யோக மஞ்சரி.3 சுனபாதி யோக பலன்கள்.
சந்திரனுக்கு இரண்டில் குஜன் பலத்துடனிருந்தால்ஜாதகன் பூபதியாகவும் ( அரசனாகவோ, அல்லதுமிகுந்த செல்வாக்குள்ளவனாகவோஆகலாமென்பதும் பொருள் கொள்ளலாம். ) குரூரசுபாவமுள்ளவனாகவும், டாம்பீகனாகவும்,மனேபலமுள்ளவனாகவும் தனம்விக்கிரமம் உள்ளவனாகவும், கோபியாகவும்இருக்கக்கூடும்.சந்திரனுக்கு இரண்டாவது இராசியில் புதன்பலத்துடன் இருந்தால் வேத சாஸ்திரங்களிலும், சங்கீத முதலான சாஸ்திரங்களிலும் தேர்ச்சியுள்ளவனாய்இருக்கக்கூடும். மனஸ்வீயாகவும், இத வாக்குள்ளவனாகவும், தார்மீகனாகவும் இருக்கக்கூடும் சந்திரனுக்கு இரண்டாவது இராசியில் குருபலத்துடனிருந்தால் சர்வ வித்தைகளிலும் தேர்ச்சிஉள்ளவனாகவும், ஸ்ரீமானாகவும் ( சௌக்கியமுள்ளவனாகவும் ) குடும்பியாகவும் அரசனுக்கு வேண்டியவனாகவும், இராஜத்துல்லியவனாகவும்,யஸஸ் ( கீர்த்தி ) உள்ளவனாகவும் இருக்கக்கூடுமென்பர்.சந்திரன் இருக்கும் இராசிக்கு இரண்டாவதுஇராசியில்…