ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 46

நீ ஒரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குச் செல்லும் போது உன்னைச் சுற்றிலுமுள்ள பொருள்களை உற்று நோக்கி அறிந்து கொள். நீ வாழும் இடத்தில் என்ன கிடைக்கின்றது எனபதைப் பற்றியும் நீ அறிந்து கொள். ஆனால், உன் வாயை மட்டும் திறவாதே. உங்களது அன்னைக்குப் பணி செய்வதாகச் சாக்குக்கூறி உலகப் பற்றிற்கு உங்களை ஆளாக்கிக் கொள்ளாதீர்கள்.

மாமனிதர்கள்

துக்கமும், துயரமும் நிராசையும்,பேராசையும், எதிர்பார்ப்பும் ,ஏமாற்றமும், அனைத்து மனிதர்களையும் ஆட்கொள்கிறது ஆனால் மாமனிதர்கள் தங்கள் லட்சியத்தை அடைவதில் மட்டும் கவனம் செலுத்துவதால் அவர்களை உலகம் மாமனிதர்கள் என்று ஒப்புக்கொள்கிறது.

பராசரா ஹோரை 6-வது அத்தியாயம். இந்திர தனுசுவின் துவாதர பாவபலன். 2

இந்திர தனுசுவின் துவாதர பாவபலன். 7. ஏழாமிடத்தில் இந்திரதனுசு இருந்தால் ஜாதகன் கடவுள் போன்ற சம்பூர்ண குணமுடைய பிரபு, சாஸ்திரமறிவார், கார்மிகர், பிரியர். 8. எட்டாமிடத்தில் இந்திரதனுசு இருந்தால் ஜாதகன் பிறர் காரியங்களுடையவர், குரூரர், பரதாரகமனமே பிரதானமானவர், சமீப மரணமுடையவர், சீக்கிரத்தில் மரிப்பார். 9. ஒன்பதாமிடத்தில் இந்திர தனுசு இருந்தால் ஜாதகன் தபம் செய்வார், நிலையாக விரதத்தை அநுஷ்டிப்பவர், வித்தை அதிகமாயுடையவர் கொண்டாடப்பட்ட ஞானமுடையவர், ஜகம் முழுவதும் ( உலகம் ) கொண்டாடப்படுவர். 10. பத்தாமிடத்தில் இந்திரதனுசு…

ஸ்ரீ சங்கரரின் வேதாந்த முரசு – 9

வானத்தில் நீல நிறமும், கானலில் நீரும், கட்டையில் ஒரு புருஷனும் தோன்றுவது போல் ஆத்மாவில் உலகம் தோன்றுகிறது. வானத்தில் மேகங்கள் நகர்ந்து செல்லும் பொழுது சந்திரன் நகர்வதாய் பிரமை உண்டாகிறது, அவ்வாறே அஞ்ஞானத்தால் ஒருவனுக்கு ஆத்மா உடல் என்ற பிரமை உண்டாகிறது. இங்ஙனம் அஞ்ஞானத்தால் ஆத்மாவிடம் உடலெனும் பிரமை தோன்றுகிறது. ஆத்மானுபவத்தால் அது மீண்டும் பரமாத்மாவிடம் மறைந்து போகிறது. மதிமயக்கத்தால் ஒருவன் பழுதையைக் காணாமல் பாம்பைக் காணுவது போல் அஞ்ஞானியானவன் உண்மையைக் காணாமல் வியவஹார உலகைக் காண்கிறான்.…

ஸ்ரீ சங்கரரின் வேதாந்தமுரசு.6

மாயை என்பது அவ்யக்தம் எனப்பெயருடையது. அது ஆதியற்றது, அஞ்ஞான வடிவானது. முக்குணமயமானது, பரமேசவரனுடைய உன்னத சக்தியாயிருப்பது. சிறந்த புத்திமானால்தான் அதனுடைய செயல்களினின்று அது ஊகித்தறியப்படும். அந்த மாயையால் இந்த உலகம் முழுவதும் பிறப்பிக்கப்படுகிறது. மாயை இருப்புடையதன்று, இருப்பில்லாதது மன்று, இரு வகைப் பட்டதுமன்று, பகுக்கப்பட்டதாகவோ, பகுக்கப்படாததாகவோ இருவகைப்பட்டதாகவோ அது இல்லை, அங்கங்களை உடையதாகவோ, அங்கங்களில்லாததாகவோ, இருவகைப்பட்டதாகவோ அது இல்லை, அது மிகவும் ஆச்சரியமானது. இப்படிப்பட்டதென்று கூற முடியாத ரூபமுடையது.

ஸ்ரீ ச ங் க ர ரி ன் வே தா ந் த மு ர சு. 2

கருமத்தால் அஞ்ஞானத்தை அழிக்க இயலாது, ஏனெனில் அது அஞ்ஞானத்திற்கு விரோதியன்று எப்படி ஒளியால் மட்டும் இருளைப் போக்க இயலுமோ அப்படி ஞானம் ஒன்றினால்தான் அஞ்ஞானத்தை ஒழிக்க இயலும். ஆத்மா அளவிற்குட்பட்டதாயும் கட்டுப்பட்டதாயும் தோன்றவதற்கு காரணம் அஞ்ஞானம். அஞ்ஞானம் அழியும் பொழுது வேற்றுமையைக் கடந்த ஆத்மாவானது, மேகம் நீங்கியதும் சூரியன் பிரகாசிப்பதுபோல் தன்னுடைய ஸ்வரூபத்தைத் தானே விளக்கிக் காட்டும். உலகம் விருப்பு, வெறுப்புக்களால்நிறைந்துள்ளது. அது ஒரு கனவுக்கொப்பாகும். அஞ்ஞான நிலையில் அது உண்மைபோல் தோன்றினாலும், ஞான விழிப்பு ஏற்பட்டதும்…

ஸ்ரீ ச ங் க ர ரி ன் வே தா ந் த மு ர சு.

அவித்தை (அஞ்ஞானம்). உடல் முதலிய தொகுதிகளை ‘ தான் ‘ அல்லது ‘ ஆத்மா ‘ எனக் கொள்வது அவித்தை அல்லது அஞ்ஞானம். (வெளிச்சம் குறைந்த இடத்தில்) ஒரு பழுதை பாம்பெனக் கருதப் படுவது போலும், முத்துச் சிப்பி வெள்ளியெனக் கருதப்படுவது போலும், அஞ்ஞானியால் உடல் ஆத்மா எனக்கருதப்படுகிறது. ஒரு ஸ்தம்பம் ஆள் என்று தவறாய்க் கருதப்படுவது போலும், கானல், நீர் என்று கருதப்படுவது போலும், அஞ்ஞானியால் உடல், ஆத்மா எனக் கருதப்படுகிறது. ஸம்ஸாரம் எனப்படும் தோற்ற…