கோள்களின் கோலாட்டம் -1.3 கிழமைகள்

 கிழமைகள் ஞாயிறு: அனுசம், கேட்டை, விசாகம், மகம், பரணி மிருகசீரிஷம் திங்கள்: பூராடம், அனுசம், மகம், பூரட்டாதி, கார்த்திகை, விசாகம் செவ்வாய்: அவிட்டம், திருவோணம், சதயம், கேட்டை, திருவாதிரை புதன்: அசுவனி, பரணி, கார்த்திகை, மூலம், திருவோணம், அவிட்டம். வியாழன் : மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், பூராடம், ரேவதி வெள்ளி: ரோகிணி, மிருகசீரிஷம், பூசம், அஸ்தம், விசாகம், அனுசம், அவிட்டம். சனி : புனர்பூசம், பூசம், உத்திராடம், அஸ்தம், ரேவதி மேலே சொன்ன கிழமைகளில் வரும் நட்சத்திரங்களில்…

கோள்களின் கோலாட்டம் -1.3 நட்சத்திர குணங்கள்

அசுவனி, ரோகிணி, புனர்பூசம், மகம், அஸ்தம், விசாகம், மூலம், திருவோணம், பூரட்டாதி சத்துவ குணம், இதில் எந்த கிரகம் இருந்தாலும் நன்மை தரும் நிலையாகும். பரணி, மிருகசீரிஷம், பூசம், பூரம், சித்திரை, அனுசம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி ரஜோகுணம். இதில் எந்த கிரகம் இருந்தாலும் மத்திம பலன் தரும் நிலையாகும். கிருத்திகை, திருவாதிரை, ஆயில்யம், உத்திரம், சுவாதி, கேட்டை, உத்திராடம், சதயம், ரேவதி  தாம்ஸகுணம். இதில் எந்த கிரகம் இருந்தாலும் தீமையான பலனைத் தரும் நிலையாகும்.

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.2 ராசிகளின் அமைப்பு :-

ராசிகளின் அமைப்பு :- வானத்தில் பூமியானது சூரியனை சுற்றி வரும் பாதை ” எக்லிப்டிக்” எனப்படும். இதற்கு இருபுறமும் 5 பாகை சுற்று வளைய பட்டைப்பகுதி இராசி சக்கரம் எனப்படும். இந்த சுற்று வளைய பகுதிக்குத்தான் கோள்களும் சந்திரனும் சுற்றி வருகின்றன. இது 12 பாகமாக பிரிக்கப்பட்டு 12 ராசியாக கொண்டு உள்ளது. இராசி  மேசம் சரராசி 0 பாகை முதல் 30 பாகை வரை தன்மைகள் நியாயம் தர்மம் – புண்ணியம்  இரவில் பலம் இராசி…

சுக்கிரன் – களத்திரகாரகன் பகுதி 3

லக்கினாதிபதி சுக்கிரன் வீட்டில் இருந்தாலும், சுக்கிரனுடன் சேர்க்கை பெற்றிருந்தாலும், அல்லது சுக்கிரனின் பார்வை பெற்றிருந்தாலும் ஜாதகன் பல பெண்களிடத்தில் விருப்பம் உடையவனாக இருப்பான்.  ஏழில் சந்திரனும், சுக்கிரனும் சேர்ந்திருந்தாலும் சரி, செவ்வாயும், சனியும் சேர்ந்திருந்தாலும் சரி, ஜாதகனுக்கு உரிய காலத்தில் திருமணம் நடக்காது!  இரண்டாம் வீடு மற்றும் ஏழாம் வீட்டிற்கு உரியவர்கள், அதோடு சுக்கிரன் போன்றவர்கள் பாப கிரகங்களுடன் கூடி ஆறு, எட்டு அல்லது பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்தால் மனைவி நிலைக்க மாட்டாள்  இரண்டாம் வீடு மற்றும்…

சுக்கிரன் களத்திரகாரகன் பகுதி-2

அதே சுக்கிரனும், சந்திரனும், சொந்த வீட்டில் இருந்தாலும் அல்லது நட்பு வீட்டில் இருந்தாலும், குருவின் பார்வை பெற்றால் அல்லது சேர்க்கை பெற்றால் பலமுடையவர்கள் ஆவார்கள். அவர்களின் இந்த நிலைப்பாட்டைக் கொண்ட ஜாதகன் அல்லது ஜாதகியின் மண வாழ்வும் சிறக்கும். மகிழ்வுடையதாக இருக்கும்! ஏழாம் வீட்டின் அதிபதியும், லக்கின அதிபதியும் பலமாக இருந்தால் திருமண வாழ்வு மகிழ்ச்சிக்கு உரியதாக இருக்கும். குரு, சந்திரன்,சுக்கிரன் ஆகிய மூன்றும் சுபக்கிரகங்கள். அவைகள் ஜாதகத்தில் கெட்டுப்போயிருக்கக்கூடாது. அதே போல லக்கினாதிபதியும், ஏழாம் வீட்டு…

கிரக பெயர்ச்சி பலன்கள் அறிய

அன்பு சார்ந்த வாசகர்களுக்கு வணக்கம். கிரகங்களின் பெயர்ச்சி பலன்களை அவரவர்கள் அறிய தன் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் சார பலன், அஷ்ட வர்க்கம், மூர்த்தி நிர்ணயம் ஜாதகத்தில் உள்ள கிரக நிலையை கோசார கிரகம், தொடும் நிலை அல்லது அதை நோக்கி நகரும் நிலை அல்லது அதை விட்டு விலகி நகரும் நிலை இவற்றையெல்லாம் மனதிற் கொண்டு பலன் அறிந்தால் அதிகபட்சமான சரியான பலனை அறிய முடியும் என்பது ஜோதிட வல்லுனர்களின் அபிப்பிராயம். சிந்தித்துப் பார்த்தால் சரியென்றுதான்…

ஜாதகத்தை கொண்டு தோஷங்கள் அறியும் விதம்.

ஒருவர் ஜாதகத்தில் ஒன்பதற்குடைய சூரியன் நீச்சம் அடைந்திருந்தால் பிதுர் தோஷம் உண்டு. இப்படி அமைய லக்னம் தனுசு ஆக அமைந்தால் மட்டுமே சாத்தியம் உண்டு. மேஷ லக்னத்திற்கு நாலுக்குடைய சந்திரன் விருச்சிகத்தில் நீச்சமடைந்து எட்டில் இருக்கும் போது மாதுர் தோஷம் உண்டு. சிம்ம லக்னத்திற்கு ஒன்பதுக்குடைய செவ்வாய் கடக ராசியில் 28 பாகையில் அமைந்திருந்தால் சகோதர வர்க்கத்தால் தோஷமும் கிராம தேவதைகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். ரிஷப லக்னத்திற்கு ஐந்துக்குடைய புதன் மீனத்தில் நீச்சம் பெற்று 15…

கோள்களின் கோலாட்டம் -1.14 துலாம் திரேக்காணத்தின் பலன்கள்.

துலாம். 1 முதல் 10 பாகைக்குள் — நரதிரேக்காணம்– வீதியின் நடுவில் உள்ள கடையை உடையவனும் தராசை கையில் தாங்கியவன், சாமான்களை எடை போட்டு நிறுப்பதிலும், படியால் அளப்பதிலும் சமர்த்தன், சுக்கிரன் நாயகன் ஸ்திரீ கிரகம் பலம் – கழுத்துவரை. 10 முதல் 20 பாகைக்குள் — நரபட்சிதிரேக்காணம் – கழுகு முகம். பசிதாகம் உள்ளவன், பாத்திர பண்டங்களில் அதிக பழக்க வழக்கமுள்ளவன். மனைவி, குழந்தைகளை மனதில் சதா சிந்தித்துக் கொண்டு இருக்கும் சனி நாயகன் ஆண்…

கோள்களின் கோலாட்டம் -1.14 சிம்மம் திரேக்காணத்தின் பலன்கள்.

சிம்மம். 1 முதல் 10 பாகைக்குள் — நர நாற்கால் பட்சிதிரேக்காணம்– கழுகு, நரி, நாய் போன்றதாயும், அழுக்கடைந்த துணியுடன் கூடியவன். தாய், தந்தையை விட்டுப் பிரிந்தவன் போல கதறுவான். சூரியன் நாயகன் – ஸ்திரீ கிரகம் பலம் கழுத்துவரை. 10 முதல் 20 பாகைக்குள் — நர ஆயுத திரேகாணம் – குதிரையைப் போல் உள்ளவன். வெண்ணிறமான மாலையை தலையில் அணிந்தவன். எளிதில் அண்ட முடியாதவன், ஆயுதம் தரித்தவனும் வளைந்த நுனி மூக்கை உடையவனும், மான்தோல்…

திருமண யோகத்திற்கு தடை செய்யும் அமைப்பு

திருமணம் லக்கினாதிபதியும், இரண்டாம் வீட்டுக்குரியவனும் பலம் குறைந்து இருப்பதும், பாபக் கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை பெற்று இருப்பதும் கூடாது. ஏழாம் வீட்டிற்கு இரு பக்கத்திலும், அல்லது லக்கினத்திர்கு இருபக்கத் திலும் தீயகிரகங்கள் அமர்ந்திருப்பது கூடாது.அதற்குத் தனிப் பெயர் உண்டு. அது பாபகர்த்தாரி யோகம் எனப்படும் சுக்கிரன் நீசமடைந்து ஏழாம் வீட்டில் இருப்பதும், அல்லது தீய கிரகங்களுடன் சேர்ந்து ஏழாம் வீட்டில் இருப்பதும் கூடாது. சுபக்கிரங்கள் மூன்றுமே, 3,6.8,12 ஆகிய மறைவிடங்களில் இருப்பது கூடாது. குரு பலவீனமாகி…

சுக்கிரன்

சுக்கிரன் – களத்திரகாரகன் ஏழாம் வீடு களத்திர ஸ்தானமாகும். சுக்கிரன் களத்திரகாரகன் எனப்படுவான். ஏழிற்குரிய கிரகத்தின் திசை புக்தியில் அல்லது சுக்கிரனின்  திசை புக்தியில்  திருமணம் நடக்கும் ஏழில் குரு இருந்தால் நல்ல மனைவி கிடைப்பாள் . ஏழாம் வீட்டிற்கு உரியவன் திரிகோண வீடுகளில் அமர்ந்து குருவின் பார்வை பெற்றாலும் நல்ல மனைவி கிடைப்பாள். ஏழில் சந்திரன் அல்லது சுக்கிரன் இருந்தாலும் நல்ல மனைவி கிடைப்பாள். இதே அமைப்பு பெண்ணாக இருந்தால் நல்ல கணவனாகக் கிடைப்பான். சுக்கிரனும்,…

களத்திர பாவம்

களத்திரகாரகன் லக்கினாதிபதி சுக்கிரன் வீட்டில் இருந்தாலும், சுக்கிரனுடன் சேர்க்கை பெற்றிருந்தாலும், அல்லது சுக்கிரனின் பார்வை பெற்றிருந்தாலும் ஜாதகன் பல பெண்களிடத்தில் விருப்பம் உடையவனாக இருப்பான். ஏழில் சந்திரனும், சுக்கிரனும் சேர்ந்திருந்தாலும் சரி, செவ்வாயும், சனியும் சேர்ந்திருந்தாலும் சரி, ஜாதகனுக்கு உரிய காலத்தில் திருமணம் நடக்காது இரண்டாம் வீடு மற்றும் ஏழாம் வீட்டிற்கு உரியவர்கள், அதோடு சுக்கிரன் போன்றவர்கள் பாப கிரகங்களுடன் கூடி ஆறு, எட்டு அல்லது பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்தால் மனைவி நிலைக்க மாட்டாள் இரண்டாம் வீடு…

தனவான்

எதனை கொண்டு இந்த விதிகளை சொன்னார்கள் – 6 இலக்கினம் முதற்கொண்டு இலக்கினாதிபதியிருக்கும் வீடாகவும் எண்ணிக் கண்ட தொகையை இலக்கினாதிபதியைத் தொட்டு எண்ணி வருகையில்அந்த வீடு பாவர்வீடாகில் தரித்திர யோகமென்றும், சுபர்கள், வீடாகில் தனவானாகவுமிருப்பன். ஜன்ம லக்கினத்திற்கு இரண்டு, ஐந்து பன்னிரண்டு இந்தவிடங்கள் சுபர் வீடாகில் தனவானுமாவான். ஜன்மத்தில் சனியும், நாலாமிடத்தில் சந்திரனும், ஏழாமிடத்தில் செவ்வாயும், பத்தாமிடத்தில் சூரியனும், குருவும், புதனும், சுக்கிரனும் இவர்கள் கூடி ஒரு வீட்டில் நிற்கப் பிறந்த ஜாதகன் இராஜயோகத்தை அனுபவிப்பான். எட்டு,…

ஜோதிட அனுபவம்

அன்பார்ந்த இணைய தள வாசகர்களுக்கு, ஜோதிடத்தில் எத்தனையோ விஷயங்கள் புதைந்துள்ளதை நாம் அனுபவத்தில் பார்க்கிறோம். இதில் சிக்கல் என்னவென்றால் எல்லா விஷயங்களும் உண்மையானதாகவும், சரியானதாகவுமே இருக்கிறது. ஆனால் யாருக்கு உண்மையானதாகவும், சரியானதாகவும் இருக்கிறது என்று அறிந்து சொல்வதில்தான் குழப்பமும், சிக்கலும் வருகிறது. 7ல் செவ்வாய் இருந்தால் விவாக தோஷம், களத்திர மரணம் பலன். இது நிஜம். பல இடங்களில் இது பொய்யாகிறது. சில இடங்களில் இந்த பலன் நிஜமாகிறது. இது எப்படி? ஏன் இப்படி வினா உருவாகிய…

அஸ்தம் நட்சத்திரம்-சில குறிப்புகள்.

அஸ்தம் நட்சத்திரம்   பொதுவான குறிப்புகள் ஐந்து நட்சத்திரங்கள் கொண்டது, கைபோல தோற்றம் தரக்கூடியது. முழு நட்சத்திரம் அதிபதி சந்திரன், வாயு மண்டலம் சுப நட்சத்திரத்தில் அமையும், சாஸ்தா அதிதேவதை, ராட்சச குணம், தேவகணம், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், கொஞ்சம் தயாள குணம் கொண்டவர்கள். வெட்கமில்லாதவர்கள், குருத்துரோகம் செய்பவர்கள், சூழ்நிலை அப்படி அவர்களுக்கு அமையும். காரியத்தில் இறங்கிவிட்டார்கள் என்றால் பசி தாகத்தை மறந்தவர்கள், தன்னை உயர்வாக வெளியில் காண்பித்துக் கொள்வார்கள் அதற்கு வேண்டி அடுத்தவர்களை எப்போதும் மட்டம் தட்டிக்…

யாருக்கு எங்கே பலம் ? 1

கேந்திர  திரிகோண  சுபக் கிரகங்கள் திரிகோண பலத்தில் பகை நீச்சம் பெற்றிருந்தால் ஆதிபத்தியத்தின் அடிப்படையில் சுபாதிபத்தியத்திற்கு பாபியாகவும், பாப ஆதிபத்தியத்திற்கு எதிர்பாராத நன்மையைத் தரும் யோக கிரகமாகவும் மாறி ஜாதகரின் வாழ்க்கையில் சுபாசுபப் பலன்களை வழங்கும் என்பது விதி. சூரியன், செவ்வாய் சனி ஆகிய கிரகங்கள் 1,4,7 10ல் அமர்ந்து இதர கிரகங்களால் பார்க்கப்படும் போதும், இவர்களுடன் சேரும் போதும் அந்தந்த கிரகங்களின் ஆதிபத்தியம் அடிப்படையில் இவர்களுக்கு சம்பந்த பலன் ஏற்படும். இந்த சம்பந்த பலத்தில் ஒன்றுக்கு…

நட்சத்திர சார சூட்சமம்

ஆனை முகனையும் ஈசனையும் தாய் பராபரையையும் பிரார்த்தித்து அனுபவத்தின் வாயிலாக சார கதிப்படி கிரகங்கள் நடத்தும் லீலா வினோதங்களை உங்களுக்கு அளிக்கிறேன். ஜோதிட கலையில் லக்னம் என்னும் உயிர் ஸ்தானத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து உடல் ஸ்தானமாக கருதப்படும் சந்திரன் நின்ற வீட்டிற்கு இரண்டாவது பட்சமாக முக்கியத்துவம் கொடுக்கபட்டு அவர் அவர்கள் பலாபலன்கள் பார்க்கப்பட்டும் சொல்லப்பட்டும் வருகிறது. இது இப்படி இருக்க சத்தியரிஷி, அத்திரி, சட்டமுனிவர் போன்றோர் கருத்துப்படி நட்சத்திர சாரகதிப்படி பலன்களை காணும் போது அப்பலன்கள் நடைமுறைக்கு…

எதனைக் கொண்டு இந்த விதிகள் சொல்லப்பட்டுள்ளது?

நாலில் ஒருத்தரும் இல்லாவிட்டால் அவன் பிறந்த வீட்டிற்கு சமீபத்தில் பாழாயிருக்கும .நாலாமிடத்திற்கு முன்னே பாபரிருந்தால் பிறந்த வீட்டிற்கு மேற்கே பாழாயிருக்கும்பாழாயிருக்கும். இலக்கினத்திற்கு 2, 4, 10, 12 இந்த இராசிகளில் எத்தனை கிரகங்களிருந்தனவோ அத்தனை பேர்கள் அவன் பிறந்த வீட்டிலிருந்தபேர்கள் என்று அறியவும். அதில் சனியிருந்தால் அன்னிய ஸ்திரீ ஒருத்தியென்று சொல்லவும். சுக்கிரன் சந்திரனிருந்தால் சுமங்கலியென்றும், செவ்வாய், புதன் இருந்தால் அமங்கலியென்றும் சொல்லவும். மேஷம், ரிஷபம், சிம்மத்தில் சூரியன், நிற்க, மற்ற கோள்கள் உபயராசியில் பலமாய் நிற்க,…

ஆயுள்சம்பந்தமான விஷயங்கள்

 ஜாதக பராசர ஹோரை முதல் பாகத்தில் இருந்து, எட்டாம் பாவாதி பாபருடன் கூடி அதனுடன் லக்னாதி இணைந்து எங்கிருந்தாலும் அற்ப ஆயுள். லக்னாதி பாபருடன் கூடி எட்டாம் பாவத்தில் இருந்தாலும் அல்லது எங்கிருந்தாலும் அற்ப ஆயுள். ஆயுளை பற்றி சிந்திக்கும் போது சனி பத்தாமாதி, பாதக ஸ்தான அதிபர்கள் மாரக ஸ்தான அதிபர்கள் இவர்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். சந்திரன் இருந்த ஜென்ம ராசி ஜாதகத்தில் சூரியன், நாலில் ( 4 ) சந்திரன், 8 –…

ஜோதிடரும் ஜோதிடமும்

ஜோதிடம் மனிதர்களாய் பிறந்த அனைவருக்கும் அடுத்த வினாடி முதல் அடுத்த ஜென்மம் வரை என்ன நடக்கும் எப்படி எப்படி நடக்கும், எப்போது நடக்கும் என்று அறிந்து கொள்ளும் ஆவல் இருப்பது இயற்கையே.இந்த ஆவலை பூர்த்தி செய்ய உள்ள கலை ஜோதிடக் கலை மாத்திரமே. வேறு கலைகள் மூலம் இருக்கும் இருப்பில் சந்தோஷப்படலாம் அல்லது சங்கடங்களை தற்காலிகமாய் குறைத்துக் கொள்ளலாம், உதாரணமாக சோகமாக இருக்கும் போது ஆடல், பாடல் மூலம் சோகத்தை குறைத்துக் கொள்வது போல்.ஆனால் ஜோதிடத்தின் மூலம்…