பிண்டத்தில் நவகிரக விளையாட்டு 9 கோள்களின் கோலாட்டத்தின் படி ..

அண்டத்திலிருந்து செயல்படும் இவைகள் பிண்டமான பூமி நீரில் அடங்கி பூமி நீர் இரண்டும் நெருப்பில் அடங்கி நிலம், நீர், நெருப்பு, மூன்றும் காற்றில் அடங்கி இவைகள் நான்கும் ஆகாயத்தில் அடங்கி ஒடுங்கி செயல்படும். இவ்வுண்மை நிலையை கண்டவரே வியோமவெளியான, பரவெளியில் நின்று ஒளிப்பிழம்பாக இருந்து அருள்பாலிக்கும் சித்தர், மகான், யோகி, மகரிஷி, போன்றவர்கள் இந்நிலையை வாசி மூலம் அறியும் பெரும் பாக்கியத்தை பெறும் வாய்ப்பு மனித பிறவிக்கேயாகும்..

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 24

மனம் ஒவ்வொன்றும் மனத்தைப் பொறுத்தே உள்ளது. மனத்தூய்மையின்றி, ஒரு காரியத்தையும் சாதிக்க இயலாது. முக்தியை நாடுவோனுக்குக் குரு, இறைவன், பக்தர்கள் ஆகியோரது அருள் கிட்டியிருந்தாலும், தனது மனத்தின் அருளைப் பெறாது போய் விடின் அவன் துன்பத்துக்காளாவான். இறைநெறி நிற்பவனின் மனம் அவனுக்கே அருள் புரிவதாக இருக்க வேண்டும். கடவுளை ஒருவன் தரிசிப்பதால் வேறென்ன அடைகிறான்? அவனுக்கென இரு கொம்புகள் முளைக்கின்றனவா? அல்ல, அவன் மனம் பரிசுத்தமடைகிறது. மனம் பரிசுத்தமடைவதால் அவனுக்கு மெய்யறிவும், ஞானவிழிப்பும் ஏற்படுகின்றன. பரிசுத்தமான மனமுடைய…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 3

உலகத்தில் துன்பம் நிறைந்திருக்கிறது. நாங்கள் ஆண்டவனை வணங்கினோம். ஆயினும் துன்பத்திற்கு முடிவுமில்லை, என்று வருந்திப் பலர் கூறுகின்றனர். ஆனால் துன்பமும் கடவுள் தந்த பரிசே. அத்துன்பம் கடவுட் கருணையின் சின்னமாகும். ஒருவருக்கு வேண்டுவதெல்லாம் இறைவனது அருளே. ஒருவர் அதற்காகவே பிரார்த்தனை செய்யவேண்டும். மனிதப் பிறவியிலே எவ்வித மகிழ்ச்சியும் இல்லை, உலகமே துன்பத்தில் மூழ்யிருக்கிறது. மகிழ்ச்சி என்பது பெயரளவில் தான் உள்ளது. குருதேவரின் அருள் பெற்றவனே, அவர் ஆண்டவன் வடிவம் என உணர்வான். அதுதான் ஆனந்தம் என்பது நினைவிருக்கட்டும்.

இப்படியும் கொஞ்சம் யோசியுங்க

ஓர் ஊரில் ஏழை ஒருத்தன் இருந்தான். ஒருநாள், பிள்ளையார் சந்நிதிக்கு வந்த அவன் , ”கணேசா! இது உனக்கே நல்லாருக்கா? நான் நாள் தவறாம வந்து, உன்னை கும்பிட்டுட்டுப் போறேன். என்ன பிரயோசனம்? உன்னை எட்டிக்கூடப் பார்க்கிறதில்லை, என் பக்கத்து வீட்டுக்காரன். ஆனா பாரு, நேத்து அவனுக்கு லாட்டரிச் சீட்டுல ஐம்பதாயிரம் ரூபா பரிசு விழுந்திருக்கு!” என்று புலம்பிவிட்டுப் போனான். ஒரு வாரம் கழித்து மீண்டும் வந்த அவன், ”பிள்ளையாரப்பா! நீ பண்றது ரொம்ப அநியாயம்! ஆடிக்கொரு…