அன்னை சாரதா தேவியாரின் அன்பு முரசு
ஒரு தரமாவது உண்மையாகக் கடவுளிடம் பிரார்த்தனை செய்தவன் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை. இடைவிடாது ஆண்டவனைப் பிரார்த்திப்பவன் அவனது அருளால் பிரேம பக்தியை அடைகிறான். குழந்தாய், , இந்தப் பிரேமையே ஆத்மிக வாழ்வின் இதயமாகும். பிருந்தாவன கோபிகள் இதனை அடைந்தனர். அவர்கள் இவுவலகத்தில் கண்ணனைத் தவிரப் பிறிதொன்றையும் உணரவில்லை.