகம் தரக்கூடிய அதிகாரம் உண்டு. இவர்களோடு ராகு, கேதுக்கள் சேர்க்கை பெற்றோ (அ) தொடர்பு பெற்றோ பலமுடன் இருப்பின் இவர்களும் மாரகத்தை தரக்கூடியவர்களே. இந்த மிதுன லக்கினகாரர்களுக்குப் பெரும் பாவியான குரு பகவான் தனது வீட்டிற்கு மறைந்து இருப்பினும் (அ) உடல் ஸ்தானம் என்கிற சந்திரனுக்கு 2,3,6.8,12 ஆகிய இடங்களில் அமர்ந்து இருப்பினும் நல்ல யோகங்களை விருத்தி செய்யக் காரணம்…

16 – ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.

கேதுவின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். துணிச்சலும், ஆற்றலும், அறிவுக் கூர்மையும் உடையவர்கள். தமது திறமையை ஆக்கப் பணிகளுக்குச் செயல்படுத்துவார்கள். மாறாக செயல்படுவார்களேயானால் அதிக இல்லல்களையே பெற்றிடுவார்கள். கலைகளில் தேர்ச்சியுடையவர்கள். எந்த ஒரு காரியத்திலும் துணிவுடன் ஈடுபடுவார்கள்.

7 – ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்

கேதுவின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும் கடவுள் பக்தி அதிகமுடையவர்கள். எந்த ஒரு காரியத்திலும் மற்றவர்களை அனுசரித்து நடப்பார்கள்.  குடும்ப வாழ்க்கையில் அமைதிக் குறைவு ஏற்படவே செய்யும் என்றாலும் அதை சரி செய்து கொள்வார்கள். நல்ல அறிவும், ஆற்றலும் உடையவர்கள். அமைதியான குணம் கொண்டவர்கள் என்று சொல்லலாம்.