ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 23

ஆத்மிகக் காட்சி நிறைவுறும் போது, ஒருவன் தன் இதயத்தில் குடிகொண்டுள்ள ஆண்டவனே அமுக்கப்பட்டவர், துன்புறுத்தப்பட்டவர், தீண்டாதோர், சண்டாளர் ஆகிய மற்றெல்லாரிடத்தும் இருப்பதை உணர்வான்,  இவ்வுணர்வு உண்மையான பணிவுடைமையைத் தரும். ஆண்டவன் எல்லோருக்கும் உரியவன் தீவிரமாகச் சாதனை செய்தால் சீக்கிரமாக அவனை அடையலாம். ஆண்டவனது நாமத்தை விரல்களைக்கொண்டு ஜபித்து அதன் மூலம் அவை புனிதம் அடைதற்காகவே அவன் நமக்கு விரல்களை அளித்துள்ளான். மேகத்தைக் காற்று கலைப்பதைப் போல ஆண்டவன் நாமம் உலகப்பற்றாகிய மேகத்தைக் கலைத்துவிடும்.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 22

வானத்து நிலா மேகத்தால் மூடப்பட்டிருக்கிறது. காற்று கொஞ்சங் கொஞ்சமாக அம்மேகத்தை விலக்க வேண்டியதாகிறது, அப்போதுதான் நிலவைக் காணமுடியும். அது திடீரெனப் போய் விடுகிறதா? ஆத்மிகப் பூரணத்துவமும் அது போலத்தான். பழைய செயல்களின் பலன் கொஞ்சங் கொஞ்சமாகவே தீரும். ஆண்டவனை உணர்ந்தால் அவ்வாறு உணர்ந்தோர்க்கு ஆண்டவன் ஞானத்தையும் உள்ளொளியையும் அளிப்பான், அதனை அவரே உணர்வர்.

ஸ்ரீராமகிருஷ்ணர்.

ஆண்டவனே ஸ்ரீராமகிருஷ்ணராகத் தோன்றினான். இது உண்மையே. பிறருடைய துக்கத்தையும், துன்பத்தையும் போக்கவே ஆண்டவன் அந்த மனித வடிவைப் பெற்றான். தனது நகரில் மாறுவேடத்துடன் செல்லும் அரசனைப்போல உலவினான். பிறர் அவனை இன்னான் என உணர்ந்ததும் அவன் மறைந்துவிட்டான். குருதேவரைச் சரண்புகுந்தால் நீ யாவையும் பெறுவாய். துறவுதான் அவரது பெருமை. நாம் அவர் பெயரைச் சொல்வதும் உண்பதும் அனுபவிப்பதும் அவர் எல்லாவற்றையுமே துறந்து விட்டமையால்தான். சத்தியத்தினிடம் குருதேவருக்குத்தான் எவ்வளவு பற்று, இரும்பு யுகமான இக்கலியுகத்தில் உண்மையைக் கடைப் பிடிப்பதே…

கோவிட் 19 நகைசுவை

நல்லவேளை ஆண்டவன் மனுஷனுக்கு எதுக்கு ரெண்டு காது ஒத்த காது போதும்னு நினைக்கல அப்படி நினைச்சுருந்தார்னா இப்ப நாம எல்லோரும் மாஸ்க் மாட்டுறதுக்கு ரொம்ப சிரமப்பட்டுருப்போம்.

கடவுள்

காந்த ஊசி எப்பொழுதும் வடக்கு திசையையே காட்டுவதால், கப்பல்கள் கடலில் திசை தப்பிப் போவதில்லை. அதுபோலவே மனிதனுடைய மனம் இறைவனையே நாடியிருக்கும்வரை, அவன் வாழ்க்கை கடலில் திசை தப்பிப் போவதில்லை.  — இராமகிருஷ்ண பரமஹம்சர் “ ” மலர்களிலே மணம் இருப்பதுபோலவே ஆண்டவனும் உன்னிடமே இருக்கிறான். இதை அறியாமல், தன்னிடம் இருக்கும் கஸ்தூரியை உணராத மான், புல்லில் தேடுவது போல் நீ ஏன் வெளியில் தேடுகிறாய்?”   — கபீர்தாஸ் . “கடவுளை வணங்குதல் என்றால் என்ன?…