எதிர்பார்ப்புகள்

எதிர்பார்ப்புகள் எப்போதும் நம்மை ஏமாற்றாது.. நாம் எவரிடம் எதிர்பார்க்க வேண்டும் என்பதில் தான் ஏமாந்து விடுகிறோம்! தாய் தந்தையிடம் குழந்தைகள் எதிர்பார்ப்பதும் குழந்தைகளிடம் பெற்றோர் எதிர்பார்ப்பதும் கணவன் மனைவியிடம் எதிர்பார்ப்பதும் மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பதும் மக்கள் அரசாங்கத்திடம் எதிர்பார்ப்பதும் பக்தன் கடவுளிடம் எதிர்பார்ப்பதும் கூட பல சமயங்களில் ஏமாற்றத்தை தந்துவிடுகிறதே இப்படி இருக்கும் போது யாரிடம் தான் எதிர்பார்ப்பது

விஸ்டம் ஆப் லவ் காமு,கோமு

காமு: பிலாசஃபி அப்படீன்னா என்ன? கோமு: பிளட்டோ சொல்றார் விஸ்டம் ஆப் லவ்னு காமு: அப்படீன்னா கோமு: விஸ்டம் ஆப் லவ்வன்னா சுதந்திரமான அன்புன்னு அர்த்தம். காமு: அப்ப என்ன அன்பு அடிமையாய் இருக்கா கோமு: ஆமா காமு: எப்படி சொல்லற கோமு: ஏன் உனக்கு புரியலையா காமு: ஆமாம் கோமு: இப்ப பாத்தீன்னா நீ, அம்மாங்கறதாள நீ உன் அம்மாகிட்ட அன்பு செலுத்தற உங்க அம்மா நீ அவங்க பையன் அப்படீங்கறதாள அன்பு செலுத்தறாங்க, இதே…

கோள்களின் கோலாட்டம் 1 -1.7 12 லக்னங்களில் ஆய்வு விருச்சிக லக்கினம். 1

”தேளினிற் செனித் தோற்கிரு சுடரோடுந் தேவர்கட்கிரை வனுஞ்சுபராய் கோளாறு சேய் மாலுசனனுமதர் குபேரனுமி ரவியும் யோகர் கேளுடன் கூடிலி ராஜயோக மதாங் கிளத்தியவசுபர் மாரகராய் நாளுமே கொடுப்பர் குருசனி கொல்லார் நங்கையற்கினிய தெள்ளமுதே ” (யவண காவியம் ). ”புந்தியஞ்சேயும் புகரும் பொல்லாக் கொடியர் இந்து வாரத்தனே யேந்தினழயாய் – சந்ததமும் நல்லனிஞ் ஞால நலனறிப்போன் ஞாயிறுடன் அல்லவனுமாகவறு ” ( தாண்டவமாலை ) ” ஏய தேள்புதன் சேயும்பளிங்கே இயன்ற பாவர் இந்து சுபன் ”…

வாழ்க்கை என்றால்

வாழ்க்கை என்றால் குடும்பம் என்றால் கணவன், மனைவி சம்பந்தப்பட்டது மட்டும் கிடையாது. சமூகத்தின் பாதிப்பும் சேர்ந்தது தான் சமூகத்தின் பாதிப்பு இல்லாத வீடு இருக்காது. இந்த உலகத்தில் எந்த இருவருக்கும் இரு கட்சிகளுக்கும் எந்த இரு நாடுகளுக்கும் ஏன் தகராறு வருகிறது என்று யாராலுமே தீர்மானமாய் சொல்ல முடியாது காரணம் அவரவர்களை பொறுத்த வரையில் அவரவர்கள் செய்வது தான் சரி.

இரு வேறு பார்வைகள்*

வீட்டிலே காபி கொடுத்தாள்  மனைவி.  உள்ளே ஓர் எறும்பு கிடந்தது. அதைக் கண்ட கணவன் காபியை விடக் கொதிக்க ஆரம்பித்துவிட்டான். விளைவு? சண்டை. சந்தோசமான வீடு மூன்று நாள் துக்க வீடாக மாறிவிட்டது. இதே சம்பவம் இன்னொரு வீட்டிலும் நடந்தது. அந்த வீட்டில் உள்ள கணவன் காபியில் செத்து மிதக்கும் எறும்பை எடுத்தான். அவன் மனைவியை அழைத்து மெதுவாகச் சொன்னான். “உன் காபிக்கு என்னை விடவும் தீவிர ரசிகன் இந்த எறும்புதான். உன் காபிக்காக உயிரையே கொடுத்து…