Athma

சனி 22

சனிக்கு மீனம் 2மிடமாகி நின்றால் பெயர், புகழ், செல்வம், வெளிநாடு செல்லும் யோகம் ஏற்படும். சனிக்கு துலாம் 2மிடமாகி உச்சம் பெற்று நின்றால் தலைவர், செல்வந்தர், அயர்நாட்டுத் தொடர்பும் இருக்கும், சிறப்பாக வாழ்வர். சனி 5மிடத்திலிருந்து லக்னாதிபதியை பார்ப்பது அல்லது 4, 5 வீட்டையும் 4,5க்குரிய கிரகத்தையும் பார்ப்பது உயர்கல்விக்கு தடை ஏற்படுகிறது. சனி ஆயுள் காரகன், சனி பலம் பெற்று 8ம் பாவத்துக்கு சம்பந்தம் பெற்றால் ஆயுள் விருத்தியாகும். சனி 8ல் நின்றால் பலம் பெற்றால்…

சனி 21

சனியும், சந்திரனும் கூடி ரிஷப ராசியில் அமைந்தால் இளவயதிலேயே கல்யாணம் நடக்க வாய்ப்புண்டு. சனி பகவான் லக்னத்தையோ சந்திரனையோ பார்த்தால் விவாகம் மிகவும் தாமதமாக நடைபெறும். சனி கிரகம் லக்னத்தில் 1ல் அமர்ந்தால் சச மஹாயோகம் ஏற்படும்.  பலரால் பாராட்டப் படுவர், செல்வம், செல்வாக்கு, நீண்ட ஆயுளுடன் பெரும் புகழுடன் வாழ்வர்.

சனி 20

சனி, 3ம் பார்வையாகவோ, 10ம் பார்வையாகவோ, 7ம் பார்வையாகவோ சுக்கிரனைப் பார்ப்பின் சன்யாஸ வாழ்க்கை அமையும். சனியும்,  சந்திரனும் இணைந்தால் அசையாத சொத்துக்கள் உண்டு.  நிறைய ஏவலாட்கள் உண்டு. சனி பொதுவாக ராகு, கேது, சூரியனைப்பார்ப்பது பிதுர்தோஷமாகும்.

சனி 19

சனி 4வது வீட்டில் இருந்து 4வது வீடு துலாம், மகரம், கும்பமாக இருப்பின் ஜாதகர், ஜோதிடர், கணித ஆசிரியர், அகெளண்ட்ஸில் வேலை பார்ப்பவராக இருப்பார். சனி, ராகு சம்பந்தம், புதன், ராகு சேர்க்கை எலக்ட்ரனிக் கல்வியில் சிறந்து விளங்குவர். சனி லக்னத்திலிருந்தோ, சந்திரனிடமிருந்தோ 5ம் வீடு, 10 வீட்டில் இருப்பினும் பிரம்மச்சரிய யோகம் ஏற்படும்.

சனி 18

சனி 7ல் இருந்து பாபகிரஹங்களால் பார்க்கப்பட்டால் அவருக்கு இருதாரம் ஏற்படும்.  சனி, புதன் சேர்க்கை 7ம் வீட்டில் இருப்பின் விதவையை மணப்பர். அதேபோல் சந்திரன், சனி சேர்க்கை 7ல் இருப்பின் விதவையை மணந்து சுகமாக வாழ்வர். சனி ஜன்ம ராசிக்கு கோச்சாரப்படி 12ம் வீடு, 1,2 ம் வீட்டில் சஞ்சரிக்கும் காலத்தை ஏழரை ஆண்டு சனி அல்லது சாடே சாத்தி அல்லது ஏழரை சனி என்று கூறுவர். சனி பகவான் லக்னத்தைப்பார்த்தாலோ, அல்லது லக்னாதிபதியை பார்த்தாலோ, 10மிடத்தை…

சனி 17

சனி 2ல் இருப்பின் இரண்டு முறை திருமணம் ஏற்படும். 7ல் இருப்பின் இருதாரயோகம் 12ல் இருப்பின் பார்வைகோளாறுடன் போராட வேண்டிவரும். சனி, சூரியன் இணைந்து லக்னத்திலோ, 7ம் வீட்டிலோ இருப்பின் திருமணம் நடப்பது துர்பலம், திருமணமே ஆகாமல் போகலாம். சனி, குரு இணைந்து லக்னத்தில் இருந்தால் பண நெருக்கடியும், திடீர்வேலையினால் பாதிப்பும், வழக்கு வியாஜ்யத்தில் ஈடுபடுதல் போன்றவை ஏற்படும்.

சனி 16

சனி, சந்திரனும் சமசப்தமாக இருப்பின் திருமணம் நடைபெறுவதற்கு பலபிரச்சனைகள் உண்டாகும்.  திருமணம் தாமதமாகும்.  ( ஸ்ரீ கிருஷ்ணன் ) . சனிக்கு 2,12ல் ராகு இருந்தால் 28 வயதில் திருமணம் நடைபெறும். நல்ல செல்வ சேர்க்கை ஏற்படும். லக்னம், சூரியன், சந்திரன், புதன் ஒன்றக்கொன்று 7\7 ஆக அமைவது இருவரும் கருத்தொருமித்து வாழ்வர். சனி 2 வது வீட்டில் உச்சத்தில் இருப்பின், ஜாதகர் ஆட்களை வைத்து வேலைகள் செய்வித்து நிறைய சம்பாதிப்பர், இரும்பு, கற்கள், உழுவுத்தொழிலில், பெரும்பணம்…

சனி 15

சனியுடன், சுக்கிரன், ராகு, புதனுடன் சேர்ந்து 7ம் வீட்டில் இருப்பின் திருமணம் தாமதமாக ஏற்படும். சனி 2ல் செவ்வாய் 7ல் சுக்கிரனுக்கு 12ல் செவ்வாய் இருப்பின் இவ்வமைப்பு திருமணமாகாத நிலமை ஏற்படுத்திவிடும். சனி, புதன், லக்னாதிபதி இவர்களுக்கு 6மிடம் சம்பந்தம் ஏற்பட்டால் சேர்க்கை, பார்வை பெற்றால், வழக்கு, வியாஜ்ஜித்தில் திசா, புத்தி காலங்களில் ஈடுபடுவர்.

சனி 14

சனி மகர லக்னகாரர்களுக்கு மாடமாளிகைகளை வழங்குவார். சொத்துக்களை சேர்த்து வைத்து வழி வகுப்பார். சனி  7 ம் மிடத்தை பார்ப்பதினால் பொருள் களவு போகும், அக்னிபயம் கொடுத்த  பொருளைத் திரும்பி வாங்க இயலாமல் போகும் தனநாசம், மக்களாலும், வாழ்க்கைத் துணைவராலும் சுகம் இராது. சனிக்கு கேந்திர, திரிகோணங்களில் புதன், சுக்கிரன், கேது நின்றால் யோகம் ஏற்படும்.

சனி 13

சனியை லக்னமாக உடையவர்கள் சற்று மந்தகுணம் உடையவர்கள், தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருப்பர், நிதானம், பிரதானமாக இருப்பர். சனி, செவ்வாய் 7ல் இருந்து 7க்குடையவன் செவ்வாய் வீட்டில் இருப்பின் அவன் மனைவி பிற ஆடவருடன் தொடர்பு கொள்வாள். சனியினால் மகர லக்னக்காரகர்கள் பெறுகின்ற வருவாய், புகழ் அனைத்துச் சிறப்புகளும் அடிப்படை கடும் உழைப்பாகவே இருக்கும், மற்றவரின் நலத்துக்காக தம் உடலையும், மனத்தையும் வருத்திக்கொண்டு பிறர் அடைகிற சுகத்தை கண்டு உள்ளம் பூரிப்பார்கள்.

சனி 12

சனிக்கு 7ல் சுக்கிரன் இருந்தால் அவனுக்கு களத்திரத்தால் துக்கம் சம்பவிக்கும். சனி – 4ல் அமர்ந்து செவ்வாய் பார்த்தால் துர்மரணம் ஏற்படலாம். சனி செவ்வாய் கூடி 6மிடத்தில் இருக்க சூரியனாவது, ராகுவாவது பார்த்தால் ஜாதகர் எப்போதும் நோயாளியாகவே இருப்பர். சனி 9மிடத்தில் பலமாக இருந்தால் வேதாந்த அறிவு, ஜோதிடம் போன்றகளைகளில் திறமை ஏற்படும். சனி துலாத்தில் அமர்ந்து உச்சமாகி இருப்பின், அவர் மருத்துவ துறையில் மருத்துவராகவோ அல்லது ஒரு மருந்துக்கடை வைத்தோ பணமீட்டுவர்.

சனி 11

சனி எவ்வளவு சுப பலம் பெற்றிருந்தாலும் அவருக்கே உரிய மந்தகதியால் பலன்களை மெள்ள மெள்ளத்தான் கொடுப்பார்.  வேகம் அவரிடம் கிடையாது. சனியும், சூரியனும் ஒன்றுகூடி இருந்தால் அறிவாளியாக, சுறுசுறுப்புடனும், அனுபவசாலியாகவும், உலோகங்கள் சம்பந்தப்பட்ட வேலைகளில் நிபுணராவார். சனியும், செவ்வாயும் ஒரே ராசியில் இருந்தால் யுத்தமும், சத்தமும் இல்லத்தில் அதிகரிக்கும்.

சனி 10

சனி பலமுள்ளவர் தொழில்துறைகளில் விற்பன்னர்களைத் தோற்றுவிப்பார், பிறகு தியாகம் செய்வார், வேத தத்துவங்களை உணர்த்தி ஒருவரை விவேகியாக்குவர் எதிர்காலத்தை உணரும் மேதைகளையும் எதையும் தாங்கும் சக்தி படைத்தவர்களையும் உருவாக்குவார். சனி தன்னுடைய தசாகாலத்தில் பலமுள்ள சனி, 4  11  ஒருவரை மலையளவுக்கு உயர்த்தவும், இதர கிரக நிலைகள் பலவீனமாக இருந்தால் மலையிலிருந்து கீழே தள்ளவும் செய்வர்.

சனி 9

சனி, சுக்ரன் சஷ்டாஷ்டகமாக இருந்தால் நபும்சகராக இருப்பர். சனி 10 ம் வீட்டோடு தொடர்பு ஏற்படின் விவசாயத்துறையிலும், உலோகத்துறையிலும், சிறிய நிறுவனத்தில் தொழில் செய்வர். சனி 10ல் பலமுற்று இருந்தால் உத்தியோக நிலை ஆட்டம் காணும், மேலதிகாரிகளின் தொந்தரவு இருக்கும்.

சனி 8

சனி கும்பத்தில் இருப்பின் பல தொழில்களில் ஈடுபடுவர், கோபிஷ்டி, குடி பழக்கம், கெட்ட பழக்கம் பேச்சில் துடுக்கு இருக்கும், உண்மை இராது.  சனி மீனத்தில் இருப்பின் அரசாங்கத்தில் செல்வாக்கு, வாக்குவன்மை, ஸ்தாபன தலைமை, நல்ல மனைவி மக்கள், நற்பண்பு, தெய்வீக நெறியில் ஈடுபாடு உண்டு. சனி, சந்திரன் இருவரும் நீசம் பெற்று சூரியன் கும்பத்தில் இருந்தால் சரீர உறுப்பு பலவீனமடையும்.

சனி 7

சனி விருச்சிகத்தில் இருப்பின், கடின உழைப்பு, உடல்நலக்கோளாறு, கோபகுணம், பொறமை குணம் உள்ளவர். சனி தனுசு ராசியில் இருப்பின் செல்வம் குவிப்பார்கள், மனிதாபிமானம் உள்ளவர், நல்லொழுக்கம், மென்மைத்தன்மை அமையும், தலைமை பொறுப்பு வகிப்பர். சனி மகரத்தில் இருப்பின் சொந்த ஊரைவிட்டு அன்னிய ஊரில் வாழ்வர் அறிவாற்றல், புகழ் உன்னதஸ்தானம் ஏற்படும், வசதியான வாழ்க்கை அமையும்.

சனி 6

சனி சிம்மத்தில் இருப்பின் உறவினர்களுடன் சண்டை சச்சரவு கெட்ட செயலில் நாட்டம் மக்கள் நலம் திருப்திகரமாக இராது. உத்தியோகம் செய்து பொருள் சேர்ப்பார்கள். சனி கன்னியில் இருப்பின் மற்றவர்களுக்காக தியாகம் புரிவர், ராணுவத்துறையில் பொறுப்பு வகிப்பர், பொருளாதார சுபிட்சம் சீராக அமையாது. சனி துலாத்தில் இருப்பின் உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பர், தலைமை தாங்கும் தகுதி ஏற்படும், வெளிநாடு செல்வர், தொழில் துறையில் அபிவிருத்தி காணலாம்.

சனி 5

சனி ரிஷபத்தில் இருப்பின் அடிமைத்தொழில் செல்வ சபிட்சமிராது. கெட்டசகவாசம் இருக்கும், ஒழுக்கத்தில் தரம் குறைந்திருக்கும். சனி மிதுனத்தில் இருப்பின் கடுமையாக உழைப்பவர்கள், பெரிய நிறுவனத்திற்கு தலமை ஏற்பார், குணப்போக்கு நன்றாய் இராது. சனி கடக்ததில் உள்ளவர்கள் இளம் வயதில் உடல்நலம் பாதிக்கப்படும், ஒய்வில்லாமல் உழைப்பார்கள், குடும்ப நலம் குறைவாக இருக்கும்.

சனி 4

சனி 1,3,6,9ல் இருந்தால் வாதம் சம்பந்தப்பட்ட நோய் வரலாம். சனி, செவ்வாய் சேர்க்கை பெற்று 2ல் இருந்தால் ஜாதகர் தனது அறிவை கொண்டே சம்பாதிப்பர். சனி பலமுடன் இருந்தால் ஸ்ரீ தத்தாத்ரேயர் போன்றவரை பூஜை செய்தால் ஞானம் பிறக்கும். சனி மேஷத்தில் இருப்பின், கடுமையாக பேசுவர், கடினமாக உழைப்பவர், நீச்சனாகவும், நண்பர்கள் குறைவாகவும் பாபகாரியத்தில் ஈடுபடவர்.

சனி 3

சனி 3,8,11ல் இருந்து 5ல் ராகு இருப்பின் கர்மகிரியை செய்ய புத்திரர் இருக்கமாட்டார். சனியுடன் சந்திரன் சேர்ந்திருந்தாலும், சனி நின்ற ராசிக்க 3,7,10ல் சந்திரன் இருந்தாலும் வசதியான வாழ்க்கைத்துணை அமையாது, சன்யாசிபோல் பற்றற்று வாழ்வர். சனி 1,5,10 ஆகிய இடங்களியொன்றில் இருந்து 1,3,6,11ல் ராகு இருப்பின் திருமண வாழ்வில் பிரச்சனை, விவாகரத்துவரை செல்லலாம்.

சனி 2

சனி 5ம் பாவத்தில் இருப்பின் புத்திர சுகம் இருக்காது. சனியுடன் மாந்தி சேர்ந்திருந்தால் வாழ்வில் சிரமமே ஏற்படும். சனி லக்னத்திற்க 8ல் இருந்தால் தீர்காயுள் அளித்து செல்வத்தினையும் அளிப்பார். சனி, சுக்கிரசேர்க்கை எங்கிருப்பினும் திருமண வாக்கையில் குறைபாடோ இரகசிய முறைகேடோ இருக்கும்.

சனி 1

சனி லக்னத்தில் நின்றிடில் அதிகம் பேசாத மந்தநிலை, பலரையும் குறை சொல்லும் குணம் இருக்கும். சனீஸ்வரன் 7ம் பாவாதிபதியோடு சேர்ந்து இருந்தாலும் 7மதிபதியை பார்த்தாலும் நல்ல ஆயுளுடன் வாழலாம். சனி 8ம் பாவத்தில் இருந்தால் தீர்க்காயுசு. சனியுடன், சூரியன் நின்றிடில் ஜாதகரை நீசசெயலில் ஈடுபடவைக்கும். சனிபகவான், செவ்வாயுடன் 6ம்பாவாதிபதியோடு இருப்பின் திருட்டுபயம் ஏற்படும். சனியும், செவ்வாயும், சக்கிரனும் 2,4,7,12ல் ஏதாவத ஒரு பாவத்தில் இருந்தால் இருதார யோகம் உண்டு.

சுக்கிரன் 21

சுக்கிரன் அல்லது 7ம் வீட்டிற்கு அதிபதி சனி, சூரியனுக்கு இடையில் இருப்பின் திருமணம் நடைபெறாது.  சனி 7ம் வீட்டை பார்த்தாலும் திருமணமாவது அறிது. சுக்கிரன் நீச்சமாக இருந்தால் தன் இனத்திலேயே காதல்புரிந்து மணம் செய்து கொள்வர். சுக்கிரனுக்கு சுக்ரன் 6 ,8 ஆக ஆண், பெண்ணுக்கு இருக்குமாயின் இனிதான குடும்ப வாழ்க்கை அமையாது, அன்பாக இருக்கமாட்டார்கள்.

சுக்கிரன் 20

சுக்கிரன் உச்சம் பெற்றோ அல்லது ஆட்சிபெற்றோ செவ்வாயுடன் இணைந்து லக்கினத்திற்கு 1,4,7,10 ஆகிய இடத்தில் இருப்பின் பெண்களை விரும்புவர்களாகவும், இழிவு குணம் கொண்டோராகவும் இருப்பர். சுக்கிரனுக்கும் 7ம் அதிபதிக்கும் அல்லது 7மிடத்திற்கும் நல்ல சம்மந்தமாக காதல் திருமணம் கைகூடிவரும். சுக்ரன் உள்ள ராசியும் ( ஆண் ஜாதகத்தில் ) செவ்வாய் உள்ள ராசியும் ( பெண் ஜாதகத்தில்) ஒரே ராசியானால் கண்டதும் காதல் ஆகும்.

சுக்கிரன் 19

சுக்கிரன், சனி பரிவர்த்தனை பொதுவாக திருமண வகையில் நாட்டத்தினை தடுத்து ஆன்மீக வழியில் மனதை ஈடுபடுத்தும். சுக்கிரன் மகரத்தில் அமர்ந்தால் பெருமாள் மீது பக்தியும், ரிஷப சந்திரன் ஸ்ரீ வெங்டாஜலபதி மீது அளவற்ற பக்தி ஏற்படும். சுக்ரன் 7ம் பாவம், 7ம் அதிபதி ஆகியவற்றிற்கு, சனி, ராகு, கேது சம்பந்தம் ஏற்படின் பிரிவினைதரும், செவ்வாய் சம்பந்தம் ஏற்படின் விவாக ரத்து ஏற்படும்.

சுக்கிரன் 18

சுக்ரன், குரு விருச்சிக லக்னகாரர்களுக்கு சமசப்தமாக இருந்தால் சிற்றின்ப நாட்டம் அதிகம் ஏற்படும். சுக்கிரனுக்கு கேந்திர கோணங்களில் சனி, ராகு, கேது நின்றால் யோகம் ஏற்படும். சுக்கிரனுடன் ராகு அல்லது கேது, சூரியன் கூடி நின்றால் ஜாதகரைத் தேடி வம்புகள் வழக்குகள் வரும், பொருள் இழப்பும் ஏற்படும்.

சுக்கிரன் 17

சுக்ரன் துலாத்தில் உள்ளவர்கள் தோற்றப்பொலிவு இருக்கும், அறிவாற்றல் இருக்கும், எதிர்ப்பை சமாளிப்பார்கள், செல்வம், நிறைய பெறுவார்கள். சுக்ரன் 4ல் இருந்தால் சிறு பிராயம்  முதலே தாய்மீது பாசம் அதிகம் இருக்கும்.  தாய் நலனில் கவனம் செலுத்துவார், அறிவிலும், அந்தஸ்திலும் உயர்ந்தவராய் விளங்குவார். சுக்ரன் விருச்சிக லக்னகாரர்களுக்கு 7மிடத்ததிபதியாக, களத்திரகாரகனாக ஆகிறார், காதல் திருமணத்தையும், சனி, ராகு கலப்பு திருமணத்தையும், தேய்பிறைச்சந்திரன் குறையுள்ள களத்திரத்தையும் தருவார்.

சுக்கிரன் 16

சுக்ரன் கன்னியில் இருக்கப் பிறந்தவர்கள் அறிவாற்றல் இருக்கும், வேற்றுமாநிலத்தில் உழைத்து வாழ்வார்கள்.   அழகுசாதனங்களில் நாட்டமுள்ளவராய் இருப்பர், காதல் தோல்வி ஏற்படும். இனிமையாக பேசுவார்கள். சுக்ரன் துலாத்தில் உள்ளவர்கள் தோற்றப்பொலிவு இருக்கும், அறிவாற்றல் இருக்கும், எதிர்ப்பை சமாளிப்பார்கள், செல்வம் நிறைய பெறுவார்கள். சுக்ரன் துலாத்தில் உள்ளவர்கள் தோற்றப்பெலிவு இருக்கும், அறிவாற்றல் இருக்கும், எதிர்ப்பை சமாளிப்பார்கள், செல்வம் நிறைய பெறுவார்கள்.

சுக்கிரன் 15

சுக்கிரன், சந்திரன் கூடி மேஷம், விருச்சிகம், கும்பம், மகரம் இவைகளில் ஒன்றில் இருந்து லக்னமாகி அதை சனி, செவ்வாய், சூரியன், ராகு நோக்கின் அந்த ஜாதகி விபசாரியாவாள். சுக்கிரனும், லக்னாதிபதியும் சேர்ந்து 6,8,12ல் இருப்பின் அந்த ஜாதகர் காமசுகத்தில் அதிகம் ஈடுபடமாட்டார்.  வெறுப்புள்ளவர் ஆவர். சுக்ரன் கும்பத்தில் இருப்பின் தோற்றப் பொலிவுடனிருப்பார்கள், மனதில் கலவரமும், மனைவிக்கு கட்டுப்பட்டிருப்பார்கள்.

சுக்கிரன் 14

சுக்கிரன் பாவரோடு கூடி 6,8ல் பலம் பெற்றிருக்கப் பிறந்தவர் ஸ்திரீ சபலம் உள்ளவன். சுக்கிரன் களத்திராதிபதியாகி அந்த சுக்கிரனை சனி, செவ்வாய் பார்க்க பிறந்தவர் எப்போதும் விலை மாதர்கள் தொடர்பு உடையவர். அம்சத்தில் சுக்கிரன் வீட்டில் செவ்வாயும், செவ்வாய் வீட்டில் சுக்கிரனும் அமையப்பெறின், ஜாதகி தன் இச்சையினாலேயே பல பேர்களை சம்போகம் செய்து சந்தோஷமாக இருப்பாள்.

சுக்கிரன் 13

சுக்கிரன் துலாத்தில் அமர்ந்து அதுவே லக்னமாயின் பல சிறு தொழிலில் நவீன பொருளை விற்று, தொழில் செய்து சம்பாதிப்பர். சுக்கிரன் மிதுன வீட்டிலோ, ரிஷப வீட்டிலோ, துலாம் வீட்டிலோ இருப்பின் 4ஜாதகர் காமுகனாக இருப்பான். சுக்கிரன் வீட்டில் லக்னாதிபதி இருப்பினும் சுக்கினுடன் சேரினும், பார்ப்பினும் அந்த ஜாதகர் ஸ்தீரிலோலன்.

சுக்கிரன் 12

சுக்கிரன் மீனத்தில் இருக்கப் பிறந்தவர்கள் புத்திசாலியாக இருப்பர். உயர்ந்த தன்மைகள் குடிகொண்டிருக்கும், உயர்ஸ்தானம் வகிப்பார்கள்.  சுக்கிரன் தனுசில் இருக்கப் பிறந்தவர்கள் நல்லொழுக்கம் இருக்கும் உயர்ந்த பதவிக்கு வருவார்கள், எல்லோராலும் விரும்பப்படுவார்கள் சமூகத்தில் மதிப்பு ஏற்படும். சுக்கிரன் 9,7,5 ஆகிய இடங்களில் ஒன்றில் இருந்தால் பயணம் செய்வதில் ஆர்வம் மிக்கவராக இருப்பர்.

சுக்கிரன் 11

சுக்கிரனும், சந்திரனும் லக்னத்தில் இருந்தால் பெண்ணுக்கு பழிவாங்கும் உணர்ச்சி இருக்கும். இன்பங்களை அனுபவிப்பதில் ஆர்வம் கொண்டிருப்பாள். சுக்கிரன் விருச்சிகத்தில் இருக்கப்பிறந்தவர்கள், கோபம் உள்ளவர்களாகவும் இருப்பர், ஒழுக்கக் குறைபாடு இருக்கம், மறைமுக உறுப்புகளில் உபத்திரம் இருக்கும் துடுக்காகப் பேசுவார்கள்.  மனிதாபிமானம் குறைந்தவர்களாக இருப்பார்கள். சுக்கிரன் ரிஷபத்தில் இருக்கப் பிறந்தவர்கள் புத்திசாலியாக இருப்பர் பல செல்வம், கல்வியறிவு கூடும்.  புகழ் உண்டாகும், மற்றையோரு உதவுவர்.

சுக்கிரன் 10

சுக்கிரன் மேஷத்தில் இருக்கப் பிறந்தவர்கள், வழக்கு வியாஜ்ஜியங்களில் ஈடுபடுவார்கள்.   காம இச்சை அதிகமிருக்கும், பேச்சில் வன்மையிருக்கும். சுக்கிரன் நின்ற ராசிக்கு அடுத்த ராசியில் தனியே சந்திரன் நின்றால் திருமண வாழ்வில் பிரச்சனை ஏற்படும். சுக்கிரன், செவ்வாயும், ராகுவும் ஒரே ராசியில் நின்றிடில் இன்னொருவரின் வாழ்க்கைத் துணையுடன் உறவு ஏற்படும்.

சுக்கிரன் 9

சுக்கிரனும், செவ்வாயும் 7ல் இருந்தால் அந்த ஜாதகர் விதவை பெண்ணை விவாகம் செய்வர். சுக்கிரன் 12ல் இருந்தால் பணம் சம்பாதிக்கும் நிலை ஏற்படும். கலைத்திறனும் உண்டாகும்.  ஆனால், தொழில் தடையைச் சந்திக்கநேரும். சுக்கிரன் 4ல் இருந்தால் ஜாதகர் மற்றையோரைவிட அந்தஸ்திலும், தாய் மீது பாசம் அதிகரித்தும், அறிவில் உயர்ந்தவராய் விளங்குவர்.

சுக்கிரன் 8

சுக்கிரன் 7ல் உள்ள ஜாதகருக்கு மனைவிக்கும் அப்பாற்பட்டு வேற்றுமாதர் தொடர்பு ஏற்படும். சுக்கிரனும், சந்திரனும் ஜாதகப்பொருத்தத்தைப் பார்க்கும்போது இரு ஜாதகங்களிலும் சஷ்டாஷ்டகமாக இருக்கக்கூடாது. சுக்கிரனுக்கு 10ல் சனி இருப்பின் திருட்டு சுகம் அனுபவிக்கும் இயல்பு உண்டு.

சுக்கிரன் 7

சுக்கிரன் களத்திரகாரகன், சனி,செவ்வாய், ராகு இவர்களுடன் சம்பந்தப்பட்டு 7ம் வீட்டோன் 5ல் இருந்தால் காதல் திருமணம் அமையும். சுக்கிரனது பலவீனமும், 7ம் வீட்டோனின் பலவீனமும் கொண்ட ஜாதகர், தன் மனைவியின் செயலால்தான் சம்பாதித்ததை எல்லாம் இழக்க நேரிடும். சுக்கிரனுடன் தொடர்பு கொண்ட சனி வலுத்திருந்தால் சனிதசையில் மாபெரும் செல்வமும், சுபிட்சமும் தொழில் மேன்மையும் ஏற்படும்.

சுக்கிரன் 6

சுக்ரன் பலமுடன் இருந்தால் லட்சுமீ பூஜை மூலமாக ஞானவொளி பிறக்கும். சுக்கிரன் லக்னத்தில் தனித்து நின்றால் இருதாரயோகம் ஏற்படலாம். சுக்கிரன் 10ம் வீட்டோடு தொடர்பு ஏற்படின், கலைத்துறையில், நாடகம், போன்றவற்றில் ஏற்பட வைப்பர்.

சுக்கிரன் 5

சுக்ரன் லக்னத்தில் நின்றுவிடில் வசதிகளோடு நாகரீகமாக நாலுபேர் மெச்சும்படி வாழ்வர், சுக்கிரன், சனி இருவரும் 10 இடத்தில் இருப்பின் வீர்யசக்தி இழந்தவராய் இருப்பர். சுக்ரன், சந்திரன் சேர்ந்து 1,5,7,8,9மிடங்களில் இருந்தால் ஜாதகர் வாழ்க்கை துணையினை பிரிந்து வாழ நேரிடும்.

சுக்கிரன் 4

சுக்கிரன் நின்ற இராசிக்கு அடுத்த இராசியில் தனியே சந்திரனிருந்தால் திருமணவாழ்வில் பிரச்சனை ஏற்படும். சுக்கிரன், சந்திரன் சேர்க்கையும், பார்வையும் எந்த வீட்டில் ஏற்பட்டாலும் ஆண், பெண் சுக வாழ்க்கை ஏதோ ஒரு விதத்தில் நாசமாகிவிடும். சுக்கிரன் செவ்வாயோடு ஆறாம்பாவதிபனோடு சேர்ந்து இருந்தால் மனைவி மூலம் துக்கம் ஏற்படும்.

சுக்கிரன் 3

சுக்கிரனோடு சனி, செவ்வாய் சேர்ந்து சனி, செவ்வாய் வீட்டில் நின்றால் இல்லறம் சிறக்காது, செல்வமும் இருக்காது. சுக்கிரனுடன் சூரியன் சேர்ந்து 7, 8ல் இருப்பின் சில சமயம் கொலைபாதகம் ஏற்படும்படியான சூழலை உருவாக்கும். சுக்கிரனும் , செவ்வாயும், இராகுவும் ஒரே ராசியிலிருந்தால் இன்னொருவரின் வாழ்க்கைத் துணையுடன் உறவு ஏற்படக்கூடும்.

சுக்கிரன் 2

சுக்கிரனுடன், செவ்வாய் இணைந்திருந்தால் விரும்பியவரை மணக்க விரும்புவர், எவர் தடுக்கினும் கேளாது விவாகம் செய்து கொள்வர். இணைந்து 7ல் நின்றுவிடில் இரண்டாம் தாராமாகவும் ஏற்பட வாய்ப்பு உண்டு. சுக்ரன் மனைவிக்கு எங்கு நிற்கிறதோ அதற்கு ஐந்து வீட்டுக்குள் கணவனுக்கு நின்றால், ஒரே பலம் கொண்டதாக இருக்கும், அன்புடன் ஆனந்த வாழ்வு அமையும்.

சுக்கிரன். 1

சுக்கிரன் எந்த லக்னத்தில் பிறந்தாருக்கும் லக்னத்தோடு இருப்பின் அழகிய தோற்றத்தோடும், இனிமையை நாடும் குணமுள்ளவராக இருப்பர். சுக்ரன் கேந்திரமான 1,4,7,10ல் நின்று உச்சம், ஆட்சியில் இருப்பின் சங்கீதம், நாட்டியம், நாடக துறையில் நாட்டம் ஏற்படும். செழிப்போடும் வாழ்வர்.  சொகுசான வீடு, சுகமான வாழ்வு அமையும்.

வியாழன் 16

குருவானவர் ரிஷபம், கன்னி, மகரத்தில் இருந்தால் வீட்டுக்கு மூத்தவராக திகழ்வார்கள். குரு அல்லது சந்திரன் லக்னத்திலோ, 5ம் வீட்டிலோ, 9ம் வீட்டிலோ இருப்பின் அவர் ஆசிரியராகவும் சிறந்த கட்டுரை எழுதுபவராக இருப்பர். குரு 6,8,12ல் நின்றிடில் குழந்தைகள் பிறப்பது அரிது.  குழந்தைகள் குணம் கெட நேரிடும். குருவும், சனியும் ஒன்றையொன்று பார்த்துக்கொண்டாலும், சனி, லக்னம் அல்லது ராசிக்கு 10ல் இருந்தால் பொதுவாழ்வில் ஈடுபாடு கொண்டு பேரும் புகழும் அடைவர். குருவானவர், ஜென்ம சந்திரன், ரிஷபம், மிதுனம், கடகம்,…

வியாழன் 15

குரு புத்திரகாரகர், 5ம் இடத்தில் புத்திர ஸ்தானத்தில் வீட்டில் வீற்றிருந்தால் அந்த ஜாதகர் ஒரே ஒரு புத்திரனைப் பெறுவர். குரு சந்திர கேந்திரத்தில் இருந்தால் ‘’ கஜ கேசரி யோகம் ‘’ ஏற்படும்.  செல்வம், பெயர், புகழ் ஏற்பட்டு செல்வாக்குடன் வாழ்வர். குரு, தன் சொந்த வீட்டிலோ, உச்ச வீட்டிலோ சந்திரனுக்கு, லக்னத்திற்கு கேந்திர கோணத்தில் இருப்பின், செல்வந்தராகவும், நீண்ட ஆயுள் உடையவராகவும் திகழ்வர். குரு சந்திரனுக்கு 6,8, 12ல் வீற்றிருந்தால் சகடை யோகம் உண்டாகிறது. சகடையோகத்தில்…

வியாழன் 14

குரு, சுக்கிரன், சந்திரன், புதன் நால்வரும் ஒரு பெண்ணின் ஜாதகத்தில் லக்கினதிலேயே இருப்பார்களானால் அப்பெண் மிக அதிர்ஷ்டசாலி, நற்குணவதி புத்திர பாக்கியத்துடன் வாழ்வர். வியாழனின் 5ம் வீட்டையோ அல்லது லக்னத்திற்கு 5ம் வீட்டையோ குரு, செவ்வாய் இருவரும் பார்ப்பின் புத்திர சோகத்தால் அந்த ஜாதகர் அவதிபடுவவர். குருவானவர் சந்திரனை கேந்திரத்திலோ, திரிகோணத்திலோ இருந்து பார்வை செய்யின் அந்த ஜாதகர் ஜோதிட சாஸ்திரத்தில் பாண்டித்தியம் பெற்று பல ஜோதிட புத்தகங்களை எழுதி பேறும் புகழும் பெறுவர்.

வியாழன் 13

குருவிற்கு 5ல் சூரியன் இருக்கும்போது வக்கிரம் ஏற்படுகிறது, வியாழனக்கு 9 ல்சூரியன், வரும்போது வக்கிரம் நிவர்த்தியாகிறது. குருவுக்கு 6,7,8ல்  சூரியன் இருந்தால் வியாழன் வக்கரம் பெற்ற இருக்கும். குரு, சனி, புதன், சந்திரன், செவ்வாய் கூடி 10மிடத்தில் இருப்பின் ஜாதகன் அவரது உழைப்பால் சகல வசதிகளுடன் வாழ்க்கையை அமைத்துக் கொள்வர்.

வியாழன் 12

குருவின் பார்வையோ, சேர்க்கையோ 10மிடத்து அதிபனுக்கு இருந்தால் சிறந்த முன்னேற்றம் உண்டாகும். புதன் தொடர்பு இருப்பின் வங்கி ஆடிட்டராக திகழலாம். குருவுக்கு கேந்திர திரிகோணங்களில் செவ்வாய், சுக்கிரன், சனி நின்றால் யோகம் விருத்தியடையும். வியாழன் ஆட்சி, உச்சமேறி லக்கினத்தையோ, சந்திரனையோ பார்த்தோ, இணைந்தோ இருப்பின், நீதி தாண்டாத குண அமைப்பு இருக்கும்.

வியாழன் 11

குரு போன்ற சுப கிரகங்கள் நான்கு கேந்திரங்களில் தனித்தனியாக இருப்பின் அந்த ஜாதகர் ராஜயோகத்தை அடைவர். குரு விருச்சிக லக்னகாரகர்களுக்கு 3ம் இட நீசகுருவும் சரி, 9ம் இடம் உச்ச குருவும் சரி திருமண வாழ்க்கையில் குறைபாடுகள்தான் அதிகம்.

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 82

தூது சகுனம் …..  ரோகியின் குணங்கள் தெரியக்காட்டி வைத்தியரிடத்தில் சென்று வைத்தியரை அழைக்க வருந்தூதனது லக்ஷணங்கள் மருத்துவர்கள் அநுசரித்து  சாத்தியா சாத்தியங்கள் அறிந்து ரோகியினிடத்திற்கு ஏகுகிறதற்கு லக்ஷணங்களை பூர்வருஷி சிரேஷ்டர்களால் சொல்லியதை இவ்விடத்தில் விவரத்து எழுதுகிறேன். ஏழு தினத்தில் மரணமடையும் தூத லக்ஷணம் …..  எந்த அழைக்கப்போகிறவன் கையில் மதுரமான பண்டங்களைக் கொண்டு வைத்தியனை அழைக்க ஏகுவானாகில், அந்த ரோகி ஏழு தினங்களில் மரணமடைவானென்று அறியவேண்டியது. நாலு நாழிகையில் மரணகுறி தூத லக்ஷணம் ……  ஒரு தூதன்…

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  81

மரண லக்கின திதிகள் …..  விருச்சிகம், மேஷம் லக்கினத்தின் நந்தாதி திதியிலும், மிதுனம், கன்னிகை இந்த லக்னித்தின் பத்திராதிதியிலும், கர்க்கடகலக்கினத்தின் ஜயாதிதியிலும், கும்பம், சிங்கலக்கினங்களின், ரிக்த திதியிலும், தனுசு லக்கினத்தின் பத்திராதிதியிலும், மிதுன லக்கின ஜய திதியிலும், மகர லக்கின பூரண திதியிலும் இந்த லக்கின திதிகளில் ரோகங்கள் உண்டாகிறதினால் ரோகியானவன் மரணமடைகின்றான். திதிகளின் விவரணம் …..  செவ்வாய்க்கிழமை கிருத்திகை நக்ஷத்திரம் நந்தாதிதி, புதன் கிழமை, ஆயில்ய நக்ஷத்திரம் பத்திராதிதி வியாழக்கிழமை, மக நக்ஷத்திரம், ஜயா திதி…

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  80

மரண லக்ஷணம் …..  இரவில் சந்திர பிம்பத்தைக் காட்டினால் இரண்டு சந்திர பிம்பங்கள் இருக்கிறதென்றும் அல்லது பகலில் சந்திரி, சூரியர்கள் இருக்கிறார்கள் என்றும் இரவில் நக்ஷத்திரங்கள் தென்பட வில்லை என்றும் சிவப்பெருமான் தென்படுகிறறென்றும் மலையின் மேல் கந்தருவர்கள் பாடுகிறார்களென்றும் நாகலோகம் அதோயிருக்கிறதென்றம் சொல்லுவான் இவ்விகாரங்கள் பஞ்சதத்துவங்களின் ( பஞ்ச பூதம் ) கெடுதலினால் உண்டானது இவன் சீவிக்கமாட்டான் என்று அறியவும். ஒரு வாரத்தில் நோய் நிவர்த்தி குறி …..  மனிதர்களுக்கு புரட்டாசி மாதத்தில் உத்திர நக்ஷத்திரத்தில், தைமாத…

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  79

நாலாவது விதம் ……  சிரத்தில் வியர்வைஉண்டாகிக் கொண்டு வாயிநிடமாகத்தானே மூச்சு விட்டுக்கொண்டு இருப்பதால் எட்டு நாடிகள் பலஹீனப்பட்டு சீதளமடைதலினால் அந்த ரோகி சீவிக்க மாட்டான் ( உயிரோடு இருக்கமாட்டான் ). ஐந்தாவது விதம் …..  மரணமடையும் ரோகிக்கு நாக்கு, மூக்குநுனி, இரண்டு புருவங்கள் தாலுதேசம் இவைகள் தென்படாது இவைகளுக்கு அருந்தததி என்றும் துருவம் என்றும் விட்சு திரிபாதி மாத்ரு மண்டலமென்றும் வேறு நாமதேயங்கள் ஆரியர்கள் வைத்திருக்கிறார்கள். ஆறாவது விதம் …..  மனதானது பிரமித்தால் அவர்களது வார்த்தைகள் பிதற்றவாய்…

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  78

அசாத்திய லக்ஷணம் …..  வாதமானது பித்த ஸ்தானத்திலும், பித்தமானது கபஸ்தானத்திலும், கபமானது கண்டஸ்தானத்திலும் இருக்குமாகில் அகத்தியம் மரணம் சம்பவிக்கும்.  மேலும் இரவில் அதிகதாஹமும், பகலில் சீதளமும் கண்டத்தில் ( தொண்டையில் ) கோழை கட்டுதலும் ஹீனசுரமும் அதிகபேதியும் சுவாசத்துடன் கூடிய இருமலும், விக்கலும், பக்கசூலையும், உதரசூலையும் முதலிய துர் ரோகங்கள் இருந்தால் அவன் பிழைக்கமாட்டான். இரண்டாவது விதம் …….   மார்பு, கால், கைகள், நாசிகை முதலியது சீதலமாயும், சிரசு மாத்திரம் கொதித்துக் கொண்டிருந்தால் அந்த ரோகி ஜீவிக்கமாட்டான்.…

வியாழன் 10

குரு லக்னத்தில் உள்ளவர்கள், ஆசிரியராக, கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகராக, பெற்ற பிள்ளைகளிடம், மிகுந்த பாசமுள்ளவராக திகழ்வர். வியாழன் எந்த லக்னமானாலும், பொதுவாக, 1,2,5,7,9,11ல் இடங்களில் இருப்பின் குரு பலம் உடைய ஜாதகமென கொள்ளவேண்டும். குரு பெண்களுக்கு 2ம் இடம், குடும்பஸ்தானம், 5ம் இடம் அதிர்ஷ்ட ஸ்தானம், புத்திர ஸ்தானம் 9ம் இடம் பாக்கியஸ்தானம், புகுந்த வீடு பாக்கியத்தை குறிப்பிடுவதாகும். இந்த அமைப்பு அதிர்ஷ்ட இடமாகும்.

வியாழன் 9

குரு, சுக்ரன், சுக்ல பட்சத்து சந்திரன், புதன் ஆகியோர் பெண்ணின் ஜாதகத்தில் லக்னத்திலேயே இருந்தால், அதிர்ஷ்டசாலியாக, நற்குணவதியாக இருப்பர். குரு பலம் என்றால் குறிப்பிட்ட ராசிக்கு கோசார ரீதியாக குருவானவர் 2,7,9,11 ஆம் இடங்களில் சஞ்சரிக்கும் காலம் ஆகும். குரு உச்சமாக கடகத்தில் நின்றவருக்கு ஒரு தொழிலில் நிச்சயம் இருப்பர், அல்லது தனியார் துறை பள்ளியில் ஆசிரியராகவாவது தொழில் செய்வர்.

வியாழன் 8

குரு மகரத்தில் இருக்கப் பிறந்தவர்கள் பலவீனமாக இருப்பார்கள். அறிவாற்றல் குறைந்திருப்பார்கள், அளவோடு செல்வமும், மகிழ்ச்சி ஏற்படும். குரு கடகத்தில் இருந்தால் சரீர நலம் ஏற்படும்.  தோற்றப்பொலிவிருக்கும், கல்விஅறிவு, இனிய சுபாவம், நல்ல வாழ்க்கைத் துணை அமையும். குரு 5, 9ல் இருந்தால் ஜாதகர் பிள்ளைகளை அதிகம் விரும்புவார்.

வியாழன் 7

குரு 9ம் இடத்தில் இருப்பின் நிர்வாக படிப்பில் நாட்டம் ஏற்படும். வேதம், சாஸ்திரம் போன்ற கல்வி துறைகளிலும் தேர்ச்சி உண்டாகும். குரு பலமாக 5ல் இருந்தால் அறிவாளியாகவும், நல்ல கல்வியும், உன்னதமான ஸ்தானத்தை வகிப்பர். குருவும், சந்திரனும் கூடி 2ம் இடத்தில் இருக்க 9ம் வீட்டோன் அவர்களைப் பார்க்க, இந்த அமைப்புடைய ஜாதகர், சீரும், சிறப்பும் பெற்று வாழ்வர். குரு,சனி, கேது மூவருமே வேத, வேதாந்தங்களை சத்தியத்தின் தத்துவத்திற்கு ஆதார பூர்வமாகத்திகழ்கின்றனர்.

வியாழன் 6

குரு மேஷத்தில் இருந்தால் குடும்பநலமுண்டாகும், உடல்வலு இருக்கும் ராணுவத்தலைமை தாங்கக்கூடும், ஒரு ஸ்தாபனத்தில் தலைமை தாங்ககூடும். குரு தனபாவத்தின் அதிபதி இருவரும் 1,2,4,7,10 ஆகிய ஸ்தானத்தை அடைந்திருந்தால் சகல சம்பத்தும் நிறைந்தவராவர். குரு தனுசில் அல்லது மீனத்தினருக்காகவும் அது லக்னமாக அமையவும் அங்கு செவ்வாயும் சந்திரனும் கூடி இருக்கும் பொழுது பிறந்தவர் சிறந்த செல்வம் பெற்றவர். குருவும் சூரியனும் இணைந்து இருப்பின் குறிப்பிட்ட ஜாதகர் பெற்றோரை விட சீரும் சிறப்புமாக இருப்பர். பொருட் சேர்க்கை பாராட்டு புகழும்…

வியாழன் 5

குரு உச்சம் பெற்று வர்க்கோத்தமாக இருப்பின் சகல பாக்யங்கள் பெற்று வாழ்வர். குரு ஆட்சி பெற்ற தனுர் லக்னக்காரகர்கள், சூரியனும், செவ்வாயும் 5ல் உள்ளவர்கள்.  உலகளவில் சாதனையும், ஆன்மீகத்துறையில் சேவைசெய்வர். குரு 10ம் வீட்டோடு தொடர்பு ஏற்படின் வேதாந்தியாகவும், பேராசிரியராகவும், ஞானவழியில் வாழ்க்கை அமைப்பர். குரு மகர ராசியில் நீச நிலையை பெறுவர்.  அவர் மகரராசியில் வக்கிரகதியில் சஞ்சரித்துக்கொண்டிருந்தால் நீசப்பங்கம் ஏற்படும். குருவுடன் தொடர்பு கொண்ட சனி வலுத்திருந்தால் அரசாங்கப்பதவி கிடைக்கும்.

வியாழன் 4

வியாழன் ரிஷபத்தில் இருந்தால் நல்லசுகம் வாழ்வில் அமையும்.  இனிமையாக பேசுவார். பொதுமக்களிடையே செல்வாக்கு இருக்கும்.  தியாக குணம் இருக்கும். குரு 9ம் வீட்டோனுடன் இணைந்தோ 9ம் வீட்டோனை பார்க்கும் போது தியானம், யோகத்தில் ஈடுபாடும், தந்தை பெரும் பணக்காரராகவும் அறப்பணியில் நாட்டமும், ஞானவானாக இருப்பார். குருவானவர் நீசம்பெற்று லக்னத்தில் ராகு இருந்தால் அந்த ஜாதகர் எப்போதும் கவலைப்படுபவராக இருப்பார். குரு 5ல், 5ம் அதிபதி பலம்பெற்ற சுபர்பார்வை பெற்றால் மகன் உண்டு.

வியாழன் 3

வியாழன் 5லும், 5ம்பாவாதிபதி உச்சம், ஆட்சியில் நின்றிடில் புத்திர பாக்கியம் ஏற்படும். குரு பார்வை 5ம் பாவாதிபதியை கேந்திர, திரிகோணத்தில் நின்றிடில் புத்ர பாக்யம் ஏற்படும். குரு ஒற்றைப்படை ராசியில் 5 அல்லது 9ல் இருந்தால் சாதனையாளராகவும், தலைவராகவும் விளங்குவார். குரு பலமுடன் இருந்தால் வேத விற்பன்னராகி ஞானஒளி பெறுவார். குரு சிம்மத்தில் இருப்பின் கீர்த்தி பெற்றவர்கள், பலசாலிகள், கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், தலைமை தாங்குகிற தகுதி உடையவர்கள்.

வியாழன் 2

நீச வியாழனுடன் சூரியன் நின்றிடில் மித்திரர்களை பழிகாரர்களாக ஆக்கிவிடும். வியாழன் நின்ற இராசிக்கு அடுத்த ராசியில் சுக்கிரன் தனியே இருந்தால் மணவாழ்வு மகிழ்வுறும். குரு 12ல் இருந்தால் அவருக்கு அவரது குலதருமத்திற்கு மாறாக திருமணம் நடக்கும். வியாழனும், லக்னாதிபதியும் 5ம் அதிபதியும் கேந்திர, திரிகோணத்தில் இருப்பின் புத்ரபாக்யம் ஏற்படும்.

வியாழன் 1

கிரகங்கள் நம் விதியைப் பிரதிபலிப்பவர்கள். வியாழன் லக்னத்தில் நின்றிடில் எவருக்கும் நலம் செய்யும் நாட்டம் உண்டு.  சாஸ்திர சம்பிரதாயம், ஆன்மீகம் போன்றவற்றில் நம்பிக்கை உள்ளவர். வியாழன், சனி, செவ்வாய் சேர்ந்திடில் குழந்தைகளால் பிரச்சனை ஏற்படும். வியாழன் லக்னத்தில் அமர்ந்தாலோ, அல்லது லக்னாதிபதியோடு குரு சேர்ந்தாலோ குரு நட்பு பாவத்திலமர்ந்து பார்த்தாலோ ஆயுள், ஆரோக்கியத்துடன் வாழ்க்கை அமையும். குரு 2வது பாவத்தில் இருந்தாலும், முதல் திருமணம் ஆகி, சில கால கட்டத்தில் 2வது மனைவியும் அமையும்.

புதன் 5

புதனும், சந்திரனும் பரிவர்த்தனமாகிவிடில் அவர் நினைத்த படிப்பை படிக்க முடியாது.  பட்டப்படிப்பும் ஏற்படாது. புதனுக்கு புதன் 6,க்கு8ல் நின்றிடில் ஆண் குடும்பத்தினரை பெண்ணுக்கு பிடிக்காது. அதேபோல் பெண் குடும்பத்தினரை ஆணுக்கு பிடிக்காது. புதன் சொந்த வீட்டிலோ, உச்சவீட்டிலோ, அதுவும் கேந்திரத்தில் இருப்பின் புத்திரயோகம் ஏற்படும். அதனால் செல்வந்தராகவும், சிறந்த பேச்சாளராகவும், பொதுமக்களிடையே பேரும், புகழும் அடைவர். புதன் நீச்சனாக இருந்தால் வேறு மதம், வேறு இனம், வேறு மொழியைச் சேர்ந்தவர் வாழ்க்கைத் துணையாக அமையும். புதனும், குருவும்…

புதன் 4

புதன் மீனத்தில் நீசம் அடைந்திருந்தால் கல்வித்தடை, தாமதக்கல்வி படிப்பை பாதியில் நிறுத்தி, வியாபாரத்தில் ஈடுபட்டு நஷ்டமேற்படும். புதன் நீசமாகி, சந்திரனோடு தொடர்பு இருக்குமானால் தாயை பகையாளியாக்கிக்கொள்வார்கள். புதன் நீசப்பட்ட ஜாதகர், பெண் சபலம் ஏற்படு நீர்த்துப்போன விந்து பலத்தால் புத்திர பாக்யம் ஏற்படாது.  சுய இன்பம் அனுபவிப்பவர். புதன் ( நீசம் பெற்றால் ) ஒரு அலி கிரகமென்பதால் சிலருக்கு திருமணத்தின்மீது பற்று இருக்காது சில ஆண்கள் பெண் குரலில் பேசுவது பெண்கள் போல் நடந்து கொள்வார்கள்.

புதன் 3

புதன் 9ம் இடத்தில் இருந்தால் அறிவாளியாக முடியும், பேச்சுவன்மை உண்டாகும், வர்த்தகத்துறை கல்வியில் தேர்ச்சிபெறக்கூடும். புதனும், சந்திரனும் லக்னத்தில் இருந்தால் அந்த ஜாதகி மகிழ்ச்சியோடு வாழ்வதுடன் அடக்கமுள்ளவளாகவும், சுமுகமாகப் பழகுகிறவளாகவும் விளங்குவார். புதன் பொதுவாக சிம்ம லக்கினக்காரகர்களுக்கு தனுசில் இருந்தால் தனயோகம் வரும். புதன், செவ்வாய் ஆகியோர் ஒருவருக்கொருவர் சமசப்தமாக இருந்தால் உயர்ந்த பெரிய சரீரம் அமைந்திருப்பர்.

புதன் 2

புதனுக்கு 1,2,5,6,9,10ல் கேது நின்றிடில் காதல் வரும், குரு, சுக்கிரன் பார்க்கில் காதல் வெற்றி பெறும்.  செவ்வாய் பார்க்கில் தோல்வியுறும். புதன் 10ம் வீட்டோடு தொடர்பு ஏற்படின் எழுத்து, சொந்த தொழில், கலைகளில் ஆர்வம் ஏற்படும். புதன் மீன லக்னக்காரகர்களுக்குக்கேந்திராதிபத்திய தோஷம் உடையவரானாலும் கெடுதலை பண்ணமாட்டார். புதன் பலம் கூடிய ரிஷப லக்னத்தாருக்கு விஷயஞானம், பேச்சில் கெட்டிக்காரத்தனம், பொருளாதார தட்டுப்பாடு இராது.

புதன்

ஜோதிட விதிமுறைகள் வாழ்க்கைக்கே வழிகாட்டியாக விளங்குகின்றன.   புதன் லக்னத்தில் நின்றிடில் படிப்பில் நாட்டம், கலையார்வம், பந்த பாசம் உள்ளவராய் திகழ்வர். புதனுடன் சூரியன் சங்கமித்தால் தாய் மாமனுக்கு கெடுதி விளைவிக்கும். புதன் பலமுடன் இருப்பின் விஷ்ணு பூஜை வாயிலாக சித்தி பெறுவர்.  புதன் 10ல் இருந்தால் கணிதம், ஜோதிடம், மனைவியிடம் அன்பு, வியாபாரம், வெளிநாட்டு வியாபாரம் தொடர்பும் உண்டாகும். புதனுக்கு 1,5,9,2,6,10ல் கேது இருப்பின் காதல் வரும். செவ்வாய் பார்க்கின் தோல்வி, சுக்கிரன் பார்க்கில் காதல் வெற்றி…

செவ்வாய் 12

செவ்வாய் சொந்த வீட்டிலோ, உச்சவீட்டிலோ அந்த வீடும் கேந்திர வீடாக அமைந்தால் ருசிகரயோகம் ஏற்படும்.  இதனால் தைரியம், சாகஸம், வெற்றி மேல் வெற்றி பெருவர். செவ்வாய் 2ம் வீட்டிலோ, 4ம் வீட்டிலோ, 12ம் வீட்டிலோ இருப்பின் அவர் வீட்டுக்கு மூத்த பிள்ளையாவார். செவ்வாய் ஆட்சி, உச்சம் பெற்றாலோ, கடகம், சிம்மத்தில் நின்றாலோ குரு, சனி, ராகு, கேது இவர்களுடன் கூடியாவது இவர்களால் பார்க்கப்பட்டாலாவது செவ்வாய் தோஷம் ஏற்படாது.

செவ்வாய் 11

செவ்வாய் கிரகத்திற்கு 7ல் சூரியன் நின்றால், அங்காரகன் வக்ரம் பெற்று உள்ளார் என்று கொள்ளவேண்டும். செவ்வாய் 12ல் நிற்பது தாம்பத்ய உறவு, படுக்கை சுகம் பாதிக்கப்படும் ஆயுள் பங்கமும் ஏற்படும். செவ்வாய் பெண் ஜாதகத்திலும், ஆண் ஜாதகத்தில் உள்ள சுக்கிரனும் ஒன்றுக்கொன்று கேந்திரம் பெற்று இருந்தால் தாம்பத்திய உறவு பலமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். செவ்வாய்7ல் இருந்தால் இருதாரம் அல்லது மனைவியுடன் கருத்து வேறுபாடு 8ல் இருந்தால் மனைவியை இழந்து வாழ்வார், பின்னர் பல மாதர்கள் தொடர்பு ஏற்படும்,…

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  76

வாதாதி சர பேதங்கள்  சிலேஷ்ம தேஹிக்கு கம்பீரமாக சரம், பித்தேஹிக்கி சீக்கிர சவரம் வாததேகிக்கு சமசரம், பித்ததில் துரிதகதி, சிலேஷ்மத்தில் ஸ்திரகதி, வாதத்தில் மந்தகதி சேஷ்டை உண்டாகி இருக்கும். வாதாதி பிரகிருதி தேஹ லக்ஷணம்  பித்த ரோகி தேகம் உஷ்ணமாயும், வாதரோகத்தால் சீதலமாயும் சிலேஷ்ம ரோகியின் தேகம் சலமயமாயும் இருக்கும் இவைகளைத்தான் தேகத்தின் சேஷ்டைகள் என்று சொல்லப்படுகின்றது. ரோகமானது சாத்தியமென்று, அசாத்தியமென்றும் இரண்டு விதமாயிருக்கிறது கால சம்பிராப்தியால் சகலமும் நிஷ்பலமாகி ஜீவியின் இருப்பு மரணமானது நிச்சயமாகின்றது காலஞானமில்லாததினால்…

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  75

காலசங்கிய பிரமாணானி இருபத்தோராயிரத்தி  அறு நூறு( 21,600) சுவாசமானது இரவும், பகலும் ஒடுகின்றது இதற்குதான் பிராணன் என்று பேர், இதுகாலபிராப்தியால் நாசம் சம்பவிக்கின்றது. சரீரம் என்கிற வீட்டில் ரக்ஷகப்படுகின்றது, உள்புரமாக மூச்சானது பத்து அங்குலமும் மூச்சு வெளியில் விடும்போது பனிரெண்டு அங்குலமும், போகின்றது ஆகையால் மனது நிறுத்தி வருதலும், போதலும் சமானமாயிருந்தால் காலதரிசனமாகா.  சிரஞ்சீவியாயிருப்பான். காலபேதத்தால் வாத பித்த சிலேஷமென்கிற தாதுவினால் தேகத்தின் சகல குணங்களும் நிச்சயப்படுகின்றது.

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  74

இடகலை நாடி .; நாசிகையின் இடது பாரிசமாக ( வழி ) வரும் காற்றை இடகலை என்றும், சந்திரனென்றும், பித்துரியானமென்றும் பதினாறுகலைகளை உடையதென்றும் சொல்லப்படுகின்றது. இனி சுழிமுனையென்னும் நாடியை குறித்து இது வைத்திய சாஸ்திரமாதலால் சொல்லவேண்டிய அவசியம் கிடையாது.  ஓ பார்வதி, சர லக்ஷணங்கள் முதலியது சர சாஸ்திரத்தில் புகட்டி இருக்கிறேன் இது வைத்திய கிரந்தம் ஆதலால் அவ்விஷயங்களை விவரமாய் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது சரம் பலதென்று தெரியக் காட்டினேன் இனி அதுகளின் மாறுதலால் உண்டாகும்…

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  73

சூரிய சந்திராதி சுர லக்ஷணம் ..  இடாசலாம நிஸ்வாச சோம மண்டல கோசரா  பித்ருயான மிதிஞேயம் வாமமாசிரித்யதிஷ்டதி  தக்ஷிணே பிங்களா நாடி வஹ்ணி மண்டலகோசரா தேவயானமிதிஞேயம் புண்யகர்மானுகாரணி. வலது பக்கத்து நாசிகை துவாரமாய்வரும் உஸ்வாச நிஸ்வாச ரூபமாய் இருக்கும் காற்றை பிங்களை என்றும், சூரியனென்றும், தேவயானமென்றும், புனராவிருத்தி ரஹிதமென்றும் புண்ணிய கருமங்கள் செய்யும்படியானதென்றும் பன்னிரெண்டு அங்குலம் பாயுமென்றும் அறியவும்.

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  72

ஸ்வர பேதம் …..  சூரிய சுரத்தில் உதயமாகி அஸ்தமானத்தில் சந்திரன் இருந்தால் மிகவும் சுபமாகும்.  இது தவிர்த்து சந்திரனுக்கு பதில் சூரியனும், சூரியனுக்கு பதில் சந்திரனும் உதயமானால் அசுபம் ஹானி பீடை முதலியது உண்டாகும். கிரம சுர லக்ஷணம் .. கிரமமான சுரம் உதயமாகிலும் சுபம் வாய்க்கும் என்றும் வினவ தேவியார் சுவாமியைப் பார்த்து ஓ நாயகா, தாங்கள் கூறியது ஒன்றும் எனக்கு தெரியவில்லை. பார்வதி பிரசனை ..   சூரியனென்னறால் யார், சந்திரனென்றால் யார் அவைகளின் ரூப…

இஞ்சி வெள்ளைப்பூண்டின் மருத்துவ பயன்கள்

இஞ்சியின் இயல்பு இஞ்சிக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. நம் உண்ணும் உணவில் இஞ்சி கலந்து சாப்பிடுவதால் உணவு எளிதில் ஜீரணமாகிறது இஞ்சிக்கு ஞாபக சக்தியை அதிகரிக்கும் குணம் அதிகமுண்டு. மேலும் குடலில்சேரும் கிருமிகளை அழித்துவிடும். கல்லீரலை சுத்தப்படுத்துகிறது.மலச்சிக்கல், வயிற்றுவலி, ஏற்பட்டால் இஞ்சிச்சாறில் சிறிது உப்பு கலந்து பருகவேண்டும். பசி எடுக்காதவர்கள் இஞ்சியுடன் கொத்தமல்லி துவையல் அறைத்துசாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும். ஜலேதாஷம் பிடித்தால் இஞ்சி கஷாயம் போட்டு குடித்தால் குணமாகும் தொண்டை வலி ஆஸ்துமா போன்ற…

செவ்வாய் 10

செவ்வாய், சனி ஒன்றுக்கொன்று சமசப்தமாக இருந்தாலும், திருமண வாழ்க்கையில் பிரச்சினைகளே வாழ்க்கையாக அமைந்துவிடும். செவ்வாய் பலம் பெற்ற இடங்களில் மகரம், மேஷம், விருச்சிகம் அகிய இடங்களில் சூரியனோடு இணைந்து, இருப்பின், பொடி, புகையிலை போடுபவராக இருப்பர். செவ்வாய் லக்கினத்தோடு அமைந்து அதுவே மேஷம், விருச்சிகம், மகரமாக அமைந்து ஆணாய்இருப்பினும் பெண்ணாய் இருப்பினும் வாழ்க்கை துணைவரை இழப்பர். செவ்வாயும், லக்னமும் மகரத்தில் நின்றுவிடில், அநீதி வழிசெல்வார், நீதி வழியில் பொருள் ஈட்டமாட்டார்.

செவ்வாய் 9

செவ்வாய் மகரத்தில் உச்சம் பெற்றவர்கள், பாதுகாப்பு படையில், காவல் துறையில் பணியாற்றுவார்கள். செவ்வாய் சுக்கிரன் சனி இவர்களுக்குள் ஏதாவது ஒரு தொடர்பு ஜாதகத்தில் இருப்பின் அந்த ஜாதகர் மறைக்கப்பட்ட பொருளை அறிவதில் ஆர்வம் காட்டுபவர்களாக இருப்பர். செவ்வாய்க்கு மகரத்தில் உச்சநிலை காரணமாக நிலம், மனை, வீடு வாகனம் பொறியியல் துறைகள் மூலம் நன்மைகள் ஏற்படும். செவ்வாய்க்கு கேந்திர, திரிகோணங்களில் குரு, புதன், ராகு நின்றால் யோகமேற்படும். செவ்வாய் நீசம்பெற்று பலமுற்று பாபகிரகங்களுடன் சேர்ந்து 12ல் இருப்பின் இடது…

செவ்வாய் 8

செவ்வாய் ஆட்சி உச்சம் வீட்டில் இருப்பது ருசிகர யோகம்.  இது போன்ற யோகம் அமைவது காவல்துறை, இராணுவம், கப்பல் துறைக்கு அதிகம் பயன்படும். செவ்வாயும், சுக்கிரனும் 1,4,7,10ல் கூடி இருக்குமாயின் இல்லாளை இழந்தவராய் அல்லது விவாகரத்து செய்தவராய் இருப்பர். செவ்வாய் லக்னத்தில் இருக்கப் பிறந்தவர் தன் பந்துதுக்களிடத்தில் எப்போதும் விரோதித்துக் கொள்வர். செவ்வாய் கடகத்தில் நீச்சம்பெற்று அதில் லக்னம் அமையப்பெற்றவர்கள் படிப்பு குறைவாக இருப்பினும், சிறு தொழில் செய்து ஜீவிப்பர்.

செவ்வாய் 7

செவ்வாய் கும்பத்தில் இருக்கப்பெற்ற ஜாதகர் செல்வம் குறையும், கவலைகள் சூழும், கஷ்ட ஜீவனம் செய்ய வேண்டி வரும்.  சூதாட்டத்தில் பொருள் இழக்க நேரிடும். செவ்வாய் தசையில் சனி புத்தியில் பகைவர்களின் கொடுமை, துன்பம், துயரம் அதிகரிக்கும். செவ்வாய்க்கும் 4ம் வீட்டுக்கும் தொடர்பு இருந்து செவ்வாய் பலம் பெற்றால் பொறியியல் கல்வி ஏற்படும். செவ்வாய்க்கும் 4ம் வீட்டுக்கும் புதன், சனி கூடி இருப்பின் இன்சினீயரிங் கல்வி பெறக்கூடும். செவ்வாய், குரு பலமாக இருந்து வித்யாஸ்தானத்தோடும் தொடர்பு இருப்பின் சட்டம்…

செவ்வாய் 6

செவ்வாயுடன் தொடர்பு கொண்ட சனி பலம் பெற்றிருந்தால் ஒருவர் தொழில் நுட்பக்கலை வல்லுநராகவும், மெகானிக்கல் இன்சினியராகவும் முடியும். செவ்வாய் துலாத்தில் இருக்கப் பிறந்தவர்கள் லாகிரி வஸ்துக்களில் நாட்டம் செலுத்துவர்.  சிற்றின்பத்து செலவு செய்வார்கள், கடுமையாக பேசுவார்கள். செவ்வாய் மீனத்தில் இருக்க பிறந்தவர்கள், நல்ல பதவி வகிப்பார்கள், முன்னேற்றம் திருப்தியாக இராது.  வெளிநாட்டு வாசமிருக்கும். செவ்வாய் கடகத்தில் இருக்க பிறந்தவர்கள் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் வசிப்பர், உடல் நலம் குறைந்திருக்கும், விவசாயத்துறை லாபம் அளிக்கும்.

செவ்வாய் 5

செவ்வாய் எங்கிருந்தாலும், கடகம்,சிம்மம் ஆகிய லக்ன\ ராசிகளில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் தோஷமில்லை. செவ்வாயுடன் குரு, சனி, ராகு, கேது ஆகிய கிரகங்கள் சேர்ந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை. செவ்வாய் பலமுடன் விளங்கினால் சக்தி, முருகன் பூஜை வாயிலாக சித்தியை பெறுவார். செவ்வாயும் 12ம் வீட்டோனும் கூடி பலம் இழந்தால்சகோதரரிடையே சக்கரவு ஏற்படும். செவ்வாயுடன் 12ம் வீட்டோன் கூடி இருந்தால் சிறைப்பீதி ஏற்படக்கூடும்.  செவ்வாய், புதனுடன் சேர்ந்தால் மருந்துகள் சம்பந்தப்பட்ட கடைகளிலும் மருத்துவராகவும், திறமை ஏற்படும். செவ்வாய் 10…

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  71  

ஒரு பக்ஷத்தில் மிருத்தியு லக்ஷணம் …..  பிரகிருதி ரூபமான சீவன் விகுருதம் அடைதலினால் காலசம்பிராப்தியால், பார்வையானது மட்டமாகிறது.  அப்பொழுது சந்திர நாடியில்லாமல்  சூரிய நாடி தானே இரவும், பகலும் ஒடிக்கொண்டு இருக்கும். அப்படி இருக்கும்படியான புருஷன் ஒரு பக்ஷத்தில் மரணம் அடைவான். வேறு வித குறி  எந்த புருஷனது வஸ்திரத்திலும், கண்டகசுரத்திலும், தேகத்திலும், முகத்திலும், துர்நாற்றம் வீசுமாகில் அவன் யோகியாயிருந்தாலும் தடையின்றி ப க்ஷதினத்தில் மரணமடைவான் இது நிச்சயம். வருஷம், அயனம், ருது, மாதம், பக்ஷம் இவைகளெல்லாம்…

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  70

ஆத்தும நிலை  சுருதி யுக்தி அனுபவம் என்னும் மூவிதங்களினால், சரீரம் ஆத்மாவென்றும், மனது அந்தராத்மாவென்றும், பிராணன் பரமாத்துமா என்றும், இதுதான் பஞ்சத்துவங்களை தாரணை செய்து இருக்கிறதென்றும் தெரியவருகிறது. ஆகையால் ஆத்மாவுக்கும், மனதுக்கும் விகுருமமுண்டாகில் தடை இன்றி மனிதன் இந்தலோகத்தில் சீவிக்கமாட்டான். காலமென்கிறவனால் பார்க்கப்பட்டான்.  அதாவது அந்த சீவிக்கி காலபிராப்தி ஆய்விட்டது என்று ( முடிந்து ) அறியவும்.

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  69

நாலு வித வாஞ்சை  காலமென்கிற அக்கினியானது ஜடாக்கினியில் சேருவதினால் நான்கு விதமான வாஞ்சை உண்டாகின்றது.  அவையாவன 1.  ஆகாரம், 2. சலம், 3. நித்திரை, 4. காமம், இவைகளின் ஆகார மென்கிற அன்னம் இல்லாமற்போனால் தாது நஷ்டமாகின்றது சலம் இல்லாமல் போனால் ரத்தம் சுஷ்கித்துப் போகின்றது காமத்தினால் நேத்திரேந்திரியம் கெட்டுப் போகின்றது தூக்கமில்லாமையால்  சகல வியாதிகளும் தொடர்கின்றன.

மனித உடலைப்பற்றி அறிவோம் 10

மிகப்பெரிய வெள்ளை இரத்த அணு: மோனோசைட் மிகச்சிறிய வெள்ளை இரத்த அணு: லிம்போசைட் அதிகரித்த சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கை: பாலிசித்தீமியா உடலில் உள்ள இரத்த வங்கி: மண்ணீரல் வாழ்க்கை நதி என்று அழைக்கப்படுகிறது: இரத்தம்

மனித உடலைப்பற்றி அறிவோம் 9

மிகச்சிறிய தசை: ஸ்டேபிடியஸ் (நடுத்தர காது) குரோமோசோம் எண்: 46 (23 ஜோடி) பிறந்த குழந்தை எலும்புகளின் எண்ணிக்கை: 306 இரத்த பாகுத்தன்மை: 4.5 முதல் 5.5 உலகளாவிய நன்கொடையாளர் இரத்தக் குழு: ஓ  உலகளாவிய பெறுநர் இரத்தக் குழு: ஏபி

மனித உடலைப்பற்றி அறிவோம் 8

கையில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 27 மிகப்பெரிய நாளமில்லா சுரப்பி: தைராய்டு மிகப்பெரிய நிணநீர் உறுப்பு: மண்ணீரல் மிகப்பெரிய மற்றும் வலிமையான எலும்பு: Femur

மனித உடலைப்பற்றி அறிவோம் 7

வாழ்நாள் சிவப்பு ரத்த அணுக்கள்: 120 நாட்கள் வாழ்நாள் வெள்ளை இரத்த அணுக்கள்: 10 முதல் 15 நாட்கள் கர்ப்ப காலம்: 280 நாட்கள் (40 வாரங்கள்) மனித பாதத்தில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 33 ஒவ்வொரு மணிக்கட்டில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 8

மனித உடலைப்பற்றி அறிவோம் 6

பெரிய குடலின் சராசரி நீளம்: 1.5 மீ பிறந்த குழந்தையின் சராசரி எடை: 3 கிலோ ஒரு நிமிடத்தில் துடிப்பு விகிதம்: 72 முறை சாதாரண உடல் வெப்பநிலை: 37 C ° (98.4 f °) சராசரி இரத்த அளவு: 4 முதல் 5 லிட்டர்

மனித உடலைப்பற்றி அறிவோம் 5

மிகப்பெரிய செல்: பெண் கருமுட்டை மிகச்சிறிய செல்: விந்து மிகச்சிறிய எலும்பு:  காது குருத்தெலும்பு முதல் மாற்று உறுப்பு: சிறுநீரகம் சிறுகுடலின் சராசரி நீளம்: 7 மீ

செவ்வாய் 3

செவ்வாய் துலாத்தில் இருக்கப்பிறந்தவர்கள் லாகிரிவஸ்த்துக்களில் நாட்டம் செலுத்துவர். செவ்வாய் மீனத்தில் உள்ளவர்கள் நல்லபதவி வகிப்பார்கள், வெளிநாட்டு வாஸம் கூடும். செவ்வாய் கடகத்தில் உள்ளவர்கள் கடல் கடந்து செல்வர், சொந்த வீடு இராது. செவ்வாய் 2, 4, 7, 8, 12 இந்த பாவங்களில் இருந்தால் களத்ர தோஷம் ஏற்படும்.

செவ்வாய் 2

செவ்வாய், சூரியன் 7,8 ல் சேர்ந்திருந்தால் இளம் வயதிலேயே அந்த பெண் விதவையாகிவிடுவாள். செவ்வாயுடன், சூரியன் சங்கமித்தால் உடன் பிறப்பிற்கு தீங்கிழைப்பார். செவ்வாய் சிம்மத்தில் இருக்கப் பிறந்தவர்களுக்கு உடல் உறுதி தைரியம் இருக்கும்.

செவ்வாய் 1

ஆட்சி மன்றத்தில் உள்ள அமைச்சர்களைப் போன்றவர்களே ஜாதகத்தில்உள்ள கிரகங்கள். செவ்வாய் லக்கினத்தில் நின்றிடில் கோபகுணம், விரோதம் கொண்ட இதயத்தினராய் இருப்பர். செவ்வாய் ஆண்கிரகம், சகோதர காரகன், உத்தியோக காரகன், பூமி காரகன், கர்மக்காரகன், மூளைக்காரகன் ஆகிறார். செவ்வாய்க்கு மேஷம், விருச்சிகம் ஆட்சிவீடுகள், மேஷம் மூலத்திரிகோண வீடு, மகரத்தில் உச்சம், கடகத்தில் நீச்ச வீடாகும் கொண்டுள்ளார். செவ்வாய் மகரத்தில் இருக்க பிறந்த ஜாதகர்களுக்கு புத்திர பாக்கியம் செல்வம், அரசு அந்தஸ்து ஏற்படும்.  வெற்றி, புகழ் ஏற்படும்.

சந்திரன்20

சந்திரனுக்கு 8லும், லக்னத்திற்கு 8லும் 3 கிரகங்கள் இருந்து அவை பாப கிரகங்களாக இருப்பின் குழந்தைக்கு ஆயுள் குறைவு. சந்திரன், சுக்கிரன், செவ்வாய் சேர்க்கை எந்த லக்னமானாலும் முறைகேடான வாழ்க்கை தருகிறது.  சிற்றின்ப பிரியராக செய்கிறது.  முரணான திருமண வாழ்க்கை ஏற்படுத்துகிறது.

மனித உடலைப்பற்றி அறிவோம் 4

16: கைகளில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 6 17: மனித கையில் உள்ள தசைகளின் எண்ணிக்கை: 72 18: இதயத்தில் உள்ள பம்புகளின் எண்ணிக்கை: 2 19: மிகப்பெரிய உறுப்பு: தோல் 20: மிகப்பெரிய சுரப்பி: கல்லீரல்

மனித உடலைப்பற்றி அறிவோம் 3

11: கழுத்தில் உள்ள முதுகெலும்புகளின் எண்ணிக்கை: 7 12: நடுத்தர காதில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 6 13: முகத்தில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 14 14: மண்டையில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 22 15: மார்பில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 25

மனித உடலைப்பற்றி அறிவோம் 2

6: இதய அறை எண்: 4 7: மிகப்பெரிய தமனி: பெருநாடி 8: சாதாரண இரத்த அழுத்தம்: 120/80 Mmhg 9: இரத்தம் Ph: 7.4 10: முதுகெலும்பில் உள்ள முதுகெலும்புகளின் எண்ணிக்கை: 33

மனித உடலைப்பற்றி அறிவோம் 1

1: எலும்புகளின் எண்ணிக்கை: 206 2: தசைகளின் எண்ணிக்கை: 639 3: சிறுநீரகங்களின் எண்ணிக்கை: 2 4: பால் பற்களின் எண்ணிக்கை: 20 5: விலா எலும்புகளின் எண்ணிக்கை: 24 (12 ஜோடி)

உடலில் ரத்தம் பயணம் செய்யும் துாரம்

உடலில் ரத்தம்  ஒரு சுழற்சியில் பயணம் செய்யும் துாரம், ஒரு லட்சத்து, 19 ஆயிரம் கி.மீ., ரத்தக் குழாய்களுக்குள் செல்லும்போது, அதன் வேகம் மணிக்கு, 65 கி.மீ., மோட்டார் சைக்கிளின் சராசரி வேகத்தை விட அதிகம். எப்படிப்பட்ட அதிசயமான தொழில் நுட்பம் இயற்கை எப்படியெல்லாம் சிந்தித்து நம்மை வடிவமைத்திரிக்கிறது

பிளாஸ்மா’ என்றால்

பிளாஸ்மா’ என்றால் ரத்தத்தில் உள்ள திரவப் பொருள் தான் பிளாஸ்மா. 100 மில்லி லிட்டர் ரத்தத்தில், 50 சதவீத அளவுக்கு பிளாஸ்மாவும், 40 சதவீத அளவுக்கு ரத்த சிவப்பு அணுக்களும் இருக்கும். மற்ற அணுக்கள், 10 சதவீதம் இருக்கும். பிளாஸ்மாவில், தண்ணீர், வைட்டமின்கள், தாதுப் பொருட்கள், ரத்தத்தை உறைய வைக்கக்கூடிய காரணிகள், புரதப் பொருட்கள் இருக்கும். சூரிய ஒளியில் இருந்து நமக்கு இது முழுமையாகக் கிடைக்கிறது. ரத்த அழுத்தம் என்றால்  உடலின் எல்லா உறுப்புகளுக்கும், ரத்தத்தை இதயம், ‘பம்ப்’…

ரத்த வெள்ளை அணுக்களின் வேலை

ரத்த வெள்ளை அணுக்களின் வேலை  ரத்த வெள்ளை அணுக்களை, ‘படை வீரர்கள்’ என்று அழைக்கலாம். ஏனெனில், உடலுக்குள் ஆற்றல் சேமிப்பு, ரத்த வெள்ளை அணுக்களே. அவை ஆரோக்கிய சக்தியின் முக்கிய ஆதாரம். ரத்தத்தில் உள்ள, ‘பிளேட்லெட்’ அணுக்களின் வேலை  உடலில் காயம் ஏற்பட்டவுடன், ரத்தம் வெளியேறுவதை இயற்கையாகவே தடுக்கும் சக்தி, பிளேட்லட் அணுக்களுக்கு உண்டு. ரத்தம் வெளியேறும் இடத்தைச் சுற்றி, ‘கார்க்’ போல் அடைப்பை ஏற்படுத்தி, மேலும் ரத்தக் கசி அவை தடுத்துவிடும்.

சந்திரன்19

சந்திரன் ( அல்லது ) குரு 5ம் அல்லது 9ம் வீட்டில் இருந்து குரு,  லக்னத்தில் இருந்து 5ம் வீட்டில் அமர்ந்து அவர் சந்திரனை 9 ம் பார்வையாக பார்த்தால் ஜோதிட சாஸ்திரத்தில் சிறந்து விளங்கி கட்டுரை எழுதுபவராகவும் கவிதை எழுதுபவராகவும் சிறந்த ஆய்வாளராக விளங்குவார். சந்திர லக்னத்திற்கு 10ம் இடத்தில் புதன், சனி சேர்க்கைபெற்றால் கவிதை, கட்டுரை, கதை எழுதி சிறந்து விளங்குவார்.

சந்திரன்18

சந்திரனிலிருந்து 5,11ல் ராகு-கேது இருந்தால் விவாஹபாக்கியமே இல்லாமல் அமைந்து வருகிறது. சந்திரன் சுக்ரன், சனி ஒருவருக்கொருவர் ஏதோவகையில் தொடர்புடையவராக இருந்தால் காதல் திருமணம் ஏற்படும்.

சந்திரன்17

சந்திரனுக்கு 4,7,10ல் குரு இருப்பின் கஜகேசரி யோகம் ஏற்படுகிறது.  ஜாதகருக்கு புகழ், செல்வம், செல்வாக்கு அடையச்செய்யும். சந்திரன், சனி, சேர்க்கை, அல்லது பார்வை ஏற்படின் சன்யாச யோகம் அமையும். சந்திரன் லக்னம், சுக்ரன் இவர்களுக்கு 7ல் சனி இருந்தாலும், பார்த்தாலும் பிரம்மச்சரிய யோகம் ஏற்படும்.

சந்திரன்16

சந்திரன், கடக லக்னத்தில் இருந்தால் சொந்த, பந்தங்கள்மீது அதிக பாசமாக இருப்பர். அவர்களை ஆதரித்து மகிழ்வோடு வைத்திருப்பர். சந்திரன், 1,4,5,7,9,10ல் இருந்து குரு அல்லது சுக்ரன் பார்வை ஏற்படின் சிறந்த நாடாளும் பலன் ஏற்படும். சந்திரனுக்கு 4க்குடையவன் கேதுவுடன் இணைந்தாலும் அல்லது சுக்கிரனுடன் எந்த வீட்டில் இருந்லும் அந்த ஜாதகர் தெய்வாம்சம் பெற்று ஞானமார்க்கத்தில் ஈடுபடுவர்.

சந்திரன்15

சந்திரன், சுக்ரன் சேர்ந்து எந்த பாவத்தில் இருந்தாலும் ஆணுக்கோ, பெண்ணுக்கோ 30 வயதுக்கு மேல்தான் திருமணம் நடைபெறும். சந்திரன், சுக்கிரன் சேர்ந்து இருந்தால் புடவை, அழகு பொருட்கள், வியாபாரம் செய்து பணம் சம்பாதிப்பர். சந்திரன், ரிஷப ராசியில் இருந்து, குருவின் பார்வைபெறீன் பேரும் புகழும் கல்வி, கேள்விகளில் சிறந்தும் பலபேர் மெச்சும் வண்ணம் புகழ் பெற்று வாழ்வர்.

சந்திரன் 14

சந்திரனுக்கு 10ம் வீட்டில் சுக்கிரன், சனி, சேர்க்கை, மருத்துவ தொழில் செய்வர், சூரியன் அல்லது செவ்வாய், ராகு சேர்க்கை டாக்டராக வாய்ப்பு உண்டு, லக்னத்திற்கு 10ல் சந்திரன், சுக்கிரன் இருந்து சுபகிரஹபார்வை ஏற்படின் டாக்டராக இருப்பர். சந்திரன் கேந்திரத்தில் இருந்து பாபகிரகங்களின் பார்வையோ சேர்க்கையோ இருப்பின் பாலாரிஷ்டம் ஏற்படும். சந்திர மங்களயோகம், மனைவி வந்தபின் அதிர்ஷ்டசாலியோகம் பூமி, புகழ், வாகனம் போன்ற செல்வத்தை அடைவர்.

சந்திரன் 13

சந்திரா லக்னத்தின் அதிபதி உச்சமுற்றிருந்தாலோ, அல்லது நீச்சமுற்ற கிரகங்களின் இல்லத்தில் இருந்தாலும் ஜாதகர் செல்வம், செல்வாக்குடையவராக இருப்பர். சந்திரன், சூரியன் சேர்ந்து 9,5 லக்ன வீட்டில் இருந்தால் பிற்காலத்தில் கண் பார்வை இழப்பர். சந்திரன், சூரியன், சனி 12, 2, 8ல் முறையே இருப்பின் கண்பார்வை அற்றவராக இருப்பர். சந்திரன், சுக்கிரன் 6,8,12ல் இருப்பின் கண்  பார்வை இரவு நேரத்தில் தெரியாது. சந்திரன் 7ம் வீடாக சிம்மராசியில் அமர்ந்து அதை செவ்வாய் பார்வை செய்யின் அந்த ஜாதகருக்கு…

சந்திரன் 12

சந்திரனுடன் ராகுவோ, கேதுவோ கூடி இருப்பின் ஜாதகரின் பேச்சுக்கு மதிப்பு இராது. சந்திரனுக்கு கேந்திர திரகோணங்களில் குரு, சுக்கிரன், சனி நின்றால் யோகங்கள் ஏற்படும். சந்திரன், சுக்கிரன் சமசப்தமாக இருப்பின், திருமணம் காலதாமதமாவதோ, மணவாழ்வும் சிறப்பாக அமையாது. சந்திரன், சுக்கிரன் ஒரே ராசியில் இருப்பின் திருமண வாழ்வு மகிழ்ச்சியாக இருப்பதில்லை. சந்திரா லக்னம், லக்னத்திற்கு, ஐந்து, ஏழாம் அதிபதிகள் இணைந்து இருப்பினும் ஒன்றுக்கொன்று பார்வைபெறினும், அம்சத்தில் இணைந்தாலும் திருமண வாழ்வில் பிரிவினைத்தரும், பாவிகளின் பார்வை ஏற்படில் விவகாரத்தைத்…

சந்திரன் 11

சந்திரன் தனஸ்தானத்தில் இருந்தாலும், பார்த்தாலும் அந்த ஜாதகி ஏழ்மையானவள். சந்திரன் பெண்ணின் ஜாதகத்தில் 3,4,5,7,8,9,10ல் இருந்து குரு பார்வை பெற்றால் சகல மங்களங்களையும் பெற்று சுபிட்சம் அடைவாள். சந்திரனும், சனியும் கூடி 7மிடத்திலிருந்தால் இரண்டாம் தாரம் அல்லது இரண்டாவது திருமணம் நடைபெறக்கூடும். சந்திரனுக்கு பத்தில் குரு இருந்தால் அமலாயோகம் என்று பெயர்.  இவர் மத்திய வயதில் பாக்கியம் அடைவார்.  நித்திய தர்மத்துடன் கூடியவராக இருப்பார்.  பல தேசங்களில் பிரசித்தி அடைவார்.

சந்திரன் 10

சந்திரன் 9ம் வீட்டில் இருந்தால் அறிவாற்றல், கல்விமான், படிப்பில் ஆர்வம் இருந்த வண்ணம் இருக்கும். சந்திரன் 12ல் இருந்தால் அயல்நாட்டுக்குச் சென்று படிக்கும் தகுதி ஏற்படும் பேச்சு மென்மையாக இருக்கும். சந்திரன் லக்னத்திற்கு 11ம் இடத்தில் இருந்து புதனும், சுக்கிரனும் 7ல் இருந்து குருவால் பார்க்கப்பட்டால் ஐஸ்வர்யத்தையும் சுகபோகங்களையும் அடைவர். சந்திரன் இருக்கும் இடத்திலிருந்து சுக்கிரனும், புதனும், 3,4,5,7,8,9,10ல் இருந்து பலமும் பெற்றால் அந்த ஜாதகி மிகவும் சுபிட்சமாக அந்தஸ்து உடையவளாவாள். சந்திரன் நீசமாக விருச்சிகத்தில் உதித்தவர்களுக்கு…

ஒரு சிறந்த மருத்துவனின் லட்க்ஷணம்

சிறந்த மருத்துவர் நோயாளியின் உடலின் தன்மைகளை  சரியாக அறிந்து தான் கற்ற மருந்துகளையும், தானே ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்த மருந்துகளையும் தந்து அது தவிர, தவறான மருந்துகளின் குறிப்புகளையும் தருபவரே சிறந்த மருத்துவர்.

ரத்தம் பற்றிய தகவல்கள் 1

 ரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது⁉️ ரத்த சிவப்பு அணுக்களின் உள்ளே; ‘ஹீமோகுளோபின்’ என்ற வேதிப் பொருள் உள்ளது. அதுதான், ரத்தத்திற்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபினின் பணி என்ன⁉ ஹீமோகுளோபின் தான், உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும், ஆக்சிஜனை + சக்தி எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால், ரத்த சோகை ஏற்படும். ரத்த சிவப்பு அணுக்களின் பயன் என்ன  ? ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள், நான்கு மாதங்கள். ரத்தச் சிவப்பு அணுக்களின்…

ரத்தத்தில் உள்ள பொருட்கள்

1 ரத்தத்தில் உள்ள பொருட்கள் யாவை⁉️ ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லட்டுகள் என, ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. அவை தவிர, திரவ நிலையில், ‘பிளாஸ்மா’ என்ற பொருளும் உள்ளது. 2 ரத்த அணுக்கள் உற்பத்தியாகும் இடம் எது⁉️ எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் ஏற்படும். எலும்பு மஜ்ஜை தேவைக்கு உணவிலிருந்து கல்லீரல் வழியாக சத்துக்களை ஏற்ப மண்ணீரலும் கிட்னியும் சேர்ந்து ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், ‘பிளேட்லெட்’கள் .

சந்திரன் 9

சந்திரனுக்கு 5க்குடையவன் கன்னியில் சுக்கிரனுடன் இணைந்து பாவிகள் சம்பந்தம் பெற்றாலும் குழந்தையோகம் ஏற்படும். சந்திரன் 6ல் (ஸ்திரி சூதகத்தில்) வியாதியால் பீடிக்கப்படுவாள்., மரியாதை, பணிவு இராது, பகைவர்கள் அதிகம் இருப்பார்கள் அற்பமானப் பணமே சேரும். சந்திர பலம், ஜன்ம ராசியில் இருந்து, சந்திரன் உலவுகிற 2,5,9 ஆம் ராசியானால் மத்திமம் 4,8,12ஆம் ராசியானால் அசுபம், 1,3,6,7,10, 11 ராசிகளில் இருந்தால் சுபம்.

சந்திரன் 8

சந்திரன் விருச்சிக ராசியில் இருக்கப்பெற்றால் மனிதாபிமானம் குறைந்திருக்கும், உறவினரை விட்டுப் பிரிந்திருப்பார்.  பொருளாதார நெருக்கடி இருக்கும். சந்திரன் கன்னியில் இருப்பாரானால் கல்வித்திறன் கூடும் இனிமையாக பேசுவர்.  சத்தியத்தை காப்பர், பெண்குழந்தை பாக்கியம் ஏற்படும். சந்திரன் கடகத்தில் இருக்கப் பெற்றவர்களுக்கு நல்ல வீடு அமையும். ஜோதிட புலமை ஏற்படும்.  கடல் கடந்த பயணங்களும், வெளிநாட்டு தொடர்பு உண்டாகும்.  ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரம் செய்யும் வாய்ப்பையும் பெற்றிருப்பார்கள். சந்திரன் பெண் ஜாதகத்தில் 6 அல்லது 8லோ  இருக்கக்கூடாது.

சந்திரன் 7

சந்திரன் பலமுள்ள ஆண்களுக்கு இவரது தசையில் பெண்களால் அனுகூலம் உண்டாகும். சந்திரன் 10ம் வீட்டோடு தொடர்பு இருந்தால் அரசு அந்தஸ்து உண்டு. சந்திரன் விரையத்தில் இருந்தால் மனநிலை பாதிக்கப்படும். சந்திரனிலிருந்து 6,7,8ஆம் வீடுகளில் கேது, சனி, செவ்வாய் வீற்றிருந்தால் பாபாதியோகம் ஏற்படும். சந்திரன், ராகு இருவரும் ஒன்று கூடி 8ல் இருந்தால் மனஅமைதி குறையும்.

சந்திரன் 6

சந்திரன் பூமியைச் சுற்றி வருகிறது.  பூமி சூரியனைச் சுற்றி வருகிறது.  இச்சுழற்சியில் பூமியைச் சுற்றுகிற சந்திரன், சூரிய பாதையில் குறிக்கிடும்.  இடம் வடபாகத்தில் அமைவது ராகு, தென்பாகத்தில் அமைவது கேது என அழைக்கபபடுகிறது. சந்திரனுக்கு 12ல் சனி இருந்தால் தமது வாழ்க்கைத் துணையினை பிரிந்து வாழ்வர். சந்திரன் பலமுடன் இருந்தால் சிவ வழிபாட்டின் மூலம் ஞானஒளி பெறுவர். சந்திரன் சிம்மத்தில் நின்று குரு பார்வை பெற்றால் அரசியலில் முன்னோடியாக திகழ்வார். சந்திரனும், சுக்கிரனும் பலம் பெற்றால் மக்கள்…

சந்திரன் 5

சந்திரன் புதனுடன் சேரும்போது மனநிலை பாதிப்பு, சித்த பிரமை ஏற்படுத்துகிறது. சந்திரன், செவ்வாயுடன் சேரும்போது ரத்த அழுத்த நோயை தருகிறது.  சந்திரன் சுக்கிரனுடன் சேரும்போது உணர்ச்சிவேகம் செய்து மனநிலை பாதிப்பை தருகிறது. சந்திரன் ராகு, கேது கிரகங்களுடன் சேரும்போது கிரஹணதோஷம் ஏற்படுகிறது. சந்திரன் ஒரு தினக்கோளாகும், சந்திரனது நக்ஷத்திரம் ரோஹிணி, அஸ்தம், திருவோணம்.

சந்திரன் 4

சந்திரனுக்கு 1, 4, 7, 10ல் செவ்வாய் இருக்கும் போது சந்திர மங்கள யோகம். சந்திரனுக்கு 1,4,7,10ல் சுக்கிரன் இருக்கும்போது மாளவ யோகத்தை தருகிறது. சந்திரனுக்கு 1,4,7,10ல் புதன் இருக்கும்போது பத்திர யோகத்தை தருகிறது. சந்திரனுக்கு 6,7,8 சுபகிரகம் இருக்கும்போது அதியோகத்தை தருகிறது.  சந்திரன் சனியுடன் சேரும்போதும், பார்க்கும்போதும் நரம்புதளர்ச்சி, வாத நோயை தருகிறது.

சந்திரன் 3

சந்திரனுக்கு 6,8,12ல் குரு இருக்கும்போது சகட யோகத்தை தருகிறது. சந்திரனுக்கு 12ல் கிரகம் இருக்கும்போது சுனபா யோகத்தை தருகிறது. சந்திரனுக்கு 2ல் கிரகம் இருக்கும்போது அனபா யோகத்தை தருகிறது. சந்திரனுக்கு 2, 12ல் கிரகம் இருந்தால் மகாசக்தி யோகம் ஏற்படுகிறது. சந்திரனுக்கு 2, 12ல் கிரகம் இல்லாமல் இருக்கம்போது கேமத்துரும யோகம் தருகிறது.

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  68

இதுவுமது …..  சமமான ஆகாரம், மித சஞ்சாரம் ஆக இவ்விரண்டையும் சதா அனுஷ்டிக்கிறவர்கள் அகந்துக காலத்தை மிரட்டி காலபிராப்தி அளவு ஜீவித்திருக்கிறார்கள்.  அவர்களது சீவனம் அமிருத துல்யமென்று சொல்லப்படுகின்றது. சிரஞ்சீவியாய் இருக்க விதம் …..  மரணம் இல்லாமல் சிரஞ்சீவியாய் இருக்க இஷ்டப்படுகிற பண்டிதர்கள் ( கால பிராப்தி ) என்கிற சத்துருவை விஜயம் செய்து ஸ்திரமாயிருக்கிறார்கள்.

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  67

சரீர ரக்ஷண உபதேசம் முதலில் மனிதன் சகல கருமங்களைவிட்டு சரீரத்தை பரிபாலிக்க வேண்டியது.  அவசியமாக இருக்கிறது சரீரமில்லாது சுபம், அசுபம், இல்லாமை இவைகள் எப்படி வாய்க்கும். சரீரத்தை பாதுகாக்க வேண்டிய முறை பட்டணத்தை படைத்தவன் பட்டணத்தை எவ்விதம் பரிபாலிக்கிறானோ அவ்விதம் மேதாவி ஆனவன் சரீரத்தை பாதுகாக்கவேண்டியது.  சரீரத்தை பாதுகாப்பவனது அகாலம் அகன்று காலமென்கிற பராக்கிற உச்சாஹம் இந்திரிய ஆயுர்பலம் முதலியவைகள் உண்டாகின்றது.

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  66

அகலில் சம்பூரணமாய் எண்ணெயிருந்து எரிந்துக்கொண்டிருந்த வத்தியானது கையால் எப்படி அணைந்து போகிறதோ அவ்வண்ணம் சகலத்திற்கும் ஆதாரமாகிய வாயு ஆதாரமற்றதாகிறதினால் பிராணிகளுக்கு மரணம் சம்பவிக்கின்றது. இதற்கு ஆகந்துக மிருத்யு என்றுப்பேர்.  இது வைத்தியனுடைய மந்திர, தந்திர மங்களாசரணத்தினால் சாந்தியாகின்றது. மரணகாலம் சம்பவிக்கும்போது எந்த விதமான மருந்தும் பிரயோஜனப்படாது.

சந்திரன் 2

சந்திரன் 6, 8, 12ல் நின்று மூன்று கிரகங்கள் நீசமடைந்து இருப்பின் மதி பேதம் ஏற்பட்டு வாழ ஏதுவுண்டு. சந்திரனுடன் குரு நின்று இருப்பின் 70 வயது வரை வாழ்வர். சந்திரனுடன், சூரியன் நின்றிடில் பெற்ற அன்னையே சந்தேகப்படுவர். சந்திரன் அல்லது சனி பெண் ராசிகளில் நிற்க.  ஆண் ராசிகளில் சூரியன் நின்றால் அலித்தன்மையுண்டு. சந்திரனுக்கு 1,4,7,10ல் குரு இருக்கம்போது கஜகேசரியோகத்தைத் தருகிறது.

சந்திரன் 1

                     கோள் செய்வதை நல்லவரும் செய்யார் சந்திரன் ஆட்சி உச்சமேறிய ஜாதகர்கள் குடும்ப க்ஷேமத்துடன் நல்வாழ்வு வாழ்வர். சந்திரன் லக்னத்தில் அமைந்தவர்கள் சிந்தனையாளர்கள், ஆய்வுசெய்து முடிவெடுப்பார். சந்திரனும், சூரியனும் சேர்ந்தால் அமாவாசை யோகத்தைத் தருகிறது. சந்திரன் என்பவர் மனதிற்கு அதிபதி, தாயாரை குறிப்பிடுவது சந்திரன் நல்ல மனநிலை அடைய சந்திரன் கெடாமல் இருக்க வேண்டும். சந்திரன் குருவும் சேர்ந்தால் குரு சந்திர யோகத்தை தருகிறது.

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  65

காலத்தினால் தான் அன்னபானாதிகள் முதலிய கருமங்கள் ஆகிறது விபரீதத்தினால் ஒரு காலமும் ஆகிறதில்லை.  அகாலத்தினால் பிராணிகளுக்கு மரணம் முதலியவைகள்  சம்பவிக்காது. அகாலத்தில் ஒருவனை நூறு பாணத்தினால் அடித்தாலும் அவனுக்கு சம்பவிக்கிறதில்லை, கால சம்பிராப்தியாகில் ஒரு துரும்பே வஜ்ராயுதம் போல் அவனைக் கொல்லும். அகாலத்தில் வருஷாதிகளால் பல புஷ்பங்கள் உண்டாகிறது போல் சலம், அக்கினி, விஷம், அஸ்திரம், ஸ்திரி, ராஜன் குலம் இவைகளால் மனிதர்களுக்கு அகாலமிருத்யு சம்பவிக்கிறதென்று பண்டிதர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியது.  

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  64

மேலும் காலமானது  வருடங்களாகவும், அயனங்களாகவும், ருதுக்களாகவும், மாதங்களாகவும், பக்ஷங்களாகவும், வாரங்களாகவும், நாட்களாகவும், காலை, மத்தியானம், சாயங்காலம், இரவு, ஜாமம், நாழிகளாகவும் பரிணமித்து இருக்கின்றது. மேலும் லோபாதி குணங்கள் மனிதர்களுக்கு உண்டாக்கி  பிராணிகளின் வாழ் நாட்களை காலமானது  நாசஞ் செய்துக்கொண்டிருக்கின்றது.  இந்த காலத்திற்கு எதிர்மாறு ஞான யோகாப்பியாசம் தவிர  வேறு கிடையாது.  ஆகையால் கால சக்கிரத்தை மீள இஷ்டப்படுகின்றவன் ஞான யோகாபியாசஞ் செய்ய வேண்டியது.

தனஞ்சேருவது

ஒன்பதாமிடத்தோன் திசையில், பத்தாமிடத்தோன் புத்தியில் அப்போது நடக்கும் கோட்சாரத்தில் நாலாமிடத்தோன் பத்தாமிடத்திலிருக்க, பத்தாமிடத்தோனுக்கு நாலாமிடத்திலும் அல்லது அங்காரனுடைய கேந்திரத்திலேனும் சேர்ந்து நிற்க, பிறந்தோனுக்கு புராதனமான பூமி மனை இவைகளில் பத்தாமிடத்ததிபன் நிற்கும் திசையில் தனம் பொருள்  இவைகள் கிடைக்கும்.  

சூரியன் 8

சூரியன், புதன் சேர்க்கை ஜல ராசியான கடகம், விருச்சிகம், மீனமாகில் ( 4, 8, 12ல் ) இருப்பின் கெமிகல், எலக்ட்ரிகல், இன்ஜினீயரிங் துறையில் கல்வி பயின்றால் நல்லது. சூரியன், புதன் அக்னி ராசிகளான மேஷம், சிம்மம், தனுசு வீடுகளில் 1, 5, 9 இருந்தால் மெகானிகல், இன்டஸ்டிரியல் இன்ஜினீயரிங்கில் சிறந்து விளங்குவர். சூரியன், புதன் சேர்க்கை பூமி ராசியான ரிஷபம், கன்னி, மகரம் வீடுகளில் 2, 6, 10ல் இருந்தால் சிவில் இன்ஜினீயரிங்கில் சிறந்து விளங்குவர்,…

சூரியன் 7

சூரியன் மிதுனராசியில் இருப்பின் ஜோதிடத்தில் நாட்டம் ஏற்படும். சந்திரன் சிம்மத்தில் இருந்து புதன் பார்த்தால் அவர் ஜோதிடத்தில் புலமை பெற்றிருப்பர், புதன் கன்னிராசியில் இருப்பின் கவிஞராகவோ, ஜோதிடராகவோ திகழ்வார். சூரியன் 1,4, 7, 10 கேந்திரத்தில் அல்லது 10ம் வீட்டதிபதி கேந்திரத்தில் அல்லது குரு லக்னத்தில் அல்லது 4ம் இடத்தில் இருந்தால் சிறந்த மந்திரியாகவும், அரசியல்வாதியாகவும் இருப்பர். சூரியனுக்கு 12ல் சனி இருப்பின் நாஸ்திக வாதம்புரிவர். சூரியன் ஆட்சி, உச்சம் அடைந்தோர் அல்லது 10மிடத்தில் இருப்போர் பலர்…

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  63

பிர்மாவுக்கு கல்பகாலம் பிராப்தமாகிற்து.  காலத்தை தவிர வேறுவித தெய்வங்கள் கிடையாது. அயன் மால் ருத்திரன் என்கிற மூன்று உருவமே காலத்தின் உண்டாக்கல், ரக்ஷித்தல், சம்மரித்தல் என்ற தொழில்களுக்கு நாமங்களாம் (பெயர்கள்). (சத மாயுர்பவ) நூறு வருடங்கள் மனிதர்களின் ஆயுட் நாட்களென்று வேதங்கள் முறையிடுகின்றது. வேதவாக்கியத்தின் பிரகாரம் சீவிக்காமல் சுவல்பகாலத்தில் அதாவது இளந்தை பருவத்தில் கௌமார பருவத்தில் யவ்வன பருவத்தில் வார்த்தீக திசையில் அல்லது பிரக்கச்சே தானே மரணம் அடைவதற்கு காரணம் அவர்கள் செய்யும் பாவகர்மங்களேயாம்.

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  62 

காலமானது வருங்காலம், நிகழ்காலம், சென்ற காலம் என மூன்று விதமாக உழலுகின்றது. இந்த காலத்தை தான் பிரம்மா என்றும், சிவன் என்றும், விஷ்ணு என்றும் சொல்லுகிறார்கள். பிபீலிகாதி பிரம்மபரியந்தம் காலசக்கிரத்தில் சிக்கிக்கொண்டு பஞ்சருத்தியங்களுக்கு அடங்கி இருக்கின்றன. ஆகையால் தான் திரிமூர்த்திகள் காலரூபிகள் எனப்படுகிறார்கள். காலத்தினால் விருக்ஷங்கள் பலபிராப்தி உண்டாகின்றது.  தானியங்கள் பலிக்கின்றது. ஸ்திரீகளும் ருதுமதி ஆகிறார்கள், காலத்தினால் தான் சகலவித நிறங்களும் மாறுகின்றது. குணசுபாவங்களும் மாறுகின்றது. ஜனனமரணாதிகளும் உண்டாகின்றது. அயனுக்கு ஒருநாள் ஆகும்போது பதினாறும் தேவேந்திரர்கள் பிறந்து…

சூரியன் 6

சூரியன், புதன், குரு, செவ்வாய், சனி ஆகியோர்கள் சுப பலம் பெற்றும் ஒங்கி இருந்தால், சிறந்த வழக்கறிஞர்கள் ஆவார்கள். சூரியன் பலமுற்று நீசம் பெற்று பாபருடன் சம்பந்தப்பட்டு 12ல் இருந்தால் வலது கண் பழுதுறும். சூரியன் நீச்சமாகவோ, உச்சமாகவோ இருப்பின் மனைவிக்கு அடங்கி வாழ்வர், மனைவி வார்த்தைக்கு கட்டுபடுவார்.  மனைவியின் மனம் கோணாமல் வாழ்வர். சூரியன், சந்திரன் இருவரும் 12 அல்லது 6 வது வீட்டில் இருப்பின் அவருக்கு ஒரு கண் தான் தெரியும் அதேபோல் மனவிக்கும்…

சூரியன் 5

சூரியன் 9ம் வீட்டில் இருந்தால் பட்டப்படிப்பில் வெற்றி, வாழ்க்கை வசதிகள் ஏற்படும். சூரியன் 12ம் வீட்டில் இருந்தால் எதிலும் தடை என்று ஒன்றை ஏற்படச்செய்வார்.  வெற்றி அடையும் தருணத்தில் தோல்வி ஏற்படும். சூரியன் 9ல் இருந்தால் செல்வ சீமானாவார், உறவினர்களை வெறுப்பார்,கடவுள் பக்தி இருக்கம், பெற்றோருக்கு அதிக நலமிராது. சூரியன் நீசமாக பிறந்தவர்களுக்கு, எத்தொழில் செய்யினும், எதிர்பாராத பாதிப்புகள்,விளைவுகள், உருவாகும். சூரிய உதயத்திலிருந்து 12.30 நாழிகை முதல் 15 நாழிகை வரையிலுள்ள காலகட்டத்தை அபிஜித் முகூர்த்தம் எனப்படும்.…

சூரியன் 4

சூரியன் சிம்மத்திலிருந்து சிம்ம நவாம்சத்திலேயே இருக்கப்பெற்றால் துணிவுள்ளவராகவும், கீர்த்திமானாகவும், செல்வச்சீமானாகவும் விளங்குவார். சூரியனும், சந்திரனும் 3ல் ஒன்று கூடி இருந்தால் சகோதர, சகோதரிகளால் அனுகூலம் பெற வாய்ப்பிராது. சூரியன் மகர ராசியில் இருக்கப்பெற்றால் நிரந்தரமான தொழில் அமையாது, வாழ்க்கையில் சந்தோஷம் இராது.  மனதில் உறுதி இராது. 1ல் சூரியன், புதன், செவ்வாய், சுக்கிரன் சேர்க்கை தாரதோஷத்தை உண்டாக்கும். பெண்களால் தொல்லைகள் ஏற்படக்கூடும். சூரியன், சுக்கிரன் இணைவுள்ள ஒரு ஜாதகத்துக்கு அதேபோல் சூரியன், சுக்கிரன் இணைவுள்ள ஜாதகத்தை சேர்த்துக்…

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  61

கால பிரசம்ஸை …..  காலமானது  சகல பூதங்களை உண்டாக்கவும், காப்பற்றவும், அழிக்கவும் செய்கின்றது.  தூக்கம் ஜாகரணை இவைகளை செய்கிறது. மிகவும் பராக்கிரமம் உள்ளது. கால பிராப்தமானதால் தேவர், சித்தர், சாத்தியர், உரகர் முதலிய தேவர்களையும் பிடித்து ஆட்டுவிக்கின்றது. சகலமும் காலத்திற்கு அடங்கியிருக்கின்றது.

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  60

கால ஞானம்              இந்த கால ஞானத்தை முதலில் சதாசிவரானவர் தனது பிராண நாயகியாகிய உமா தேவியாருக்கும் உபதேசிக்கும் போது அந்த தேவியார் காலவசத்தினால் தூங்கிவிட்டாள். அப்போது ஒரு கிளியும், மீனும் கேட்டுக் கொண்டு அம்மையாருக்கு பதிலாக கிளியானது குரல் கொடுத்துக் கொண்டிருந்தது.  சிவனார் கால ஞானத்தை முழுதும் உபதேசித்து பார்வதியை நோக்கினார், பார்வதி தேவியார் தூங்குவதை தெரிந்து எழுப்பி ஓ பிராண நாயகீ நீ தூங்கிக் கொண்டிருந்தாயே எனக்கு குரல் கொடுத்துக் கொண்டிருந்தது யாரென்று கேட்டார்…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  59

சப்த  பரீக்ஷ வாத தோஷ குறி …..  வாதத்தில் சமானமான வார்த்தைகள் உண்டாகும். பித்த தோஷ குறி ……  பித்த தோஷத்தில் சிரிப்பும் பிதற்றலுமான வார்த்தைகளுமாக இருக்கும். கப தோஷ குறி …..  கபதோஷத்தில் ஹீனசுரமான வார்த்தைகளுமாயிருக்கும். துவந்த தோஷ குறி …..  துவந்ததத்தில் (சார்ந்து ) மிசிரமமான வார்த்தைகள் உண்டாகும்.

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  58          

ரூப பரீக்ஷ வாத ரூப பரீக்ஷ …..  வாத தோஷத்தில் தேகத்தைப்  பார்த்தால் கருநிறமாக தோணும். பித்த ரூப பரீக்ஷ …..  பித்த தோஷத்தில் தேகத்தைப் பார்த்தால் மஞ்சள்  நிறமாயும் அல்லது  சிகப்பு  நிறமாயும் தோணும். கப ரூப பரீக்ஷ …..  கபதோஷத்தில் தேகமானது வெளுத்த நிறமாய் காணப்படும். துவந்த ரூப பரீக்ஷ …..  துவந்த தோஷத்தில் தேகமானது இரண்டு தோஷ நிறம் கலந்து சார்ந்து காணும். சந்நிபாத தோஷ ரூபம் …..  சந்நிபாத தோஷத்தில் தேகமானது…

இரண்டாம் பாவம்

இரண்டாம் பாவம் தனம், குடும்பம், நேத்திரம், கல்வி, வாக்கு, பேசும் திறன், கலைகளை கற்கும் ஆர்வம் (சாஸ்திரம்), மனம், நடை, நவரத்தினங்கள், நிலையான கொள்கை, உணவு, முகம், நாக்கு இவைகளை குறிக்கும். உண்மையே பேசுதல், பொய்யும் சொல்லுதல், முன்கோபம், கண்களில் வலது கண், வஞ்சக நெஞ்சமா, பெருந்தகையாளரா என்பதை தெரிவிக்கும் பாவம். சுவை அறிந்து உண்பதையும் குறிக்கும். முக்கியமாக தனஸ்தானம் எனப்படும்.

லக்கின பாவம்

லக்கின பாவம் உடல்வாகு, நிறம், கவர்ந்திடும் அழகு, செல்வம், உடலில் உள்ள இரத்தத்தின் தன்மை, அழகிய உள் பாகங்களும் தலைப்பகுதியும், புகழ், வாழ்க்கையில் அனுபவிக்கும் அனைத்து சுகங்களையும், சுப நிகழ்ச்சிகளையும், அதனால் ஏற்படும் மகிழ்ச்சியையும் அனுபவிக்கப் பெறும் ஆயுளையும் குறிக்கும் பாவமாகும். அடித்தளம் பலமாக அமைந்தால்தான் கட்டிடமும் உறுதியாக ஆண்டாண்டு காலத்திற்கு நிலைத்திருக்க இயலும். அதே போன்று லக்னமும் பலமாக அமைந்தால்தான் அனைத்தும் அனுபவிக்கும் யோகத்தை நீண்ட ஆயுளைத் தரும். வாழ்க்கை வசதிகளை அனுபவிக்க செல்வம் இருந்தால்…

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 57

நேத்திர பரீக்ஷ திரிதோஷ  நேத்திரம் …..  திரிதோஷத்தில் மூன்று  தோஷ  குறிகள் ஒன்றாயும் மேகவர்ணமாயும் புகனநேத்திரமாயும் இருக்கும். திரிதின மரண நேத்திர  லக்ஷணம் …..  சந்நிபாத லக்ஷணங்களுடன் எந்த ரோகயின் ஒர நேத்திரமானது பயங்கர   ரூபத்துடன்  கலந்து  இருக்கிறதோ அந்த மனுஷன் மூன்று நாளையில் மரணமடைவான். மரண நேத்திரக் குறி …..  கண்கள் கறுப்பு  நிறமாயும் சோதி ஹீனமாயும்  கண் உள்ளாகியும் மந்த திருஷ்டியாயும் எவனுக்கு  இருக்குமோ அவனும்  எமனை தரிசனம் பண்ணுவான். ஏக தின…

அனுபவ வைத்திய தேவரகசியம் இரண்டாவது காண்டம் 56

நேத்திர  பரீக்ஷ வாதாதிக்க நேத்திரம் …..  வாததிக்கத்தில் நேத்திரங்கள் சலத்துடன் கூடி கண்ணீர் வடிந்துக் கொண்டு புகை  நிறமாயும், மஞ்சள்  நிறமாயும் இருக்கிறது. பித்தாதிக்க நேத்திரம் …..  பித்தாதிக்கத்தில் நீலநிறம் அல்லது கறுப்பு, சிகப்பு கலந்த  நிறம், தீபதுவேஷியாயும், வெப்பமாயும் இருக்கும். கபாதிக்க நேத்திரம் …..  கபாதிக்கத்தில் மந்தமந்த பார்வை, வெண்மை நிறம், ஜலத்துடன் கலந்து பார்வை ஹீனமாயும் இருக்கும். துவந்த தோஷ நேத்திரம் …..  துவந்தத்தில் இரண்டு தோஷ லக்ஷணம் ஒன்றாயிருக்கும்.

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  55 

நேத்திர  பரீக்ஷ வாத தோஷ நேத்திரம் …..  வாயு தோஷத்தில் கண்களானது  சிகப்பு  நிறமாயும், புகை நிறமாயும், ரவுத்திர  நிறமாயும், கண்களில்  நீர் வடிதலுமாயும் இருக்கும். பித்த தோஷக் கண் ……  பித்த தோஷத்தில் மஞ்சள்  நிறம், சிகப்பு வர்ணம், நீலவர்ணம் மிசிரமாயும் (சார்ந்து) தீபத்தை பார்க்க முடியாமை என்னும் குணங்களுடையது. கபதோஷக் கண் ….. கபதோஷத்தில் கண்களானது  நீர் கோர்த்துக் கொண்டு பார்வையானது, சபலமாயும், வெண்மை நிறமாயும் பார்வை  மட்டாயும் இருக்கும்.

சந்திரன் 3

சந்திரனுக்கு 6,8,12ல் குரு இருக்கும்போது சகல யோகத்தை தருகிறது. சந்திரனுக்கு 12ல் கிரகம் இருக்கும்போது தனபா யோகத்தை தருகிறது. சந்திரனுக்கு 2ல் கிரகம் இருக்கும்போது அனபாயோகத்தை தருகிறது. சந்திரனுக்கு 2, 12ல் கிரகம் இருந்தால் மகாசக்தி யோகம் ஏற்படுகிறது. சந்திரனுக்கு 2, 12ல் கிரகம் இல்லாமல் இருக்கம்போது கேமத்துரும யோகம் தருகிறது.

சூரியன் 3  

சூரியனுடன் ராகு அல்லது கேது சேர்ந்திருந்தால் தந்தையின் ஆயுளுக்கு பங்கம் ஏற்படலாம். சூரியன் புதனுடன் மேஷம் அல்லது சிம்மத்தில் இருந்தால் ஞானியாகவும், தலைவராகவும் திகழ்வார்.  நான்கு கிரகங்கள் ஒரு ராசியில் நிற்க, அதில் ஒரு கிரகம் உச்சம் அடைந்தால் சிறந்த ஞானியாக திகழ்வார். சூரியன், செவ்வாய் சேர்க்கை 10 ஆம் இடத்தில் அமையப் பெற்றால் அரசியலில் கொடிகட்டி பறப்பார். சூரியனுக்கு 10ல் செவ்வாய் இருந்தால் மதுபானம் அருந்துவதிலும், மாதர் சுகத்தில் ஆர்வம் கொள்வார்.  சூரியனுக்கு 10ல் குரு…

சூரியன் 2

 சூரியனுனும்  செவ்வாயும் கூடி எங்கிருந்தாலும் ஜாதகி இளம் விதவையாகும் அவலநிலை.  குருபார்வை ஏற்படின் இதற்கு விதிவிலக்கு உண்டாகும். சூரியனுடன் செவ்வாய் சேர்ந்து இருந்தால் பூர்வீகச்சொத்து  நிலைப்பதில்லை.   தந்தை காலத்திற்குள் பூர்வீகச் சொத்து விரையமாகிவிடும். சூரியனுன்  புதன் சேரும்போது, புதாத்தியயோகம், நிபுணத்துவயோகம் தரும்.  பட்டப்படிப்பு ஏற்படும்.  படிக்காத  மேதையாக திகழ்வார்கள். சூரியனுடன்  சனி சேர்ந்து இருந்தால் ஒருவரை ஒருவர் பார்த்தாலும் அப்பாவுக்கும், பிள்ளைக்கும் ஒற்றுமை இருக்காது கருத்து வேறுபாடு ஏற்படும். சூரியனுடன் சுக்கிரன் சேர்ந்தால் மனைவி வழியில் பிரச்சனை…