கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு மேஷ லக்னம் :-
இந்த மேஷ லக்கினத்திற்கு செவ்வாய் 1 – 8 க்குரியவராகிறார். இவர் 1, 5, 8, 9, 10 – ல் இருந்தால் ஆயுள் பலம் ஏற்படுகிறது. சொத்துக்கள் சேரும். ஆனால் அரசாங்க வகையில் பயம் ஏற்படும். காவல் துறையினால் தண்டனைகள் ஏற்படலாம் என்ற விதி சொல்லப்படுகிறது. செவ்வாய் மேற்படி இடங்களில் சுபத்தன்மை இழந்து இருப்பின் வசதி வாய்ப்பை தருவதில்லை.நல்ல நிலையில் இருப்பின் யோகம் தருகிறது.