Athma

அருகம்புல் :

அருகம்புல் : அருகம்புல் சாறு தற்போது மிகவும் பிரபலம் . அருகம்புல்லின் முழுத்தாவரமும் இனிப்பு சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டதாகும். அருகம்புல்லை தூய்மையானதாக சேகரித்து இடித்து சாறு எடுத்துக் கொள்ளவேண்டும் , இந்த சாறுடன் சிறிதளவு தேன் சேர்த்து பானமாக பருகலாம் . இது ரத்தத்தை சுத்தி செய்வதுடன் உடல் வெப்பத்தையும் குறைக்கும். சிறுநீர்ப்பெருக்கி சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்தும் ஒரு கைப்பிடி அளவு அருகம் புல்லை அரைத்து பச்சையாக செய்து பசும்பாலில் கலக்கி குடித்து வர வெள்ளைப்படுதல்…

மாகாளிக்கிழங்கு :

மாகாளிக்கிழங்கு : மாகாளிக்கிழங்கு ஊறுகாய் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். இது இரத்தத்தை சுத்தம் செய்வதுடன் செரிமான தன்மையும் அதிகரிக்கிறது தற்போது நாட்டு மருந்து கடைகளில் உண்மையான நன்னாரிக்கு பதிலாக மாகாளிக்கிழங்கே அதிகம் கிடைக்கிறது. இதனை கொண்டு சர்பத் மற்றும் உடல் குளிர்ச்சி ஏற்படும் பலவிதமான பானங்களையும் தயார் செய்யலாம் . இவற்றை முறைப்படி பயன்படுத்தி வெப்ப காலத்தில் ஏற்படும் உடல் சூட்டையும் சிறுநீர் எரிச்சல் போன்ற உபாதைகளையும் தவிர்க்கலாம்.

சுக்கங்காய்: (சுகன்)

சுக்கங்காய் முதிராத காய்களில் சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு மற்றும் மோர் சேர்த்து கலவையில் ஊற வைத்து வற்றலாகக் செய்து கொள்ளலாம் . இதனை வற்றலை போல் வெயிலில் உலர்த்தி பத்திரப்படுத்தி கொண்டு தேவையான போது நெய் அல்லது நல்லெண்ணெயில் இட்டு வறுத்து சாப்பிட நன்றாகப் பசி எடுக்கும் தயிர் சாதம் மற்றும் பழைய சாதத்திற்கு இது சிறந்த துணை உணவாகும்.

காகனம் (சங்கு புஷ்பம்)

சங்கு புஷ்பம் மலர்களிலிருந்து இதழ்களை எடுத்து நீரில் இட்டு கொதிக்க வைத்து தேநீராக கூட அருந்தலாம் . இதனால் உடல் அரிப்பு குணமாகும். இதன் இதழ்களை கொண்டு சிரப், சர்பத் போன்றவை செய்து சாப்பிடலாம் . இதனால் உடல் சுறுசுறுப்பு அதிகமாவதுடன் உடலுக்கு நல்ல பலம் ஏற்படும். இதன் மலர் சாறை தேனுடன் கலந்து சாப்பிடுவதால் கல்லீரல் பலப்படும் தேமல் மற்றும் கரும் புள்ளிகளும் குணமாகும். இலைச் சாறு மற்றும் இஞ்சிச் சாறும் சம அளவு கலந்து…

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.4 ராசிகளும் அதன் தன்மைகளும் மீனம் :-

மீனம் :- “மீன மகனை விடேல்” என்ற இந்த ராசி, இரண்டு மீன்கள் தலைமாறி இருப்பதை போன்ற அமைப்புடைய இந்த ராசி கால புருஷனின் கடைசி ராசியாகும். உபயராசி  இரட்டை ராசி என்று அழைக்கப்படும் பெண் ராசி  கௌரவமும் தன் அடக்கமும் கொண்டது. நீர் தன்மையுடையது. அதிக கற்பனை வளம் அரசியலில் வெற்றியினை தரும் அதிக அளவு சுயநலம் கொண்டது. இதன் அதிபதி குருவாகும். தென் முக ராசியில் கடைசி ராசி பயனுள்ள ராசி. ஆனால் மௌனமானதும்…

இரும்பிலி (Diospyros ferrea)

இரும்பிலி தமிழ் இதற்கு கருவிஞ்சிப் பழம் என்ற பெயரும் உண்டு. இதன் முதிர்ந்த பழங்கள் துவர்ப்புத் தன்மையும் சிறிதளவு கசப்புத் தன்மை கொண்டவை. இவை, கிராமப்புற சிறுவர்களாளும், பறவைகள்,மற்றும் காட்டு விலங்குகளும் உண்ணுகின்றன . இரும்பிலி இலைகளையும் மென்று சாப்பிடலாம் இதனால் உடலில் துவர்ப்புச் சுவை மிகுதியாகி,உடல் பலப்படும்.

வாத நாராயணன் (delonix elata)

வாத நாராயணன் வாதமடக்கி ஆதி நாராயணன், வாதரச ஆகிய மாற்றுப் பெயர்களும் வாத நாராயனுக்கு உண்டு. இலைகள் கசப்பு சுவயும் வெப்ப தன்மையும் கொண்டவை. இதன் இலைகள் குழம்பு செய்யவும் துவயல் தயாரிக்கவும் வதக்கிச் சாப்பிடவும் பெரிதும் பயன்படுகிறது. இதனால் நரம்பு மற்றும் எலும்பு நோய்கள் போன்றவை கட்டுப்படும். வீக்கத்தை வடிய வைக்க கரைக்கும் பண்பும் இதற்கு உண்டு. தொடர்ந்து,வாரம் ஒரு முறை ஏதாவது ஒரு தயாரிப்பில் வாதநாராயணன் கீரையை சேர்த்துக் கொண்டு வரலாம்.

தழுதாழை(clerodendrum phlomides)

தழுதாழை இலைகள் கசப்பு மற்றும் துவர்ப்புச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டவை. இதனை மைய அரைத்து காரக் குழம்பு வைத்துச் சாப்பிடலாம். மூட்டுவலி, கீல்வாதம் போன்றவை இதனால் குணமாகும். மேலும் செரிமானத் தன்மை அதிகரிப்பதுடன் உடலில் கழிவுகளும் வெளியாகும். தொடர்ந்து உபயோகித்துவர இளம்பிள்ளை வாதத்தால் ஏற்பட்ட முடக்கம் குணமாகும்

கட்டுக்கொடி(cocculus hirautus)

கட்டுக்கொடி  இலைகள் உடல் சோர்வைக் குறைக்கும். இலைகளை கசக்கிச் சாறு எடுத்து அதனை நீரிலிட நுங்கு போல் கட்டும். இதைச் சாப்பிட தாது பலம் உண்டாகும். அதோடு, இளைத்த உடலையும் தோற்றம். கட்டுக்கொடி இலைச்சாற்றுடன் எருமை மோர் கலந்து பருகிவர பெண்களுக்கு  உண்டாகும் சிறுநீர் எரிச்சல் வெள்ளைப்படுதல் ஆகிய வெப்ப நோய்கள்  குணமாகும்.

காசான் (memecylon umbellatum)

காசான் சர்க்கரை வில்வம் என்கின் பெயராலும் வழங்கப்படும் இதன் இலைகளைச் சாப்பிட உடலில் துவர்ப்புச் சுவை கூடுவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும்.

நீர்முள்ளி(hygrophila auriculata

நீர்முள்ளி விதைகளை சேகரித்து, நீரில் இட்டு முதல் நாள் இரவே ஊறவைத்துக் கொள்ள வேண்டும், இதனைக் காலையில் சாப்பிடலாம் இதனால் தாது பலஹீனம் குணமாகும்.

ஆலம்

ஆலம் ஆலம்பழம் விலங்குகளலும் பறவைகளாளலும் விரும்பி உண்ணப்படும் பழங்களில் ஒன்றாகும். பாரம்பரிய மக்களால் இந்தப் பழங்கள் உண்ணப்படுகின்றன. மலட்டுத் தன்மை நீங்க இதன் விதைகள் முக்கியமான மருந்தாகின்றன.

ஆதண்டை (capparis brevispina)

ஆதண்டை  காய்களை வெட்டி, உப்பிட்டு ஊறவைத்து, வெயிலில் உலர்த்தி, வற்றல் செய்து நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு வறுவலாகச் செய்து சாப்பிடலாம். மேலும், ஆதண்டை ஊறுகாய் சுவையானது, பசியை அதிகரிக்கும் திறன் கொண்டது. இந்த ஊறுகாய் நமது பாரம்பரிய உணவான கூழ்,கஞ்சி போன்றவற்றுக்கு மிகவும் சுவை சேர்ப்பதாகும்

கள்ளி முளையான் (Caralluma umbellata)

கள்ளி முளையான் இளம் தண்டுகள் பாரம்பரிய மக்களால் உண்ணப்படுகின்றன. சில நேரங்களில், உப்பு, எண்ணெய் சேர்த்து ஊறுகாய் மற்றும் சட்டினி போன்றவை தயார் செய்யவும் பயன்படுகின்றன.

முட்சங்கன் (azima tetracantha)

முட்சங்கன் பழங்கள் ௨ண்ணத் தகுந்தவை. இலைகளை கசாயமாக ச் செய்து வயிற்றுப்போக்கு மற்றும் மூட்டு வலிக்கு ௨ள்மருந்தாக கொள்ளலாம். பால் கறக்கும் கால்நடைகளுக்கு முட்சங்கன் இலைகளை ௨ணவாகக் கொடுக்க, கறக்கும் பால் மற்றும் ௮திலிருந்து தயாரிக்கப்படும் வெண்ணெய் போன்றவை மிகுந்த சுவையுடையதாக இருக்கும்.

நம் உடலை நாமே பாதுகாப்போமாக.

உலக சாஸ்திரத்தில் முழுமையாக வெற்றி அடைந்தது என்று எதுவுமே இல்லை. அவரவர் சிந்தனைக்கு எது பிடிக்கிறதோ அந்த பாதையில் சென்று பிரபஞ்ச சக்தியின் ஆசீர்வாதத்துடன் வெற்றி கொள்கிறார்கள். நமது உடல் பஞ்சபூதங்களோடு இணைந்து இயங்குவதை அறிந்தோம். நமது உடல் 72 ஆயிரம் நாடி நரம்புகளால் ஆனது. இதில் முக்கியமான 10 நாடிகள், இந்த பத்தில் முக்கியமானது மூன்று ( 3 ) அதாவது இடகலை, பிங்கலை, சுழுமுனை அது போல் வாயுக்கள் பத்து ( 10 )…

காட்டு எலுமிச்சை (Atalantia monophylla)

காட்டு எலுமிச்சை முதிர்ந்த காட்டு எலுமிச்சைப் பழங்களை ஊறுகாயாகச் செய்து சாப்பிடலாம். பழங்களின் மேல் தோலில் இருந்து வடித்து எடுக்கப்படும் எண்ணெய் பக்கவாதம் மற்றும் முடக்கு வாதம் போன்றவற்றுக்குச் சிறந்த்தொரு மருந்தாகவும் பயன்படுகிறது.

இருவாட்சி ( திருவாத்தி) (Bauhinia tomentosa)

இருவாட்சி ( திருவாத்தி) இலைகளை வதக்கி, மிளகு, உப்பு ,சேர்த்து அரைத்து , தாளித்து-வதக்கி துவையலாகச் செய்து சாப்பிட்டு வரலாம். இதனால்,பசி, மந்தம்,வயிற்றுக் கடுப்பு போன்றவை குணமாகும். குழந்தைகளுக்குத் தொடர்ந்து இந்தத் துவையலைக் கொடுத்துவர நல்ல பசி எடுப்பதுடன் நாக்கின் சுவை அறியும் திறனும் மேம்படும்.

காரை (Canthium parviflorum)

காரை சிறுகாரை என்று சொல்லப்படும் இதன் இலைகள் மற்றும் பழங்கள் உண்ணப்படுகின்றன. குறிப்பிட்ட இடைவெளிகளில் இதை குழந்தைகளுக்குக் கொடுக்க வயிற்றுப் புழுக்கள் வெளியாகும். சமைத்த உணவுகளை பதப்படுத்தவும் காரை இலைகள் பயன்படுகின்றன. குரங்குகளும், சிலவகைப் பறவை இனங்களும் காரை பழங்களை விரும்பி உண்கின்றன. இவற்றின் மூலமாக காரை விதைகள் இனப்பெருக்கம் அடைகின்றன.

கோள்களின் கோலாட்டம் -1.3 கிழமைகள்

 கிழமைகள் ஞாயிறு: அனுசம், கேட்டை, விசாகம், மகம், பரணி மிருகசீரிஷம் திங்கள்: பூராடம், அனுசம், மகம், பூரட்டாதி, கார்த்திகை, விசாகம் செவ்வாய்: அவிட்டம், திருவோணம், சதயம், கேட்டை, திருவாதிரை புதன்: அசுவனி, பரணி, கார்த்திகை, மூலம், திருவோணம், அவிட்டம். வியாழன் : மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், பூராடம், ரேவதி வெள்ளி: ரோகிணி, மிருகசீரிஷம், பூசம், அஸ்தம், விசாகம், அனுசம், அவிட்டம். சனி : புனர்பூசம், பூசம், உத்திராடம், அஸ்தம், ரேவதி மேலே சொன்ன கிழமைகளில் வரும் நட்சத்திரங்களில்…

கோள்களின் கோலாட்டம் -1.3 நட்சத்திர குணங்கள்

அசுவனி, ரோகிணி, புனர்பூசம், மகம், அஸ்தம், விசாகம், மூலம், திருவோணம், பூரட்டாதி சத்துவ குணம், இதில் எந்த கிரகம் இருந்தாலும் நன்மை தரும் நிலையாகும். பரணி, மிருகசீரிஷம், பூசம், பூரம், சித்திரை, அனுசம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி ரஜோகுணம். இதில் எந்த கிரகம் இருந்தாலும் மத்திம பலன் தரும் நிலையாகும். கிருத்திகை, திருவாதிரை, ஆயில்யம், உத்திரம், சுவாதி, கேட்டை, உத்திராடம், சதயம், ரேவதி  தாம்ஸகுணம். இதில் எந்த கிரகம் இருந்தாலும் தீமையான பலனைத் தரும் நிலையாகும்.

முந்திரி (Anacardium occidentals)

முந்திரி முந்திரியின் கனி பொய்க்கனி (pseudo -fruit)வகையச் சேர்ந்தது. இது,முதிர்ந்த நிலையில் இனிப்புச் சத்து கொண்டது. மேலும்,இதில்’அஸ்கார்பிக் அமிலமும் நிறைந்துள்ளது. பழம் அல்லது பழச்சாறாகச் செய்து இதனை சாப்பிடலாம். முந்திரிப் பருப்பு அதிகமான சத்துக்கள் நிரம்பியது. இதனை உலர்த்தியோ,அல்லது,நெய் சேர்ந்து வறுத்தோ சாப்பிடலாம் ஜாம்,பலவகையான பானங்கள்,இனிப்புப் பொருட்கள் மற்றும் போதை நீர்மங்கள் தயார் செய்வதற்காகப் பல நாடுகளிலும் முந்திரி பயன்படுத்தப்படுகிறது.

சீத்தா (Annona squamosa)

சீத்தா ஆங்கிலத்தில் சர்க்கரை ஆப்பிள் ( sugar apple) எனப்படுகிறது. அனைத்து மக்களுக்கும் இதன் சதைப்பகுதி விருப்ப உணவாகக் கொள்ளப்படுகிறது. பழத்தில் 1.6% புரதம், கொழும்பு 0.4% , நார்ச்சத்து 3.1%, மாவுச்சத்து 23.5% மற்றும் ,தாது உப்புக்கள் (100 கிராமுக்கு 0.9 கிராம் அளவில்) காணப்படுகின்றன. அதோடு , பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு, தையமின், ரைபோபிளேவின் மற்றும் வைட்டமின் சி சத்துக்களும் நிறைந்துள்ளன . பழச்சாற்றில் 20% அளவிற்கு சர்க்கரைச் சத்து நிரம்பியுள்ளது குறிப்பிட்டத்தக்கது .…

௮ரைகீரை (AMARANTHUS TRICOLOR)

௮ரைகீரை தளிர் மற்றும் முதிர்ந்த இலைகளை கீரையாகக் கடைந்தோ ௮ல்லது சாம்பார் செய்தோ சாப்பிடலாம். அதோடு இதன் தண்டுகளைக் கடைந்தோ, கூட்டு ௮ல்லது சாம்பாரில் இட்டு வேகவைத்து சாப்பிட நல்ல சுவையாக இருக்கும். இலைகளில் புரதச் சத்து 5.2%, கொழுப்பு 0.3%, நார்ச்சத்து 6.1%, மாவுச்சத்து 3.8% மற்றும் தாது ௨ப்புகள் 2.8% ௮ளவிற்கு நிறைந்துள்ளது. அதோடு ,கால்சியம், பாஸ்பரஸ் ,இரும்புச் சத்து மற்றும் வைட்டமின்-சி அகியவையும் அடங்கியுள்ளன.

பிரப்பன் கிழங்கு (Calamus rotang):

பிரப்பன் கிழங்கு பிரப்பன் பழத்தைப் பசுமையாக அல்லது ஊறுகாய் செய்தோ சாப்பிடலாம், பலவிதமான நுண் சத்துக்கள் நிறைந்தது. மேலும் இதனால் மிகுதாகம் மற்றும் நாவறட்சியும் கட்டுப்படும். இளம் தண்டுப் பகுதியை பசுமையாகவோ, சமையல் செய்தோ சாப்பிட உடலுக்கு நற்பயன் விளையும்.

செம்பிரண்டை(Cissus repens)

செம்பிரண்டை பாரம்பரிய பழங்குடி மக்கள் இதன் பழங்களை விரும்பி உண்கிறார்கள். இலைகளை சூப் செய்தும் சாப்பிடலாம். இதன் அடி வேர்களை சிறு துட்டுகளாக்கி,அரைத்து இஞ்சிக் குழம்பு வைப்பது போல காரக் குழம்பு செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர வாயுப்பிடிப்பு அகலும், தொடை வலியும் குணமாகும்.

காட்டுச் சேனை (amorphophallus sylvaticus)

காட்டுச் சேனை அடிகிழங்குளை சிறு துண்டுகளாக்கி, புளியன் இலை சேர்த்து வேகவைத்து அதிலுள்ள அரிப்புத் தன்மையான(நமநமக்கும்) காரப்பண்பினை நீக்கி விடலாம். பின்னர்,இதனை,பொரியல்,காரக்குழம்பு அல்லது ஊறுகாயாகச் செய்து சாப்பிடலாம். பாரம்பரிய மக்களிடம் இந்தப் பழக்கம் இன்றும் உள்ளது.

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.2 ராசிகளின் அமைப்பு :-

ராசிகளின் அமைப்பு :- வானத்தில் பூமியானது சூரியனை சுற்றி வரும் பாதை ” எக்லிப்டிக்” எனப்படும். இதற்கு இருபுறமும் 5 பாகை சுற்று வளைய பட்டைப்பகுதி இராசி சக்கரம் எனப்படும். இந்த சுற்று வளைய பகுதிக்குத்தான் கோள்களும் சந்திரனும் சுற்றி வருகின்றன. இது 12 பாகமாக பிரிக்கப்பட்டு 12 ராசியாக கொண்டு உள்ளது. இராசி  மேசம் சரராசி 0 பாகை முதல் 30 பாகை வரை தன்மைகள் நியாயம் தர்மம் – புண்ணியம்  இரவில் பலம் இராசி…

சித்த-மருத்துவத்தில் அழிஞ்சில்(alangium saliviifolium)

அழிஞ்சில் அழிஞ்சில் பழங்கள் உண்ணுவதற்கு இனிப்புச் சுவையுடன் கூடிய புளிப்புத் தன்மை கொண்டவை, மார்ப்புச் சளியைக் குறைக்கும் மற்றும் மலமிளக்கும் தன்மையானவை. குறைந்த அளவில் உண்பது கண் ஒளியைக் கூட்டுவதுடன் இரத்தப் போக்கையும் தடுக்கும்

சித்த-மருத்துவத்தில் நாயுருவி (achyanthes aspera)

நாயுருவி  நாயுருவியின் இலைகளைக் பிற கீரைகளுடன் சேர்த்து சமைத்துச் சாப்பிட உடலுக்கு வலு சேர்க்கும். விதைகளைச் சேகரித்து, மேல் தோல் நீக்கி தினை அரிசியை சமைப்பது போலச் சமைத்து சாப்பிட உடலுக்கு மிகுந்த பலத்தை கொடுக்கும். அதே நேரத்தில் பசியை அடக்கும் தன்மை கொண்டது. எனவே, நீண்ட நேரம் தியானத்தில் அமர்பவர்கள் மட்டும் இதை பின்பற்றலாம். மேல் தோல் நீக்கப்பட்ட இதன் விதைகளில் 22.5% புரதமும் , 4.7% கொழும்பும் , 56.1% மாவுப் பொருட்கள், 1.8%…

சித்த-மருத்துவத்தில் துத்தி (Abutilon indicum)

துத்தி துத்தி இலைகளைத் துவையல் செய்து சாப்பிடுவது அஜிரணித்திற்கு மருந்தாகும். மேலும் இது முலநோய்க்கும் மருந்தாகிறது. துத்தி இலைகளை நெய்யில் வதக்கித் துவட்டி சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர ஆரம்ப நிலையில் உள்ள மூலம் குணமாகும். இலைகளைக் காரமில்லாமல் பொரியலாகச் செய்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட வெள்ளைபடுத்தல் குணமாகும். இலையைக் கஷாயம் செய்து கொப்பளிக்க பல்வலி குணமாவதுடன் ஈறு வீக்கமும் வடியும். இலைகள் மற்றும் தண்டுகளில் வைட்டமின் சி (31.1 மி.கி. /100 கிராம்) அடங்கியுள்ளது. துத்திப்…

சித்த மருத்துவத்தில் குன்றிமணி (Abrus precatorious)

குன்றிமணி (Abrus precatorious) குன்றிமணிக் கொடியின் வேர் “நாட்டு அதிமதுரம்” எனவும் கூறப்படும். இதன் இலைகளை வாயிலட்டு மென்று சாப்பிடலாம். அளவாக 5-10 இலைகள் சாப்பிட மலமிளக்கியாகச் செயல்படும் நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளவர்கள் இந்த இலைகளை மென்று சாப்பிட்டு வரலாம். அதிகமாகச் சாப்பபிட்டால் பேதியாகும், எனவே எச்சரிக்கையுடன் சாப்பிட்டு வர வேண்டும் இலைகளை உலர்த்தி,தேனீர்.தயாரிப்புக்கான மூலிகைப் பொடியாகவும் செய்து கொள்ளலாம். இலைகளில் ‘கிளைசிரைசின் எனப்படும் ‘செயல்படும் முலக்கூறு’ காணப்படுகிறது. இலைகளைக் கொண்டு கொதிநீர் தயாரித்து சாப்பிட…

பலாப் பழம்

பலாப் பழம் முக்கனிகளில் ஒன்றானது பலா, இது இனிப்பு சுவை கொண்டது. பல விதமான பலா மரங்கள் இருந்தாலும் வேர்ப் பலா மற்றும் மலைப் பலா சிறந்தது என்பார்கள். இதை அதிகமாக சாப்பிட்டால் உடல் உஷ்ணத்தை உண்டாக்கி வயிற்று கடுப்பு, வயிற்று வலி முதலியவற்றை உண்டாக்கும். இதில் சர்க்கரை சத்து அதிகமாக உள்ளதால் நீரிழிவு நோய் உள்ளவர்கள் குறைவாக சாப்பிட வேண்டும். பயன்கள் கண் நோய் வராமல் தடுக்கும் உடம்பில் உள்ள புண்களை பொங்கி வரச் செய்து…

முலாம் பழம்

முலாம் பழம் கோடைக் காலத்தில் இயற்கை நமக்கு அளித்த மிகப் பெரிய கொடை இந்த முலாம் பழம். 75 சதவீதம் நீர் சத்தும், இரும்பு சத்தும் நிறைந்தது. உடலிற்க்கு குளிர்ச்சியை தந்து கோடைக் கால உஷ்ணத்தைத் தாங்கும் சக்தியைத் தருகிறது. பயன்கள் இரத்த ஓட்டத்தை சீர்படுத்தும் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும் கோடைக் காலத்தில் ஏற்படும் கட்டிகள், பருக்களையும் போக்கும் மலச்சிக்கலைப் போக்கும் சிறுநீரை அதிக அளவு உற்பத்தி செய்து தேவையற்ற அசுத்தங்களை வெளியே கொண்டு வரும்.

சுக்கிரன் – களத்திரகாரகன் பகுதி 3

லக்கினாதிபதி சுக்கிரன் வீட்டில் இருந்தாலும், சுக்கிரனுடன் சேர்க்கை பெற்றிருந்தாலும், அல்லது சுக்கிரனின் பார்வை பெற்றிருந்தாலும் ஜாதகன் பல பெண்களிடத்தில் விருப்பம் உடையவனாக இருப்பான்.  ஏழில் சந்திரனும், சுக்கிரனும் சேர்ந்திருந்தாலும் சரி, செவ்வாயும், சனியும் சேர்ந்திருந்தாலும் சரி, ஜாதகனுக்கு உரிய காலத்தில் திருமணம் நடக்காது!  இரண்டாம் வீடு மற்றும் ஏழாம் வீட்டிற்கு உரியவர்கள், அதோடு சுக்கிரன் போன்றவர்கள் பாப கிரகங்களுடன் கூடி ஆறு, எட்டு அல்லது பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்தால் மனைவி நிலைக்க மாட்டாள்  இரண்டாம் வீடு மற்றும்…

சுக்கிரன் களத்திரகாரகன் பகுதி-2

அதே சுக்கிரனும், சந்திரனும், சொந்த வீட்டில் இருந்தாலும் அல்லது நட்பு வீட்டில் இருந்தாலும், குருவின் பார்வை பெற்றால் அல்லது சேர்க்கை பெற்றால் பலமுடையவர்கள் ஆவார்கள். அவர்களின் இந்த நிலைப்பாட்டைக் கொண்ட ஜாதகன் அல்லது ஜாதகியின் மண வாழ்வும் சிறக்கும். மகிழ்வுடையதாக இருக்கும்! ஏழாம் வீட்டின் அதிபதியும், லக்கின அதிபதியும் பலமாக இருந்தால் திருமண வாழ்வு மகிழ்ச்சிக்கு உரியதாக இருக்கும். குரு, சந்திரன்,சுக்கிரன் ஆகிய மூன்றும் சுபக்கிரகங்கள். அவைகள் ஜாதகத்தில் கெட்டுப்போயிருக்கக்கூடாது. அதே போல லக்கினாதிபதியும், ஏழாம் வீட்டு…

சீத்தாபழம்

 இரத்த அழுத்தத்தை குறைக்கும் அல்லது சீராக வைக்கும் சீத்தாபழம் புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் கொண்டது.சீத்தாபழம். கிராமங்களில் வீடுதோறும் பயிரிடபட்டு இருக்கும் பழம் சீத்தாபழம் தமிழகத்தில் கிராமங்களில் வீடுதோறும் வளர்க்கப்பட்டு வருகிறது.. இரத்த அழுத்தத்தை எளிதில் கட்டுபடுத்துவதால் அனைத்து தரப்பினரும் வாங்கி சாப்பிட சிறந்தது சீத்தாபழம்

கிரக பெயர்ச்சி பலன்கள் அறிய

அன்பு சார்ந்த வாசகர்களுக்கு வணக்கம். கிரகங்களின் பெயர்ச்சி பலன்களை அவரவர்கள் அறிய தன் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் சார பலன், அஷ்ட வர்க்கம், மூர்த்தி நிர்ணயம் ஜாதகத்தில் உள்ள கிரக நிலையை கோசார கிரகம், தொடும் நிலை அல்லது அதை நோக்கி நகரும் நிலை அல்லது அதை விட்டு விலகி நகரும் நிலை இவற்றையெல்லாம் மனதிற் கொண்டு பலன் அறிந்தால் அதிகபட்சமான சரியான பலனை அறிய முடியும் என்பது ஜோதிட வல்லுனர்களின் அபிப்பிராயம். சிந்தித்துப் பார்த்தால் சரியென்றுதான்…

ஜாதகத்தை கொண்டு தோஷங்கள் அறியும் விதம்.

ஒருவர் ஜாதகத்தில் ஒன்பதற்குடைய சூரியன் நீச்சம் அடைந்திருந்தால் பிதுர் தோஷம் உண்டு. இப்படி அமைய லக்னம் தனுசு ஆக அமைந்தால் மட்டுமே சாத்தியம் உண்டு. மேஷ லக்னத்திற்கு நாலுக்குடைய சந்திரன் விருச்சிகத்தில் நீச்சமடைந்து எட்டில் இருக்கும் போது மாதுர் தோஷம் உண்டு. சிம்ம லக்னத்திற்கு ஒன்பதுக்குடைய செவ்வாய் கடக ராசியில் 28 பாகையில் அமைந்திருந்தால் சகோதர வர்க்கத்தால் தோஷமும் கிராம தேவதைகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். ரிஷப லக்னத்திற்கு ஐந்துக்குடைய புதன் மீனத்தில் நீச்சம் பெற்று 15…

கோள்களின் கோலாட்டம் -1.14 துலாம் திரேக்காணத்தின் பலன்கள்.

துலாம். 1 முதல் 10 பாகைக்குள் — நரதிரேக்காணம்– வீதியின் நடுவில் உள்ள கடையை உடையவனும் தராசை கையில் தாங்கியவன், சாமான்களை எடை போட்டு நிறுப்பதிலும், படியால் அளப்பதிலும் சமர்த்தன், சுக்கிரன் நாயகன் ஸ்திரீ கிரகம் பலம் – கழுத்துவரை. 10 முதல் 20 பாகைக்குள் — நரபட்சிதிரேக்காணம் – கழுகு முகம். பசிதாகம் உள்ளவன், பாத்திர பண்டங்களில் அதிக பழக்க வழக்கமுள்ளவன். மனைவி, குழந்தைகளை மனதில் சதா சிந்தித்துக் கொண்டு இருக்கும் சனி நாயகன் ஆண்…

கோள்களின் கோலாட்டம் -1.14 சிம்மம் திரேக்காணத்தின் பலன்கள்.

சிம்மம். 1 முதல் 10 பாகைக்குள் — நர நாற்கால் பட்சிதிரேக்காணம்– கழுகு, நரி, நாய் போன்றதாயும், அழுக்கடைந்த துணியுடன் கூடியவன். தாய், தந்தையை விட்டுப் பிரிந்தவன் போல கதறுவான். சூரியன் நாயகன் – ஸ்திரீ கிரகம் பலம் கழுத்துவரை. 10 முதல் 20 பாகைக்குள் — நர ஆயுத திரேகாணம் – குதிரையைப் போல் உள்ளவன். வெண்ணிறமான மாலையை தலையில் அணிந்தவன். எளிதில் அண்ட முடியாதவன், ஆயுதம் தரித்தவனும் வளைந்த நுனி மூக்கை உடையவனும், மான்தோல்…

ஆப்பிள் பழம் — APPLE

ஆப்பிள் பழம் ஆப்பிள் பழத்தில் சத்துக்கள் குறைவாக இருந்தாலும் சக்தி நிறைந்த பழமாகக் கருதப்படுகிறது. 30 சதவித தண்ணிரும், வைட்டமின் “சி” மற்றும் தாது உப்புகளும் நிறைந்தது. நெல்லிக்கனியோடு ஒப்பிடும்பொழுது இதன் சக்தி குறைவுதான். ஆப்பிள் பல வகையாக இருந்தாலும், சிவந்த நிறத்தில் மேற்பகுதியும் உள்ளே மஞ்சள் நிறத்தில் இருக்கும் பழம் சிறந்தது. பயன்கள் 1, இரத்த சோகையை குணப்படுத்தும். 2. உடல் தோல் சுருக்கத்தை நீக்கும். 3. கண், பல் வியாதிகளை குணப்படுத்தும் 4. சிறுநீரகக்…

அன்னாசிப்பழம்

அன்னாசிப்பழம் இந்த அன்னாசிப் பழத்தின் அமைப்பு வேறுபட்டிருக்கும், 75 சதவிதம் தண்ணீர் கலந்துள்ள இந்தப் பழத்தின் உள் அமைப்பும் மிக வித்தியாசமாக இருக்கும், இது ஒரு காரல் தன்மையைக் கொண்டது, வைட்டமின் “சி”டிநிறைந்தது.   பயன்கள் அன்னாசிப்பழம் பல், எலும்பு, தோல் வியாதிகளை குணப்படுத்தும், ஸ்கர்வி வியாதிக்கும் நல்ல மருந்து. வாரத்திற்கு மூன்று நாட்கள் பயன்படுத்தினால் போதும். நிமோனியா உள்ளவர்கள் நாள்தோறும் 200 கிராம் வீதம் தொடர்ந்து 40 நாட்கள் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்

பழங்களின் சத்தும் பயன்கள்

சப்போட்டாப் பழம் சப்போட்டா மற்ற பழ வகைகளில் இருந்து சற்று வித்தியாசமானது. அதன் தோல் அமைப்பு பொதுவாக எந்தப் பழத்திற்கும் இல்லை. இதில் பல வைட்டமின்களும், தாது உப்புகளும் நிறைந்துள்ளது. அதிக நீர் சத்து உள்ளதால் இரத்தம் விருத்தியடைய பயன்படுகின்றது. இரத்தப் புற்று நோய்க்கு மருந்தாகப் பயன்படுகின்றது. பயன்கள் சப்போட்டா குணப்படுத்தும் வியாதிகள் 1, இரத்த சோகையைப் போக்கும் 2, உடலின் கருமை நிறத்தை மாற்றும் 3, இரத்தப் புற்று நோயைக் குணப்படுத்தும் 4, அதிக பேதி…

திருமண யோகத்திற்கு தடை செய்யும் அமைப்பு

திருமணம் லக்கினாதிபதியும், இரண்டாம் வீட்டுக்குரியவனும் பலம் குறைந்து இருப்பதும், பாபக் கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை பெற்று இருப்பதும் கூடாது. ஏழாம் வீட்டிற்கு இரு பக்கத்திலும், அல்லது லக்கினத்திர்கு இருபக்கத் திலும் தீயகிரகங்கள் அமர்ந்திருப்பது கூடாது.அதற்குத் தனிப் பெயர் உண்டு. அது பாபகர்த்தாரி யோகம் எனப்படும் சுக்கிரன் நீசமடைந்து ஏழாம் வீட்டில் இருப்பதும், அல்லது தீய கிரகங்களுடன் சேர்ந்து ஏழாம் வீட்டில் இருப்பதும் கூடாது. சுபக்கிரங்கள் மூன்றுமே, 3,6.8,12 ஆகிய மறைவிடங்களில் இருப்பது கூடாது. குரு பலவீனமாகி…

சுக்கிரன்

சுக்கிரன் – களத்திரகாரகன் ஏழாம் வீடு களத்திர ஸ்தானமாகும். சுக்கிரன் களத்திரகாரகன் எனப்படுவான். ஏழிற்குரிய கிரகத்தின் திசை புக்தியில் அல்லது சுக்கிரனின்  திசை புக்தியில்  திருமணம் நடக்கும் ஏழில் குரு இருந்தால் நல்ல மனைவி கிடைப்பாள் . ஏழாம் வீட்டிற்கு உரியவன் திரிகோண வீடுகளில் அமர்ந்து குருவின் பார்வை பெற்றாலும் நல்ல மனைவி கிடைப்பாள். ஏழில் சந்திரன் அல்லது சுக்கிரன் இருந்தாலும் நல்ல மனைவி கிடைப்பாள். இதே அமைப்பு பெண்ணாக இருந்தால் நல்ல கணவனாகக் கிடைப்பான். சுக்கிரனும்,…

நாவல் பழம்

பழங்கள் எல்லா வயதினருக்கும் ஏற்ற ஆரோக்கிய உணவு வகைகளுள் ஒன்று. அதிலும் அந்தந்த சீசன்களில் கிடைக்கும் பழங்களை தவறாமல் சாப்பிட வேண்டும். அவை அந்தந்த பருவகாலத்துக்கு ஏற்றபடி உடலை தகவமைத்து வைத்திருக்கும். அப்படி ஏராளமான நன்மைகளைக் கொண்ட பழங்களில் ஒன்று தான் நாவல் பழம். இது குறிப்பிட்ட சீசன்களில் மட்டுமே கிடைக்கும். குறிப்பாக, ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரை மட்டுமே பெரும்பாலும் கிடைக்கும். நாவல் பழத்தை எல்லா வயதினரும் விரும்பிச் சாப்பிடுவதுண்டு. நாவல்…

வெங்காயம்

வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது. 1. வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும். 2. வெங்காயத்தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும். 3. காது வலிக்கு வெங்காயத்தை நறுக்கி அதன் உள்ளே…

களத்திர பாவம்

களத்திரகாரகன் லக்கினாதிபதி சுக்கிரன் வீட்டில் இருந்தாலும், சுக்கிரனுடன் சேர்க்கை பெற்றிருந்தாலும், அல்லது சுக்கிரனின் பார்வை பெற்றிருந்தாலும் ஜாதகன் பல பெண்களிடத்தில் விருப்பம் உடையவனாக இருப்பான். ஏழில் சந்திரனும், சுக்கிரனும் சேர்ந்திருந்தாலும் சரி, செவ்வாயும், சனியும் சேர்ந்திருந்தாலும் சரி, ஜாதகனுக்கு உரிய காலத்தில் திருமணம் நடக்காது இரண்டாம் வீடு மற்றும் ஏழாம் வீட்டிற்கு உரியவர்கள், அதோடு சுக்கிரன் போன்றவர்கள் பாப கிரகங்களுடன் கூடி ஆறு, எட்டு அல்லது பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்தால் மனைவி நிலைக்க மாட்டாள் இரண்டாம் வீடு…

முருங்கையின் சிறப்பு

மரங்களில் முருங்கைக்கு என்று தனிச் சிறப்பு உண்டு. முருங்கைக் கீரையை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் எல்லா வகையில் நமக்கு நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கும். முருங்கையில் காட்டு முருங்கை, தவசு முருங்கை, கொடி முருங்கை என மூன்று வகை உண்டு. இதில் காட்டு முருங்கை இலை மிகவும் கசப்புத் தன்மை கொண்டது. ஆனால் அதற்கு மருத்துவக் குணங்கள் மிக மிக அதிகம். பொதுவாக முருங்கையின் பூ மிகவும் சக்தி வாய்ந்தது. முருங்கைப் பூ சாப்பிட்டு வந்தால்…

தனவான்

எதனை கொண்டு இந்த விதிகளை சொன்னார்கள் – 6 இலக்கினம் முதற்கொண்டு இலக்கினாதிபதியிருக்கும் வீடாகவும் எண்ணிக் கண்ட தொகையை இலக்கினாதிபதியைத் தொட்டு எண்ணி வருகையில்அந்த வீடு பாவர்வீடாகில் தரித்திர யோகமென்றும், சுபர்கள், வீடாகில் தனவானாகவுமிருப்பன். ஜன்ம லக்கினத்திற்கு இரண்டு, ஐந்து பன்னிரண்டு இந்தவிடங்கள் சுபர் வீடாகில் தனவானுமாவான். ஜன்மத்தில் சனியும், நாலாமிடத்தில் சந்திரனும், ஏழாமிடத்தில் செவ்வாயும், பத்தாமிடத்தில் சூரியனும், குருவும், புதனும், சுக்கிரனும் இவர்கள் கூடி ஒரு வீட்டில் நிற்கப் பிறந்த ஜாதகன் இராஜயோகத்தை அனுபவிப்பான். எட்டு,…

புதினா கீரை

புதினா கீரையில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைடிரேட், நார்ப்பொருள் உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோ மினேவின், தயாமின் ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளன. சட்னி, ஜூஸ் எந்த விதத்தில் இதை பயன்படுத்தினாலும் இதன் பொது குணங்கள் மாறுவதில்லை என்பது இதன் முக்கிய அம்சம். அசைவ உணவு மற்றும் கொழுப்பு பொருட்களை எளிதில் ஜீரணமாக்குகிறது. இரத்தம் சுத்தமாகும். வாய் நாற்றம் அகலும். பசியை தூண்டும். மலச்சிக்கல் நீங்கும். பெண்களின் மாதவிலக்குப் பிரச்னைகள் தீர…

மாதுளம் பழம்

மாதுளம் பழம் அனைவரும் விரும்பி சாப்பிடும் பழவகைகளில் ஒன்று. மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. மாதுளையின் பழங்களில் இரும்பு, சர்க்கரை, சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச் சத்துக்களும் அடங்கியுள்ளன. மாதுளம்பழத்தைச் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச்சக்தி அதிகமாகிறது. உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. அதனால் நோய் நீங்கி ஆரோக்கியமும், சக்தியும் அளிப்பதில் மாதுளை சிறந்த…

ஜோதிட அனுபவம்

அன்பார்ந்த இணைய தள வாசகர்களுக்கு, ஜோதிடத்தில் எத்தனையோ விஷயங்கள் புதைந்துள்ளதை நாம் அனுபவத்தில் பார்க்கிறோம். இதில் சிக்கல் என்னவென்றால் எல்லா விஷயங்களும் உண்மையானதாகவும், சரியானதாகவுமே இருக்கிறது. ஆனால் யாருக்கு உண்மையானதாகவும், சரியானதாகவும் இருக்கிறது என்று அறிந்து சொல்வதில்தான் குழப்பமும், சிக்கலும் வருகிறது. 7ல் செவ்வாய் இருந்தால் விவாக தோஷம், களத்திர மரணம் பலன். இது நிஜம். பல இடங்களில் இது பொய்யாகிறது. சில இடங்களில் இந்த பலன் நிஜமாகிறது. இது எப்படி? ஏன் இப்படி வினா உருவாகிய…

அஸ்தம் நட்சத்திரம்-சில குறிப்புகள்.

அஸ்தம் நட்சத்திரம்   பொதுவான குறிப்புகள் ஐந்து நட்சத்திரங்கள் கொண்டது, கைபோல தோற்றம் தரக்கூடியது. முழு நட்சத்திரம் அதிபதி சந்திரன், வாயு மண்டலம் சுப நட்சத்திரத்தில் அமையும், சாஸ்தா அதிதேவதை, ராட்சச குணம், தேவகணம், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், கொஞ்சம் தயாள குணம் கொண்டவர்கள். வெட்கமில்லாதவர்கள், குருத்துரோகம் செய்பவர்கள், சூழ்நிலை அப்படி அவர்களுக்கு அமையும். காரியத்தில் இறங்கிவிட்டார்கள் என்றால் பசி தாகத்தை மறந்தவர்கள், தன்னை உயர்வாக வெளியில் காண்பித்துக் கொள்வார்கள் அதற்கு வேண்டி அடுத்தவர்களை எப்போதும் மட்டம் தட்டிக்…

சுண்டக்காய் மகத்துவம்

சுண்டக்காய் அன்றாட உணவில் சுண்டைக்காய் எடுத்துகொள்ளவதால் கிடைக்கும் பயன்கள் காடுகளில் தானாகவே வளருவதை மலைசுண்டை என்றும், தோட்டங்களில் நாம் வளர்ப்பதை பால் சுண்டை என்றும் அழைக்கிறோம். பால் சுண்டையை பற்றிதான் இதில் காண இருக்கிறோம். இந்த சுண்டைக்காய் சிறியதாக இருந்தாலும் இதில் அதிக மருத்துவகுணம் உள்ளது. ஆஸ்துமா, வறட்டு இருமல், மார்புசளி, காசநோய் தொந்தரவு இருப்பவர்கள், தினம் இருபது சுண்டைவற்றலை சிறிது நல்லெண்ணெயில் வறுத்து சாப்பிடவேண்டும். நோய் கட்டுப்படும். இது வயிற்றில் உள்ள பூச்சிகளை நீக்கும் இயல்புடையது.…

இயற்கை மருத்துவம்

என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் நெல்லிக்கனி இதயத்தை வலுப்படுத்த செம்பருத்திப் பூ மூட்டு வலியை போக்கும் முடக்கத்தான் கீரை. இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் கற்பூரவல்லி (ஓமவல்லி). நீரழிவு நோய் குணமாக்கும் அரைக்கீரை. வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் மணத்தக்காளி கீரை. உடலை பொன்னிறமாக மாற்றும் பொன்னாங்கண்ணி கீரை. மாரடைப்பு நீங்கும் மாதுளம் பழம். ரத்தத்தை சுத்தமாகும் அருகம்புல். கேன்சர் நோயை குணமாக்கும் சீதா பழம். மூளை வலிமைக்கு ஓர் பப்பாளி பழம். நீரிழிவு நோயை குணமாக்கும்…

யாருக்கு எங்கே பலம் ? 1

கேந்திர  திரிகோண  சுபக் கிரகங்கள் திரிகோண பலத்தில் பகை நீச்சம் பெற்றிருந்தால் ஆதிபத்தியத்தின் அடிப்படையில் சுபாதிபத்தியத்திற்கு பாபியாகவும், பாப ஆதிபத்தியத்திற்கு எதிர்பாராத நன்மையைத் தரும் யோக கிரகமாகவும் மாறி ஜாதகரின் வாழ்க்கையில் சுபாசுபப் பலன்களை வழங்கும் என்பது விதி. சூரியன், செவ்வாய் சனி ஆகிய கிரகங்கள் 1,4,7 10ல் அமர்ந்து இதர கிரகங்களால் பார்க்கப்படும் போதும், இவர்களுடன் சேரும் போதும் அந்தந்த கிரகங்களின் ஆதிபத்தியம் அடிப்படையில் இவர்களுக்கு சம்பந்த பலன் ஏற்படும். இந்த சம்பந்த பலத்தில் ஒன்றுக்கு…

நட்சத்திர சார சூட்சமம்

ஆனை முகனையும் ஈசனையும் தாய் பராபரையையும் பிரார்த்தித்து அனுபவத்தின் வாயிலாக சார கதிப்படி கிரகங்கள் நடத்தும் லீலா வினோதங்களை உங்களுக்கு அளிக்கிறேன். ஜோதிட கலையில் லக்னம் என்னும் உயிர் ஸ்தானத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து உடல் ஸ்தானமாக கருதப்படும் சந்திரன் நின்ற வீட்டிற்கு இரண்டாவது பட்சமாக முக்கியத்துவம் கொடுக்கபட்டு அவர் அவர்கள் பலாபலன்கள் பார்க்கப்பட்டும் சொல்லப்பட்டும் வருகிறது. இது இப்படி இருக்க சத்தியரிஷி, அத்திரி, சட்டமுனிவர் போன்றோர் கருத்துப்படி நட்சத்திர சாரகதிப்படி பலன்களை காணும் போது அப்பலன்கள் நடைமுறைக்கு…

எதனைக் கொண்டு இந்த விதிகள் சொல்லப்பட்டுள்ளது?

நாலில் ஒருத்தரும் இல்லாவிட்டால் அவன் பிறந்த வீட்டிற்கு சமீபத்தில் பாழாயிருக்கும .நாலாமிடத்திற்கு முன்னே பாபரிருந்தால் பிறந்த வீட்டிற்கு மேற்கே பாழாயிருக்கும்பாழாயிருக்கும். இலக்கினத்திற்கு 2, 4, 10, 12 இந்த இராசிகளில் எத்தனை கிரகங்களிருந்தனவோ அத்தனை பேர்கள் அவன் பிறந்த வீட்டிலிருந்தபேர்கள் என்று அறியவும். அதில் சனியிருந்தால் அன்னிய ஸ்திரீ ஒருத்தியென்று சொல்லவும். சுக்கிரன் சந்திரனிருந்தால் சுமங்கலியென்றும், செவ்வாய், புதன் இருந்தால் அமங்கலியென்றும் சொல்லவும். மேஷம், ரிஷபம், சிம்மத்தில் சூரியன், நிற்க, மற்ற கோள்கள் உபயராசியில் பலமாய் நிற்க,…

ஆயுள்சம்பந்தமான விஷயங்கள்

 ஜாதக பராசர ஹோரை முதல் பாகத்தில் இருந்து, எட்டாம் பாவாதி பாபருடன் கூடி அதனுடன் லக்னாதி இணைந்து எங்கிருந்தாலும் அற்ப ஆயுள். லக்னாதி பாபருடன் கூடி எட்டாம் பாவத்தில் இருந்தாலும் அல்லது எங்கிருந்தாலும் அற்ப ஆயுள். ஆயுளை பற்றி சிந்திக்கும் போது சனி பத்தாமாதி, பாதக ஸ்தான அதிபர்கள் மாரக ஸ்தான அதிபர்கள் இவர்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். சந்திரன் இருந்த ஜென்ம ராசி ஜாதகத்தில் சூரியன், நாலில் ( 4 ) சந்திரன், 8 –…

ஜோதிடரும் ஜோதிடமும்

ஜோதிடம் மனிதர்களாய் பிறந்த அனைவருக்கும் அடுத்த வினாடி முதல் அடுத்த ஜென்மம் வரை என்ன நடக்கும் எப்படி எப்படி நடக்கும், எப்போது நடக்கும் என்று அறிந்து கொள்ளும் ஆவல் இருப்பது இயற்கையே.இந்த ஆவலை பூர்த்தி செய்ய உள்ள கலை ஜோதிடக் கலை மாத்திரமே. வேறு கலைகள் மூலம் இருக்கும் இருப்பில் சந்தோஷப்படலாம் அல்லது சங்கடங்களை தற்காலிகமாய் குறைத்துக் கொள்ளலாம், உதாரணமாக சோகமாக இருக்கும் போது ஆடல், பாடல் மூலம் சோகத்தை குறைத்துக் கொள்வது போல்.ஆனால் ஜோதிடத்தின் மூலம்…