அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 19
அசாத்திய ரோக நாடி ….. சந்நிபாத அசாத்திய நாடியானது மந்தமாயும், சிதிலமாயும் வியாகுலமாயும், நின்றும் தீவிரகதியாயும் இல்லாததுப்போலும் தனது இடத்தை விட்டு கீழாகவும், மேலாகவும் விரல்களிலும் நடையுடையதும் வேரானகதியுடையதாயும் நாடி நடக்கும். இதுவுமது ….. அதிகவேகமான பாய்ச்சலும், மிகவும் மந்தமாயும் தாமதமாயும் நரம்பைவிட்டு மாமிசதாதுவில் சஞ்சரித்துக்கொண்டும் அதிசூஷ்மமாயும் வக்கிரமாயும் விவிதமாயும் நடக்கும் நாடி சந்நிபாத அசாத்திய நாடியென்றும் அறியவும். மரண குறி நாடி ….. அதிக உஷ்ணமாயிருக்குங்காலத்தில் சீதளநாடியும், அதிக சீதளமாய் இருக்கும்போது உஷ்ண.நாடியும், விவிதபேதங்களான நடையையும்…