கடவுள்

காந்த ஊசி எப்பொழுதும் வடக்கு திசையையே காட்டுவதால், கப்பல்கள் கடலில் திசை தப்பிப் போவதில்லை. அதுபோலவே மனிதனுடைய மனம் இறைவனையே நாடியிருக்கும்வரை, அவன் வாழ்க்கை கடலில் திசை தப்பிப் போவதில்லை.  — இராமகிருஷ்ண பரமஹம்சர் “ ” மலர்களிலே மணம் இருப்பதுபோலவே ஆண்டவனும் உன்னிடமே இருக்கிறான். இதை அறியாமல், தன்னிடம் இருக்கும் கஸ்தூரியை உணராத மான், புல்லில் தேடுவது போல் நீ ஏன் வெளியில் தேடுகிறாய்?”   — கபீர்தாஸ் . “கடவுளை வணங்குதல் என்றால் என்ன?…

திருமந்திரமாலை – பாயிரம் -ஆகமச் சிறப்பு -71

திருமந்திரமாலை பரனாய்ப் பரா பரம் காட்டி உலகில் அரனாய்ச் சிவ தன்மம் தானே சொல் காலத்து அரனாய் அமரர்கள் அர்ச்சிக்கும் நந்தி உரன் ஆகி ஆகமம் ஓங்கி நின்றானே சிவபெருமான் விழுமிய முழுமுதலாம் பரனாய் நின்று தன் திருவடியான் உணரப்படும் உவமையிலாக் கலைஞானமாகிய அபரமும் மெய்ஞ்ஞானமாகிய பரமும் முறையே சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானத்தார்க்கும், பவமதனை அறமாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானத்தார்க்கும் நீங்காது உடனாய் நிறைந்து அருளிச் செய்தனன். அங்ஙனம் அருளிச் செய்து உலகினில் சிவபுண்ணியங்களுள் எல்லாம்…

இறைவன்

இறைவன் தாம் விரும்பியதைச் செய்கிறார். எவரும் அவரை அதைச் செய், இதைச் செய் எனக்கட்டளையிட முடியாது. அவர் அரசர்க்கெல்லாம் அரசர், சக்கரவர்த்திகளுக்கெல்லாம் மேலான சக்கரவர்த்தி, அவரது கட்டளைக்கும், விருப்பத்துக்கும் இணங்கி வாழ்வதே நாம் வாழ வேண்டிய வழியாகும். ”                                                       …

நலமான வாழ்விற்கு கடைபிடிக்க வேண்டியஉணவு உண்ணும்முறைகள்

உணவு உண்ணும்முறைகள் 1. இனிப்பை முதலில் சாப்பிட வேண்டும் . 2. உணவு, தண்ணீர் எதுவானாலும் ரசித்து, சுவைத்துச் சாப்பிட வேண்டும். 3. ஆறு சுவைகளையும் உணவில் முடிந்தவரை சேர்த்துக் கொள்ளவேண்டும் 4. உணவை மென்று கூழாக்கி எச்சில் நன்றாகக் கலந்து சாப்பிடவேண்டும். (நொறுங்கத் தின்றால் நூறு வயது வரை வாழலாம். உமிழ்நீர், வெள்ளை அணுக்களுக்கு இணையாகப் பணியாற்றக் கூடிய உமிழ் நீர் கலந்த உணவு நன்கு செரிமானமாகும்) 5. உண்ணும்போது உதட்டை மூடி வாயில் காற்று…

விடுகதைகள்

விடுகதைகள் 1, கட்டை போலிருந்தவனை வெட்டிப்பிழிந்தால் ருசியோ ருசி, அது என்ன? 2. பாடி அழைப்பான் உறவை கூடி உணவை உண்பான், அவன் யார்? 3. ஒரு வாய் தண்ணீரை சுமந்தபடி உயரத்தில் நிற்கிறான், அவன் யார்? விடைகள் 1 கரும்பு 2 காகம் 3 தென்னை மரம்

இந்த உலகம்

விருந்தாளி :- என்ன பண்ற பையன் :- படிக்கிறேன் விருந்தாளி :- படிச்சு என்னாவா ஆகப்போற ? பையன் :- அதைப் பற்றிதான் யோசனைப் பண்ணிக்கொண்டு இருக்கிறேன் விருந்தாளி :- என்னன்னு ? பையன் :- படிச்சுட்டு என்னாவா ஆவரதுன்னு ஒரே குழப்பமா இருக்கு விருந்தாளி :- குழப்பமா இருக்கா ஏன் ? பையன் :- ஒரு ஆசிரியரின் பத்துவருட சம்பாத்தியம் 20 லட்சம் விருந்தாளி :- அப்ப வாத்தியாருக்கு படி பையன் :- ஒரு இன்ஜினியரின்…

வாழ்க்கை ஒரு விசித்திரமான விந்தை.

மாலையில் நடைப் பயிற்சியை முடித்துக் கொண்டு அந்த தம்பதியினர் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தனர். வரும் வழியில் ஒரு கயிற்றுப் பாலம் ஒன்று இருந்தது. சற்று இருட்டியதால் இருவரும்  வேகமாக நடக்கத் தொடங்கினர்… திடீரென மழைச் சாரலும் வீசியது. வேகமாக நடந்து கொண்டிருந்தவர்கள்   ஓடத்தொடங்கினர்.கணவர் வேகமாக ஓடினார். கயிற்றுப் பாலத்தை கணவன் கடந்து முடிக்கும் போது தான் மனைவி பாலத்தினை வந்தடைந்தார்.  மழைச் சாரலோடு கும்மிருட்டும் சேர்ந்து  வந்ததால் மனைவி பாலத்தை கடக்க   பயப்பட்டாள். அதோடு மின்னலும்…

பரிகாரம் என்றால் உண்மையில் என்ன

பரிகாரம் ஜோதிடர் சொன்ன “எல்லா பரிகாரமும் செஞ்சிட்டோம்… ஒன்னும் பிரயோஜனம் இல்லை.  எதுவும் நடக்கலே..  இதுக்கு மேல என்ன செய்றதுன்னே புரியலே…” –பல நேரங்களில் ஜோதிட ஆலோசனை களின் பேரிலும் அல்லது தோஷங்களுக் காக பரிகாரம் செய்பவர்கள் மனதிலும் தோன்றும் விரக்தி இது. குட்டி கதை. ஒரு ராஜா காட்டுக்கு வேட்டையாட சென்றார். நேரம் போனது தெரியாமல் வேட்டையாடிக்கொண்டிருக்கும்போது மாலை நேரம் வந்து எங்கும் இருள் கவ்வத் தொடங்கிவிட்டது. அப்போது தூரத்தில் தெரிந்த ஒரு மரத்தின் மீது…

இன்றைய மருத்துவத்தின் நிலை..

ஒரு நாள் திடீரென்று குப்புசாமியின் இடது கால் நீல நிறத்தில் மாறி விட்டது. பயந்து போய் ஊரில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனைக்கு சென்று மருத்துவரை அணுகி ஆலோசனை கேட்டார். பரிசோதனை செய்து விட்டு காலில் #விஷம் ஏறி விட்டது என்றும் காலை அகற்ற வேண்டும் எனவும் சொல்ல, அதிர்ச்சி அடைந்த குப்புசாமி தயக்கத்துடன் வேறு வழியின்றி காலை எடுத்துவிட ஒத்துக் கொண்டார். சில நாட்களுக்குப் பிறகு வலது காலும் நீல நிறத்தில் மாற, மீண்டும் அதே மருத்துவமனைக்கு…

அன்பை கணிக்க முடியாது

அன்பு வெளிப்படும் விதம் ஒரு அழகான சிறுமி தன் கைகளில் இரண்டு ஆப்பிள் வைத்திருந்தாள். அங்கு வந்த அவளின் தாய் , நீ இரண்டு ஆப்பிள் வைத்திருக்கே ஒன்று எனக்கு கொடு என்றாள்… தன் தாயை ஒரு வினாடி பார்த்த அந்த சிறுமி, உடனே ஒரு ஆப்பிளை கடித்து விட்டாள்.. பின் இரண்டாவது ஆப்பிளையும் கடித்தாள் தாயின் முகத்தில் இருந்த சிரிப்பு உறைந்து போனது. தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்தாள்… உடனே அந்த சிறுமி, தாயிடம்…