பிலவ ஆண்டு (2021-ஏப்ரல் 14-ந்தேதி முதல் 2022 ஏப்ரல் 13-ந்தேதி வரை) பொது பலன்கள்:

பிலவத்தின் மாரிகொஞ்சம் பீடைமிகும் ராசர் சலமிகுதிதுன்பந் தருக்கும் நலமில்லை நாலுகாற் சீவனெல்லா நாசமாம் வேளாண்மை பாலுமின்றிச் செயபுவனம் பாழ் விளக்கம்: அதாவது, பிலவ ஆண்டில் மழை குறைவாக பெய்யும், ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு துன்பம் அதிகரிக்கும், அதனால் அதிகம் கோபம் கொள்வர், மக்களுக்கு நலமில்லை. ஆடு, மாடு, உள்பட நான்கு கால்களைக் கொண்ட உயிரினங்கள் பெருமளவில் மடியும். உணவும், பாலும் இன்றி உலகம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும். ஆதாரம்:- இடைக்காட்டுச் சித்தரின்-“அறுபது வருட வெண்பா”.

எங்கும் அப்பாவிகளே பலியாகின்றனர்.

காட்டில் பயங்கரமான நோய் பரவியது நிறைய விலங்குகள் இறந்தன. பல சாகும் தருவாயில் இருந்தன. விலங்குகளின் அரசனான சிங்கம் எல்லா விலங்குகளையும் அழைத்தது. “காட்டில் பாவம் அதிகரித்து விட்டது. இந்தக் காட்டில் யார் அதிகப் பாவம் செய்தார்களோ, அவரைக் கண்டுபிடித்துப் பலி கொடுத்தால் எல்லாம் சரியாகிவிடும்” என்று சொன்னது சிங்கம். ஒருவரும் பேசவில்லை. சிங்கம், தான் நிறைய ஆடுகளைக் கொன்று பாவம் செய்ததாகவும், தான் பலியாவதற்குத் தயார் என்றும் சொன்னது. உடனே நரி, “மாண்பு மிகு அரசே,…