ஸ்ரீசங்கரரின் ஞானம். 1

எப்படி ஒளியின் உதவியில்லாமல் ஒரு பொருள் ஒரு பொழுதும் பார்க்கப்படுவதில்லையோ, அப்படி மனதில் ஆராய்ச்சியில்லாமல் எதனாலும் ஞானம் அடையப்படுவதில்லை. அஞ்ஞானத்தால் தோன்றிய அனைத்தும் ஞானம் உதித்தவுடன் மறைந்து போகின்றது. கண்ணாடி போன்ற மனதானது பரிசுத்தமானால் அதில் ஞானம் தானே விளங்கும். ஆகையால் மனதைப் பரிசுத்தமாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.

சூத்திர பாவ ராசிகள். கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.4

மிதுனம், துலாம், கும்பம்:- இது சூத்திர பாவ ராசிகள். இதில் ஒன்றில் பிறப்பு லக்னம் அமைந்து சந்திரனும் லக்கினாதிபதியும் மேற்படி ராசிகளில் ஒன்றின் இருப்பின் பொறுமையுள்ளவர், குட்ட, குட்ட, குனிபவர் பொறுமையிழந்தால் மனிதனாக செயல்பாடாதவர். நிமிர்ந்து நின்றால் யாராலும் வளைக்க முடியாதவர்கள். எதிலும் பிந்தி நிற்பவர் தாழ்வு மனப்பான்மை எதற்கும் ஆமாம் சாமி போடும் குணம் உள்ளவர். சந்தேகம் வந்துவிட்டால் அதை உறுதி படுத்தாமல் தீர்வு காணாமல், உறக்கம் கொள்ளாதவர்கள். பிறருக்கு உதவி செய்யும் குணம் உள்ளவர்கள்.…