நவீன நாகரீகம்

ஒருத்தரை ஒருத்தர் அழித்துக் கொள்ளும் காட்டு மிரண்டிதனமே நவீன நாகரீகமாகிவிட்டது. இப்படி ஏன் தோன்றுகிறது எதனால் இப்படி தோன்றியது என்று சிந்தித்தால் சுற்றுப்புற சூழ்நிலையில் இருக்கும் நிலைகளே காரணம் என்று தோன்றுகிறது பணத்திற்க்குவேண்டி என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்னும் மனோபாவம் பதவிக்கு வேண்டி என்ன வேண்டுமானாலும் செய்யலாம் எனும் மனோ போக்கு பெரியவர்களை இலக்கியங்களை உதாசீனப்படுத்தும் பேச்சுக்கள் செயல்கள் உறவுக்கும்,உணர்வுக்கும் மதிப்பே இல்லாத சூழ்நிலைகள் தான் இப்படி தோன்ற வைத்திருக்கிறது எனக்கு ஏனோ அப்படிதான் தோன்றுகிறது

புரிந்துகொண்டால்

எது பார்க்கப்பட்டதோ அது காட்சி! எது கேட்கப்பட்டதோ அது கேள்வி! எது உணரப்பட்டதோ அது உணர்வு! எது அறியப்பட்டதோ அது அறிவு! இதில் ‘ நீ ‘ என்பதும் எங்கு ,எதில், எப்போது , கடைசியில் வரும் விடை நீ என்பது இல்லை என்பதே இதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது அவசியமில்லை உண்மை இதுதான் இதை புரிந்துகொண்டால் நிம்மதி புரியாவிட்டால் சங்கடம், வருத்தம், துக்கம், துயரம், அத்தனைதான்

ஞானநெறியில் செய்ய வேண்டுவது யாது?

இது சைவம் கூறும் சன்மார்க்கம். இந் நெறியில் நிற்பவர்கள், சிவாகமங்களில் கூறப்பட்ட பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள்களின் உண்மையையம் இயல்பையும் தெளிவாக அறிதல் வேண்டும். அவ்வறிவின் பயனால், ஞானம் ஏற்படும். அப்போது சிவபெருமானை அறியும் உணர்வு தலைப்படும். அந்நிலையிலும், ஆன்மா தன்னையோ, தனது அறிவையோ, தன்னால் அறியப்படும் சிவனையோ வேறுபடுத்தி உணராமல், சிவனருளில் அழுந்தி நிற்கும் பயிற்சினை மேற்கொள்ள வேண்டும்.

முக்கியத்துவம்

உறவுகளுக்கு முக்கியத்துவம் தருவதை விட…. முதலில் உன் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடு… ஏனெனில் உன் வாழ்வை தீர்மானிப்பது உறவுகளல்ல உன் உணர்வுகள் தான்….!!! இது உறவு வேண்டாம் என்ற பொருளில் சொல்லப்பட்டதல்ல உறவுகள்  உணர்வோடு இருக்க  வேண்டும் என்ற பொருளில் சொல்லபட்டது  தற்காலத்தில் உள்ள உறவுகள் பெயரில் மட்டுமே இருக்கிறது உணர்வில் இல்லை தாய், தந்தை, மகன், மகள், கணவன், மனைவி, அண்ணன், தம்பி, இந்த வார்த்தைகளின் உணர்வுகளை தற்போதைய மனித சமுதாயம் 75 சதவிகிதம் தொலைத்து…