அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 33
பிரமேஹ ஆமதோஷ நாடி லக்ஷணம் பிரமேகத்தில் நாடி மிசிரமாயும், கிரந்திரூபமாயும், ஆமதோஷத்தில் விழித்தவன் போலும் நாடி நடக்கும். விஷ தோஷ குன்மரோகவாயு சமாப்தி கால நாடி லக்ஷணம் விஷ தோஷத்தில் நாடியானது ஊர்த்துவ கதியாயும், குன்மரோகத்தில் அதோ முகமாயும், வாயு சமாப்திகாலத்தில் ஊர்த்துவபாகத்தில் எழுந்து குதித்தாப் போலும் நாடி நடக்கும்.