அன்னை சாரதா தேவியின் அன்பு முரசு
உடன் சாதனப் பயிற்சியிலும், சொல்லிலும், செயலிலும் உண்மையாக இரு, அப்போது எவ்வளவு இன்பமாக உள்ளோம் என்பதை உணர்வாய். உலகிலுள்ள எல்லாப்பிராணிகளின் மீதும் ஆண்டவனது கருணை மழை பெய்கின்றது. அது வேண்டும் எனக்கேட்பது அவசியம் இல்லை. நீ உண்மையாகத்தியானம் பழகு. அப்போது ஆண்டவனின் அளவற்ற கருணையின் இருப்பை உணர்ந்து கொள்வாய். ஆண்டவன் நேர்மையையும் சத்தியத்தையும், அன்பையுமே விரும்புவான். வெளிப்பகட்டானவாய் வார்த்தைகள் அவனைத் தீண்டுவதுமில்லை.