மொழி 4
தெய்வம் விதியின் எழுத்தை வகுத்தது மனிதன் எழுத்துக்கு விதி வகுத்தான். ஆனாலும் பல கோடிகளில் யாரோ ஒரிருவர் விதி வகுத்த வாழ்வை மீறி தான் வகுத்த வாழ்விற்கு விதி அமைத்து கொண்டவர்ளும் இருக்கிறார்கள்.
தெய்வம் விதியின் எழுத்தை வகுத்தது மனிதன் எழுத்துக்கு விதி வகுத்தான். ஆனாலும் பல கோடிகளில் யாரோ ஒரிருவர் விதி வகுத்த வாழ்வை மீறி தான் வகுத்த வாழ்விற்கு விதி அமைத்து கொண்டவர்ளும் இருக்கிறார்கள்.
சொல் _செவிக்கு புலனாகும் போது ஒலியாகவும் கண்ணுக்கு புலனாகும் போது எழுத்து வடிவில் இயங்குகிறது. இறைவன் விதியை வகுத்து எழுதி படைத்தான். மனிதன் எழுதி விதியை படைத்தான். கம்பன், காளிதாசன், வால்மீகி, திருவள்ளூவர், பாரதி போன்றோர் இந்த வகையை சார்ந்தவர்கள். இறைவன் உண்டாக்கிய நம் தலைஎழுத்தின் வரியும், வடிவமும் தெரியவில்லை, அதன் பொருளும் தெரியவில்லை. ஆனால் மண், உலகிற்கு மொழி படைத்துக் கொடுத்த மனிதர்கள் தாங்கள் வகுத்த விதிக்கு இலக்கணம் எனும் பெயரும் சூட்டி உள்ளனர்.
எழுத்துருவத்திலிருந்து சொற்கள் பிறந்தது. சொற்கள் பொருள்களை உடையதாயிற்று அதில் பல பொருள்களை அடைந்த ஒரு சொல்லும் ஒரு பொருளை அடைந்த பல சொற்களுமாக மொழி நிலத்தில் வார்த்தைகள் விளைந்தது. ஒற்றை தனி மலர் போல் ஒர் எழுத்தில் விளைந்த சொற்களும் தொகுத்த மலர் மாலையை போல் பல எழுத்துக்கள் இணைந்த விளைந்த சொற்களுமாக மொழி வளர்ந்தது.
தனை புகழ தன்னிடத்திலே சொல் இல்லாத தனி தமிழ். எந்த மொழிக்கும் ஆதி வடிவம் ஒசைதான். முன் பண்படாமலும், வரையறையில்லாமல் வந்த சப்தங்களே ஒசை கால போக்கில் பண்பட்டு, வரையறையில் அமைந்ததே ஒலி, ஒலியும் ஒசையும் கண்ணுக்கு புலன்கா கண்ணுக்கு தெரியாத கடவுளை கண்ணுக்கு தெரியும் விக்கிரகங்களை உண்டாக்கி கண்டு வழிபட்டு இறையை அறிவது போல தோற்றமில்லா ஒலிக்கு தோற்றமாய் அமைவதே வரி வடிவங்களாய் வந்ததே எழுத்து எழுத்தின் மூலம் மொழிக்கு உருவம் பிறந்தது.
1927 வையாபுரி புலவர் அறிஞர் குழு ஆராய்ந்து அறிவித்தது 124000 – தனி சொற்கள். 118 படலங்கள் இடை செருகல் 10.368 பாடல்கள் மிகை பாடல் 1286 கம்பன் பயன் சொற்கள் 3. முதல் 3 1\2 லட்சம்
கரையறியா காட்டாற்று வெள்ளம் போல கவி பொழிந்து வான்மீகி உலகுக்கு ஈந்த _ திரையறியா ஒட்டத்தை தேக்கி கட்டி திறன்மிகு கால்வாய்கள் செய்து பாய்ச்சி தரையறியா காவனத்தை தந்தான் தனி புலமை கவிதை தச்சன் வில் கிடந்தது மிதிலை தனில் கல் கிடந்தது கானகம் தனில் நெல் கிடந்தது சடையன் வீட்டில் சொல் கிடந்தது கம்பன் மனத்தில் உதித்தெழுந்து ராமன் கதை
கம்ப இராமாயணம் பற்றி மேல்படிந்த பிசின் அகற்றி மெல்ல கீறி மெதுவாக சுளை எடுத்து தேன் வார்த்து நூல் படித்த மனத்தவர்க்கு விருந்து வைத்தான் கம்பன் எனும் தமிழ் தாயால் நோற்ற மைந்தன். நாமக்கல் கவிஞர்
கம்பன் என்றாலே நினைவுக்கு வருவது யுக நாயகனான ராமனின் கதையாகிய ராமாயணமே, கம்ப ராமாயணம் என்றே அழைக்கப்படுகிறது வடமொழியில் வால்மீகியால் எழுதப்பட்ட ராமாயணத்தை தமிழ் கூறும் நல் உலகிற்க்கு தந்தவர் கம்பர். கம்பரின் ராமாயணம் தமிழ் பண்பாட்டின் நன்மைகளை முழுமையாக பிரதிபலிப்பது இவரின் காலம் 12ம் நூற்றாண்டின் பிற்பகுதி, இவர் மயிலாடுதுறை அருகே உள்ள தேரெழுந்தூர் என்னும் இடத்ததில் பிறந்தார். சோழ மன்னன் முதலாம் குலோத்துங்கன் அவை புலவரான ஒட்டக் கூத்தரும் நளவெண்பா தந்த புகழேந்தியும் கம்பரின்…
உலகில் மிகப்பெரியது எது என்று கேட்டால், இந்த உலகம்தான் பெரியது. ஆனால் இந்த உலகமோ நான்முகனால் படைக்கப்பட்டது எனவே நான்முகன்தான் பெரியவன் என்றால் நான்முகனோ திருமாலின் உந்தியில் (தொப்புள்) தோன்றியவன் எனவே திருமால்தான் பெரியவன் என்றால் திருமாலோ அலைகடலில் தூங்குகிறவன். திருமாலைத் தாங்கும் கடல்தான் பெரியது என்றால், அந்தக் கடலும் அகத்தியனின் உள்ளங்கையில் அடங்கியது. எனவே அகத்தியர்தான் பெரியவர் என்றால், அந்த அகத்தியரும் கலயத்தில் (சிறு மண்குடம்) அடங்கி இருந்தவர். எனவே, கலயம் தான் பெரியது என்றால்…
பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்! பெரிது பெரிது புவனம் பெரிது; புவனமோ நான்முகன் படைப்பு; நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன்; கரிய மாலோ அலைகடல் துயின்றோன்; அலைகடல், குறுமுனி அங்கையில் அடக்கம்; குறுமுனியோ கலசத்தில் பிறந்தோன்; கலசமோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்; அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம்; உமையோ இறைவர் பாகத்து ஒடுக்கம்; இறைவரோ தொண்டர் உள்ளத்து ஒடுக்கம்; தொண்டர் தம்பெருமை சொல்லவும் பெரிதே!