குற்றமில்லாத மனசுதான் 1

குற்றமில்லாத மனசு தான் சத்தியத்தை சத்தமாக பேசும். உண்மையை உரத்துப் பேசும். இந்த வார்த்தைகள் என்ன சொல்ல வருது இதை பத்தி நாம ஒரு முடிவுக்கு வரணும் அப்படின்னா நமக்கு சத்தியம் அப்படின்னா என்ன உண்மை அப்படின்னா என்ன குற்றம் அப்படின்னா என்னங்கிறது நமக்கு தெளிவா தெரிஞ்சிருக்கணும். நாம வச்சிருக்கிற அகராதியில இந்த வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் நாம வச்சிருக்கோம் அப்படின்னு நமக்கு தெளிவா தெரிஞ்சாதான் நமக்குள்ள ஒரு முடிவுக்கு வரமுடியும் சரி இப்ப யோசிப்போம்

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 42

நான் உனக்கு ஒன்று கூறுவேன். உனக்கு மன அமைதி வேண்டுமானால், பிறரிடத்துக் குற்றம் காணாதே. அதற்குப் பதிலாக, உன் குற்றங்களையே எண்ணிப்பார். இவ்வுலகம் முழுவதையும் உன்னுடையதாக்கிக் கொள்ளப் பழகு. குழந்தாய், இவ்வுலகில் யாரும் உனக்கு அன்னியரல்ல. இவ்வுலகம் முழுதும் உனதே. ஒருவன் பிறரிடத்துக்குக் குற்றம் காணப் புகுவானேயாகில், அவன் மனமே முதலில் மாசடைகின்றது.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 25

தூய்மையான மனமுடைய ஒருவன் இறைவன் நாமத்தை ஜபிக்கும்போது, அந்நாமம் அவனுள்ளிருந்து தானகவே குமிழியிட்டுக் கிளம்புவதை அவன் உணர்கிறான். நாமத்தை ஒத அவன் பாடுபட வேண்டும். ஒவ்வொருவரும் சோம்பேறித்தனத்தை விடுத்து, குறிப்பிட்ட காலத்தில் ஜபமும், தியானமும் செய்யப்பழகுதல் வேண்டும். மனமே எல்லாம். ” இது சுத்தமானது, இது அசுத்தமானது ” என்பதை மனத்தினாலேயே ஒருவன் உணர்கிறான். பிறரிடத்துக் குற்றம் காணும் ஒருவன், முதன் முதல் தன் மனத்தையே மாசுபடுத்திக் கொள்பவன் ஆகிறான்.