எதிர்பார்ப்புகள்

எதிர்பார்ப்புகள் எப்போதும் நம்மை ஏமாற்றாது.. நாம் எவரிடம் எதிர்பார்க்க வேண்டும் என்பதில் தான் ஏமாந்து விடுகிறோம்! தாய் தந்தையிடம் குழந்தைகள் எதிர்பார்ப்பதும் குழந்தைகளிடம் பெற்றோர் எதிர்பார்ப்பதும் கணவன் மனைவியிடம் எதிர்பார்ப்பதும் மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பதும் மக்கள் அரசாங்கத்திடம் எதிர்பார்ப்பதும் பக்தன் கடவுளிடம் எதிர்பார்ப்பதும் கூட பல சமயங்களில் ஏமாற்றத்தை தந்துவிடுகிறதே இப்படி இருக்கும் போது யாரிடம் தான் எதிர்பார்ப்பது

சந்தோஷமான விஷயம்

ஒவ்வொருவருக்கும் தன்னை பற்றி சிந்திக்க ஒருவர் இருக்கிறார் என்பது மிகவும் சந்தோஷமான விஷயம். அது மன சந்தோஷத்தையும், பலத்தையும் தருகிறது என்பது முற்றிலும் உண்மை. அதன் அடிப்படையில் தோன்றியது தான் குடும்பம். அதன் அங்கத்தினர்களான கணவன், மனைவி உறவு அதன் அடிப்படை மூல வேர் என்பது உனக்காக எப்போதும் எந்த சூழ்நிலையிலும் நான் இருக்கிறேன், உன்னை பற்றி உனக்கு வேண்டியதை நான் சிந்திப்பேன் அது மட்டுமல்ல செயல்படுவேன் என்ற நம்பிக்கை, எதிர்பார்ப்பு, ஆசை, எல்லாம் தான் குடும்பம்…