ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 4
கீழ்நோக்கி ஒடுவதே தண்ணீரின் இயற்கை. ஆனால் கதிரவனின் கிரணங்கள் அதனை ஆவியாக்கி வானில் உயர்த்துகின்றன. அதுபோன்ற மனமும் இழிந்த பொருள்களான விஷய சுகங்களை நாடிப் போவது இயற்கை . ஆனால் கடவுளின் அருள் உயர்ந்த பொருளை நாடிச் செல்லும்படி மனத்தை தூக்கிவிடும். நாம் நூறு தரம் கேட்டாலும் கூடத் தன் கையிலுள்ளதைக் கொடுக்க மறுக்கும் குழந்தை மற்றொருவருக்கு கேட்ட மாத்திரத்திலேயே கொடுத்துவிடலாம். அது போன்றே ஆண்டவன் அருளும் எவ்விதக் கட்டுப்பாடும் அற்க்கு கிடையாது .