வாழ்க்கைங்கிறது

கோமு -ஒரு சந்தேகம் காமு -என்ன கோமு- வாழ்க்கைங்கிறது என்ன தொடர்ந்து நடந்துகிட்டு இருக்குற மரணமா இல்ல தொடர்ந்து நடந்துகிட்டு இருக்கிற ஜனனமா? காமு- ரெண்டும்தான் கோமு – இப்படி சொன்னா எப்படி கொஞ்சம் விளக்கமா இல்லாட்டி புரியறமாதிரி சொல்லு காமு-  இங்க பாரு சந்தோசமா வாழ்ந்துகிட்டு இருக்கிறவனுக்கு மரணத்தோட ஞாபகமே வராது துக்கத்தில வாழ்ந்துகிட்டு இருக்கிறவனுக்கு மரணத்தோட சிந்தனை வந்துகிட்டே இருக்கும் இதுல தமாஷ் என்னன்னா ரெண்டுபேரும் மரணம் அடைவாங்க  கோமு -நான் கேட்டது மரணம்…

வர வர யாருக்கும் தேச பக்தியே இல்லை

காமு;  வர வர யாருக்கும் தேச பக்தியே இல்லை கோமு;  என்ன தனியா ஏதோ பேசிட்டு இருக்க காமு ;  நீ எப்ப வந்த? கோமு; நீ வர வரன்னு சொல்ல ஆரம்பிச்சவுடனேயே வந்துட்டேன் காமு; உனக்கு தான் எந்த பக்தியும் கிடையாதே அதனால் அத விட்று கோமு ;  நீ என்னமோ நினைச்சிட்டு என்னமோ பேசறேன்னு நினைக்கிறேன் காமு;  என்ன என்னமோ நினைச்சிட்டு என்னமோ பேசறன் நான் கோமு ;  உன்னோட அளவுக்கு யாருக்கும் தேச…