ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 46

நீ ஒரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குச் செல்லும் போது உன்னைச் சுற்றிலுமுள்ள பொருள்களை உற்று நோக்கி அறிந்து கொள். நீ வாழும் இடத்தில் என்ன கிடைக்கின்றது எனபதைப் பற்றியும் நீ அறிந்து கொள். ஆனால், உன் வாயை மட்டும் திறவாதே. உங்களது அன்னைக்குப் பணி செய்வதாகச் சாக்குக்கூறி உலகப் பற்றிற்கு உங்களை ஆளாக்கிக் கொள்ளாதீர்கள்.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 44

ஒருவன் போகப் பொருள்களினிடையே வாழ்வானாயின், இயற்கையாகவே அவன் அவற்றால் வெல்லப்படுகிறான். மரத்தால் செய்யப்பட்ட ஒரு பெண் உருவத்தையும் கண்ணெடுத்துப் பாராதே, அதன் அருகிலும் செல்லாதே சீடர் – அன்னையே, தீய எண்ணங்கள் என் மனத்துள் புகுவதில்லை உடனே, அன்னையார் அவரைப் பேசவிடாமல் தடுத்து,  அவ்வாறு உரைக்காதே, இவ்வாறு ஒருவர் பேசுவது தவறு” என்றார்.

அன்னை சாரதா தேவி அன்பு முரசு

உன் இதயத்தின் உள்ளிடத்திருந்து எப்போதும் ஆண்டவன் நாமத்தைக் கூறிக்கொண்டேயிரு, மனப்பூர்வமாக குருதேவரைத் தஞ்சம் அடை, சூழ்நிலையிலுள்ள பொருள்களை உன் மனம் எவ்வாறு கருதுகிறது என்பது பற்றிய கவலை வேண்டாம். ஆத்ம வழியில் முன்னேறியுள்ளோமா இல்லையா என்று கணக்கிட்டுப் பார்த்துக் கவலைப்படுவதில் உன் காலத்தை வீணாக்காதே, நாம் முன்னேறியுள்ளோமா என்று ஆராய்தலே அகங்காரமாகும். உன் குருவினிடத்தும் இஷ்ட தேவதையிடத்தும் நம்பிக்கை வை.