ஸ்ரீ ச ங் க ர ரி ன் வே தா ந் த மு ர சு. 3

அவித்தையாகிய அஞ்ஞானம் எனப்படுவது இப்படிப்பட்டதென்று விரித்துக்கூற இயலாதது, அது அனாதி, அது இவ்வுலகத் தோற்றறத்திற்கு காரணம். அது ஆத்மாவிடம் கற்பனை செய்யப்பட்ட உபாதி. தண்ணீரில் சந்திரனுடைய பிரதிபிம்பம் ஆடுவது தண்ணீரின் ஆட்டத்தால் என்று அறியாதவன் சந்திரனே ஆடுவதாய் எண்ணுவது போல் மனதிற்குச் சொந்தமான கர்த்ருத்வம், போக்த்ருத்வம் ( செய்ப வனாயும், அனுபவிப்பவனாயும் இருக்குந்த தன்மை ) முதலிய குறுகிய மன பான்மைகள் ஆத்மாவிடம் தவறாகக் கற்பனை செய்யப்படுகின்றன. அஞ்ஞானி பயனில் ஆசை வைத்துக் கர்மத்தை மேற்கொள்ளுகிறான்.