கேள்விகேட்க ஆரம்பிச்சா

கேள்விகேட்க ஆரம்பிச்சா யார் கூடையும் ஒத்துப்போகமுடியாது. ஏன்னா கேள்வி கேக்குறது யாருக்கும் பிடிக்காது  அதனால மனசுக்குள்ள ஒரு கோபம் துளிர் விட்டு வளர முயற்சி பண்ணிட்டே இருக்கும் அதனாலேயே யார் கூடயும் ஒத்து போக முடியாது தூக்கம் வராது, புத்தி லோ, லோன்னு அலையும், சகலமும் தப்புன்னு படும். அனுபவம் நிறைய சொல்லித்தரும். உன் அனுபவம் உனக்குத் தெளிவைத் தரும். அப்ப உன் கோபம் என்னாச்சு அப்படின்னு பாரு உனக்கே சிரிப்பா வரும் இதுக்கா நாம கோபப்பட்டோம்…

விடை தேடி 2

ஒரே விஷயம் தரும் அனுபவம் ஒவ்வொரு கால கட்டத்தில் ஒவ்வொரு விதமாக உணரப்படுகிறதே அது ஏன்? அது பணமாகட்டும், பதவியாகட்டும், படிப்பில் முதலாவது வந்ததாகட்டும், பெண் ஆகட்டும், சந்தோஷம் எனும் பொறி நமக்குள் படர்ந்து நிறைவது கன நேரமாகவோ அல்லது அன்றைய நாள் மட்டுமே தான் இருக்கிறது, பின் அதே அனுபவம் வாய்த்தால் கூட சந்தோஷம் இருந்தாலும் கூட அதன் சதவிகிதம் மாறிவிடுகிறதே, ஒரு கால கட்டத்தில் அந்த அனுபவம் நமக்கு சந்தோஷபட வைக்காமல் கூட போய்விடுகிறதே,

ஞானம் அப்படின்னா என்ன

ஞானம்ன்னா என்ன தனக்குள் உண்டான அறிவுக்கு ஞானம்ன்னு பேர் முதிர்ந்த அனுபவ அறிவுக்கு ஞானம்ன்னு சொல்லலாமா கூடாது உனக்குள் உள்ள இருந்து அறிவு வரணும் அப்படி வந்தா மட்டுமே ஞானம் அப்படி வருமா வந்துருக்கே உதாரணத்துக்கு ரிஷிகள், யோகிகள்

சிரிக்க

முல்லா தனது மனைவியிடம் சொன்னார். நண்பர் ஒருவருடன் சேர்ந்து ஒரு தொழில் ஆரம்பித்திருக்கிறேன். மூலதனம் மட்டும் ஒரு கோடி ரூபாய்  என்று  மனைவி கேட்டார். அப்படி ஆனால் நீங்கள் பாதிப் பணம் போட வேண்டியிருக்குமே, அவ்வளவு பணத்திற்கு எங்கே போவீர்கள். அதற்கு முல்லாசொன்னார்.. நண்பன் மூலதனம் முழுவதையும் போடுவான். என் அனுபவம் தொழில் நடத்த உதவும். என் அனுபவம் தான் என் பங்கு மூலதனம், முல்லாவின் மனைவிக்கு மிகவும் சந்தோஷம். . லாபத்தில் இருவருக்கும் சம பங்கா?…