விதிமீறல்கள் இயற்கை 5

அதிர்ஷ்டத்தை மட்டும் தேடி ஓடும் போதுதான் கால்கள்  இடறிக் கீழே விழுந்து விடுகிறோம்.. கொசு மாதிரி சாப்பாட்டுக் அலையக் கூடாது.  சிலந்தி மாதிரி சாப்பாட்டை நம்ம இடத்துக்கே வரவைக்கனும்..

விதிமீறல்கள் இயற்கை 4

மௌனமென்பது சில நேரங்களில் பதிலாக இல்லாமல் கேள்வியாக உள்ளது.. புரிதலென்பது சில நேரங்களில் எதையுமே புரிந்து கொள்ள வேண்டாம் என்று புரிந்து கொள்வது..

விதிமீறல்கள் இயற்கை 3

பயணமென்பது சில நேரங்களில் தேங்கி நின்று ஓய்வெடுப்பது.. விடைபெறுதல் என்பது சில நேரங்களில் அருகிலேயே கொஞ்சம் தூரமாக வாழ்வது..

விதிமீறல்கள் இயற்கை 1

அன்பென்பது சில நேரங்களில் விலகி நின்று ஆதரவு தருவது.. ஆறுதலென்பது சில நேரங்களில் அவர்களாக மீளட்டும் என்று ஓர் இடைவெளி தருவது..

அவர்களே வருவார்கள்

அவர்களே வருவார்கள் அவர்களே பிடிக்குமென்பார்கள்.. அவர்களே சலித்துவிடுவார்கள்; அவர்களே காணாமல் போய்விடுவார்கள்! அவர்கள் அவர்களாக இருக்கட்டும்; நீங்கள் அவர்களாக இருக்காதீர்கள்.. அவர்களின் எண்ணிக்கை ஏற்கனவே ஏராளம் பூமியில்!

தேட வேண்டாம் அவர்களை

விலகியது விலகியதாகவே இருக்கட்டும் விட்டுவிடுங்கள்.. மீண்டும் வந்தால் யார் விரிசல்கள் யாருடையது என்ற போர்கள் எழலாம்! பேசாமல் போன சொற்கள் பேசாமலே தீர்ந்து போகட்டும்.. காலம் தாழ்ந்து வந்த வார்த்தைகள் வெறும் நீராவிகள் நீண்ட நேரம் நிற்காது! சொல்லாமல் கொள்ளாமல் போனவர்கள் உண்மையில் தொலையவில்லை ஒளிந்து கொண்டனர்.. தேட வேண்டாம் அவர்களை வேண்டுமெனில் வந்துவிடுவார்கள்!

எல்லா “பிரச்சனைகளுக்கும் 

புன்னகை பிரச்சனைகள் “வருவதை தள்ளி போடும்..!! மெளனம் “பிரச்சனைகளே வராமல் தடுக்கும்..! எல்லா “பிரச்சனைகளுக்கும்  இந்த வாய் காரணம்..!!!

வாழ்க்கையில் கஷ்டங்களும்

வாழ்க்கையில் கஷ்டங்களும், கவலைகளும் நமக்கு மட்டும் தான் அதிகமா வருதுன்னு நினைக்கிகும் அனைவருமே மிகப்பெரிய முட்டாள்கள்..

ஒரு  குயவன் 10 முறை சுற்றினால் களி மண்ணு கூட அழகான பானை ஆகுது.  பல்லாயிரம் வருடமா இந்த பூமி சுத்திட்டுதான் இருக்கு, இன்னும் சில மனிதர்கள் களிமண்ணாகத் – தான் இருக்காங்க. .

முன்பின் அறியாத

முன் பின் அறியாத இருவருக்குள்ளே மத்தியஸ்தம் செய்தால் ஒரு நண்பதை பெறுவோம். இரண்டு நண்பர்களுக்குள் மத்தியஸ்தம் செய்தால் ஒரு நண்பனை இழப்போம்..

இருக்கும் இலை எல்லாம்

இருக்கும் இலை எல்லாம் வெட்டி விட்டு, இப்போது வேறு வழியில்லாமல் மின்விசிறி என்னும் இரும்பு இலையில் காற்று வாங்கிக் கொண்டிருக்கிறோம்.  .

நமக்குத்தான் எல்லாம் தெரியும்

நமக்குத்தான் எல்லாம் தெரியும், மற்றவர்களுக்கு எதுவும் தெரியாது என்று நினைக்காதீர்கள், நமக்கு அனைத்தையும் சொல்லிக் கொடுவர்களே மற்றவர்கள் தான்..

எது பிரம்மமுகூர்த்தம் ?

தாய் தந்தையை ஆன்மா என உணர்ந்து அவர்களை மதித்து நினைக்கும் நேரம் கடமையில் வழுவாத நேரம் அறவழியில் பொருள் சேர்க்கும் நேரம்

எது இராகு காலம் ?

அகங்காரம் கொள்ளும் நேரம் பாசம் கண்களை மறைக்கும் நேரம் ஆசைகள் எல்லையை மீறும் நேரம் கோபங்கள் உச்சத்தை தொடும் நேரம் தேக கவர்ச்சியில் மூழ்கும் நேரம்

பூனையை விட

பூனையை விட சிங்கம் வலிமையானது என்று எலிகள் ஒரு போதும் ஒத்துக் கொள்ளாது. தவறான வழியில் வெல்பவனை வாழ்த்தியும், நேர்மையான வழியில் சென்று தோற்பவனை தாழ்த்தியும் பேசும் சமுதாயம்தான் குற்றங்களுக்கு காரணம்!

கெட்ட உள்நோக்கத்துடன்

கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை. வாழ்க்கை மிகச் சிறியது என்பதால் அன்பை அதிகமாகவும் கோபங்களைக் கஞ்சத்தனமாகவும், மன்னித்தல்களை விரைவாகவும் வெளிப்படுத்த கற்றுக் கொள்ளுங்கள்

ஆறுதலே கூற முடியாத

ஆறுதலே கூற முடியாத சில கஷ்டங்களுக்கு நிச்சயமாக அழுகை ஒரு மருந்தாக இருக்கும்…. சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது … 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது.

எதிர்பாராத சந்தோஷம்

எதிர்பாராத சந்தோஷம் கிடைக்கும்போது நாம் எவ்வளவு மகிழ்ச்சியடைகிறோம்! இதுபோலவே எதிர்பாராத சந்தோஷத்தை நாம் யாருக்காவது உருவாக்கி தருகிறோமா

எது பலம்

ஒருநாள் சாவியைப்பார்த்து, சுத்தியல் கேட்டது. உன்னைவிட நான் வலிமையானவனாக இருக்கிறேன். ஆனாலும் ஒரு பூட்டைத் திறக்க நான் மிகவும் சிரமப்படுகிறேன். ஆனால் நீ சீக்கிரம் திறந்து விடுகிறாயே அதெப்படி?” அதற்கு சாவி சொன்னது. “நீ என்னை விட பலசாலிதான். அதை நானும் ஒப்புக் கொள்கிறேன். பூட்டைத் திறக்க நீ அதன் தலையில் அடிக்கிறாய். ஆனால் நான் பூட்டின் இதயத்தைத் தொடுகிறேன்” என்றதாம்.

நாம் சாப்பிடும் போது

நாம் சாப்பிடும் போது தலைக்குனிந்து சாப்பிடுகிறோம்.. காரணம் : இந்த உணவைத் தந்த பூமிக்கு நன்றி தெரிவிக்க. தண்ணீர் குடிக்கும் போது மேல் நோக்கி தண்ணீர் குடிக்கின்றோம்.. காரணம் : தண்ணீரை தந்த ஆகாயத்திற்க்கு நன்றி தெரிவிக்க. ஆனால் சரக்குஅடிக்கும் போது மட்டும் கண்களை மூடிக்கொள்கிறோமே ஏன்??? காரணம் : ஒருநாள் அதனால்தான் கண்கள் இரண்டும் மூட போகின்றது என்பதை தெரிவிக்க

நம்மில் பெரும்பாலானோர்,

நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட …, இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் ….

வாழ்வில் வெற்றி பெற என்ன ரகசிய வழிகள் இருக்கின்றன?

கல கலவென்று ஒரு சிரிப்பு சத்தம். என் அறையில் இருந்த பொருட்களெல்லாம் விழுந்து விழுந்து சிரித்தன. நாங்கள் சொல்லட்டுமா? எனக்கு ஒரே வியப்பு. “எங்கே சொல்லுங்கள் பார்க்கலாம்” என்றேன். மின் விசிறி சொன்னது “Be cool,,, கூரை சொன்னது “Aim high “ ஜன்னல் சொன்னது “See the world “ கடிகாரம் சொன்னது “Every minute is precious “ கண்ணாடி சொன்னது “reflect before you act” காலண்டர் சொன்னது “be up to…

நாளை என்பதே

நாளை என்பதே நமக்கு உறுதியில்லை நாளும் நமக்கு அது புரிவதில்லை நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள் தான் நரகம் என்னவோ இந்த வாழ்க்கையை விட வ லித்து விட போவது இல்லை என்றே தோன்றுகிறது ….

எத்தனை வயது ஆனாலும்

இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்… ஆனால் எத்தனை வயது ஆனாலும், எப்படி பேச வேண்டும் என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை…!

அவரவர் சூழ்நிலை அவரவருக்கு மட்டுமே  தெரியும்

ஒ௫ ஆற்றங்கறையில் இரண்டு பெரிய மரம் இ௫ந்தது அந்த வழியாக வந்த ஒ௫ சிட்டு கு௫வி மரத்திடம் கேட்டது… மழை காலம் தொடங்க இ௫ப்பதால் நானும் ௭ன் குஞ்சுகளும் வசிக்க கூடு ௧ட்ட அனுமதிக்க முடியுமா ௭ன்றது முதலில் இ௫ந்த மரம் முடியாது என்றது அடுத்த மரத்திடம் கேட்டது அது அனுமதித்தது கு௫வி கூடு கட்டி சந்தோசமா௧ வாழ்ந்து கொண்டு இ௫ந்த நேரம் அன்று பலத்த மழை ஆற்றில் வெள்ளம் வந்து முதல் மரத்தை அடித்து சென்றது…

பல கனவுகளோடு

பல கனவுகளோடு வாழ நினைத்த வாழ்க்கை கடைசியில் ஒரு கனவாகவே கடந்து போகிறது வாழ்க்கையில் அழிக்க முடியாத பக்கங்கள் நிறைய உண்டு அதில் அன்பானவர்களின் நினைவுகளும் கூட

உங்களின் தேவைக்காக

உங்களின் தேவைக்காக மற்றவர்களின் உணர்வுகளோடு விளையாடாதீர்கள்.   தனக்குத் தொடர்பில்லாத செய்தியை அறிய விரும்புதல் அதை மற்றவர்களிடம் கூறுதல் ஆகியன மோசமான மனிதர்களின் செயற்பாடுகள்.

மனதில் இறங்காம‍ல்

மனதில் இறங்காம‍ல் வெறும் எண்ணங்களாகவே நின்றுவிடும் தத்துவங்களும் நூலகங்களில் படிக்காமல் விடப்படும் புத்தகங்களும் ஒன்றுதான்.

இராமாயணம் – சன்மார்க்க விளக்கம்

சுத்த அறிவு இராமனாகவும் அறிவின் சத்தி சீதையாகவும் பத்து திசைகளிலும் அலையக்கூடிய மனமே இராவணனாகவும் மாரீசன் என்பது வஞ்சகமாகிய உலக வாழ்வாகவும் அறிவு மாரீசன் பின் செல்ல மனமாகிய இராவணன் அறிவின் சத்தியாகிய சீதையை கவர்ந்து சோகம் என்னுமிடத்தில் பிரணவத்தில் சிறை வைத்து விடுகின்றது அறிவானது ” வாசி” யாகிய அனுமன் துணை கொண்டு பிரணவத்தை அடைந்து கோதண்டமாகிய பிரணவத்தை வளைத்து அதிலிருந்து சிவவொளியை வீசச் செய்து மனதை அழித்து அறிவின் சத்தியை மீட்டது என்பதையே இராமாயணமாகச்…

 மாற்றத்திற்கான மூலம்

 மாற்றத்திற்கான மூலம் எண்ணங்களே… எண்ணங்கள் மாற செயல்கள் மாறும்… செயல்கள் மாற விளைவுகள் மாறும்…. விளைவுகள் மாற  வாழ்க்கையே மாறிவிடும். வளமான எண்ணங்களே வளமான வாழ்க்கைக்கு அடிப்படை

எண்ணங்களை

எண்ணங்களை பிரம்மாக்கள் எனலாம். காரணம் அவை எண்ணியதை உருவாக்கும் சக்தி படைத்தவை. ஒரு எண்ணம் செயலாக முடியாமல் போகிறதென்றால்  அதை விட சக்தி வாய்ந்த வேறொரு எண்ணம் அதனுடனேயே இருந்து போராடி அதனைப் பலமிழக்க வைத்திருக்கிறது என்று பொருள்.*

காயப்படுத்தாமல்

வாழ்க்கை எப்படி வேண்டுமெனாலும் மாறட்டும். எண்ணங்கள் அடுத்தவரை காயப்படுத்தாமல் இருக்கட்டும். அதுவும் இதுவும் எதுவும் கடந்து போகும். ஆனால் எதுவும் மறந்து போகாது…

ஒவ்வொரு நாளும்

ஒவ்வொரு நாளும் கற்றுக்கொள்ள ஆர்வமாக இருங்கள் ஒவ்வொரு நாளும் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள், ஒரு புத்தகத்தைப் படிக்கவும் அல்லது புதிய நபர்களைச் சந்திக்கவும் அல்லது வேறு ஏதாவது செய்யவும்.  ஏனென்றால் வெற்றி என்பது உங்களின் அறிவை பொருத்தே அமையும், “அறிவே ஆற்றல்” என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஒற்றுமை

இரு அரசர்களுக்கிடையில் எப்போதும் சண்டை வந்து கொண்டேயிருந்தது.   சாது ஒருவர் இவர்களின் ஒற்றுமைக்காக பெரிதும் முயற்சி எடுத்துக் கொண்டார் இதைப் பார்த்த அவர்கள் அவரைத் திட்டினார்கள்.  இவர்கள் திட்டுவதைப் பார்த்த சாது மௌனமாக சிரித்துக்கொண்டார்.  நாங்கள்  உங்களைத் திட்டிக் கொண்டிருக்கிறோம்.  நீங்கள் சிரிக்கிறீர்கள் என்றார்.  அதற்கு அந்த சாது என்னைத் திட்டுவதிலேயாவது உங்களுக்குள் ஒற்றுமை இருக்கிறதல்லவா அது போதும் என்றார்..

உண்மைய ஒத்துக்கறியா?”

 “நீ அந்த வீட்டுல 2 லட்ச ரூபாயும், 50 பவுன் நகையும் திருடுனது உறுதியாயிருச்சு… நீ உண்மைய ஒத்துக்கறியா?” “ஐயா ஒத்துக்கறேன்யா!” “அப்போ உனக்கான தண்டனைய அறிவிச்சுடலாமா?” “ஐயா, அதுக்கு முன்னால நம்ம மத்திய அரசாங்கத்துக்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுடுங்கய்யா!” “உனக்கு தண்டனை கொடுக்க மத்திய அரசுக்கிட்ட நான் ஏன் கேக்கணும்?” “ஐயா, கிரிப்டோகரன்ஸிய மோசடின்னு சொல்லிட்டு இருந்தவங்க இப்போ அந்த வருமானத்துக்கு 30% ஜி.எஸ்.டி. கட்டுனா போதும்னு சொல்லிட்டாங்க… ஆன்லைன் ரம்மி, ட்ரீம் 11 மாதிரி…

இலை எல்லாம் வெட்டி விட்டு

இருக்கும் இலை எல்லாம் வெட்டி விட்டு, இப்போது வேறு வழியில்லாமல் மின்விசிறி என்னும் இரும்பு இலையில் காற்று வாங்கிக் கொண்டிருக்கிறோம். 

வாழ்க்கை  ஒரு பயணம்..

வாழ்க்கை  ஒரு பயணம்.. நல்லதோ  கெட்டதோ நகர்ந்து கொண்டே இருங்கள்! இன்பம் வந்தால் ரசித்துக்கொண்டே செல்லுங்கள்.. துன்பம் வந்தால் சகித்துக்கொண்டே  செல்லுங்கள்.. தேங்கி விடாதீர்கள்! உழைத்து ஓய்ந்தாலும் பலருக்கும் வாழ்வில் விடியல் ஏற்படுவதில்லை.. கனவுச் சுமைகளின் பாரம் குறைவதும் இல்லை..!

முன்பின் அறியாத

முன்பின் அறியாத இருவருக்குள்ளே மத்தியஸ்தம் செய்தால் ஒரு நண்பனை பெறுவோம். இரண்டு நண்பர்களுக்குள் மத்தியஸ்தம் செய்தால் ஒரு நண்பனை இழப்போம்..  

சந்தோஷம் என்பது

சந்தோஷம் என்பது நாம் வாழும் இடத்தில் இல்லை.. நாம் வாழும் விதத்தில் உள்ளது! நிஜத்தை விட நிழல்கள் எப்போதும் அழகாகத்தான் இருக்கும்.. நிழலை நம்பி நிஜத்தை தொலைத்து விடாதீர்கள்!  

வேண்டியது வேண்டாதது

வேண்டியது வேண்டாதது என எதுவும் இல்லை இவ்வுலகில்.. காலமறிந்து நாம் தேடுவது வேண்டியவை.. காலம் கடந்து பின் நாம் தேடுவது வேண்டாதவை!