ஸ்ரீ சங்கரரின் ஞானம் 10

நெருப்பிலிட்ட தங்கம் அழுக்கு நீங்கிப் பிரகாசிப்பது போல் கேள்வி முதலியவற்றால் கொழுந்து விட்டெரியும் ஞானத்தீயில் பரிசுத்தமான ஜீவன் எல்லா மலங்களும் நீங்கித் தன்னுடைய சுய ஒளியுடன் பிரகாசிக்கிறான். ஒன்றை மற்றொன்றாய்க் கொள்ளும் மதியீனம் பரிபூர்ண ஞானத்தாலன்றி வேறெதனாலும் நீங்காது. ஜீவன் பிரம்மமே என்று அறிந்தனுபவிப்பதுதான் பரிபூர்ண ஞானமென்பது வேதத்தின் முடிவு.

ஸ்ரீசங்கரரின் ஞானம். 1

எப்படி ஒளியின் உதவியில்லாமல் ஒரு பொருள் ஒரு பொழுதும் பார்க்கப்படுவதில்லையோ, அப்படி மனதில் ஆராய்ச்சியில்லாமல் எதனாலும் ஞானம் அடையப்படுவதில்லை. அஞ்ஞானத்தால் தோன்றிய அனைத்தும் ஞானம் உதித்தவுடன் மறைந்து போகின்றது. கண்ணாடி போன்ற மனதானது பரிசுத்தமானால் அதில் ஞானம் தானே விளங்கும். ஆகையால் மனதைப் பரிசுத்தமாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.

ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு — 20

நான் ரிஷி, ரிஷிகணங்களெல்லாம் நானே. சிருஷ்டியும் நான், சிருஷ்டிக்கப்படுவதும் நான் செல்வத்தின் நிறைவும், வளர்ச்சியும் நான், திருப்தியும் திருப்தி தீபத்தின் ஒளியும் நான். பிறப்பு, தேய்தல், மூப்பு, சாவு ஆகிய மாறுதல்களினின்று நான் விடுபட்டவன், நான் உடலன்று, சப்தம், ருசி முதலிய இந்திரிய விஷயங்களில் எனக்கப் பற்றில்லை, ஏனெனில் எனக்கு இந்திரியங்கள் இல்லை. துக்கமும் பற்றும் பொறாமையும் பயமும் எனக்கில்லை, ஏனெனில் நான் மனதன்று. உபநிஷதம் கூறுகிறது, அவனுக்குப் பிராணனுமில்லை, மனதுமில்லை. அவன் பரிசுத்தமானவன், உயர்ந்ததற்கெல்லாம் உயர்ந்தவன்,…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 8

கேள்வி — நீங்கள் நைவேத்தியம் செய்யும் உணவை உண்மையில் குருதேவர் உண்கிறாரா? பதில் – ஆம், அவர் உண்கிறார். அவர் கண்ணிலிருந்து ஓர் ஒளி எழுந்து உணவுப் பதார்த்ததங்கள் அனைத்தையும் தடவுகிறது. பக்தர்களின் திருப்திக்காகவே அவர் நைவேத்திய உணவை உண்கிறார். அந்தப் புனிதப் பிரசாதம் மனத்தைப் பரிசுத்தமாக்கும். ஆண்டவனுக்கு நைவேத்தியம் பண்ணாத உணவை உண்பதால் மனம் அசுத்தமடைந்துவிடும். குருதேவருக்கு நைவேத்தியம் பண்ண எவ்விதமான சடங்குகளும் தேவையில்லை. குருமுகமாகப் பெற்ற மந்திரமே போதுமானது.

பரகாயப் பிரவேசம்

தீப ஒளியோக முறையில் மூச்சை உள்ளே இழுக்கும் போது, உள்ளே நிலை நிறுத்தும் போதும், அவைகளுக்கான உச்சரிப்புகளை வாயாலும், பின்னர், மனதாலும், பின்னர் அஜாப முறையில் ஆக்ஞையிலும் சொல்ல – பருவுடன் ஜோதி வடிவாகவும், இதயத்தில் அங்குஷ்ட பிராண ஜோதியையும் காண்பதுடன், பிரணவ தேகத்தையும் அடையலாம். இரண்டு கைகால் விரல்களைக் கட்டி மல்லாந்து படுத்து, மனதைச் சிதறவிடாது நிறுத்தி, மவுனத்தில் அழுந்தினால், மனம் சுழுப்தியில் அடங்கும். இந்த நிலையில், ஐங்கோல உச்சரிப்பை ஏழு ஸ்வரங்களில் எழுப்ப வேண்டும்.…

சித்த விருத்தி

மனிதனின் உயிர் அவன் உள்ளிழித்து வெளியே விடும் மூச்சுக் காற்று ஆகும். நாசி நுனியில் எண்ணத்தை நிறுத்தி, மூச்சுக் காற்றை எண்ணத்தின் மீது ஏற்றி , மூச்சைத் தடை செய்யாமல் அதைத் குதிரையாக்க வேண்டும். இவ்வாறு ஒன்றே கால் நாழிகை மூச்சோடு எண்ணத்தை நனையவிட்டால், சித்த விருத்தி உண்டாகி, ஞான ஒளி மின்னல், சடடோரி தோன்றி மறையும். இப்படி மூச்சுக்குள் இருக்கும் பிராணனை வசியம் செய்யும் முறைதான் விபாசன யோக முறை. முயற்சிப்போம் முடிவு என்னவென்று தான்…