சுக்கிரன் – களத்திரகாரகன் பகுதி 3
லக்கினாதிபதி சுக்கிரன் வீட்டில் இருந்தாலும், சுக்கிரனுடன் சேர்க்கை பெற்றிருந்தாலும், அல்லது சுக்கிரனின் பார்வை பெற்றிருந்தாலும் ஜாதகன் பல பெண்களிடத்தில் விருப்பம் உடையவனாக இருப்பான். ஏழில் சந்திரனும், சுக்கிரனும் சேர்ந்திருந்தாலும் சரி, செவ்வாயும், சனியும் சேர்ந்திருந்தாலும் சரி, ஜாதகனுக்கு உரிய காலத்தில் திருமணம் நடக்காது! இரண்டாம் வீடு மற்றும் ஏழாம் வீட்டிற்கு உரியவர்கள், அதோடு சுக்கிரன் போன்றவர்கள் பாப கிரகங்களுடன் கூடி ஆறு, எட்டு அல்லது பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்தால் மனைவி நிலைக்க மாட்டாள் இரண்டாம் வீடு மற்றும்…