கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு கடகலக்கினம்2
குரு-செவ்வாயின் சம்பந்தம் பெறாத சூரியன்-சந்திரன் யோகத்தைத் தரமாட்டார்கள். கடக லக்கினத்திற்கு யோகாதிகள் என்கிற வகையில் குரு-செவ்வாய்-சூரியன்-ராகு ஆகியவர்களை நாம் எடுத்துக்கொள்ள இடமுண்டு. ஆனால் புதன், சுக்கிரன், சனி கேது ஆகியவர்களின் தொடர்பை பெற்றால் நிச்சயம் யோகத்தைத் தருவதில்லை. இது அடியேன் அனுபவம். கடக லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு பாதிப்பைத் தரும் கிரக வரிசையில் சுக்கிரன்-புதன்-சனி-கேது கிரகங்களைச் சொல்லியுள்ளனர். ஆனால் பாதிப்பைத் தரும் கிரகங்கள் 3,6,8 ஆகிய ஸ்தானங்களிலிருந்து சூரியன், சந்திரன், குரு, செவ்வாய் ஆகிய கிரகங்களின் தொடர்பை பெற்று…