இருவாட்சி ( திருவாத்தி) (Bauhinia tomentosa)
இருவாட்சி ( திருவாத்தி) இலைகளை வதக்கி, மிளகு, உப்பு ,சேர்த்து அரைத்து , தாளித்து-வதக்கி துவையலாகச் செய்து சாப்பிட்டு வரலாம். இதனால்,பசி, மந்தம்,வயிற்றுக் கடுப்பு போன்றவை குணமாகும். குழந்தைகளுக்குத் தொடர்ந்து இந்தத் துவையலைக் கொடுத்துவர நல்ல பசி எடுப்பதுடன் நாக்கின் சுவை அறியும் திறனும் மேம்படும்.