ஒரு கனவு

இரவு படுக்கும்போது எல்லாம் சரியாகத்தான் இருந்தது. திடீரென்று இனிமேல் பணத்துக்கு மதிப்பு இல்லை என்று அறிவித்துவிட்டார்கள். காலையில் எல்லாம் மாறிவிட்டன. பால் பாக்கெட் இல்லை.  பேப்பர் இல்லை. இனிமேல் பணத்துக்கு மதிப்பு இல்லையென்றால் எதைக் கொடுத்து அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களை வாங்குவது? மக்கள் எல்லோரும் சூப்பர் மார்க்கெட், மளிகைக் கடைக்காரரைப் போய்ப் பார்க்க… ‘எதுவும் விக்கிறதுக்கு இல்லம்மா, எல்லாத்தையும் எங்க குடும்பத்துக்காக வச்சிக்கிட்டோம்’ என்று உணவுப்பொருட்களைப் பதுக்கிக்கொண்டார்கள் வாங்கி வைத்திருந்த உணவுப்பொருட்கள் எல்லாம் கொஞ்ச…

நமது வாழ்க்கையை நிர்ணயிப்பது

நமது வாழ்க்கையை நிர்ணயிப்பது நமது ஆசையோ, திறமையோ, அறிவோ, அல்ல. நம் கண்ணுக்கும் ,மனதிற்கும், நமது அறிவிற்கும் புலனாகாத ஒரு மாபெரும் சக்தி அந்த சக்தி விரும்பும் பாதையில் வாழ்வது மட்டும் தான் நம்மால் முடியும்  செயல் விதியின் புயலில்,  அந்த சக்தியின் சுழலில் மனிதர்கள் பலபடி எடுத்து வீசப்படுகிறார்கள், யார் யார் எங்கெங்கு மோதிக்கொள்கிறார்களோ எதனால் மோதிக்கொள்கிறார்களோ எப்படி மோதிக் கொள்கிறார்களோ யார் கண்டது இயற்க்கையின் விசித்திரத்தை அந்த மாபெரும் சக்தியின் ரகசியத்தை நம்மால் அறிந்துகொள்ள…

அக்கறை

அக்கறை என்பது உண்மையானதாய் இருந்தால் அது கோபப்படாது உதவி செய்து வழி காட்டும். ஆனால், நிஜத்தில் அக்கறை இருப்பதாய் நாம் நினைப்பவர்களிடம் அதிக கோபம் வருகிறதே என்ன காரணம் இதற்க்கு எனக்கு தெரிந்த ஒரே பதில் அது அக்கறை உருவத்தில் இருக்கிற ஆசை. அந்த ஆசை அன்பாக பரிணாமம் அடையவில்லை என்பது தான். ஆசை அன்பாக பரிணாமம் அடையும் போது அங்கு அக்கறை உண்மையாய் இருக்கும். உண்மையான அக்கறை கோபப்படாது. அது உதவி செய்து வழி காட்டும்.…

முந்தைய இன்றைய தலைமுறை

முந்தைய தலைமுறைக்கும்,  இன்றைய தலைமுறைக்கும் ஒப்பிட்டுப் பார்த்தால் எத்தனையோ மாறுதல்கள் ஏற்பட்டு இருக்கிறது. மாறுதல்கள்  காலத்தை மீறி நின்ற போதும், அண்மை கால மாறுதல்கள் விண்கல வேகத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலமைக்கு காரணம் அதித விஞ்ஞான வளர்ச்சியுமாயும் இருக்கலாம் இந்த வளர்ச்சியின் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடிகளும் மாறுதல்களும், சுயவாழ்க்கையை கூட யோசிக்க முடியாத நிலைக்கு தள்ளிவிடப்பட்டுவிட்டது . இதை நாம் சிறிது ஆழ்ந்து கண்டிப்பாய் சிந்திக்கவேண்டும். சந்தோஷத்திற்கு, மன நிம்மதிக்கு, மனமகிழ்ச்சிக்கு, மனநிறைவுக்கு, எதிர்மறையான வளர்ச்சியால் என்ன…

நாம் வாழுகின்ற சுற்று புறம் கலாசாரம் 5

அமைதியை தேடும் மனிதன் முதலில் புரிந்துகொள்ள வேண்டியது ஒன்று அன்பு அடுத்தது மரணம் இவை இரண்டையும் மனிதன் புரிந்துகொள்ளும் போது அவனுக்கு பலவிஷயங்கள் தெரிய தொடங்கும் அதில் சில விஷயங்கள் புரியத்தொடங்கும் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் சிறுவயது முதலே போட்டி மனப்பான்மையோடு வாழ பழக்கப்படுத்தியுள்ளோம் இதை நாம் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். திறந்தமனதோடு ஒப்புக்கொள்ளவும் வேண்டும் போட்டி என்றாலே வெற்றி என்பது இலக்காகி விடுகிறது ஏதாவது ஒரு பலவீனமான சந்தர்ப்பத்தில் நாம் வன்முறையைகைக்கொள்ள தூண்டப்படுகிறோம்…

நாம் வாழுகின்ற சுற்று புறம் கலாசாரம் 4

தேசியத்தில் பார்த்தால் மதம், அரசியல் ,அந்தஸ்து ,போன்றவற்றால் மக்கள் பிரிந்தும் தங்களை தொலைத்தும் இருக்கிறார்கள் தான் தன்னை இழந்துவிட்டோம் தன்னை தொலைத்துவிட்டோம் என்ற சிந்தனை கூட மக்களுக்கு இல்லை பாவம் என்ன செய்வது அரசியலை சார்ந்திருக்கும் அரசியல் வாதிகளாலோ மதத்தை சார்ந்திருக்கும் மதகுருமார்களாலோ வியாபாரத்தை சார்ந்திருக்கும் வியாபாரிகளாலோ தனி திறமையாளர்களாலோ மிக பெரிய ஆராய்ச்சியாளர்களாலோ இதுநாள் வரையில் மக்களுக்கு சந்தோஷமாக வாழ்வதற்குண்டான கல்வியை சுதந்திரத்தை தர முடியவில்லை இனி இவர்களை நம்பி பலனில்லை அதை நாமே தேடி…

நாம் வாழுகின்ற சுற்று புறம் கலாசாரம் 3

பிறகு அதற்குரிய தன்மையை நாம் நமக்குள் உருவாக்கிக்கொண்டு அந்த பணியில் இறங்குவோம் இங்கு அதற்குரிய தன்மைகள் என்பதன் பொருள் என்னவென்றால் உணர்ச்சிபூர்வமாக இல்லாதிருத்தல் பாரபட்சமற்ற நோக்கு எதையும் சாரத சுதந்திரமான தெளிவான ஒரு நோக்கு எதையும் உள்ளது உள்ளபடி கண்டறிவது இது முதல் நிலை அடுத்து உள்ளது உள்ளபடி புரிந்து கொள்வது இது இரண்டாவது நிலை நமது கருத்துக்களை பிறருக்கு தெரியப்படுத்துவது என்றால்என்ன என்பதை முதலில் நாம் சந்தேகமில்லாமல் புரிந்துகொண்டிருக்கவேண்டும் நமது கருத்துக்கள் பிறருக்கு தெரியப்படுத்துவதற்கு நாம்…

நாம் வாழுகின்ற சுற்று புறம் கலாசாரம் 2

நமது வாழ்க்கை கடினமாயும், குழப்பங்களும் , எதிர்மறை நிறைந்ததாயும் இருக்கிறது.  தனி மனித வாழ்க்கை மட்டுமல்லாது பொது வாழ்க்கையும் கூட அப்படி தான் இருக்கிறது எங்கு நோக்கினும் அழிவு கோட்பாடுகள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே வருகின்றது எதற்கும் எதிலும் மதிப்போ ஆதாரமோ நம்பிக்கையோ இல்லை அது மதமாகட்டும் நிறுவனமாகட்டும் தத்துவமாகட்டும் அரசியல் ஆகட்டும் இப்படிபட்டக் குழப்பம் நிறைந்த உலகில் நாம் எப்படி வாழ்வது என்று நாம் சிந்தித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் இத்தனைக்கும் காரணம் சரியான…

நாம் வாழுகின்ற சுற்று புறம் கலாசாரம் 1

அன்பானவர்களுக்கு நான் படித்த சிந்தித்த விஷயங்களை பகிர்ந்துகொள்கிறேன் மனித பிறவிகளாகிய நாம் ஒரு வன்முறை சமுதாயத்தை உருவாக்கியுள்ளோம் இதை தான் இத்தனை ஆண்டுகளாக உருவாக்கியுள்ளோம் என்பதை கூட நாம் இன்னும் உணரவில்லை இந்த நிலைக்கு வளர்ச்சி என்று பெயரிட்டு அழைக்கிறம் நாம் வாழுகின்ற சுற்று புறம் கலாசாரம் எல்லாம் நமது முயற்சியின் பலனாகும் இதற்க்கு பின்புலமாக இருப்பது கடின பிரயத்தனங்கள் நமது வேதனைகள் திகைப்பூட்டும் கொடுமைகள் தான் அமைத்துள்ளன. இந்த உலகத்தில் இப்போது என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது…

வாழறது சுகம்

நல்லா யோசிச்சு பாரு உன்னைவிட உன்மேல் அக்கறை இருக்கிறவங்க வேற யார். உன்னை விட உன்னைப்பத்தி நல்லா தெரிஞ்சவங்க யார் இதுக்கு சரியான பதில் உனக்கு உனக்குள்ளயிருந்த கிடைச்சுதுன்னா வாழ்க்கை, அதாவது வாழறது சுகம், சுலபம்.

பிரியமுள்ளவர்களிடத்து

நமக்கு பிரியமுள்ளவர்கள்  சொல்லும் வசை சொற்களுக்கு பொருள் இருப்பதில்லை, பிரியம், உறவு, பாசம், ஆகியவைகளின் அன்பு பெருக்கில் சொற்கள் கரைந்து போய் விடும் போது அவற்றுக்கு தனியே பொருள் எங்கிருந்து கிடைக்கும் இதில் சொல்லியுள்ள விஷயத்தை என்றாவது உணர்ந்தது உண்டா அப்படி ஒரு சம்பவம் நிகழும் போது நாம் நடந்து கொண்ட விதத்தை பற்றி சிந்தித்தது உண்டா அப்படி சிந்திக்கும் போது இதில் சொன்ன விஷயம் நிஜமா, பொய்யா என்று நமக்கே தெரியவரும் அவ்வளவு தான்

உலகில் தற்போதைய ஆளுமைகளின் உண்மை சொரூபம்

சிறு குழந்தைகள் தங்கள் சந்தோஷத்திற்க்கு மண் பொம்மைகளை வைத்து விளையாடுகின்றனர். அரசியல் வாதிகள் தேசிய லட்சியங்கள் தேசபக்தி என்று உள்ளவற்றை சூதாட்ட காய்களாக வைத்து மக்களிடம் விளையாடுகின்றனர். ஆத்மவாதிகள் என கூறிக்கொள்பவர்களோ தத்துவ சாஸ்திரங்களையும் புராண இதிகாசங்களையும் சூதாட்டகாய்களாக மக்களிடம் வைத்து விளையாடுகின்றர் இது மூணும் ஒன்னுதானே சொல்லப்போனால் குழந்தைகளின் மண்பொம்மை விளையாட்டில் பிற ஜீவராசிகளுக்கோ,  மனித ஜாதிகளுக்கோ பெரிய பிரச்சனை எதுவும் வருவதில்லை

கெளரவம்

உலகின் எல்லா பகுதிகளிலும் உள்ள மக்கள் கூட்டங்களில் வம்பு, தும்புகளும் புறம் பேசுதலும், பொருளற்ற விரோதங்களும் பயனற்ற முரண்பாடுகளும் நிறைந்தது தான் இதில் இனம், மொழி, ஜாதி, பேதங்கள் எதுவுமில்லை அது குடும்பமானாலும் சரி,  சமுதாயமானாலும் சரி, இதில் சமுதாய பொருளாதாரம் முக்கிய பங்கு வகிக்கிறது கெளரவம் பார்ப்பதில் முன் காலத்தில் மதமும் ஜாதியும் கெளரவத்தை பிடித்துக்கொண்டிருந்தது பின் வந்த காலத்தில் படிப்பு அந்த இடத்தை பிடித்துக்கொண்டது இப்போது பொருளாதாரம் அந்த கெளரவம் என்கின்ற இடத்தை கோலாச்சுகிறது. அந்த…

எல்லாம் ஒன்றுதானா

எல்லாம் ஒன்று தான், ஆனால் எதுவும் ஒன்றல்ல. இதை புரிந்துகொள்ள வாழ்வது சுலபமாகும் வாழ்க்கையும் சுகமாகும் இதை எப்படி புரிந்து கொள்வது பலரின் வாழ்க்கையை பார்த்து அனுபவப்பட்டவர்களின் எழுத்துக்களை படித்து, சிந்தித்து நமக்குள்ளும் நம்மை சார்ந்தவர்களிடமும் பேசி என்ற படிகளின் மூலமே புரிந்து கொள்ள முடியும் இதை தவிர வேறு வழி இருப்பதாய் எனக்கு தெரியவில்லை உங்களுக்கு தெரிந்தால் சொல்லவும் கேட்டுக்கொள்கிறேன்

மன சங்கடமில்லாமல் வாழ்க்கையை நகர்த்த

சேர்ப்பது அழிவிலும் முன்னேறுவது வீழ்ச்சியிலும் சேர்க்கை பிரிவிலும் வாழ்க்கை மரணத்திலும் முடியும் என்பதை அனைவரும் தெரிந்து புரிந்துகொள்ள வேண்டும் அப்படி புரிந்துகொண்டால் அதிக மன சங்கடமில்லாமல் வாழ்க்கையை நகர்த்திவிடலாம்

முன்னேற்றத்திற்கு வழி

தான் செய்த தவறுகளை தவறு என்று ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோறுவதுதான் உயர்ந்த பண்பு  அதுதான்  சரியான வாழ்க்கை முறை தான் செய்த தவறுகளை நினைத்து வருந்துவதும் அதை ஒப்புக்கொள்வதும் மறுபடியும் அவற்றை செய்யாமல் இருப்பதும் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும்

நட்பு

நட்பு என்பது உபயோகத்தோடு சம்பந்தமாகி விட்டால் உபயோகம் தீர்ந்ததும் நட்பு முறிந்துவிடும். நட்பு முறியாது இருக்கிறது என்றால் அங்கு பரஸ்பரம் நட்பாய் உள்ளவர்கள் உபயோகமாய் இருக்கிறார்கள் என்று அர்த்தம்  நட்பை உயர்வாய் எண்ணிக்கொண்டிருப்பவர்களுக்கு இது கொச்சையாய் தெரியலாம் நட்பை அசிங்கப்படுத்துவதாயும் நினைக்கலாம். ஆனால் சரியாய் நின்று உற்றுப்பார்த்தால் இந்த விஷயம் புரியும் உபயோகப்படாத எதுவும் இயற்கையில்  நீண்ட காலம் இருந்தது இல்லை. நட்பும் இதற்க்கு விதி விலக்கல்ல.

யோக பாதை.

நம் கலாச்சாரத்தில் ஆறுவிதமான ஆன்மீகப்பாதைகள் உண்டு. அதில் ஒன்று யோக பாதை. யோகத்தின் பாதையில் பல்வேறு உள் பிரிவுகள் உண்டு. ஞான யோகம், பக்தி யோகம், ஜப யோகம், கர்ம யோகம் மற்றும் ராஜ யோகம் என ஐம்பெரும் பிரிவுகளாக இப்பிரிவுகள் வகைப்படுத்தப்படுகிறது. ராஜ யோகம் என்ற யோக பாதையின் உட்பிரிவில் குண்டலினி மற்றும் ஏழு சக்கரங்கள் இருக்கிறது அதன் செயலால் ஞானம் ஏற்படும் என்பதை விவரிக்கிறது. குண்டலினி என்ற சக்தி மூலாதாரம் என்ற இடத்தில் முக்கோண…

நாம் அடைய நினைப்பது

நாம் தெரிய நினைப்பதும், நாம் அடைய நினைப்பதும் முயற்சிக்காமல் கிடைக்காது. முயற்ச்சி தொடர்ந்து வரவேண்டும். அதற்க்கு வைராக்கியம் தேவைப்படுகிறது. அந்த வைராக்கியம் கைவர பெற்றால் முயற்ச்சி என்பது தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கும் அப்படி முயற்ச்சி தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டிருக்கும்போது நாம் அறிய நினைப்பது அடையநினைப்பது நமக்கு கைகூடும். அது எந்த விஷயமாக இருந்தாலும் சரி அதாவது பணம், பதவி, மண், பெண், பொன், தெய்வீகம் போன்ற எந்த விஷயங்களாக இருந்தாலும் நமக்கு தொடர்ந்த முயற்ச்சியும் அதை…

வளர்ச்சி

வளர்ச்சி விளைவுகளை பொருத்தது அல்ல செயல்களை பொருத்தது. வாழ்க்கையின் எந்த சந்தர்ப்பத்திலும் வாழ்க்கையை உயிரூட்டும் சாதனம் தத்துவம் ஆனால் அது கூட பல மாறுபாடுகளை தனக்குள் கொண்டுள்ளது. அது மனிதனின் சுபாவத்திற்க்கு ஏற்றபடி மாறுபட்ட உணர்ச்சிகளையும், அர்த்தங்களையும் தரவல்லது. ஏதும் விளையாத பாலைவனம், பாலைவனம் வளர்ச்சியுற்றதா, இல்லை கங்கை நதியோரம் உள்ள செழிப்பான மலர் சோலைகளும், தோப்புகளும் வளர்ச்சியுற்றதா அனுமானிக்க முடிவதில்லை, ஏனென்றால், கதிரவன் தனது கடுமையை பாலைவன மணலில் எத்தனையோ காலங்கள் செலுத்தினாலும் அந்த மணல்…

சீடர்

எவரை பார்க்கும் போது நீ எல்லாவற்றிலும் சாந்தமான நிலையை உணருகின்றாயோ, எவரின் அண்மை உனக்குள் பரவசத்தை உண்டாக்குகிறதோ , எவரின் சிந்தனை உனக்குள் உற்சாகத்தையும், சந்தோஷத்தையும் தருகிறதோ, என்ன செய்து கொண்டிருந்தாலும் யாருடைய சிந்தனை உனக்குள் ஓடிக்கொண்டு உனக்கு சந்தோஷத்தை தருகிறதோ எவருக்கு வேண்டி நீ உன்னை முழுவதும் அர்ப்பணிக்க தோன்றுகிறதோ, எவரின் பார்வை ஸ்பரிஸம் உனக்கு உடலிலும் உனக்குள்ளும் மாறுதலை உருவாக்குகிறதோ அவரே உன் குரு. இதை சரியாய் சிந்தித்தால் இந்து மதத்தில் கணவனிடம் மனைவி…

தவறுகளின் பாதை

எப்போதும் எல்லாம் தவறு கண்டுபிடிக்கப்பட்டு சரி செய்யப் படுகிறதோ அதுதான் சரியானது தவறுகளின் பாதைதான் சக்தியத்தின் பாதை. மனித குலத்திற்க்கு இது என்ன சொல்ல வருகிறது இதிலிருந்து மனிதன் அல்லது மனித குலம் என்ன புரிந்து கொள்வது. அப்படி புரிந்து கொள்வதால் என்ன பயன் சிந்திக்க வேண்டும். சிந்திக்க விருப்பு வெறுப்பு இல்லாத மனநிலை தேவைபடுகிறது. மனமானது விருப்பு, வெறுப்பு , சுகம், துக்கம், சரி, தவறு என்று பற்றியபடியே மனம் இயங்கிக் கொண்டிருக்கும் போது, நடு…

சுடர்

நெற்றிக்கு நடுவே சுடரை நிறுத்தி யோசிக்கும் விஷயத்தை அந்த சுடரினில் வைத்து அந்த விஷயத்திற்குள் நேர் கோடாய் இறங்கி ஒன்றன்பின் ஒன்றாய் கேள்வி கேட்டு, பிரித்து அறிந்தால் குழப்பங்கள் தெரியும். பிரச்சனைகளுக்கு உண்டான தீர்வு கிடைக்கும்.

சித்த விருத்தி

மனிதனின் உயிர் அவன் உள்ளிழித்து வெளியே விடும் மூச்சுக் காற்று ஆகும். நாசி நுனியில் எண்ணத்தை நிறுத்தி, மூச்சுக் காற்றை எண்ணத்தின் மீது ஏற்றி , மூச்சைத் தடை செய்யாமல் அதைத் குதிரையாக்க வேண்டும். இவ்வாறு ஒன்றே கால் நாழிகை மூச்சோடு எண்ணத்தை நனையவிட்டால், சித்த விருத்தி உண்டாகி, ஞான ஒளி மின்னல், சடடோரி தோன்றி மறையும். இப்படி மூச்சுக்குள் இருக்கும் பிராணனை வசியம் செய்யும் முறைதான் விபாசன யோக முறை. முயற்சிப்போம் முடிவு என்னவென்று தான்…

கடவுளைப்பற்றி காமராசரின் சிந்தனை

நீங்க பல தெய்வ வழிபாட்ட வெறுக்கிறீங்களா, இல்லே, தெய்வ வழிபாட்டையே வெறுக்கிறீங்களா? என்று கேட்டேன் அவர் கொஞ்சம் கூடத் தாமதிக்காமல் “லட்சுமி, சரசுவதி, பார்வதி, முருகன், விநாயகர், பராசக்திங்கிறதெல்லாம் யாரோ ஓவியர்கள் வரைஞ்சி வச்ச சித்திரங்கள். அதையெல்லாம் ஆண்டவன்னு நம்மாளு கும்பிட ஆரம்பிச்சிட்டான். சுடலைமாடன், காத்தவராயன்கிற பேர்ல அந்த வட்டாரத்துல யாராவது பிரபலமான ஆசாமி இருந்திருப்பான். அவன் செத்ததும் கடவுளாக்கிட்டான் நம்மாளு. கடவுள்ங்கிறவரு கண்ண உருட்டிகிட்டு, நாக்கை நீட்டிகிட்டுதான் இருப்பாரா? அரேபியாவிலே இருக்கிறவன் அல்லான்னான், அதுல சன்னி,…

ஸோஹம்

ஸோ – என்ற நாதத்துடன் காற்றை உள்ளே இழுத்து  ஒசை எழுப்பி ‘ ஹம் ‘ என் ற ஒசையுடன் அதை வெளியே விட்டு, ஒலி எழுப்பும்போது, பிரசித்தி பெற்ற ஒங்கார நாதமாகிய ‘ ஸோஹம்’ இணைகிறது. இதுவே சூட்சும பஞ்சாட்சரம்.

ஸ்தூல சூக்குமம்

சூட்சும எல்லையில் மனிதனின் எண்ணத்தைச் செலுத்தினால், சூட்சும சரீரமும் அதைத் தொடர்ந்து வர வேண்டும். எண்ணத்தை சூக்குமத்தில் நிறுத்தும் போது, சூக்கும சரீரம் ஸ்தூல சரீரத்துக்குள் இருக்கக்கூடாது. 

மனோதத்துவச்-சட்டம்.

புறமனத்தில் எழும் எண்ணங்களும், திட்டங்களும் நிறை வேறலாம், நிறைவேறாமலும் போகலாம். ஏனென்றால் புறமனதின் எல்லைக்கோட்டில் இருக்கும் நினைவிற்கு பந்தபாசம் உண்டு. ஆனால் புறமனதிலிருந்து அகமனதிற்குக் கொண்டு செல்லும் எண்ணங்களும், திட்டங்களும் பந்தபாசங்களுக்கு அப்பாற்பட்டவை, தோல்வி அறியாதவை. எனவே அவை நிறைவேறியே தீரும். இது மனேதத்துவச் சட்டம்.

உடலின் உள் நடப்பது

மூன்று பிரிவுகளைக் கொண்ட தொண்ணுற்றாரு மனத் தத்துவங்களில், இரண்டாம் தத்துவம் மொத்தம் முப்பத்தைத் தன்னுள் அடக்கியது இந்த முப்பதில் தச வாயுக்கள் பத்து – அதில் பிராணனும் ஒன்று. இந்தப் பிராணன், லலாட மத்தியில் உருவாகி, சித்ரஹாச நாடியில் பரவி, மூலாதாரத்திற்கு வந்து, மணி பூரக நாபியைச் சந்தித்து, இடகலை, பிங்கலைகளில் ஒடி, ஏழு சூட்சும நாடிகளையும் சந்தித்து, கபாலத்தைச் சுற்றி, நாசியில் பன்னிரண்டங்குலம் எழுந்து, நாலங்குலம் விடுவித்து, எட்டங் குலம், நீண்டு, தான் நின்ற இடத்தில்…

வாழ்க்கைங்கிறது

கோமு -ஒரு சந்தேகம் காமு -என்ன கோமு- வாழ்க்கைங்கிறது என்ன தொடர்ந்து நடந்துகிட்டு இருக்குற மரணமா இல்ல தொடர்ந்து நடந்துகிட்டு இருக்கிற ஜனனமா? காமு- ரெண்டும்தான் கோமு – இப்படி சொன்னா எப்படி கொஞ்சம் விளக்கமா இல்லாட்டி புரியறமாதிரி சொல்லு காமு-  இங்க பாரு சந்தோசமா வாழ்ந்துகிட்டு இருக்கிறவனுக்கு மரணத்தோட ஞாபகமே வராது துக்கத்தில வாழ்ந்துகிட்டு இருக்கிறவனுக்கு மரணத்தோட சிந்தனை வந்துகிட்டே இருக்கும் இதுல தமாஷ் என்னன்னா ரெண்டுபேரும் மரணம் அடைவாங்க  கோமு -நான் கேட்டது மரணம்…

நினைவில் வைத்துக்கொள்ள

காமத்தை விட கொடிய நோய் இல்லை. அறியாமையை விட கொடிய எதிரி இல்லை. கோபத்தை விட கொடிய நெருப்பு இல்லை, எவன் ஒருவனுக்கு செல்வம் இருக்கிறதோ, அவனுக்கு உறவினர்கள் உண்டு, நண்பர்கள் உண்டு. பிறவி குருடனுக்கு கண் தெரிவதில்லை, அது போல் காமம் உள்ளவனுக்கு கண் தெரியாது, பெருமை உள்ளவனுக்கு கெடுதி தெரியாது, பணம் செய்யவேண்டும் என்ற எண்ணம் உள்ளவனுக்கு பாவம் தெரியாது. பேராசை கொண்டவனை பரிசு கொடுத்தும், பிடிவாதம் உள்ளவனை சலாம் போடுவதன் மூலமும், முட்டாளை…

உண்மையான விஷயம்

மரணம் என்பது உண்மையான விஷயம் அது உண்மை தானென்று ஏற்று அதை இயல்பாய் அல்லது துணிவாய் எதிர் நோக்கி வரவேற்க்கும் பக்குவம் யாருக்குதான் இருக்கிறது. பணம், பதவி, படிப்பு, அந்தஸ்து வெற்றி (முதன்மை அடைய வேண்டும். ) போன்றவற்றில் நிலை பெற்ற மனிதர்களிடம் இதை எதிர்பார்ப்பது தவறல்லவா.

சக்தி மயமான ஆற்றல்

அகிலமெங்கும் பரந்து விரிந்திருக்கும் சக்தி மயமான ஆற்றலும் திறனும் மனிதனுள் அடக்கம். பரவிவிரிந்திருக்கும் அந்தப் பூரணத்தின் சர்வ சக்தி வடிவே மனிதன். தன்னுள் அடங்கி ஒடுங்கியிருக்கும் பிரம்மாண்டமான சக்தியை வெளிக்கொணர்ந்து விரிக்கும் ஆற்றல் மனிதனுக்கு மட்டுமே உண்டு. இந்த அறிவின் வினையே கடவுள் என்று மனிதன் அறிந்து விட்டால், தன்னிலிருந்து பேராற்றலை அவன் வெளிப்படுத்தமுடியும்.

மனிதனுடைய அடிப்படையான குணம்

மனிதனுடைய அடிப்படையான குணம் வன்முறைதான்.  ஒருவரை ஒருவர் முந்தி நான்தான் முதல் என்று காண்பிக்க, ஆசைப்படும் மனோபாவம் வன்முறையின் ஆரம்பம். விஞ்ஞானம் அமைதியையும், சாந்தத்தையும் எந்தக் காலத்திலும் தராது. அடுத்தாப்பல இருக்கிற மனுசன புரிஞ்சுக்காம, புரிஞ்சுக்க முயற்சி பண்ணாம, நிலாவையும், செவ்வாயையும் புரிஞ்சுஎன்ன ஆகப் போகுது.

வளர்ச்சின்னா என்ன

காமு-  வளர்ச்சின்னா என்ன கோமு-  வளர்ச்சின்னா அழிவு காமு-  நீ தப்பா சொல்லரே கோமு – அப்ப நீ சரியா சொல்லு காமு-  இடைஞ்சலைத்தாண்டுவதுதான் வளர்ச்சி கோமு-  அது இயற்கையை உத்து பாக்காதவங்க சொல்லற வார்த்தை காமு-  நீ ரொம்ப உத்துபாத்துட்டாயோ கோமு-  நான் சொன்னது நமக்கு முன்னாடி பாத்தவங்களோட கருத்து எனக்கு அது சரின்னு படுது காமு – என்ன நீ இப்படி சொல்லற கோமு-  யோசி புரியும் காமு-  உலகமே வளர்ச்சிக்கு ஆசைப்பட்டு ஓடுது…

அரசியலில் அந்தஸ்து நிலைத்திருக்க வேண்டியதற்கு வேண்டியவிசேஷகுணங்கள்.

காமு -அரசியலிலே நீடிச்சு நிலைச்சு நிக்கணும் அப்படின்னா என்னென்ன குணம் இருக்கணும் கோமு- நான் சொல்லுவேன் உனக்கு புடிக்காது காமு -இல்ல சொல்லு நான் கேக்கறேன் கோமு -சரி சொல்லறேன் கேளு உறவாடி கெடுக்கும் உத்தம குணம், சுயநலம், நயவஞ்சகம், நம்பிக்கை துரோகம், ஏளனம், பொறாமை, பேராசை இதல்லாம் சாதரண மனிதர்களுக்கும் இருக்கும், ஆனா விசேஷமாய் அரசியல் நடத்துபவர்களிடம் இருக்கும். அந்த விசேஷம், ராஜ தந்திரத்தில் குள்ளநரியாகவும், அரசியல் கட்சிகளில் அடிக்கடி கட்சிமாறும் பச்சோந்தியாகவும், மத நம்பிக்கைகளில்…

ராஜபக்தி வேறு, தேசபக்தி வேறு.

ராஜபக்தி வேறு, தேசபக்தி வேறு. காமு தேச பக்தின்னா என்ன கோமு தேசத்தை துதி பாடறது தேச பக்தி காமு அப்ப ராஜ பக்தின்னா என்ன கோமு ராஜாங்கத்தை துதி பாடறது ராஜ பக்தி தம்பி காமு நல்லா புரிஞ்சுக்க ஆளும் அரசாங்கத்தை கண்மூடித்தனமாக பின்பற்றும் பக்தி வேறு. ஆளப்படும் தன் நாட்டை கண் திறந்து பார்க்கும் பக்தி வேறு. இந்த அரசியல் அறிவை லட்சியவாதிகள்  சாதாரண குடிமக்கள்  மண்ணின் மைந்தர்கள் எப்போது புரிந்து கொள்கிறார்களோ, அப்போது…

வர வர யாருக்கும் தேச பக்தியே இல்லை

காமு;  வர வர யாருக்கும் தேச பக்தியே இல்லை கோமு;  என்ன தனியா ஏதோ பேசிட்டு இருக்க காமு ;  நீ எப்ப வந்த? கோமு; நீ வர வரன்னு சொல்ல ஆரம்பிச்சவுடனேயே வந்துட்டேன் காமு; உனக்கு தான் எந்த பக்தியும் கிடையாதே அதனால் அத விட்று கோமு ;  நீ என்னமோ நினைச்சிட்டு என்னமோ பேசறேன்னு நினைக்கிறேன் காமு;  என்ன என்னமோ நினைச்சிட்டு என்னமோ பேசறன் நான் கோமு ;  உன்னோட அளவுக்கு யாருக்கும் தேச…

அர்த்த சாஸ்திரம் உரைக்கும் அர்த்தமுள்ள அறிவுரைகள்..!

* கடலில் பெய்யும் மழை பயனற்றது, பகலில் எரியும் தீபம் பயனற்றது, வசதி உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு பயனற்றது, நோய் உள்ளவனுக்கு கொடுக்கும் அறுசுவை உணவு பயனற்றது. அதுபோல் முட்டாளுக்கு கூறும் அறிவுரையும் பயனற்றது

முயற்ச்சி

கோமு: என்ன பண்ணிட்டு இருக்க காமு: -ப்ளேன் பண்ணிட்டேன் இனி வொர்க்குள்ளே போக போறேன். கோமு – என்ன ப்ளேன் பண்ணீட்டே காமு – எப்படியும் இந்தியன் டீமில செலக்ட் ஆகணும்னு, கோமு அப்படியா வொர்க் என்ன பண்ணப்போற காமு – தினமும் பிராக்ட்டீஸ் கோமு – அப்புறம் காமு – அத்தனை தான் கோமு – அது மட்டும் போதுமா காமு – ஏன் அதுதான் பண்ணனும் அத தவிர வேற என்ன பண்ணனும். கோமு…

கோமு vs காமு

கோமு; நீங்கதான் என் குரு காமு ; அப்படியெல்லாம் நினைக்காதே அது பொய் கோமு ;என்ன அப்படி சொல்லிடீங்க காமு ;வேற எப்படி சொல்லணும் கோமு ; உங்களையே கதின்னு வந்துருக்கேன் காமு ;குரு எல்லாம் என்ன ஆனாங்கன்னு எனக்கு தெரியும் அதனால தான் சொல்லறேன் நான் உனக்கு மட்டுமல்ல யாருக்கும் குரு இல்ல கோமு; குரு எல்லாம் என்ன ஆனாங்க அதை கொஞ்சம் விளக்கமா சொன்னிங்கன்னா பரவாயில்லை காமு ;சொல்லறேன் சொல்லறேன் அதுதானே என் வேலை…

பொறுப்பு

குடும்ப வாழ்வில் புருஷனுடைய பொறுப்பு என்ன? நம்பிக்கையை தருபவன் புருஷன். தீங்கு செய்யாதவன் தீமையிலிருந்து காப்பவன். உடலுக்கும் உள்ளத்திற்கும் சந்தோஷத்தைத் தருபவன். மனைவியின் கடமை என்ன? புருஷனின் கடமையை வளர்ப்பது எல்லா நேரங்களிலும் துணை நிற்பது

வாழ்க்கை

‘சந்தோஷமா வாழறேன்’ னு காட்டிக்கொள்ள தான் பணம் தேவைப்படுகிறது.. உண்மையில், சந்தோஷமா வாழ பணம் ஒரு பொருட்டே இல்லை.. நினைப்பது போல் வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை.. அழகாய் அமைந்த வாழ்க்கையைக் கூட சிலருக்கு வாழத் தெரிவதும் இல்லை..! நோய் வரும் வரை உண்பவன் உடல் நலமாகும் வரை உண்ணாதிருக்க வேண்டி வரும்! பணம் சம்பாதிப்பது குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல… ஆனால் செலவழிப்பது குண்டூசியால் பலூனை உடைப்பது போல…!பணத்தின் மதிப்பு தெரியவேண்டுமா?.. செலவு செய்யுங்க..! உங்களின்…

லட்சியம்

லட்சியம் என்பது சுயநலமா? லட்சியத்திற்கும் சுயநலத்திற்கும் உள்ள வித்தியாசம் ஒரு தனிமனிதனின் ஆசை சுயநலம். பல்லாயிரக்கணக்கானவர்கள் கூட்டாக சேர்ந்து ஆசைப்படுவதற்கு பெயர் லட்சியம். பல்லாயிரக் கணக்கான பேர்களின் சுயநலம் ஒருவனுக்கு வரும்போது அது லட்சியம்

பாவ புண்ணியம்

குருவருளும் திருவருளும் துணை நிற்க பாவ புண்ணியம் அன்பு சார்ந்த இணைய தள வாசகர்களுக்கு வணக்கம் மனிதனுடைய தேவைக்கும், ஆசைக்கும், நன்மைக்கும், தீமைக்கும் இடையில் தான் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. தேவைகளின் விகிதாசாரமும், ஆசைகளின் விகிதாசாரமுமே நன்மை, தீமைகளை உண்டாக்குகிறது. தேவையென்பது முக்கியமாக உடல் சம்பந்தப்பட்டது. அதாவது பசி, தூக்கம் போன்றவை நாம் நினைத்தாலும், நினைக்காவிட்டாலும் உடலுக்கு சக்தி தேவைப்படும் போது உடல் தனது தேவையை தெரியப்படுத்துகிறது. அந்த தேவையை பூர்த்தி செய்யும் இடத்தில் ஆசை நுழையும் போது…

ஒட்டாத கற்பனை

இன்று விளையும் உணர்ச்சி கொந்தளிப்பால் பொருளாதார சிக்கலால் மரபு  மீறமுடியாத பேடித்தனத்தால் விளையக்கூடிய நெருக்கடிகளை எதார்த்தமுறையில் ஆராயவேண்டிய அவசரம் அவசியம் நமக்கு இருக்கிறது. உணர்ச்சி வேகத்தில் இயங்கும் ஜீவனுக்கு லட்சியத்தின் தேவை வெளிப்படை எனினும் வெறும் லட்சிய கண்ணோட்டம் மட்டும் பலன் தராது . வாழ்க்கைக்கு ஒட்டாத கற்பனை மேலோட்டமான மகிழ்ச்சியைத் தந்து மறைந்துவிடும்.

உறவு

உறவு என்பது சடங்கால் வருவது அல்ல. அது ஒரு உணர்வு. உணர்வு வரவேண்டும் என்பதற்கான கருவிதான் சடங்கு. கருவியே உணர்வாகாது மனிதரை தெரிந்து சடங்குகளை உதற தெரிந்தவர்கள் வெகு சிலரே.

மனிதனின் லட்சியம்

மனம் எனும் ரகசியம். மனிதனின் லட்சியத்தை ஒரு சில வார்த்தைகாளகக் கூறிவிட முடியும். அது என்னவென்றால் மனித இனத்திற்கு அவர்களின் தெய்வீகத்தன்மையைப் போதிப்பதும், வாழ்க்கையின் ஒவ்வோர் அசைவிலும் அந்தத் தெய்வீகத் தன்மை வெளிப்படுமாறு செய்வது எப்படி என்பதை போதிப்பது ஆகும்  எல்லா ஆற்றல்களும் உங்களுக்குள் இருக்கிறது. நம்மால் எதையும் செய்ய முடியும் என்பதை நம்புங்கள் நாம் பலவீனமானவர்கள், நம் மனம் பலவீனமானது என்று தயவு செய்து கருத்தில் கொள்ளாதீர்கள்.  ஒவ்வொர் ஆன்மாவும் உள்ளடங்கிய தெய்வீகம் நிறைந்தது. புற…