ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு — 24

தீமையைப் போக்கும் மருந்து நான். நான் குணமும் குறியுமற்றவன். நான் கருணையின் எல்லை. (அறம், பொருள், இன்பம், வீடு) என்ற  நாலுவித புருஷார்த்தங்களையும் அளித்து அனைவரையும் பலவாறாய் விடுவிப்பவன் நானே. மூலிகைகளின் ஸாரம் நானே. உலகமாகிற சேலையின் ஊடும் பாவும் நானே. ஓங்காரமெனும் தாமரையினின்று எழும் ஆனந்தமாகிய நறுமணத்தால் மதங்கொண்ட தேனீ போன்றவன் நான். அறிபவன் நானே, அறிவின் சாதனங்களும் நானே, அறிபவன் அறிவு அறியப்படுவதென்ற மூன்றையும் கடந்து கேவலம் ஸத்ரூபமாயுள்ள ஆத்மாவும் நானே. பக்தியும் நானே,…

ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு — 14

சிரத்தையும் பக்தியும் தியானயோகமும் முமுக்ஷு விற்கு முக்திக் காரணங்களாக வேத வாக்கியம் கூறுகிறது. எவனொருவன் இவைகளில் நிலையாயிருக்கின்றானோ அவனுக்கு அவித்தையால் கற்பிக்கப்பட்ட உடலாகிற தலையினின்று விடுதலை ஏற்படுகிறது. அஞ்ஞானத்தின் கூட்டுறவால்தான் பரமாத்மாவேயாகிய உனக்கு ஆத்மாவல்லாததுடன் பிணைப்பும் அதனின்றே பிறவிச் சுழலும் ஏற்பட்டுள்ளன. ஆத்மா, அனாத்மாவாகிய இரண்டையும் பற்றிய பகுத்தறிவினால் எழும் ஞானத்தீ அஞ்ஞானத்தின் செயலை வேருடன் அழித்துவிடும். சீடன் — குருதேவரே, கருணை கூர்ந்து எனது கேள்விக்குச் செவி சாய்த்தல் வேண்டும். அதற்கு மறுமொழியைத் தங்கள் வாயிலிருந்து…

ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு — 12

பிறவிக் கடலாகிய இதை எப்படி நான் கடப்பேன்? எனக்குச் செல்லும் வழி எது? நான் கைக்கொள்ள வேண்டிய உபாயம் எத்தகையதாகும்? இதை ஒரு சிறிதும் நான் அறிய மாட்டேன். பிரபுவே கருணையால் காத்தருளும். பிறவித் துன்பத்தை ஒழிக்கும் வழியில் என்னைக்கூட்டி வைத்தருளும். இவ்வாறு பேசுபவனும் தம்மைச் சரணடைந்தவனும் காட்டுத்தீ போன்ற பிறவித் துன்பத்தால் பொசுக்கப்பட்டவனுமாகிய அவனைக் கருணாரஸத்தின் கசிவுடன் கூடிய பார்வையால் உற்று நோக்கி விரைவில் பயமின்மையை அளிக்கிறார் மஹாத்மாவாகிய குரு. பாதுகாப்பை விரும்புபவனும் மோக்ஷத்தில் நாட்டமுள்ளவனும்…

ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு — 10

கு ரு வு ம், சீ ட னு ம் வேதத்தை நன்கு கற்றுணர்ந்தவரும்,பாவமற்றவரும், ஆசை வாய்ப்பட்டு அழியாதவரும், பிரம்ம ஞானிகளில் சிறந்தவரும், பிரம்ம நிஷ்டையில் ஒடுங்கி நிற்பவரும், விறகில்லாத நெருப்புப் போல் அமைதியுள்ளவரும், காரணமேதுமின்றிக் கடல் போன்ற கருணை உள்ளவரும், தன்னை வணங்கும் நல்லவர்களுக்கு உறவினரும் எவரோ அவரே சிறந்த குரு. அந்த குருவை பக்தியுடனும் நமஸ்காரம், அடக்கம் சேவை முதலியவற்றுடனும் பூஜித்து அவர் ஸந்தோஷமாயிருக்கையில் அவரை அண்டி தான் அறிந்து கொள்ள வேண்டியதைப் பற்றிக்…

தாவரங்களின் உணர்வுகள்.

தாவரங்கள் பேசுவதை மனிதர்களால் கேட்க முடியுமா? ஆமாம் அது சாத்தியம்தான். சொற்களை பயன்படுத்தி பேசுவது என்ற மனித வழக்கத்தின்படி, அவை பேசுவதில்லை. தாவரங்களால் கட்டமைக்கப்பட்ட சுற்றுச் சூழலுக்கு இயற்கையிலேயே ஒத்திசைவு கொண்ட உயிரினங்கள் நாம். எனவே, ஏதாவது ஒரு வழியில் அவற்றுடன் நாம் தொடர்பு கொள்ள வேண்டியது அவசியம். அப்போதுதான் நாம் எப்படி ஒருவரோடு மற்றொருவர் இணைந்திருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ள முடியும். இன்றைய சூழ்நிலையில் சீர்கேடுகளுக்கு முக்கிய காரணம், அவற்றுடன் கொண்டிருந்த உறவை நாம் மறுத்து…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 3

உலகத்தில் துன்பம் நிறைந்திருக்கிறது. நாங்கள் ஆண்டவனை வணங்கினோம். ஆயினும் துன்பத்திற்கு முடிவுமில்லை, என்று வருந்திப் பலர் கூறுகின்றனர். ஆனால் துன்பமும் கடவுள் தந்த பரிசே. அத்துன்பம் கடவுட் கருணையின் சின்னமாகும். ஒருவருக்கு வேண்டுவதெல்லாம் இறைவனது அருளே. ஒருவர் அதற்காகவே பிரார்த்தனை செய்யவேண்டும். மனிதப் பிறவியிலே எவ்வித மகிழ்ச்சியும் இல்லை, உலகமே துன்பத்தில் மூழ்யிருக்கிறது. மகிழ்ச்சி என்பது பெயரளவில் தான் உள்ளது. குருதேவரின் அருள் பெற்றவனே, அவர் ஆண்டவன் வடிவம் என உணர்வான். அதுதான் ஆனந்தம் என்பது நினைவிருக்கட்டும்.

கடவுள் தரிசனத்தைப்பற்றி சாரதா தேவிஅன்னையார் கூறியது,–

கடவுள் தரிசனம் எப்படிப் பட்டது என்று உனக்குத் தெரியுமா? அது குழந்தை கையிலிருக்கும் கற்கண்டைப் போன்றது. சிலர் அதில் கொஞ்சம் கொடுக்கும்படி அதனிடம் கெஞ்சுவார்கள். ஆனால் அது அவர்கட்குக் கொடுக்கச் சற்றும் நினைப்பதில்லை. ஆயினும் தான் விரும்புகின்ற வே‍று ஒருவனது கையில் வெகு சுலபமாக அக்குழந்தை அதைக் கொடுதுவிடுகிறது. கடவுளின் தரிசனம் பெற வாழ்நாள் முழுவதும் தவஞ்செய்யும் மனிதன் வெற்றி பெறுதில்லை. ஆனால் எந்தவிதச் சிரமமுமின்றி மற்றொருவன் அதனைப் பெற்று விடுகிறான். அது கடவுளின் கருணையைப் பொறுத்தது.…