கடவுள் தரிசனத்தைப்பற்றி சாரதா தேவிஅன்னையார் கூறியது,–

கடவுள் தரிசனம் எப்படிப் பட்டது என்று உனக்குத் தெரியுமா? அது குழந்தை கையிலிருக்கும் கற்கண்டைப் போன்றது. சிலர் அதில் கொஞ்சம் கொடுக்கும்படி அதனிடம் கெஞ்சுவார்கள். ஆனால் அது அவர்கட்குக் கொடுக்கச் சற்றும் நினைப்பதில்லை. ஆயினும் தான் விரும்புகின்ற வே‍று ஒருவனது கையில் வெகு சுலபமாக அக்குழந்தை அதைக் கொடுதுவிடுகிறது. கடவுளின் தரிசனம் பெற வாழ்நாள் முழுவதும் தவஞ்செய்யும் மனிதன் வெற்றி பெறுதில்லை. ஆனால் எந்தவிதச் சிரமமுமின்றி மற்றொருவன் அதனைப் பெற்று விடுகிறான். அது கடவுளின் கருணையைப் பொறுத்தது.…

சிந்தித்து பார்த்தால்

வேலைக்கு போய் திரும்பி வந்த தன் அம்மாவிடம் 5 வயது சிறுமி கேட்டாள் .. நம்ம வீட்டு பீரோ சாவியை ஆயாகிட்ட ஏம்மா கொடுத்துட்டுப் போகல..? அதைப் போய் ஆயாகிட்ட கொடுப்பாங்களா..? நம்ம வீட்டு பீரோல இருக்குற நகை, பணம் எல்லாம் ஆயாகிட்ட ஏம்மா கொடுத்துட்டுப் போகல..? ஷ்ஷு…. அதெல்லாம் ஆயாகிட்டக் கொடுக்கக் கூடாது… உங்க ATM கார்டை ஆயாகிட்ட ஏம்மா கொடுத்துட்டுப் போகல..? என்ன கேள்வி இது..? நீ சொல்றதெல்லாம் ரொம்ப முக்கியமான பொருள். அதையெல்லாம்…