அ எழுத்தின் சிறப்பு
தமிழ் நெடுங்கணக்கின் முதல் எழுத்து, இதுவே முதல் உயிரெழுத்தாகும், அகரம் என்று வழங்கப்படுகிறது. உயிரும், மெய்யுமாக அமைந்த எழுத்துக்களின் வரிசை நெடுங்கணக்கு எனப்படும். ஆங்கிலம் போன்ற மொழிகளில் உயிர் எழுத்துக்களும், மெய்யெழுத்துக்களும் கலந்ததாக நெடுங்கணக்கு உள்ளது. தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில், உயிரெழுத்துக்கள் முதலிலும், மெய்யெழுத்துக்கள் பின்னரும் அமைகின்றன. தமிழின் மிகப் பழைய இலக்கண நூலான தொல்காப்பியம் அகரமே, எழுத்துக்களுக்கு முதலானது என்று குறிப்பிடுகிறது. வள்ளுவரின் திருக்குறளும் இந்தக் கருத்தை வலியுறுத்துகிறது. குழந்தைகள் முதன் முதலில் ஒலியெழுப்பத்…