ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு — 21

ஆகாசத்தைப் போல் நான் உள்ளேயும், வெளியேயும் நிரம்பி நிற்கிறேன். மாறுபடாமல் அனைத்திலும் ஒன்றேயாகிப் பரிசுத்தமாய்ப் பற்றற்று, மாசற்றுத் திரிபற்ற நான் பரிசுத்தமாயிருக்கிறேன். குணங்களும் செயலுமின்றி நான் என்றமுள்ளவனாய்ப் பரிசுத்தனாய், அழுக்கும், ஆசையும் அற்றவனாய், மாறுபாடற்றவனாய், வடிவற்றவனாய் எப்பொழுதும் முக்தனாய் இருக்கிறேன்.

வெற்றி அடைய

நான் எனக்கு உள்ளே இருந்து என்னை பார்க்கிறேன் அப்படி என்னை பார்க்கும் போது நான் சார்ந்திருக்க கூடிய விஷயங்களை நம்பிக்கையுடன் வரவேற்க்கிறேன் எனது வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் எனக்கான பாடமாகவே பார்க்கிறேன் அதுமட்டுமல்ல என்னை சார்ந்தவர்களின் வாழ்க்கையையும் பாடமாக பார்த்து அதிலிருந்து கவனமாக எனக்கு வேண்டியதை கற்றுக்கொள்கிறேன் எனது திறமைகளை மேலும் வளர்க்க எல்லா உபாயங்களையும் மிக சந்தோஷமாக கையாளுகிறேன் அதில் வெற்றி அடைவேன் என்று எனக்குள் முழுமையாக நம்புகிறேன் என்னுடைய நம்பிக்கை செயலுடன் கூடிய நம்பிக்கை…