ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 42

நான் உனக்கு ஒன்று கூறுவேன். உனக்கு மன அமைதி வேண்டுமானால், பிறரிடத்துக் குற்றம் காணாதே. அதற்குப் பதிலாக, உன் குற்றங்களையே எண்ணிப்பார். இவ்வுலகம் முழுவதையும் உன்னுடையதாக்கிக் கொள்ளப் பழகு. குழந்தாய், இவ்வுலகில் யாரும் உனக்கு அன்னியரல்ல. இவ்வுலகம் முழுதும் உனதே. ஒருவன் பிறரிடத்துக்குக் குற்றம் காணப் புகுவானேயாகில், அவன் மனமே முதலில் மாசடைகின்றது.

மன முதிர்ச்சி 2

6. செய்வதை மன அமைதியுடன் செய்வது. 7. நம் புத்திசாலித்தனத்தை மற்றவர்களிடம் நிரூபிப்பதை விடுவது. 8. நம் செயல்களை மற்றவர் ஏற்க வேண்டும் என்ற நிலையை விடுதல். 9. மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதை விடுதல். 10. எதற்குமே சஞ்சலப்படாமல் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள முயற்சித்தல்.. 11. நம் அடிப்படை தேவைக்கும், நாம் அடைய விரும்புவற்றிற்கும் உள்ள வேறுபாட்டினை உணர்தல். 12. சந்தோசம் என்பது பொருள் சம்பந்தப்பட்டது அல்ல என்ற நிலையை அடைதல்.

குணங்களின் தன்மை 3

சத்வ குணம் – அமைதியும் சாந்தமும் முழு தெளிவும் கொண்ட நிலை, இது செயலற்ற நிலை அல்ல விளைவுகளின் தன்மையை முழுமையாக உணர்ந்த தீவிர செயல் பாட்டு நிலையாகும். அமைதியாய் இருப்பதே ஆற்றலின் வெளிப்பாடு.

27 – ந் தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.

அங்காரகனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். எதையும் அவசரப்படாமல் நிதானமாகச் செயலாற்றுவார்கள். எதையும் சீராகச் செய்யவேண்டும் என்ற கருத்து உடையவர்கள். ஒருமுறைக்கு பலமுறை யோசித்தே செயலில் ஈடுபடுவார்கள். அடக்கம், பணிவு, அமைதி, போன்ற குணங்கள் பொருந்தியவர்களாக இருப்பார்கள்.