ஸ்ரீசங்கரரின் பஜகோவிந்தம் 7
மதிகெட்டவனே! பொருள் சேர்ப்பதில் ஆசையை விட்டொழி, வீணாண ஆசைகளினின்று விலகிய நல்ல எண்ணங்களை மனதில் சிந்தனை செய். உன்னுடைய நிலைக்கேற்ற கருமங்களைச் செய்வதால் கிடைக்கக்கூடிய பொருளைக் கொண்டு மனதைச் சந்தோஷப்படுத்திக்கொள். பொருள் எப்பொழுதுமே துன்பம் விளைவிப்பதென்பதை மனதில் வைத்துக்கொள். அதனால் சிறிதளவு சுகம் கூட இல்லை என்பது உண்மை. பெற்ற பிள்ளையிடமிருந்துங்கூட, பொருள் படைத்தவர்களுக்கு பயம் ஏற்படுகிறது. இப்படித்தான் எல்லா இடங்களிலும் காணப்படுகிறது.