அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 27

இயற்கை நாடி லக்ஷணம் ….. நாடியானது அதிகாலையில் கோமளமாயும், பகலில் உஷ்ணமாயும் சாயங்காலம் வேகமாயும் இரவில் மந்தமாயும் நடக்கும். அதிக தாப சுர நாடி லக்ஷணம் …. அதிக தாபமுடன் கலந்த சுர ரோகிக்கு மிகவும் வியர்வையும் நாடியானது சந்நிபாத நாடியைப்போலும் நடக்கும். சுர நாடி ….. சுரத்தில் நாடியானது உஷ்ணமாயும், வேகமாயும் நடக்கும்.சுரம், வாத ரோகம், சையோக நாடி லக்ஷணம் ….. சுரம், வாத ரோகம் இவைகளில் நாடி குறுக்கியும் நடக்கும். மேலும் ஸ்திரி சம்போகம்…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 31

தியானம் செய்யும் பழக்கம் மனத்தை ஒருமுகப்படுத்தும். அழியாப்பொருள்களையும் அழியும் பொருள்களையும் எப்போதும் பிரித்தறிக. இவ்வுலகப் பொருள்களுளொன்றின் மீது உங்கள் மனம் செல்லுவதைக் காணும் போதெல்லாம் உடனே அப்பொருள்களின் நிலையற்ற தன்மையைச் சிந்தித்துக் கடவுள் மீது மனத்தை நிலை நிறுத்த முயற்சி செய்க. வாழ்க்கையில் துன்பங்களால் அடிப்பட்ட பிறகே, பலர் இறைவனது நாமத்தை ஒதுகின்றனர். ஆனால் எவன் தன் இளமை முதற்கொண்டடே மனத்தை இறைவனுடைய திருவடிகளில் அன்றலர்ந்த மலரைப்போல் அர்ப்பணம் செய்வானோ, அவனே உண்மையில் பாக்கியசாலி. மனம் எப்போதும்…