நவீன நாகரீகம்

ஒருத்தரை ஒருத்தர் அழித்துக் கொள்ளும் காட்டு மிரண்டிதனமே நவீன நாகரீகமாகிவிட்டது. இப்படி ஏன் தோன்றுகிறது எதனால் இப்படி தோன்றியது என்று சிந்தித்தால் சுற்றுப்புற சூழ்நிலையில் இருக்கும் நிலைகளே காரணம் என்று தோன்றுகிறது பணத்திற்க்குவேண்டி என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்னும் மனோபாவம் பதவிக்கு வேண்டி என்ன வேண்டுமானாலும் செய்யலாம் எனும் மனோ போக்கு பெரியவர்களை இலக்கியங்களை உதாசீனப்படுத்தும் பேச்சுக்கள் செயல்கள் உறவுக்கும்,உணர்வுக்கும் மதிப்பே இல்லாத சூழ்நிலைகள் தான் இப்படி தோன்ற வைத்திருக்கிறது எனக்கு ஏனோ அப்படிதான் தோன்றுகிறது

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 40

புத்தகம் சென்றுகொண்டிருந்த ஒரு பெண்ணிற்குக்கூறிய புத்திமதியாவது, ”எவருடனும் மிகவும் நெருங்கிப் பழகாதே. குடும்பத்திலே பலர் கூடி நடத்தும் கொண்டாட்டங்கள் எதிலும் அதிக அளவு பங்கெடுத்துக் கொள்ளாதே எப்போதும் மனத்தை நோக்கி ‘ மனமே, அடக்கமாக இரு ‘ என்று சொல், பிறரைப்பற்றி அறிய ஆவல் கொள்ளாதே. தியானம், பிரார்த்தனையும் செய்யும் நேரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அதிகப்படுத்திக்கொண்டு வா”. தூய அன்னையார் தம்முடைய மற்றொரு சீடப் பெண்ணிற்கு கூறிய எச்சரிக்கையாவது, ” எந்த ஆணுடனும், உன்னுடைய தந்தையாயினும் சகோதரனாயினும்…

விஸ்டம் ஆப் லவ் காமு,கோமு

காமு: பிலாசஃபி அப்படீன்னா என்ன? கோமு: பிளட்டோ சொல்றார் விஸ்டம் ஆப் லவ்னு காமு: அப்படீன்னா கோமு: விஸ்டம் ஆப் லவ்வன்னா சுதந்திரமான அன்புன்னு அர்த்தம். காமு: அப்ப என்ன அன்பு அடிமையாய் இருக்கா கோமு: ஆமா காமு: எப்படி சொல்லற கோமு: ஏன் உனக்கு புரியலையா காமு: ஆமாம் கோமு: இப்ப பாத்தீன்னா நீ, அம்மாங்கறதாள நீ உன் அம்மாகிட்ட அன்பு செலுத்தற உங்க அம்மா நீ அவங்க பையன் அப்படீங்கறதாள அன்பு செலுத்தறாங்க, இதே…

உறவு சிக்கல் ஏற்படும் போது 1

அன்பு உடைந்துகொள்வது மிக மோசமான விஷயமாகும் அது உங்களுக்கு பயனற்றது என்பதை உணர்வீர்கள் . நீங்கள் நம்பிக்கையை இழந்து துயரப்படுவீர்கள். ஆனால், பல முறை, ஒரு உறவு இருக்கும்போது நீங்கள் சந்தித்த எல்லா பிரச்சினைகளுக்கும் இது ஒரு தீர்வாகும். ஒருவரை தைரியமாக முகம் கொடுப்பதன் மூலம் பிரேக்-அப்களை இன்னும் சமாளிக்க முடியும். நினைவில், வலி தவிர்க்க முடியாதது ஆனால் துன்பத்தை விருப்பமாக்குங்கள் நீங்கள் வெற்றியாளராக வெளிப்படுவீர்கள். இதில் நீங்கள் ஏழு விதமான உணர்வுகளை அடைவீர்கள் அவைகளை பின்வருமாறு…

முக்கியத்துவம்

உறவுகளுக்கு முக்கியத்துவம் தருவதை விட…. முதலில் உன் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடு… ஏனெனில் உன் வாழ்வை தீர்மானிப்பது உறவுகளல்ல உன் உணர்வுகள் தான்….!!! இது உறவு வேண்டாம் என்ற பொருளில் சொல்லப்பட்டதல்ல உறவுகள்  உணர்வோடு இருக்க  வேண்டும் என்ற பொருளில் சொல்லபட்டது  தற்காலத்தில் உள்ள உறவுகள் பெயரில் மட்டுமே இருக்கிறது உணர்வில் இல்லை தாய், தந்தை, மகன், மகள், கணவன், மனைவி, அண்ணன், தம்பி, இந்த வார்த்தைகளின் உணர்வுகளை தற்போதைய மனித சமுதாயம் 75 சதவிகிதம் தொலைத்து…

பிரியமுள்ளவர்களிடத்து

நமக்கு பிரியமுள்ளவர்கள்  சொல்லும் வசை சொற்களுக்கு பொருள் இருப்பதில்லை, பிரியம், உறவு, பாசம், ஆகியவைகளின் அன்பு பெருக்கில் சொற்கள் கரைந்து போய் விடும் போது அவற்றுக்கு தனியே பொருள் எங்கிருந்து கிடைக்கும் இதில் சொல்லியுள்ள விஷயத்தை என்றாவது உணர்ந்தது உண்டா அப்படி ஒரு சம்பவம் நிகழும் போது நாம் நடந்து கொண்ட விதத்தை பற்றி சிந்தித்தது உண்டா அப்படி சிந்திக்கும் போது இதில் சொன்ன விஷயம் நிஜமா, பொய்யா என்று நமக்கே தெரியவரும் அவ்வளவு தான்