பயம் 5

இந்த கடந்த காலம், எதிர்காலம் என்பது எண்ணங்களால் ஆட்சி செய்யப்படுகிறது இந்த எண்ணங்களே பயத்தை நம்முள் விடாமல் அழுத்தமாக பிடித்து வைத்திருக்கிறது. இதை நாம் நன்றாக முதலில் புரிந்து கொள்வோம் அடுத்ததாக நமது வளர்ச்சிக்கும், இந்த எண்ணங்களே காரணமாயும் உதவி செய்வதாயும் இருக்கிறது. இந்த விஷயத்தை நன்கு கவனித்து நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  நன்றாக இதை புரிந்து கொண்டபின் எண்ணங்கள் என்பது என்ன என்ற வினாவை நாம் முன் வைத்து சிந்தித்தால் வரும் பதில் எண்ணம்…

பயம் 4

மரண பயத்தை விட்டு விட்டு வேறு சில பயங்கள் எது என்று பார்த்தால் நாம் செய்த தவறுகள் வெளியே தெரிந்து விடுமோ எனும் பயம், நம்முடைய பொருளாதார சூழ்நிலையை கருத்தில கொண்டு எதிர் கால சிந்தனையில் ஏற்படும் பயம்.  இதில் நாம் கவனித்து பார்த்தால் பயம் என்ற விஷயம் கடந்த காலத்தையோ, அல்லது எதிர்காலத்தையோ மையமாக கொண்டுள்ளது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்

பயம் 3

ஒருவாறு சிந்தித்து பார்த்தால் மனிதனுக்கு மரணமே மிக பெரிய பயமாய் இருந்திருக்கிறது இப்போதும் இருந்து கொண்டிருக்கிறது.  உண்மையில் சொல்லப்போனால் மரணம் வரும் வினாடி வரை நீங்கள் வாழ்க்கையில் மரணத்தின் பயத்தை ஒத்தி வைத்திருக்கிறீர்கள் அதாவது மரண பயத்திலிருந்து தப்பித்து வந்திருக்கின்றீர்கள் என்று அர்த்தம் நாம் நம்மிடம் உள்ள பல பயங்களில் இருந்து விடுபட அல்லது தற்காலிமாக வேணும் தப்பிக்க கோயில், மதம், கடவுள் போன்றவற்றின் துணையை கைக்கொண்டு வந்துள்ளோம் ஆனாலும் எத்தனையோ மதங்கள், கோயில்கள், கடவுள்கள், தத்துவங்களாலும்…

பயம் 2

இந்த பயம் பல சமயங்களில் மறைமுகமாகவும், சில சமயங்களில் மட்டுமே வெளிப்படையாகவும் உள்ளது.  பயம் ஏன் வருகிறது?  எப்படி  அந்த பயம் உருவாகிறது என்று நாம் சிந்தித்தால் மட்டுமே முழுமையாய் பயத்தைப் பற்றி அறிந்து கொள்ள முடியும் அப்படி முழுமையாய் அறிந்து கொண்டபின் அந்த பயத்தை வேண்டுமானால் நாம் வைத்துக் கொள்ளலாம், வேண்டாமென்றால் அந்த பயத்தை தூக்கி போட்டு விடலாம்.

ஆதி. 11     சமணம்

இனி, சமணத்தைப் பற்றி பார்ப்போம்.  சமண மதத்தின் தத்துவங்களை உருவாக்கியவர் மகாவீரர் ஞானம் அடையும் முன் இவர் பெயர் வர்த்தமானர் எல்லாவற்றையும் துறந்துவிட வேண்டும் என்பதே சமண தத்துவத்தின் கருப்பொருள்  தத்துவங்களின் பயணம் உண்மையை தேடி அதாவது அறுதியான, இறுதியான உண்மையை தேடி இதில் அந்த உண்மையை சமண தத்துவம் எல்லாவற்றையும் விட்டு விடுதல் என்ற அடிப்படையில் உண்மையை நாடி பயணிக்கிறது. அதன், பார்வையில் கண்ணுக்கு, புலனுக்கு தெரியும் உலகமும் உண்டு.  கண்ணுக்கும், புலனுக்கும் தெரியாத சூட்சமமான…

ஆதி. 10 லோகாயதம் — சார்வாகர்கள் — நாத்திகம் 4

லோகாயதம் — சார்வாகர்கள் — நாத்திகம் 4  நம் புலன்கள் அறியாத காரணத்தால் தீர்மானமாக நாம் நம்பலாம் கடவுள் என்று ஒன்று இல்லையென்று.  கடவுள் இல்லையென்று ஆகிவிட்டதால் கர்மவினையும் இல்லை என்பதே இவர்கள் தத்துவம் சுருக்கமாக சொன்னால் பூதங்களின் இயல்பான குணவிசேஷத்தால் உள்ள கலப்புகளே பொருள்கள் அந்த பொருள்களை காண முடியும் உணர முடியும் சில கால கட்டத்தில் இணைந்த பூதங்கள் பிரிந்து வேறாக மாறுகின்றன இதில் மனிதனும் அடக்கம் அதனால் மனிதன் அனுபவிக்க பிறந்துள்ளான், அனுபவிக்கிறான்,…

பயம்.

பயம் இது எல்லோரிடமும் உள்ளது.  அனால் அது எற்படுவதற்குரிய சூழ்நிலைகளும் , பொருள்களும் ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது. மற்றபடி பயம் என்பது பயம்தான். நீரை கண்டு பயப்படாதவன்  நெருப்பைக் கண்டு பயப்படலாம்.  பாம்பைக்கண்டு பயப்படாதவன் புலியைக் கண்டு பயப்படலாம். இதில் நாம் சற்று சிந்தித்துப்பார்த்தால் பயம் என்பது அதாவது பயம் எனும் உணர்வு தனியே நிற்பதில்லை.  அதாவது பயத்தால் தனியாக செயல்படமுடியாது. அதற்கு ஏதாவது ஒரு பிடிமானம் வேண்டும் அந்த பிடிமானம் என்பது இருட்டாய் இருக்கலாம்.  கொடிய…

சந்தோஷம் என்பது 33

அமைதி எனும் நிலையை அடைய மனிதன் தனக்கு தானே சுய பரிசோதனை செய்தால் மட்டுமே முடியும் என்ற தீர்வு வந்த பின் அந்த சுய பரிசோதனையை எங்கிருந்து, எப்படி, எதைக் கொண்டு ஆரம்பிப்பது. சுய பரிசோதனை என்றால் உள்ளதை உள்ளபடி அறிதல் அதன் பின் அதை ஏற்றுக் கொள்ளல் பின் அதை அதை முழுமையாய் கைக்கொள்ளல்

சந்தோஷம் என்பது 32

ஒரு விதத்தில் பார்த்தால் கல்வி நிறுவனங்களும், முறைபடுத்தப்பட்ட மதங்களும், பிரச்சாரங்களும், அரசியல் அமைப்புகளும் எல்லாம் தோல்வியை தழுவிவிட்டது என்பதற்க்கு உதாரணம் இப்போதைய மக்கள் நிலையே போதுமானது.  அதனால், மனிதனுக்கு தற்போது அவனை காப்பாற்ற எதுவுமில்லை என்பதே தெளிவாக இருக்கிறது. அவனை காப்பாற்ற அவனால் மட்டுமே முடியும் என்பதே தீர்வாக தெரிகிறது. 

சந்தோஷம் என்பது 31 

மனிதன் தன் இயல்பை, சுதந்திரத்தை, சுகத்தை, மறந்து அல்லது தொலைத்து ஆண்டுகள் பலவாகிவிட்டது.  தனக்குள் இருக்கும் பல உணர்வு நிலைகளில் அவன் பல்வேறு துண்டுகளாக சிதறிபோய்விட்டான் இந்த துண்டுகள் இணைந்து மனிதன் முழுமையடைய வேண்டுமென்றால் எதனால் முடியும், எப்படி முடியும் .

சந்தோஷம் என்பது 30

அரசியளார்கள், மதகுருமார்கள், தனிதிறமை பொருந்தியவர்கள், ஆராய்ச்சியாளர்கள், தத்துவவாதிகள், விஞ்ஞானிகள் என்று இருப்பவர்களாலும் இருந்தவர்களாலும் இது நாள் வரையில் உலகில் அமைதியையோ, மகிழ்ச்சியையோ, திருப்தியையோ மனிதனின் இயல்பான சுதந்திர நிலையினையோ கொண்டு வர முடியவில்லை என்பதே உண்மை.

சந்தோஷம் என்பது 29

ஒரு விதத்தில் பார்த்தால் மனித இனம் ஒவ்வொரு விதத்தில் தேசிய, கலாசார, மத விஷயங்களில் பிளவு பட்டு இருக்கிறது.  பிளவுபட்டதை இணைந்து விடாமல் இருக்க தேசியமும், மதமும் தங்களால் முடிந்த அளவு போராடுகின்றது. இந்த குழப்பத்தை காணும் போது காணும் நபர் என்ன செய்வது, என்ன செய்வது என்று யாரை போய் கேட்பது இப்படிப்பட்ட பூனைகளுக்கு மணி கட்டுவது யார்  என்பதே வினாவாயும் தனக்குள் விவாதமாயும் இருக்கிறது.

சந்தோஷம் என்பது 28

எல்லா கோட்பாடுகளும் நாளுக்கு நாள் மாறிக்கொண்டிருக்கின்றன எந்த விஷயத்திலும் எந்த தத்துவத்திற்க்கும் நீடித்த நிலையில் மதிப்போ, ஆதாரமோ, நம்பிக்கையோ இருப்பதில்லையென்பதை நாம் கண்கூடாக பார்க்கிறோம் இது, மதமாகட்டும், தத்துவமாகட்டும், நிறுவனமாகட்டும், தனிமனித உறவுகள் ஆகட்டும் எல்லாவற்றிலும் இந்த நிலையேதான் உள்ளது.  இந்த சூழ்நிலையில் இந்த குழப்பமும் சந்தேகமும், பதற்றமும் நிறைந்த உலகில் நாம் எப்படி நம்மை தயார்படுத்திக் கொள்வது என்பதே நம் எதிரில் இருக்கும் வினா.

சந்தோஷம் என்பது 27

உலகில் அதாவது மனிதர்கள் வாழுமிடங்கள் அனைத்திலும், குழப்பம், முறைகேடு, வன்முறை, கிளர்ச்சி, கொடூரத்தன்மை, போர், போன்றவையே நிறைந்துள்ளதை காணும் போது மனிதனுக்கு ஆறறிவு உண்டா அவன் சிந்திக்கும் ஆற்றல் பெற்றவன் தானா?  அவன் சரி, தவறு, என்று அறியும் ஆற்றல் உடையவன் தானா எனும் ஐயப்பாடு எழுகிறது.  இதில் தனி மனித வாழ்க்கையும் கூட குழப்பமும், எதிர்மறை சிந்தனைகளும் எதிர்மறை செயல்களும், நிறைந்ததாகவே உள்ளது.

சந்தோஷம் என்பது 26

நமது வாழ்க்கை முறையில், வாழுதல் எனும் நிகழ்வில் பிரச்சனைக்குறியதாக வன்முறை உள்ளடங்கியுள்ளது.  அது ஒவ்வொரு மனிதனின் சிந்தனையிலும், செயலிலும் வெகு ஆழமாக ஊடுருவி இருக்கிறது என்பதே உண்மை அதனால் தான் தொழில் நுட்பங்களில் மனிதன் அசாதாரண பிரம்மிப்பூட்டும் வெற்றியடைந்த நிலையிலும் மனிதன் இன்னும் போர், பேராசை, பொறாமை, தாங்கற்கரிய சோகம் இவற்றால் கனமாக அழுத்தப்பட்டு இருக்கிறான்.

சந்தோஷம் என்பது  25

சிருஷ்டியின் ரகசியத்தை எதைக்கொண்டும் நிரூபிக்க முடியாது.  ஒன்று அதை எப்படியாவது கஷ்டப்பட்டு அறிந்து கொள்ளலாம் அல்லது அறியாமல் விட்டுவிடலாம் இவ்வளவுதான் முடியும் அதை, வாத, விவாதங்கள் மூலம் நிரூபிக்க முடியாது.  அப்படி நிரூபிக்க முடியாதது தான் சிருஷ்டியின் அழகு, அதிசயம் இதை தான் நம் முன்னோர்கள் இறைவன் என்றும் கடவுள் என்றும் சொன்னார்கள்.

சந்தோஷம் என்பது  24

ஒரு சிறு குழந்தையை போல உடைகள் ஏதுமின்றி ,பொய் முகங்கள் ஏதுமின்றி அதாவது (பொய் முகங்கள் என்பது அறிவாளி, முட்டாள்,பணக்காரன், ஏழை, பண்டிதன், பாமரன், வேதாந்தி, அஞ்ஞானி, ஞானி, அப்பா, மகன், சகோதரன், கணவன், மனைவி, இது போல இன்னும் எத்தனையோ இருக்கின்ற அதிகார சின்னங்களும், உறவு சின்னங்கள் இன்றி.) அப்பட்டமாக நிர்வாணமாகி உண்மையில் நீ எப்படி இருக்கிறாயோ அப்படியே கடவுள் உன்னை பார்க்கும்படி நீ செய்தால் சந்தோஷம்  சாத்தியமே  எப்போதும் சந்தோஷமே இது சாத்தியமா?

சந்தோஷம் என்பது  23

இங்கு எல்லாவற்றையும் என்று நான் சொல்லுவது உன்னுடைய வாழ்க்கையை அதன் அழகை அதன் உன்னதத்தை சூரிய உதயம், அஸ்தமனம், நட்சத்திரங்கள் நிறைந்த இரவு வானம், தாமரையின் அழகு ரோஜாவின் வாசனை, வளர்ந்து தேயும் நிலவு, ஆர்பரித்து ஓடும் ஆறு ஓ என்று ஒசையுடன் விழும் அருவி உயர்ந்த சிகரங்களை கொண்ட மலை அதில் படர்ந்திருக்கும் பனி  இவைகளை ரசிக்க தெரிந்தால் உன் மனம் லேசாகிவிடும்.  பூரணம் அதில் நிரம்பி வழியும் அப்போது நீ உண்மையிலேயே, தாயை, தந்தையை,…

சந்தோஷம் என்பது  22

அன்பை அறிந்து கொண்டு அதில் திளைப்பவனுக்கு பணத்தின் அருமை, பெருமை, அதிகாரத்தின் ஆற்றல் போன்றவை ஏனோ தெரிவதில்லை.  மக்கள் ( உலகோர் ) பார்வையில் கையாலாகதவனாக எதிர்கால சிந்தனையற்றவனாக பிழைக்கத் தெரியாத அறிவிலியாகவே தென்படுவான். உன்னை சுற்றி இருக்கின்ற நடக்கின்ற விஷயங்களை ரசித்து பழகினால் ரசிப்பது எப்படி என்ற வித்தையை அதன் சூட்சுமத்தை அறிந்து கொண்டால் நீ பணத்தின் மீது உன்னுடைய எல்லாவற்றையும் இழக்கும் அளவுக்கு மோகம் கொள்ளமாட்டாய்

சந்தோஷம் என்பது  21

அப்படி தியானத்தை பழகி கொண்டால் பணம், அதிகாரம் பிறருடன் ஒப்பிடுதல் போன்றவை உன்னிடம் தோன்றாது.  அப்போது நீ சுதந்திரமானவனாய், இன்பத்தில் மூழ்கியவனாக இருப்பாய் பணத்தை கொண்டு கட்டில் மெத்தை வாங்கலாம் நிம்மதியாக நிர்சிந்தையற்ற தூக்கத்தை வாங்கமுடியாது. பணத்தை கொண்டு அன்பை விலை கொடுத்து வாங்க முடியாது ஆனால் சிற்றின்பத்தை விலை கொடுத்து வாங்கலாம்.

சந்தோஷம் என்பது 20

நிகழ்காலத்தில் வாழும் மனிதனுக்கு இன்னும் சொல்லப் போனால் உள்ளதை உள்ளபடி ஏற்று அந்தந்த கணங்களில் அப்படி அப்படியே வாழ்பவன் தனக்குள் உள்ள வெற்றிடத்தை அன்பு, சந்தோஷம் போன்றவற்றால் நிரப்பி கொள்கிறான். அது அவனிடம் முன்னமேயே உள்ளது அதை அவன் கண்டுகொள்கிறான், அதனால் அவனுக்கு மீண்டும் வெற்றிடம் உருவாதில்லை அவனள் இருக்கும் சந்தோஷம் இன்பம் போன்றவை வெளியில் இருந்த வந்தவையல்ல அவனுள்ளேயே எப்போதும் இருப்பவை அவன் அதை உருவாக்கவில்லை இருப்பதை உணரமட்டுமே செய்தான் இதற்கு தியானம் ஓர் அளவு…

சந்தோஷம் என்பது 19

பணம் இருந்தால் வீடு வாங்கலாம் பயணிக்க கார் வாங்கலாம் சமூகத்தில் அந்தஸ்தை அடையலாம்.  விமானத்தில் பறக்கலாம் உயர்தர உணவகங்களில் உணவு அருந்தலாம். இவை எல்லாம் உனக்கு என்ன விதமான மாற்றங்களை தரும் நீ இன்பமாயும், சந்தோஷமாயும் இருப்பதாய் தோன்றும்   ஆனால் அது எல்லாம் எத்தனை நேரம் எத்தனை நாள் அதன் பிறகு உனக்குள்  நீ ஒரு வெறுமையை உணருகிறாய் இவை எல்லாம் நடந்து கொண்டிருக்கும் போதும் வெறுமையை உணருகிறாயே   ஏன் அப்படி உணருகிறாய் காரணம்…

ஆதி. 9 லோகாயதம் —  சார்வாகர்கள் —  நாத்திகம்

உண்மையில் அப்படி யாரும் இல்லை.   அதனதனின் குண இயல்புக்கு ஏற்ப இணைந்து விலகுகின்றன  அத்தனை தான் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு மூன்றும் மூன்று விதமான வர்ணத்தில் இருந்தாலும் ஒன்று இணையும் போது அதற்கு சம்பந்தமே இல்லாத நிறம் வருகிறது அல்லவா இதற்கு காரணம் கடவுள் என்று கூறுவது அறிவுடைமை  ஆகுமா இது போலவே பூதங்களின் இணைவும், விலகுதலுமே இந்த பிரபஞ்ச உற்பத்திற்கு கடவுள் தேவையில்லை காரணம் கடவுள் இல்லை பூதங்களின் கலப்பே பிரபஞ்சம் அப்படிப்பட்ட கலப்பை  நம்…

ஆ தி. 8 லோகாயதம் —  சார்வாகர்கள் —  நாத்திகம் 2

இந்த உலகை பிரத்யட்சமாக காணுவதை கொண்டு கிடைக்கும் அனுபவங்களே நிஜம். பிரத்யட்சமாக காணமுடியாத, அறிய முடியாத அனுபவத்தை ஒத்துக் கொள்ளாத தத்துவமே சார்வாக மதம் எனும் லோகாயதம். உலகை, பிரபஞ்சத்தை, உன்னை, என்னை, கடவுள் படைக்கவில்லை காரணம் கடவுளை காணமுடியாது. நம் புலன்களால் அறியமுடியாத வஸ்து இல்லை என்றே அர்த்தம் பொருள்களுக்கு மூலமான பஞ்ச பூதங்களின் சேர்க்கையுமே பிரிவுமே இந்த உலகம் இதை சேர்க்க, பிரிக்க என்று யாரும் தேவையில்லை

ஆதி.7  லோகாயதம் —  சார்வாகர்கள் —  நாத்திகம் 1

கடவுள் உண்டு என்று நினைத்து சொன்ன காலத்திலிருந்தே கடவுள் இல்லை எனும் சிந்தனையும் அதன் செயல்பாடுகளும் இருந்திருக்கிறது.  எல்லாவற்றிக்கும் இரண்டு பக்கம் உண்டு என்ற விதிக்கு கடவுளும் தப்பவில்லை.   பிரதட்ஷணமான – தர்க ரீதியாய் கடவுளை நிருபிக்க முடியாமல் இருப்பதால் சார்வாகர்கள் எனும் மதமே தோன்றியது என்று கூட சொல்லலாம்.   சார்வார்களின் காலம் வேதகாலமே ஆகும்.  சார்வாகர்களின் ஆரம்ப கர்த்தா பிரகஸ்பதி என அறிகிறோம்.  லோகாயதவாதிகளின் தத்துவம் புலன்களை கொண்டு அறியும் அறிவும் அனுபவமுமே…

சந்தோஷம் என்பது  18

மனிதர்கள் பலத்திற்காகவும் உன்னைவிட நான் உயர்ந்தவன்  என்று காண்பிப்பதற்காகவும் பிறரை அதிகாரம் செய்வதற்காகவும் ஆசைப்படுகின்றனர் அதனாலேயே பணம் மனித சமுதாயத்தில் மிக முக்கிய ஒரு இடத்தில் அமைந்துவிட்டது அதனாலேயே கற்றுக் கொள்வதும், கற்றுக் கொடுப்பதும் பணத்திற்க்கு வேண்டி என்று ஆகிவிட்டது மனிதனால் உருவாக்கப்பட்ட அந்த பணம் எனும் பூதம் முதலில் மனிதனக்கு அடியைாய் இருந்தது ஆனால் இப்போது மனிதன் அதற்கு அடிமையாகி விட்டான் இதில் வியப்பிற்குரிய  விஷயம் என்ன வென்றால் தான் அடிமையானதை மனிதன் உணராமல் தானே…

சந்தோஷம் என்பது 17

இந்த பணம் மனிதனுக்கு எதிர்கால பாதுகாப்பிற்கான உத்திரவாதத்தை தருகிறது. அது அவனுக்கு பலத்தை தருகிறது.  மேலும் பணம் அதிகாரத்தின் அடையாளமாகவும் விளங்குகிறது. அதிகார தாகம் மனிதனை எப்போதும் விடுவதில்லை.  அதனால் மனிதனும் பணம் மேலும்  பணம், மேலும், மேலும் பணம் என்று சேகரிக்கும் எண்ணத்தையும் ஆசையையும் விடுவதில்லை.

சந்தோஷம் என்பது 16

அவன் மனம் எதிர்காலத்தை சிந்திக்கும் போது அதனுடன் இணைந்து பணமும் வந்து விடுகிறது.  மனிதன் இறந்த காலத்திலேயோ அல்லது எதிர்காலத்திலேயோ வாழ்ந்து நிகழ்காலத்தை தொலைத்து விடுகிறான். மனிதனைப் பொருத்தவரை பணம் ஒரு பாதுகாப்பு தன்னுடைய எதிர்காலத்திற்க்கு பணம் மட்டுமே பாதுகாப்பு எனும் எண்ணத்தில் இருக்கிறான். அதனால், மனிதனின் எண்ணம் எதைச் சுற்றி சென்றாலும் பணத்தின் ஊடேயே அவனது எண்ணம் பயனிக்கிறது. 

ஆதி.6        

உபநிடதம் உடல் உயிர் ஆன்மா பிரபஞ்சம் போன்ற பல்வேறு பொருள்களை ஆராய்கிறது அதன் தன்மைகளை இயக்கங்களை முழுவதும் நாம் உணர போதிக்கிறது. பிரம்மத்தைப் பற்றி அது முடிவாய் கூறுவது என்னவென்றால் அனைத்திற்க்கும் மூலமும், ஆதியும் அதுதான் அதை அறிவைக் கொண்டு விளக்க முடியாது உணரத்தான் முடியும் மேலும் அது கூறுவது அறிவால் எதை சிந்திக்க முடியாதோ ஆனால் எது அறிவை சிந்திக்க வைக்கிறதோ அதுவே பிரம்மம்.  இதோடு, உபநிடதத்துவத்தை  நிறுத்திவிட்டு மற்றொரு தத்துவமான லோகதாய தத்துவத்திற்க்குள் போய்…

ஆதி.5        

உபநிடதம் என்பது உண்மையை கண்டறிய  செய்யப்படும் பயணம் காரணம், காரியம், இவைகளுக்கு உண்டான தொடர்பு அல்லது தொடர்பு இல்லாது போன்றவற்றை கண்டறிய ஆவல் கொண்டு செய்யப்படும் பயணம்.  இதில் அண்ட சாராசரம் முதல் அணு வரை அறிய முற்படுவதே இலக்கு ஆனாலும் பொதுவாய் சொல்வதென்றால் ஆத்மானுபவம் அறிவதே, பெறுவதே நோக்கம், இலக்கு என்றும் கூறலாம். அது மட்டுமல்ல இயற்கை, மனிதன், இவைகள் உண்டாவதற்க்கு காரணமான மூல சக்தி, இந்த மூன்றுக்கும் உள்ள தொடர்பை, தொடர்பின் விகிதங்களை, அறிய …

ஆதி.4        

என்னதான் வேதங்கள் அநாதியாய் இருந்தாலும் மனிதனால் தான் வெளியுலகத்திற்க்கு வந்தது.  இதில் மனிதனின் எண்ணங்களும் போக்கும் மாற, மாற மனிதனால் வெளியுலகிற்க்கு அறிமுகப் படுத்தப்பட்ட வேதங்களிலும் மாறுதல்கள் உருவானது ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் நமக்கு அதை புலப்படுத்தும் முதலாவது தோன்றிய ரிக் வேதத்தில் இல்லாத யாகாதி கர்மாக்கள் அதர்வண வேதத்தில் இருப்பதை நாம் பார்க்கலாம். துதியும், பக்தியும் இருந்த காலம் போய் யாகமும், பூஜையும், பூஜை முறையும் வேதத்தைவிட முக்கியத்துவம் பெற்ற காலமும் வந்தது…

ஆதி.3

உபநிடந்தங்கள் பல இருந்தாலும் அவற்றுள் 108 மிக முக்கியமானது இந்த உபநிடந்தங்கள் வேதத்தின் கருப்பொருளை தன் உள்ளே கொண்டவை ஒரு விதத்தில் சொல்வதாய் இருந்தால் உபநிடதங்களில் உள்ள கருபொருளின் விளக்கவுரையே வேதம் என்று சொல்லலாம்.  இது முரண்பாடான கருத்தாக தோன்றும் காரணம் முதலில் தோன்றியது வேதம் என்று இருக்கும் போது பின் வந்த உபநிடதங்களுக்கு விளக்கவுரை வேதம் எப்படி ஆகும் என்று விஷயம் என்னவென்றால் வேதத்தின் சாரம், சூட்சமம் எதுவோ அது மட்டுமே கொண்டது உபநிடதம், உபநிடத்தில்…

சந்தோஷம் என்பது 15

மனிதர்கள்  சிந்தனையில் அதிக அளவு ஆக்கிரமித்துள்ள விஷயம் எது என்று சிந்தித்தோமானால் பணம் என்பது தான் விடையாக வரும் அதுவும் பணம், நிறைய, நிறைய பணம் என்று சிந்திக்காதவர்களின் எண்ணிக்கை மிக குறைவே என்று உறுதியாக சொல்ல முடியும் இதற்கு என்ன காரணம் என்று சிந்தித்தால் மனிதன் நிகழ்காலத்தில் வாழுவதில்லை.

சந்தோஷம் என்பது 14

ஆனால் வாழ்க்கையின் ஒட்டத்தில் ஒரு கட்டத்தில் நின்று திரும்பி பார்க்கும் போது அதாவது இந்த சூழ்நிலை சாதாரண மனிதரில் இருந்து மிக உயர்ந்த வெற்றி பெற்ற மனிதர் வரை அனைவருக்கும் ஒரு கணமாவது தோன்றியிருக்கும் என்னென்ன இழந்துவிட்டோம் என்றும் எதற்கு வேண்டி இத்தனை ஓட்டம் என்றும். இதை பட்டியல் இட வேண்டியது உங்கள் வேலை ஏனென்றால்  எதை, எதை இழந்தீர்கள்  எதை, எதை இழந்ததாக நினைக்கிறீர்கள் என்பது உங்களுக்கு தானே தெரியும்.

சந்தோஷம் என்பது 13

நம்முடைய தவறால் நாம் நமக்கு வேண்டியவரை விட்டு வெகுதூரம் நகர்ந்து விட்டால்  எப்பாடுபட்டாவது அந்த தவறை சரி செய்து நமக்கு வேண்டியவரின் அன்பை, நட்பை இழக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மனிதர்கள் அதிகமாக உழைப்பது, ஒரு இலட்சியத்தை நோக்கி பயணிப்பது, வெற்றிக்கு வேண்டி ஊண், உறக்கமின்றி செயல்படுவது, பணம் சம்பாதிப்பது , பதவியை அடைய முயற்சிப்பது  இது எல்லாம் எதற்கு என்று சிந்தித்தால் ஒரே ஒரு பதில்தான் சந்தோஷம், இன்பம் பெறுவதற்கு தான் வேறு எதுவாக இருக்க முடியும்.

சந்தோஷம் என்பது 12

 தாழ்வு மனப்பான்மைக்கு முதல் அறிகுறி தேவையில்லாததிற்க்கு கூட அனுசரித்து போதல் இரண்டாவது அறிகுறி நம்மை நாமே வெறுப்பது  நம்மைப்பற்றி நாம் கவனிப்தைப் போல் மற்றவர்கள் ஆராய மாட்டார்கள் மற்றவர்களுக்கு இதை தவிர எத்தனையோ முக்கியமான அவசரமான வேலைகள் இருக்கிறது.  நாம் செய்வது நமக்கு  தெளிவாக தெரிந்தால் போதும் அதில் நமக்கும், பிறருக்கும் தீங்கு நிச்சயமாய் இல்லை எனற நம்பிக்கை நமக்கு இருந்தால் போதும்.

சந்தோஷம் என்பது 11

உண்மையில் உறவு சிக்கல் என்பது நமக்கும் பிறருக்கும் உண்டான உறவு சிக்கல் அல்ல நமக்கும் – நமக்கும் உண்டான உறவு சிக்கலை இங்கு குறிப்பிடுகிறேன். நாமே நமக்குள் எத்தனை விஷயங்களில் முரண்பட்டு இருக்கிறோம் என்பதை தெரிந்தால் மட்டுமே அதை சீர் செய்ய முடியும் செய்ய கூடாத விஷயத்தை  செய்ய நமக்குள் வரும் ஆர்வத்தைத்தான் நாமே நமக்குள்  முரண்படுதல் என்கிறேன்.

சந்தோஷம் என்பது 10

 இப்படி விஷயத்தை சிந்திக்கும்  போது அடித்தல் என்கிற விஷயமே வரவில்லை அதனால் நாம் புரிந்து கொள்ளலாம் அடித்தால் குழந்தை அதிக மதிப்பெண் பெறமுடியாது என்று இப்படி தர்க்க ரீதியாய் சிந்திக்கும் போது அடித்தல் எனும் செயல் நடைபெறாது அதற்கு மூலமாய் இருக்கிற கோபம் செயலற்றதாகிவிடும்.  கோபம் செயலற்றுவிட்டாலே அதிக பட்ச உறவு சிக்கல்களில் இருந்து விடுபட்டு விடுவோம்

சந்தோஷம் என்பது 9

உண்மையில் மார்க் வாங்குவது என்பது எது, எது சம்பந்தப்பட்ட விஷயம் என்று யோசித்தால் அதிக மார்க் வாங்க அதிகம் படிக்க வேண்டும், அதிகம் படித்ததை நினைவில் வைத்திருக்கும் ஆற்றல் வேண்டும் நினைவில் வைத்ததை சரியாக நேரத்திற்கு நினைவுக்கு கொண்டு வரும் ஆற்றலும் வேண்டும் அது மட்டுமல்ல புரிந்துகொள்ளும் பக்குவமும் வேண்டும் எதையும் புரிந்து கொள்ளும் போது சுலபமாகிவிடும். அப்படி சுலபமானால் பரிட்சை சுலபமாகும் அதில் மார்க்கும் அதிகம் வரும்.

J கிருஷ்ணமூர்த்தி

வானொலி, தொலைகாட்சி, செய்தி தாள்கள், திரைப்படங்கள், மதங்கள், மற்றும் அதன் தலைவர்கள் அரசியல் அமைப்புகள் அனைத்தும் உங்கள் சிந்தனையையும் உணர்வையும் வடிவமைக்கின்றன நீங்களும் இணங்க விரும்புவதால் அவர்களின் வேலை எளிதாகிவிடுகிறது   J கிருஷ்ணமூர்த்தி   இது நிஜமா என்று அறியவேண்டுமானால் நாம் நம்மை சோதித்து பார்த்தால் தான் தெரியும் அப்படி சோதிக்கும் போது நடு நிலையில் இருந்து சோதிக்க வேண்டும் அப்படி எல்லோராலும் முடியுமா முடிந்தால் J. கிருஷ்ணமூர்த்தி சொன்னது சரியா தவறா என்பது தெரியவரும்

ஆதி.2

தத்துவங்களில் சில உபநிடதம், லோகாதாய தத்துவம், சமண தத்துவம், பெளத்த தத்துவம், சாங்கிய தத்துவம், யோக தத்துவம், நியாய தத்துவம், வைசேஷிக தத்துவம், மீமாம்ச தத்துவம், அத்வைதம், விஷிஷ்டாவைதம், துவைதம் இன்னும் இப்படி பல உண்டு.  இதில் நாம் செய்ய போவது, தத்துவங்களை ஒரளவாவது தெரிந்து கொண்டு நம் வாழ்கைக்கு தற்போதய சூழ்நிலையில் அது தேவையா? தேவையென்றால் எந்த அளவு என்பதை நமக்குள் நாம் சிந்திக்கவே இந்த முயற்சி பிரபஞ்சத்தில் அடங்கியுள்ள கோடானு கோடி விண்மீன்களும், கிரகங்களும்…

ஆதி.1

 மனிதனின் தேடல்கள் பலவற்றில் நான் யார் என்ற தேடலும் அடக்கம் அந்த தேடலின் விளைவாக தோன்றிய கருத்துக்களே தத்துவங்கள் எனப்படுகின்றன.  உலகின் எல்லா பாகங்களிலும் உள்ள மனிதர்களின் தேடு பொருளாகவே இந்த நான் யார் என்பது இருந்திருக்கிறது.  இந்தியாவில் இப்படி தேடியவர்களை மகரிஷிகள், யோகிகள், சித்தர்கள் என்று சொல்லுவார்கள் இவர்கள் நான் யார் என்பதுடன் இந்த உலகம், அதன் இயக்கம் இதையும் தாண்டி இந்த பிரபஞ்சம் அதன் செயல்பாடுகள் அந்த செயல்பாட்டிற்க்குண்டான சக்தி எது, எப்படி, அது…

சந்தோஷம் என்பது 8

அடுத்ததாக இப்படியும் சிந்திக்க வேண்டும் அடித்தால் மார்க் வருமா, வராது, வந்தாலும் வரலாம் இப்படி இரண்டு விடைகள் வரும் காரணம் அடிக்கு பயந்து தனக்குள் இறுகி  எதையும் புரிந்து கொள்ளும் நிலை இழந்து விட்டால் வராது என்பதே விடை அடுத்ததாக அடிவாங்க கூடாது எப்படியாவது முயற்சி எடுத்து ஊக்கமாய் செயலாற்றும் தன்மைக்கு நகர்ந்தால், வந்தாலும் வரலாம் எனும் விடை வரும்

சந்தோஷம் என்பது 7

எதையும் தர்கரீதியாய் சிந்தித்து பழகுங்கள் எப்படி தர்கரீதியாய் சிந்திப்பது என்று கேட்டால் கீழே உள்ள உதாரணம் அதை விளக்கும். தந்தை மகனை அடிக்கிறார் பாடத்தில் குறைவான மதிப்பெண் பெற்ற காரணத்தால் இங்கு தந்தை மகனை அடித்ததில்‍ வெளிப்படையாய் தெரியும் விஷயம் மகன் மதிப்பெண் குறைவாக பெற்றது காரணம் என்று. ஆனால், அது மட்டுமல்ல, காரணம் மகனின் எதிர்காலம் பாழாகி விடுமோ என்ற அச்சம் தான் அப்படி கோபமாக வந்திருக்கிறது.

சந்தோஷம் என்பது 6

கோபம் இதைபற்றி படிப்படியாய் சிந்திப்போம் யாரோ அறிஞன் சொன்னது கோபம் கையாலாகததனத்தின் வெளிப்பாடு என்று.  உண்மைதான் மாற்ற முடியாத சூழ்நிலையில் நாம்  நிற்கும் போது அதுவும் நாம் நம்மைவிட தாழ்ந்தவர் என நினைத்துக் கொண்டிருக்கும் நபர்களால் அந்த சூழ்நிலை உருவானது என்று நாம் நினைக்கும் போது நமக்கு வரும் உணர்வு கோபம்.  இந்த கோபம் நம்மையும் நம்மை சார்ந்தவர்களின் நிலையையும் அசிங்கப்படுத்தி அலங்ககோலப்படுத்தி விடுகிறது.  கோபம் கொண்டவனுக்கு புறக்கண்களும், அக கண்களும் தெரிவதில்லை.  இவை எல்லாம் மனிதனை…

சிந்திக்க   முக்கியமான விஷயம்.

உலகில் எத்தனை கோடி உயிரினங்கள் இருந்தாலும் அத்தனைக்கும் உணவும், வாழ வசதியும் வழங்குவதற்கு இயற்கை தயாராகவே இருக்கிறது.  ஆனால் நாம் இயற்கையுடன் இணைந்து வாழ்ந்தால் மட்டுமே சாத்தியம் இயற்கையின் ஆற்றலை பேணி காத்து இணைந்து வாழ்ந்தால் பூலோகம் சொர்கலோகமாகும், மாறாக இயற்கையை அழித்து நாம் விரும்பும் படி வாழ்ந்தால் இயற்கையும் நம்மை அழிக்கும் அப்போது பூலோகம் நரகமாகும்.

சந்தோஷம் என்பது 5

மனித உணர்வுகளில்,  உறவுகளில் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் காரணிகளில் ஓன்று ஆளுமை அதன் தொடர்ச்சியாய் அடக்குமுறை வருவதை காணலாம்.  அதுமட்டுமல்ல மனித உணர்வுகளில் இன்பத்தை பெற மனிதனுக்கு தடையாய் இருக்கும் உணர்வுகள் எவை, எவையென்று பட்டியல் இட்டால் அதில் கோபம், அச்சம் பொறாமை தன்னம்பிக்கையின்மை, தாழ்வு மனப்பான்மை என வரும் இவை அனைத்துமே மனிதன் இன்பமாய் இருக்க தடைகளாய் இருக்கின்றன.  மனிதன் இவற்றோடு இருப்பவன் இவைகளை இல்லாமல் செய்ய முடியாது ஆனால் இவைகளை செயலற்றதாக்க முடியும் அது…

சந்தோஷம் என்பது 4

மக்களில் அதிக பட்ச சதவிகிதத்தினர் வெந்ததை தின்று விதி வந்தால் மாள்வோம் எனும் மன நிலையிலேயே இருக்கின்றனர்.   ஒரு குறிப்பிட்ட சிறு சதவிகித மக்கள் மட்டுமே வெந்தது என்பது என்ன  என்று சிந்திக்கும் பழக்கம் உடையவராய் இருக்கின்றனர்.  இதில் தின்பது, விதி போன்றவையும் அடங்கும்.  அப்படி சிந்தித்து செயல்படும் மனிதரே வாழ்க்கையின் ஒவ்வொரு நிலைகளிலும் இன்பமாய் இருக்கின்றனர்.

சந்தோஷம் என்பது 3

மனிதனின் மனம் உறவுகளில் இன்பம் கொள்கிறது. அடுத்ததாக கலை, இலக்கியம், புகழ், வெற்றி, ஏதாவது ஒரு துறையில் அங்கீகாரம், போன்றவற்றில் இன்பம் பெறுகிறது. இதுகளில் ஒன்றின் பின் ஒன்றாக சிந்திப்போம். உறவுகள் என்று எடுத்துக்கொண்டால் அந்த உறவுகளை பற்றி ஒரு முழுமையான புரிதல் வேண்டும் அப்படி புரிந்து கொள்ள உறவுகளைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும் மனிதர்கள் பெரும்பான்மையோருக்கு அதில் ஏனோ அக்கறையும் ஆர்வமும் இருப்பதில்லை

சந்தோஷம் என்பது 2

சந்தோஷத்திற்கோ, துக்கத்திற்கோ புற காரணிகளைவிட அடிப்படையானது அக காரணியான மனமே அந்த மனதில் உண்டாகும் உணர்வுகளே இன்ப துன்பங்களை உருவகித்து கொள்கிறது எனும் முடிவிற்கு காரண காரியங்களோடு சிந்தித்து பார்த்தால் நம்மாள் வர முடிகிறது.   அப்படி அந்த முடிவிற்கு வந்த பின் இன்ப துன்பத்தின் மூலம் மனம் என்று ஆன பின் அதில் நாம் கவனம் செலுத்தி அதை கையாள பழகிக் கொண்டால் நம்மாள் இன்பத்தை மட்டுமே அடைய முடியும் அதற்கு உண்டான விஷயங்கள் எது,…

சந்தோஷம் என்பது  1

இன்பம் அல்லது சந்தோஷம் என்பது என்ன எனும் வினா வந்தால் மனித குலத்தின் பதில் ஒரே விதமாயும், ஒரே மாதிரியும் இல்லை என்பதே உண்மை.  ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்று இன்பம், சந்தோஷம் தருகிறது.    ஒவ்வொரு  சந்தர்ப்பத்தில்  ஒவ்வொன்று இன்பமாய் இருக்கிறது படிப்பதில் ஒருவருக்கு இன்பம் என்றால் படித்ததில் உள்ள விஷயத்தை ஆராய்ந்து செயல்படுத்தி பார்ப்பது இன்னொருவருக்கு இன்பம் படிக்காமலேயே இருப்பது இன்னுமொரு சாரருக்கு  இன்பம், சந்தோஷம் தருகிறது.  இதை ‍இப்படி பட்டியல் இட்டால் நீண்டுகொண்டே  போகும்  இதிலிருந்து…

மனம் எனும்  7

இந்த வரத்தால் அவன் கடுமையான, கொடுமையான விளைவுகளை மட்டுமே அனுபவித்துக்கொண்டிருக்கிறான் என்பதை கூட அவன் அறியவில்லை என்ன செய்வது தன்னை தொலைத்துவிட்டான் என்பதை கூட அவனால் அறிய முடியவில்லை என்பது எத்தனை பெரிய கொடுமையான விஷயம். இதிலிருந்து எப்போது, எப்படி மாறுவான், தெரியவில்லை. சுயநலமும், பேராசையும், வஞ்சகமும், அதீத அறிவும், அவனுடைய உடைமைகள் ஆகிவிட பிறகு மாறுவது எங்ஙனம்.

மனம் எனும்  6

 நிதர்சனமான உண்மையை அறிந்து கொள்ள மனிதனால் முடியாததற்கு காரணம் மனிதனால் நேர்மையாய் இருக்க முடியவில்லை, காரணம்,  மனிதனுக்கு நேர்மையாய் இருக்க வேண்டும் என்ற ஆசையும், வைராக்கியமும் இல்லை. இன்னொரு விதத்தில் சொன்னால் நேர்மையாய் இருப்பது மிக கடினமாக இருக்கிறது. அதிலும் உண்மையாய் இருப்பதோ மிகப்பெரும் சுமையாய் இருக்கிறது. காரணம், உண்மையென்பது மனம் சம்பந்தப்பட்டது, அறிவு சம்பந்தப்பட்டதல்ல, உண்மையை மறைப்பது தான் அறிவு சம்பந்தப்பட்டது. அதனாலேயே மனிதன் ஆரவாரமாகவும் அகம்பாவத்தோடும் பொய்மையுடனுமே வாழும் வாழ்க்கையை, சாபமாக அல்ல வரமாக…

மனம் எனும் 5

உங்களின் வாழ்க்கையில் அறிவின் பங்களிப்பும், மனதின் பங்களிப்பும் எத்தனை சதவிகிதம் உள்ளது என்பதை நீங்கள் உங்கள் செயல்களை, எண்ணங்களை உற்றுப் பார்த்தாலே தெரிந்து விடும். அதாவது உற்று பார்த்து பழக, பழக தெரிந்துவிடும். இதை அறிய நீங்கள் கண்டிப்பாக நேரம் ஒதுக்கியே ஆகவேண்டும். அந்த நேரமே வாழ்க்கையில் பொன்னானது, ஏனென்றால் அந்த நேரத்தில் நீங்கள் உங்களை கற்கிறீர்கள் அதாவது உங்களை நீங்கள் அறிந்து கொள்கிறீர்கள் எப்பேற்பட்ட வாய்ப்பு அது, அதை தவறவிடலாமா இது வரை தவற விட்டிருந்தாலும்…

மனம் எனும் 4

இந்த தன்னையறிதல் என்ற விஷயத்தினால் என்ன பயன் என்ற வினா வரலாம், பதில் இதுதான் தன்னையறிதலால் நாம் பிறரையும் அறியலாம், அறிய முடியும் நன்றாக கவனித்து பார்த்தோமானால் சரி, தவறு என்பது அறிவு சம்பந்தப்பட்டதாகவும் உயர்வு, தாழ்வு, பிடித்தது, பிடிக்காதது போன்றவை மனம் சம்பந்தப்பட்டதாகவும் இருக்கும். அதாவது, பிடித்தது, பிடிக்காதது என்பது மனம் சம்பந்தப்பட்டதாகவும்  முறை, முறையற்றது என்பது அறிவு சம்பந்தப்பட்டதாகவும் இருக்கும்

மனம் எனும் 3

 தவறு நடக்காததின் காரணம், அறிவானது மனதை ஆட்சி செய்ததால் வேறு சிலருக்கு அறிவு ஆட்சி செய்யப்படாத மனமிருக்கும் அங்கே தவறு என்பது சர்வ சாதாரணமாக நிகழும், நிகழ்த்தப்படும் அதில் பயமோ, குற்ற உணர்வோ, வருத்தமோ இருக்காது.  அவரவர் வாழ்க்கையில் மேலே சொன்ன விஷயங்களை எத்தனை முறை கடந்துள்ளீர்கள், அதில் உங்களின் செயல்பாடுகள் எந்தெந்த நிலையில் இருந்தது என்பதை கவனித்தலே தன்னை அறிதலுக்குண்டான முதல்படி.

மனம் எனும்  2

மனம் பற்றி படறும் விஷயத்தை, பலதுடன் இணைத்து சீர் தூக்கி பார்த்து அதனால் ஏற்படும் விளைவுகளை  சொல்லுவது அறிவு.  ஆனால், பல சமயங்களில் அறிவு சொல்லுவதை மனம் கேட்பதில்லை எதார்த்தமான உண்மைநிலை இதுதான்.         யாருக்கும் தவறு செய்ய பயமே கிடையாது.   ஆனால், தவறு வெளியே தெரிந்து விடுமோ என்கிற பயம் மட்டுமே உண்டு.  இங்கு நாம் இதை கவனித்தால் பயம் என்பது மனம் சம்பந்தப்பட்டது.   தவறு என்பது அறிவு சம்பந்தப்பட்டது.

மனம் எனும்  1

        மனம் எனும் வார்த்தை ஒன்றுதான் ஆனால் மனம் எப்போதும் இரண்டானது ஏமாந்தால் அது மூன்று, நான்கு, ஐந்தாகவும் இருப்பது சலனப்படுவதும், சஞ்சரிப்பதுவுமே அதன் குணம் மனம் ஒரு விஷயத்தை பற்றும் போது அது எதைப்பற்றியும் சிந்திக்காது அதாவது நல்லது, கெட்டது, சரி, தவறு, தர்மம், அதர்மம், பாவம், புண்ணியம், என்கிற எதையும் கவனிக்காது, கண்டு கொள்ளாது.  ஆனால், அறிவு இதையும் இதற்கு மேலே உள்ளதையும் சொல்லும்.  மனம் அறிவாக மாறும் போது அல்லது மனம் அறிவால்…

எல்லைகளை நிர்ணயித்து  3

சுருக்கமாகச் சொன்னால் — உலக வாழ்க்கையில் எல்லாம் சுலபமாய் கிடைக்கும் வரை , நினைத்ததெல்லாம்  சிறு முயற்சியில் கிடைக்கும் வரை,  எந்த தடங்கலும் இல்லாமல் நினைத்ததெல்லாம் நடக்கும் வரை  தன்னை கவனித்தல் எனும் செயல் நிகழாது , எல்லாவற்றிக்கும் போராட்டம்  சின்ன விஷயங்களுக்கு கூட பெரும் போராட்டம் எனும் நிலையில் இருக்கும் மனிதனுக்கு நமக்கு மட்டும் ஏன் இப்படி என்ற கேள்வி வரும் அந்த  கேள்வியில் இருந்து  தன்னை கவனித்தல் தொடங்கும். அது தன்னை அறிதலுக்கு அழைத்து…

எல்லைகளை நிர்ணயித்து 2

எல்லைகோடுகள் பல விஷயங்களில் அமையும்.  படிப்பு, தொழில், பணம், பதவி, என்று எத்தனையோ விஷயங்களில் அது தலை தூக்கும் அதன் பின் ஓடுபவரால் நிச்சயமாய் தனக்குள் இருப்பதை தனக்குள் பிரயாணிப்பதை தன்னை அறிதலை போன்ற விஷயங்களை ஏற்கவே முடியாது ஆனால் எத்தனை ஓடியும் எப்படி ஓடியும் எல்லைக்கோட்டின் அருகில்கூட வரமுடிய வில்லையே என்பவனுக்கு தான் ஏன் என்ற கேள்வி வரும் அது அவனை தன்னையறிதலுக்கும் தன்னையறிந்தவர்களின் கூட்டத்திற்கும் அவனை அழைத்துச் செல்லும்.  அது அவனுக்கு தனக்குள் பிரயாணிப்பதையும்,…

எல்லைகளை நிர்ணயித்து 1

ஓடும் போது அதுவும் எல்லைகளை நிர்ணயித்து ஒடும்போது அந்த ஓட்டத்தில் எல்லையை அடையும் போது மனம் அடையும் நிலை, சந்தோஷம், திருப்தி என்பதைவிட வெற்றி என்ற இறுமாப்புதான் இருக்கும் அது நாம் அடைந்த எல்லையை மீண்டும் விஸ்தாரப்படுத்தி மீண்டும் நம்மை ஓட வைக்கும் அந்த ஓட்டத்திலும் எல்லைகளிலுமே மூழ்கியிருக்கும் மனிதனால், மனதினால் தன்னைப் உற்று பார்க்கவோ, தனக்குள் செல்லவோ தோணாது அப்படி செய்து பார் என்று சொல்லுபவர்களையும் அலட்சியப்படுத்தும் ஏளனமாய் கிண்டல் செய்யும் எல்லை கோடுகளை வகுத்து…

தத்துவம் தெரிந்த வாழ்க்கை

தத்துவம் தெரிந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுதல் என்பது எல்லோருக்கும் நியதி இல்லை. சட்டென்று சிலருக்கு வாழ்க்கையே தத்துவம் ஆகிவிடுகிறது. இந்த இடத்தில் தத்துவம் என்றால் என்ன என்ற வினா வருகிறது அந்த வினாவிற்கு பதிலாக பெரியவர்களின் போதனைகள் என்ற பதில் வரும் பெரியவர்கள் என்றால் யார் என்ற வினாவும் வரும் அதற்க்கு பதிலாக வயது அனுபவம் போன்றவை விடையாக வரும் வயது சரி அனுபவம் என்றால் என்ன என்ற வினாவும் வரும் கூடவே ஒருவருக்கு எல்லா அனுபவங்களும்…

எங்கு வன்முறை வரும் 3

தர்மமும், அறமும் முன்னோர்களின் நெறியும் அறியும் கல்வி இல்லாததால் அந்த கல்வி ஏன் இல்லாமல் போயிற்று. சுயநலமும் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற வார்த்தைகளில் நம்பிக்கை இல்லாததால் இனி இதைத் தவிர வேறு என்ன செய்வது, சொல்வது, சிந்திப்பது, அதீத ஆளுமைக்கு ஆசைப்படுதலே வன்முறை உண்டாவதற்கு ஒரு காரணம். அன்பு பழக நேரமாகும், வன்முறை அதிகாரம் நொடியில் பிரயோகம் செய்யப்பட்டுவிடும் இந்த அன்பு பழகும் நேரம் பொறுமையாய் இருத்தல் நலம் மற்றும் அவசியம் அந்த பழக்கம்…

எங்கு வன்முறை வரும் 2

வன்முறைக்கு காரணம் என்ன பொறுமையும் சகிப்புத் தன்மையும் இல்லாதது. பொறுமையும், சகிப்புத்தன்மையும் ஏன் இல்லாமல் போயிற்று. ஆணவமும்,அகங்காரமும் மட்டும் இருப்பதினால் ஆணவமும், அகங்காரமும் மட்டும் ஏன் இருக்கிறது. அன்பும் எதையும் உணரக்கூடிய பண்பும் இல்லாததால் அன்பும் எதையும் உணரக்கூடிய பண்பும் ஏன் இல்லாமல் போயிற்று

எங்கு வன்முறை வரும் 1

எங்கு எதிர்ப்பு வராதோ, எவரால் பதிலுக்கு அடிக்க முடியாதோ, எவர் பதிலுக்கு அடிக்கமாட்டரோ, அவர்களிடமே வன்முறையை பயன்படுத்த எல்லோரும் ஆசைப்படுவார்கள். ஒரு கன்னத்தில் அறைந்த பின் மறு கன்னத்தை காட்டுபவரிடமே இப்போதைய தலைமுறை மட்டுமல்ல எந்த கால தலைமுறையும் வன்முறையை பயன்படுத்தியிருக்கிறது.

பெண் அனுபவ பொருள் 4

ஆண் அப்படி நகர இயற்கை வாய்ப்பை தரவில்லை. அந்த நிலையை ஆணே உருவாக்கி கொள்ளும் படிதான் இயற்கை வைத்துள்ளது. கொஞ்சம் விளக்கமாக சொன்னால் குழந்தையாய், குமரியாய், தாயாய் பெண் மாறும் போது உடலிலும் மனதிலும் ஒரே சேர அனுபவம் பெறுகிறாள். ஆணுக்கு அப்படியல்ல குழந்தையாய் வாலிபனாய் ஆன ஆணுக்கு தந்தையாய் மாறும் போது உடலில் மாற்றங்கள் குறைவாகவும் மனதில் அதிக மாற்றங்களையும் அவன் அடைகிறான். இப்படியெல்லாம், யோசிக்கும் போது அனுபவ பொருள் என்பது உலகத்தில் எத்தனையோ இருந்தாலும்…

பெண் அனுபவ பொருள் 3

ஆணுக்கு, பெண் எல்லா காலங்களிலும் அனுபவத்தை தந்து கொண்டிருப்பவள் அதனால் தான் அவள் எப்போதும் புதிரானவள் படித்து மாளாத அனுபவபட்டு தீராத விஷயமாகவே சிருஷ்டிபெண்ணை வடிவமைத்துள்ளது இந்த காரணத்தினாலேயே சாக்த மதம் தோன்றியிருக்கும் என்று கூட நாம் நம்பலாம் அதுபோலவே பெண்ணுக்கு ஆண் அனுபவ பொருளே இதில் சந்தேகம் இல்லை பெண்ணால் ஆணை சீக்கிரம் படித்து விட முடிகிறது. அவன் அனுபவத்தை தன்மையை உணர்ந்து விடுகிறாள் அதனால் அவள் அடுத்த கட்டத்திற்க்கு நகர்ந்து விடுகிறாள்

பெண் அனுபவ பொருள் 2

 ஒவ்வொரு புலனும் மற்ற புலனின் பணியில் தலையிடுவது இல்லை ஆனால் மனம் மட்டும் எல்லா புலன்களிலும் தலையிட்டு பணி செய்கிறது. அதனால், அனுபவத்தின் தொகுப்பு மனதில் அமைகிறது. சரி இப்போது விஷயத்திற்க்கு வருவோம். அனுபவ பொருளான பெண் எதனால் மற்றவைகளை விட முக்கியத்துவம் பெற்றாள் என்றுபார்த்தால் மற்ற பொருள்களிடம் நமக்கு உறவோ, ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்போ இல்லை. பெண்ணிடம் உறவு, மற்றும் நாம் ஆதிக்கம் செலுத்தவும் முடியும் அதனால் தான் மற்ற அனுபவ பொருள்களை விட பெண்…

பெண் அனுபவ பொருள் 1

பெண் அனுபவ பொருள். அப்படித்தான் முன் காலங்களில் கருதியிருந்தார்கள் தற்போது கூட முகமதியர்கள் வழக்கில் பெண் அனுபவப் பொருளே. இதை நாம் சற்று சிந்தித்துப் பார்க்கலாம். அப்படி சிந்தித்து ஏதாவது ஒரு முடிவுக்கு வருவோம். அனுபவம் தருவது பெண் மட்டும் அல்லவே. பஞ்சபூதங்களும் அனுபவத்தை தருகிறது. அது போலவே பஞ்சபுலன்களும் அனுபவத்தை உணர்த்துகின்றதே நாம் புலன்களின் வழியே பெரும் அனுபவம் அனைத்தும் பொறிகள் வாயிலாகவே அமைகிறது. காண்பது எனும் அனுபவம் ஏற்பட கண் என்ற பொறியும் காண்பதற்க்குண்டான…

புரிதலை எது தருகிறதோ 2

தன்னைப் போல் பிறரையும், பிறவற்றையும் உணரும் அறிவு உண்டாகும். இந்தக் கல்வி கிடைக்க நாம் நமக்குள் போரட வேண்டும். கடைகளிலும், கல்லூரிகளிலும் இது கிடைக்காது. கூவிக்கூவி விற்பனைக்கு வருவது அல்ல இந்த கல்வி. இந்த கல்வியை படித்தவனையே ஞானஸ்தன் என்கிறோம். பற்றற்று இவனால் எல்லா காரியங்களையும் செய்ய முடியும். தன் மரணத்தை தானே சந்தோஷமாய் அழைக்கும் தகுதியை இந்த கல்வி தரும்.

புரிதலை எது தருகிறதோ 1

பல மரணங்களைக் கண்டு, பல மனிதர்களுடன் பழகி, அவர்களின் நிலைகளை அறிந்து வாழ்க்கை அர்த்தமில்லாதது என்பதை புரிந்து கொண்டு ஊரோடு ஒட்டி வாழ்ந்துதான் ஆகவேண்டும் என்ற புரிதலை எது தருகிறதோ, அதுவே கல்வி. அந்த கல்வி ஆணவப்படாது, ஆசைப் படாது, ஆசையும், ஆணவமும் இல்லாத இடத்தில் திருப்தி இயல்பாகவே இருக்கும். திருப்தி எப்போதும் மன நிம்மதியைத் தரும். மனநிம்மதியும், மனநிறைவும் நாணயத்தின் இருபக்கங்கள் போல இப்படி வாழும் வாழ்க்கை நிறைவையும், இயற்கையின் ரகசியங்களை அறிந்து கொள்ளவும் மனம்…

உரையாடலின் ஒரு பகுதி 21

 நாம் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் நமது எண்ணத்தை நமது விருப்பம் போல் உருவாக்க முடியும் அப்படி நாம் உருவாக்க வேண்டிய எண்ணம் முதலாவதாகவும், முன் உரிமை தரபட வேண்டியதாகவும் உள்ள எண்ணம், நான் திருப்தியடைந்த சந்தோஷமுடையவன். என்னால், என் சமுதாயமும், என் மனித குலம் முழுவதும் சந்தோஷத்தோடும் திருப்தியோடும் இருக்கும் என்னுடைய செயல்கள் எல்லோரையும் சந்தோஷப்படுத்தும் என்ற எண்ணத்தை முன் நிறுத்தி செயலாற்ற பழகுங்கள் ஆனந்தம் உங்களுடையதே.

உரையாடலின் ஒரு பகுதி 20

எண்ணமே வாழ்வு என்பது முன்னோர்கள் வாக்கு தினம், தினம் எத்தனையோ எண்ணங்கள் நம்மிடம் இருந்து கிளம்பி நம்மிடமே நிறைவடைகின்றன. இதனை, ஊன்றி கவனித்தால் எந்த விதமான எண்ணங்கள் நம்மிடம் தோன்றி நம்மிடம் நிறைவடைய வேண்டும் என்பதை நம்மால் தீர்மாணிக்க முடியும் என்பது தெரியும்

குறைகள் கூறி

குறைகள் கூறி யாரும் வெற்றியாளர்கள் ஆனதில்லை. நீங்கள் ஒன்றைப்பற்றி ஒருவரை பற்றி குறை கூறும் போது உங்கள் மனதில் விஷ கறை படிகிறது. மற்றவர்களுக்கு உங்கள் மேல் தவறான எண்ணங்கள் ஏற்படுகிறது. குறைகள் விஷத்திற்க்கு ஒப்பானவை. அது மனிதனை பல வழிகளில் நிலைகளில் துண்டாக்கி துன்பத்திற்க்கு ஆளாக்குகிறது. மகிழ்ச்சியை, ஆனந்தத்தை விரும்பும் எவரும் குறை கூறுவதை நிறுத்துங்கள் குறை கூறும் மனதிற்குள் ஆக்கபூர்வமான நல்ல எண்ணங்களை விதையுங்கள் அது உங்களுக்குள் ஆனந்த மலர்களை பூச்சொறியட்டும்.

துக்கத்திற்க்கு காரணம்

துக்கத்திற்க்கு காரணம் ஆசை. அந்த ஆசையை இல்லாது ஆக்கிவிட்டால் துக்கத்திலிருந்து தப்பிவிடலாம் என்பதே பெளத்த தத்துவத்தின் மைய கருத்து.

எல்லோருக்கும் எல்லா காலங்களிலும்

எல்லோருக்கும் எல்லா காலங்களிலும் சில ஆதங்கங்கள் இருக்கும் அந்த ஆதங்கங்கள் நிறைவேறுமா என்பது வாழ்க்கையின் ஒட்டத்தில் நம் தகுதியை பெறுக்கிக் கொள்வதில் அமைகிறது. ஆனால் அந்த ஆதங்கங்களில் சிலது நம்மை பிடிவாத காரனாக, தன் நினைப்பை தவிர வேறு எதைப்பற்றியும் கவலைப்படாத மனோ பாவத்தை வளர்த்து விடுகிறது. இந்த நிலை தொடரும் போது நம் தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமே வருவதில்லை. விளைவு ஆதங்கம் ஆதங்கமாகவே சற்று மாறுதலடைந்து கோபமாகவே இருக்கிறது.

தர்மம் என்பதற்கு 3

இந்த சிந்தனை வர காரணம் மனிதன் வளர்ச்சி என்ற பெயரில் ஏற்பட்ட சமுதாய மாற்றமே காரணம் வேறு என்ன சொல்வது இருந்ததை தொலைத்து இல்லாததற்க்கு ஏங்கி இல்லாததை இருப்பதாய் நினைத்து தலை தெறிக்க தறிகெட்டு ஓடும் இந்த மனித சமுதாயத்தில் தர்மம் என்று சொல்லுவதே கூட பாபம் என்று தான் தோன்றுகிறது.

தர்மம் என்பதற்கு 2

இப்போது நம் முன் உள்ள கேள்வி, அல்லது சிந்தனை அப்படி பட்ட தர்மம் என்று ஒன்று உள்ளதா என்பதே காரணம் வெற்றியும், தனக்கு வேண்டி எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மனோபாவம் ஊறி தடித்து விட்ட மனதினால் தற்கால மனிதர்கள் இருக்கும் போது மேலே கூறிய அம்சங்களை கொண்ட தர்மத்தை எங்கே காண்பது எப்படி தேடுவது ஏதாவது பண்டைய நூல்களில் கிடைத்தால் உண்டு

தர்மம் என்பதற்கு 1 மாதவராவ், சதாசிவ கோல்வல்கர்

தர்மம் என்பதற்கு மாதவராவ், சதாசிவ கோல்வல்கரின் விளக்கம் எது உண்மை வடிவில் உள்ளதோ, எது அனைவரையும் ஒரு நூலில் இணைக்குமோ எது பிரிவினையையும், விளைவையும் உண்டாக்காதோ எது வழிபாட்டு பிரிவுகளிடையே மோதல்களின் மூலம் மக்களை கட்டி போடாதோ, எது பல்வேறு கொள்கைகளில் இடையே ஒத்திசைவை உண்டாக்குமோ, அதுவே தர்மம்

உரையாடலின் ஒரு பகுதி 19

எப்போது நாம் பிறருடன் ஒப்பிடுதல் , என்கிற நிலைக்கு நகர்கின்றேமோ அப்போது நாம் வாழ்தலில் பகுதியாக உள்ள அனுபவித்தல் என்கிற நிலையில் இருந்து வெகு தூரம் நகர்ந்து விடுவோம் என்று முடிவு செய்து கொள்ளலாம்.

உரையாடலின் ஒரு பகுதி 18

ஆனாலும், அதில் அவனுக்கு நிம்மதி கிடைக்காமல் அடுத்த ஒப்பீடுகளுக்கு நகர்ந்து தன் வாழ்க்கையை முழுமையாய் அனுபவிக்காமல் வாழ்ந்து மறைந்தும் விடுகிறான். இந்த நுண்ணிய வலைபின்னலில் இருந்து தப்பித்து தனக்கு என்ன வேண்டும் என்பதை யோசித்து எந்த அளவு வேண்டும் என்பதையும் தீர்மானித்து தான் வேண்டியதை அடைவதற்க்கு உண்டான தகுதியையும் வளர்த்து தான் வேண்டியதை அடைந்து விட்டால் ஏற்படும் திருப்தி என்றென்றும் நீடித்து நிலைத்து நிற்கும் காரணம் இங்கு யாரோடும் ஒப்பிடுதல் இல்லை.

உரையாடலின் ஒரு பகுதி 17

நம்முடைய வாழ்க்கை முறையில் ஒப்பிடுதல், ஒப்பிட்டு பார்த்தல் என்ற விஷயமே நமக்கு அதிக அளவு அழுத்தத்தை தருகிறது. இந்த ஒப்பிடுதலின் காரணத்தால் போட்டி, பொறமை, வெறி போன்றவற்றால் மனிதன் தாக்கப்பட்டு சீர் குலைந்து விடுகிறான். ஆனாலும் அவன் போராடுகிறான் வெற்றி அடைகிறான்

பிராணனைப் பற்றி.

பிராணன் என்பது மனித குலத்துக்கு மட்டுமல்ல ஈரேழு பதினான்கு லோக ஜீவ ராசிகளுக்கும் அதுவே ஆதாரம் அப்படி ஆதாரமாய் இருக்கும் பிராணனை நாம் போற்றி வழிபடுவோம். நமது உடல் இயக்கத்திற்கும், மன இயக்கத்திற்கும் நம்மை நாம் என்று சொல்வதற்கும் வேண்டிய சக்தியை தருவது பிராணணேயாகும். புலன்களுக்கு வேண்டிய அளவு சக்தியை வழங்குவதும் பிராணணே ஆகும். ஒவ்வொரு புலனுக்கும் பிராணன் தேவைப்படும் அளவு மாறுபடும் அப்படி மாறுபடும் அளவை அறிந்து பிராணன் புலன்களுக்கு தனது சக்தியை வழங்கட்டும் என்று…

மறு பிறவியை நிர்ணயிப்பது எது ?

மனிதனுடைய வாழ்க்கை பயணம் முடிந்தது என்பதற்கு அறிகுறி மரணம். மனிதனுடைய வாழ்க்கை பயணம் நடக்க உதவி செய்வது பிராணன் ஆகும். மரணத்திற்க்கு பின் ஜீவன் அதாவது உயிர் பயணிக்க உதவி செய்வதே உதானனின் பணியாகும். மரணமடையும் தருவாயில் மனிதனின் புலன்கள் செயலிலக்கின்றன. அப்படி செயலிலக்கும் போது முதலில் பேச்சு அவனிடம் இருந்து விடைபெறுகிறது. பின் படிப்பபடியாய் தொடர்ந்து ஒவ்வொரு புலனும் அவனைவிட்டு விலகுகிறது. கடைசியாய் மனம் விடைபெறும். அவனிடமிருந்து மனம் விடைபெறும் சமயத்தில் என்ன சிந்தனை அந்த…

கற்பனை வாழ்க்கைக்கு

கற்பனை வாழ்க்கைக்கு நாம் அடிமையாகி விட்டால்.. எதார்த்தமான வாழ்க்கை நமக்கு எரிச்சலைத் தான் தரும்! இதை எத்தனை பேர் அறிந்து உணர்த்திருக்கிறீர்கள் எந்தெந்த சூழ்நிலைகளில் அறிந்து உணர்ந்தவர்கள் வாழ்க்கை பாடம் கற்று கொண்டவர்கள்

மனிதனுக்கு ஏனோ 2

பல வேளைகளில் மனிதனால் எதையும் எல்லாவற்றையும் மாற்றி விடமுடியும் என்ற ஆணவத்தோடு கூடிய சிந்தனையின் நிலைதான் தற்போதைய நாகரிகம் என்றும், வளர்ச்சி என்றும் கொண்டாடப் படுகிறது. ஏதோ படத்தில் சொன்ன வசனம் போல, ஒடிக்கொண்டிருக்கும் போது வெற்றி, தோல்வியை தீர்மானிக்கக்கூடாது. கடைசியில் தான் முடிவு செய்ய வேண்டுமென்று அது போல இந்த வளர்ச்சி, நாகரீகம் என்பதின் முடிவு ஒரு விதத்தில் நினைத்தால் பயம் தருகிறது. இன்னொரு விதத்தில் தன்னை மீறிய சக்தி ஒன்று உண்டு என்பதை மனிதன்…

மனிதனுக்கு ஏனோ 1

மனிதனுக்கு ஏனோ வினைகளில் முழு நம்பிக்கை ஏற்படுவதில்லை அதிலும் வெற்றி அடைந்து கொண்டிருப்பவரைப் பற்றி பேசவே வேண்டாம் அவன் என்னுடைய அறிவு, புத்தி,ஆற்றல் கொண்டே ஜெயித்ததாய் நினைத்துக்கொண்டும், பேசிக்கொண்டும், உபதேசித்துக் கொண்டும் திரிவான். ஆனால், உண்மையில் மனிதனின் வெற்றி தோல்விகள் அவனவன் கர்ம வினைகளினாலேயே விளைகிறது. தோற்றவன் மட்டும் சில சந்தர்ப்பங்களில் விதி, வினை என்று நினைக்கிறான், சிந்திக்கிறான்.

உரையாடலின் ஒரு பகுதி 16

மதிப்பற்று வாழ உலகில் எந்த உயிரும் விரும்புவது இல்லை தன் மதிப்பை உயர்த்திக் கொள்ளலும் பிறரை மதித்தலும் வாழ்க்கையின் அடிப்படையான அடித்தளங்கள் அந்த அடித்தளங்களை அமைக்க உள்ள அனுபவங்களே தத்துவங்கள் என்பார்கள்.

உரையாடலின் ஒரு பகுதி 15

பிரார்தனையில் ஒரு பாகமாக இருக்க வேண்டியது சொல்லிக்கொடு. எனக்கு எது தெரிய வேண்டுமோ அதை முழுமையாய் சொல்லி கொடு அதை புரிந்து கொள்ளும் சக்தியையும் நீயே கொடு என்று உண்மையாய் பிரார்திக்கும் பக்குவம் அதாவது நான் என்ற நிலை இல்லாத நிலையில் பிரார்திக்கதெரிந்தால் பயனும், பலனும் நிச்சயம் உண்டு

உரையாடலின் ஒரு பகுதி 14

நாம் வளர்வதும் நல்லபடியாய் இருப்பதும் ஒரு தனிமனிதன் கையில் இல்லை. காலம் விளையாடும் இடம் இது காலம் சில சமயம் பெரிய குழுக்களை ,தேசத்தை, இனத்தை, உருமாற்றும் இதையெல்லாம் தனி மனிதனால் தடுத்துக் கொண்டிருக்க முடியாது. இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதா என்று கேட்டால் ஆமாம் என்பதுதான் பதில் உதவி செய்ய கூடாதா என்றால் எது உதவி என்றே தெரியாத போது உதவி எப்படி செய்வது உதவி இதுதான் என்று தெரிவதற்கே ஜென்மம் போதாதே, ஏனென்றால் நாம் கற்க…

உரையாடலின் ஒரு பகுதி 13

எந்த அனுபவமும் ஒருவனுடைய கட்டுக்குள் இருக்க வேண்டும் அப்போது தான் அந்த அனுபவம் தரும் இன்பத்தை உணர்ந்து அனுபவிக்க முடியும் அப்படியில்லாமல் அனுபவம் தன்னை மீறி ஆட்சி செய்ய தொடங்கிவிட்டால் நாம் அனுபவத்தின் மூலம் கிடைக்கும் இன்பத்தை அனுபவிக்க முடியாது இந்த விஷயம் மது அருந்தும் பழக்கம் உடையவர்கள் முக்கியமாக ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டிய விஷயம்.

உரையாடலின் ஒரு பகுதி 12

மனித சமுதாயம் வாழ வேண்டிய முறை, உலகத்தை உள்ளபடி ரசி உனக்கென்று உள்ளதை முழுமையாக அனுபவி உன்னுடைய எந்த செயலும் பிறரை காயப்படுத்தாமல் வாழ். உன்னையே கவனி உனக்குண்டானது தவிர மற்றதை ஒதுக்க எப்போதும் எச்சரிக்கையாய் இரு ஆனந்தமாய் இரு அப்படி நீ இருந்தால் நீ ஆண்டவனை கூட நினைக்க வேண்டியது இல்லை காரணம் ஆண்டவன் உன்னை நினைத்துக்கொண்டிருப்பான் இயற்கையிடம் பாடம் கேள் அது சொல்லி தருவதை புரிந்து கொள் சுதந்திரமானவனாய் இரு.

ஆண்களும், பெண்களும் 2

எப்போது பொருளாதார சிந்தனை பெண் இனத்திற்குள் ஊடுருவி வேர் விட்டதோ அன்றே சமுதாயத்தில் தவறுகளின் காலம் தொடங்கி விட்டது எனலாம் மனிதனின் தேவைகள் என்பவற்றில் ஆசைகள் ஆட்சி செய்து ஆசைகள் எல்லாம் தேவைகளே எனும் நிலைக்கு வந்தது அப்போதுதான் பொறுப்பற்றதன்மையும், வேகமும், முரட்டுதனமும், சினமும், ஆதிக்கம் செலுத்தும் மனோ பாவமும் ஆணின் இயற்தன்மை. அச்சம், மடம், நாணம், பொறுப்போடு இருத்தல் அன்பு செலுத்துதல், அரவணைத்தல் அடங்குதல் பெண்ணின் இயற்தன்மை இவற்றில் குறையோ, மாறுபாடோ தோன்றினால் அடிப்படை எங்கோ…

ஆண்களும், பெண்களும் 1

ஆண்களும், பெண்களும் எப்போதும் அவர் அவர்களின் குணாதியங்களுக்கும், இயற்கையான இயல்பு தன்மைக்கும் கட்டுப்பட்டவர்கள் இதை முதலில் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். அது மட்டுமல்ல இவை இரண்டும் எதிர், எதிர் கோணங்கள் ஆண் ஆணாக இருப்பதும், பெண், பெண் ஆக இருப்பதும் இயற்கையின் வடிவமைப்பு அந்த வடிவமைப்பில் மனிதன் மாற்றம் செய்யும் போது அடிப்படை தகர்ந்து விடும் இது ஆணாதிக்க நிலையில் தோன்றிய சிந்தனை அல்ல உண்மை நிலை இதை பகுத்தறிவு கொண்டு மறுதலிக்கும் போது கட்டமைப்பு…

உரையாடலின் ஒரு பகுதி 11

இனப்பற்றையும், மொழிப்பற்றையும் தொலைத்த சமுதாயம் , சமுதாயம் சக்தியுடன் வளரமுடியாது.   இப்போது உள்ள சூழ்நிலை திராவிடர் எனும் இனப்பற்றும் தமிழ் எனும் மொழிப்பற்றும் தேய்ந்து அழியும் நிலைக்கு வந்துவிட்டது என்று தான் தோன்றுகிறது.  அதனாலேயே தற்சமய சூழ்நிலையில் இனப்பற்றும், மொழிப்பற்றுமே வருங்கால சந்ததியினரை அடிமைகளாகாமல் காப்பாற்ற முடியும்.  ஆனால், பொருளாதார சிந்தனை மட்டுமே மேலோங்கிய நிலையில் உள்ள இக்கால சந்ததியினரால் இதை புரிந்து கொள்ள முடியுமா என்பதே கேள்விகுறிதான்.  

உரையாடலின் ஒரு பகுதி 10

மனித வாழ்க்கை சிறப்புறுவதர்கான கருணை எப்போதும் எங்கும் பொழிந்து கொண்டேதான் இருக்கிறது. அந்த கருணையை சரியாய் உள்வாங்கி கொள்வது என்பது அவரவர்களிடமே இருக்கிறது. சரியாய் உள் வாங்கிவிட்டால் வாழ்வின் அர்த்தம் வாழும் விதம் புரிந்துவிடும். எதில் வெற்றி அடைய வேண்டுமென்றாலும் கேள்விகள் கூர்மையாக வந்து கேள்விகளுக்கு விடை காண அபாரமான வேகத்தில் இயங்க வேண்டும் . அப்படி இயங்கினால் வெற்றி அடைதல் சுலபமாகும்.

உரையாடலின் ஒரு பகுதி 9

உண்ணும் உணவாலேதான் உடலுக்கு சக்தி மனம் பற்றும் விஷயத்தாலேதான் பற்றும் விஷயத்திற்க்கு சக்தி இதை புரிந்து கொண்டால் பற்ற வேண்டிய விஷயம் எது என தெரிந்து விடும் அப்படி தெரியவில்லை என்றால் தெரிந்தவர்களை அணுகி கேட்டு தெரிந்து கொண்டால் சக்தி, பக்தி ஆகும். அந்த பக்தி சக்தியாகி நம் வாழ்விற்க்கு வளம் சேர்க்கும்.

யாருக்கு விருப்பம் ?12

உயிரைப்பற்றி யோசிக்க ஆரம்பித்தவர்கள் சொத்து பற்றி யோசிக்க மாட்டார்கள் உடம்பு பற்றி யோசிப்பவர்கள் சொத்தோடு ஒட்டிக்கொள்வார்கள். சொத்தோடு ஒட்டிக்கொள்பவர்கள் உடலை தான் என்று நினைத்துக் கொள்வார்கள்.

யாருக்கு விருப்பம் ?10

நான் என்பதை அறிந்து அந்த நானிலிருந்து விலகி நின்று வேடிக்கை பார்த்தலே வெற்றி மற்றபடி எந்த வெற்றியும் வெற்றி ஆகாது அந்த நான் என்பது என்ன என்ற வினா தனக்குள் வரும் போது நான் என்பது உடலா, இல்லை மனமா என்ற வினா வரும் அது சரியா என ஆராய பொறுமை, நிதானம், அமைதி, சாந்தம், விடாமுயற்சி, இது அத்தனையும் தேவை இவைகளை கைகொள்ளும் போது அன்பு ஊற்று எடுக்கிறது. அந்த அன்பு தனக்குள் பெருக, பெருக…

யாருக்கு விருப்பம் ? 9

தன்னைதான் அறிய வேணும் சாராமல், சாரவேணும், பின்னைதான் அறிவதெல்லாம் பேயறிவு ஆகுமடி என்ன சொல்கிறது இந்த பாடல் தன்னை அறிய வேண்டும் என்கிறது தன்னை அறிவது என்றால் என்ன தனக்குள் இருக்கும் உணர்வுகளை அறிதல் அது தோன்றுமிடம் அறிதல் எதனால் தோன்றியது என்றும் அறிதல் அப்படியானால் உணர்வுகள் எத்தனை விதம் உணர்வுகள் பலவிதம் அதில் சில காம, கோப, லோப, மோக, மத, மாச்சர்யம் காதல் அன்பு பரிவு நேசம் பாசம் தியாகம் போன்றது இதில் நல்லது,…

யாருக்கு விருப்பம் ?8

எண்ணம் எனும் விதை பல தரத்தில் இருக்கிறது. அந்த விதைகளில் சில காம, குரோத, லோப, மோக, மத, மாச்சரியம், அன்பு, காதல், பாசம், நேசம், நட்பு, தியாகம், பரிவு, பண்பு, இத்தனை விதைகளும் வளர்ந்து மனிதனை பல விதங்களில் இம்சை படுத்துகிறது. சந்தோஷபடுத்துகிறது. இறப்பில் இவை அத்தனையும் நி‍றைவு பெற்றதாய் சக மனிதன் நினைக்கிறான். ஆனால் சாஸ்திரம் இவை அனைத்தும் தொடரும் என்கிறது.

யாருக்கு விருப்பம் ?7

பஞ்ச பூத தத்துவத்தில் மனதை ஆகாய தத்துவமாக சொல்லியிருக்கிறார்கள். ஆனால் எனக்கென்னவோ தோன்றுகிறது. மனம் நிலத்தத்துவமோ என்று ஏனென்னறால் நிலம் தானே. எந்த விதையையும்வளர செய்கிறது. அது மாதிரி எண்ணம் எனும் விதை மனதில் விழுந்தவுடன் மிக வேகமாக எண்ணம் வளர்ந்து விடுகிறது. அது பிறகு பல விதங்களில் ஆடுகிறது. அந்த ஆட்டத்தில் மனிதன், மனித குலம் தடுமாறி தள்ளாடி ஆடுகிறது. அதில் ஏற்படும் கலக்கம் குழப்பம் பயம் மனித குலத்தை படுத்தும் பாடு சொல்லிமாளாது.

யாருக்கு விருப்பம் ? 6

இறப்பு உடல் சம்பந்தப்பட்டதுதான் அதில் சந்தேகம் இல்லை ஏனென்றால் இறப்பு என்ற ஒன்று உடலை இயங்க அனுமதிப்பது இல்லை. இயங்காத உடல் அழுகி நாறி ஏதேதோ ஆகி அந்த உடல் இல்லாமல் பேய் விடுகிறது. மனம் என்ற ஒன்று உடலில் ஏதோ ஒரு வஷ்துவாய் இருந்தாலும் அது மனிதனுக்கு தெரியவில்லை. தெரிவதில்லை அதை அடுத்தவருக்கு காட்ட முடிவதும் இல்லை. இதை தான் கண்ணதாசன் தன் பாடலில் அழகை காட்டும் கண்ணாடி மனதை காட்ட கூடாதோ என எழுதியிருப்பார்.…

யாருக்கு விருப்பம் ?5

இதிலிருக்கின்ற சிக்கல் என்னவென்றால் செத்தார் எப்படி திரிவார்கள் என்று தெரிந்தால்தானே அப்படி திரிய அது சரியாய் தெரியாத காரணத்தால் அவர் அவர்களுக்கு தோன்றியபடி திரியும் சில கூட்டங்கள் செத்தார்கள் இப்படிதான் திரிவார்கள் என சக மனிதர்களுக்கு பாடமும் எடுக்கின்றன. இது எப்படி இருக்கிறது என்றால் நரியையும் பார்த்ததில்லை அதன் கொம்பையும் பார்த்ததில்லை. நரி அதிகமாய் இருக்கும் காட்டையும் பார்த்ததில்லை ஆனால் நரி கொம்பு விற்கும் மனிதர்களை போல்தான் உள்ளது.

யாருக்கு விருப்பம் ? 4

இறப்பில் இருந்து பாடம் கற்க துணிந்து அதில் இறங்கி அந்த பாதையை ராஜபாட்டையாய் மாற்றி நடைபோட்டவன் வரலாற்றில் எனக்கு தெரிந்து புத்தன் மட்டுமே. மற்ற எல்லோரும் அந்த பாதையை முட்டு சந்தாகதான் உபயோக படுத்தி யிருக்கிறார்கள். இறப்பை சிந்திக்க வாழும் வாழ்க்கை ஏனோ அனுமதிப்பது இல்லை என்றே தோன்றுகிறது. அதனாலேயே அனுபவத்தில் சிறந்த முன்னோர்கள் செத்தாரை போல் திரி என்று சொல்லியிருக்கிறார்கள்

யாருக்கு விருப்பம் ? 3

அவர்கள் அப்படிதான் நினைத்திருப்பார்கள். ஏனென்றால் எந்த சூழ்நிலைவயிலும் மனிதன் ஏனோ இறப்பை விரும்புவதில்லை. அதற்க்கு ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு காரணம் இயற்கை அல்லது இறைவன் தன் கையில் வைத்திருக்கும் பல விஷயங்களில் இதுவும் ஒன்று ஆனால் இது மிக முக்கியமானது மனிதனின் அறிவுக்கு புலப்படாதது எல்லா காலத்திலும் மனிதன் தோற்றவிஷயம் இது மட்டுமே.

யாருக்கு விருப்பம் ? 2

ஏனென்றால் இந்த வார்த்தைக்கு இந்த சொற்பொருளுக்கு இந்த அர்தத்தை தவிர நிறைய அர்தங்கள் நமது முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். மேலே சொன்ன விஷயம் அவர்களுக்கும் தெரிந்திருக்கும் ஆனால் அவர்கள் சொல்லவில்லை. காரணம் நாம் பயந்துவிடுவோம் என்று நினைத்திருப்பார்கள்.

யாருக்கு விருப்பம் ?1

இறக்க யாருக்கு விருப்பம் ? யாருக்குமே விருப்பம் இல்லை. ஆனால் விரும்பாத ஒன்றை செய்ய வேண்டிய நிர்பந்தத்தில்தானே இருக்கிறோம். விரும்பாத ஒன்றை செய்து தீர வேண்டிய கட்டாயம் எல்லோருக்கும் உண்டு. கால அளவுகள் வேறு அவ்வளவுதான். இறப்பை விரும்ப வேண்டுமென்றால் முதலில் அதை படிக்க வேண்டும். இறப்பை படிப்பது எப்படி யார் சொல்லி தருவார்கள் அப்படியே சொல்லித்தந்தாலும் நமக்கு அது புரியுமா நாம் இருக்கும் சூழ்நிலை நாம் பெற்ற அறிவு சொல்லித்தருவதை ஒத்துக்கொள்ளுமா பெரிய கேள்வி தான்…

எந்த திட்டமும்

எந்த திட்டமும் அது பெரியதோ, சிறியதோ காலத்தின் அனுகூலத்திலோ, அல்லது பிரதி அனுகூலத்திலோதான் இருக்கிறது நாம் திட்டம் தீட்டலாம் ஆனால் முடிவு காலத்தைப் பொறுத்தது. அதாவது, காலமாகி இருக்கின்ற கண்ணுக்கும், புலன்களுக்கும், அறிவுக்கும் புலனாகாத சக்தியைப் பொறுத்தது.

வேதாந்தம் பேச

எல்லோரும் நினைக்கிறார்கள், சொல்கிறார்கள், வேதாந்தம் பேச வயது வேண்டும் என்று உண்மையில் வேதாந்தம் வயதில் இல்லை. வேதாந்தம் இருப்பது சிந்தனையின் நுட்பத்திலும் விவேகத்தின் அடித்தளததிலும் இருப்பது.

தத்துவம் எது

தத்துவம் எது என்று வினா வந்தால் சிறிதும் யோசிக்காமல் விடையை சொல்லிவிடலாம் மனித வாழ்க்கையென்று ஆம் வேறு எது பெரிய தத்துவமாக இருக்கமுடியும். எத்தனை தத்துவங்கள் இருந்தாலும் மனித வாழ்க்கைக்கு வேண்டிதானே தத்துவம். தத்துவம் நிலைபெறுவது தர்க்கத்தினால் மனித வாழ்க்கை எனும் தத்துவத்திற்கு, மனித வாழ்க்கையின் ஒட்டமே தர்க்கம். ஒவ்வொரு மனிதனின் காலமும், முன்னேற்றமும், வீழ்ச்சியும், சாதக, பாதகங்களுமே மிக சிறந்த தர்க்கங்கள்.

சாந்தமும்,அமைதியும்

வருட கணக்கில் போர் செய்து ஒரு சாம்ராஜ்ஜியத்தை வென்றுவிடலாம். அணுவை பிளக்க செய்து மலையை தரைமட்டமாகிவிடலாம் பிடிவாதத்தை மூலதனமாக்கி எட்டாத மலைகளிலும் ஏறிவிடலாம். அணையை கட்டி நதியின் பிரவாகத்தை கட்டுபடுத்திவிடலாம் ஆனால் பலவந்தமாய் ஒரு பூவை மலர செய்ய முடியாது. அது இயற்கையால் தான் முடியும். இது எப்போது ஒருவருக்கு புரிகிறதோ அப்போதே புரிந்தவர் எல்லா விஷயங்களையும் சரியான கோணத்தில் பார்க்க ஆரம்பித்து விடுவார் அதுமட்டுமல்ல தன்னை மீறிய சக்தி உண்டு தன்னால் செய்ய முடியாத வேலைகளும்…

உண்மையாய் இருக்கும் போது

பாசம் உண்மையாய் இருக்கும் போது அது குடும்பத்திற்க்கு பல நன்மைகளை செய்துவிடுகிறது. துறவு உண்மையாய் இருக்கும் போது அது உலகிற்க்கு நிறைய நன்மையை செய்துவிடுகிறது. இங்கு பாசமோ துறவோ விஷயம் அல்ல உண்மை தான் விஷயம் உண்மையாய் இருந்தால் நல்லதுகள் நடந்துவிடுகின்றன தற்போதைய காலத்தில் உண்மையாய் இருக்க எத்தனையோ பொய்கள் சொல்லவேண்டியிருக்கிறது அதிலும் உள்ள சிக்கல் அத்தனை பொய்களையும் உண்மை போலவே சொல்லவேண்டியிருக்கிறது என்ன செய்ய

ஒவ்வொருவரும் கொடுத்து வரும் விலை.

வாழ்க்கை போராட்டத்தில் ஒவ்வொருவரும் கொடுத்து வரும் விலை. அவர் அவர்களின் நுண்ணிய உணர்வுகள். நுண்ணிய உணர்வுகள் என்பது எது காதல், காமம், வாஞ்சை,பரிவு, நேசம், பாசம், போன்றவை  இதன் மூலம் கிடைக்கும் அனுபவங்களை தொலைத்தபின் போராட்டத்தில் வெற்றி பெற்று என்ன பயன் யோசிக்க வேண்டும் ஆனால் யோசிக்காமல் இருப்பதே நல்லது காரணம் அவரவர்களே சொல்லிக்கொள்ளுங்கள் ஏனென்றால் அவரவர்கள் தொலைத்தது அவரவர்களுக்கு தானே தெரியும் 

கடவுள் இருக்கிறாரா? 9

 போன பதிவில் குறிப்பிட்ட ஒவ்வொன்றை பற்றியும் சிந்தித்தால் முதலில் நமக்கு தெரிவது கடவுள் என்ற வார்த்தையில் கடவுள் இல்லை என்பது தான், அதனால் நாம் அவசரப்பட்டு கடவுள் இல்லை என்ற முடிவுக்கு வரமுடியாது, வரக்கூடாது இனி அடுத்த நிலைக்கு நகர வேண்டும் அப்படி நாம் நகர நாம் இதுவரை நாம் படித்த, கேட்ட, பார்த்த, எல்லா விஷயங்களில் இருந்தும் வெளியேறி தன்னே நிற்க வேண்டும் எப்படி யென்றால், நல்லதும், கெட்டதும் நான் என்பதும் மறந்து என்ற நிலையை…

கடவுள் இருக்கிறாரா? 8

ஒருவருக்கு கடவுள் நம்பிக்கை ஏன் வருகிறது வாருங்கள் சிந்திப்போம். முதலில் நமது ஆசைகள் நிறைவேறும் என்ற நம்பிக்கை. இரண்டாவது ஏதோ ஒரு சிலருக்கு கடவுளை காணவேண்டும் என்ற ஆர்வம். மூன்றாவது நம்மை சுற்றி நடக்கும் விஷயங்களால் நமக்கு ஏற்படும் கலக்கம் அந்த கலக்கத்திலிருந்து விடுபட நாம் கொள்ளும் நம்பிக்கைக்கு உரிய பொருள் கடவுள். நான்காவது நம்மை சுற்றியிருக்கும் ஏதோ சிலர் சொல்லும் வார்த்தையான கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டால் நரகத்திற்க்கு போவாய் என்ற வார்த்தையால் ஏற்பட்ட பயம் அது…

கடவுள் இருக்கிறாரா? 7

சொல் அல்லது வார்த்தை என்பது என்ன? சொல் என்பது அவரவர்களின் கடந்த காலமாகவும், ஞாபகமாகவும் இருக்கிறது. அதாவது, மகன் என்றால் எனது மகனையும் என் நண்பனின் மகனையும் அவர் உறவுகளின் உள்ளவர்களையும் என்னுடைய ஞாபகத்திற்க்கு கொண்டு வருகிறது இது அனைத்தும் மனதிலிருந்தே உண்டாகிறது. இப்படி மனதில் தோன்றும் கடந்த கால எதிர் கால நினைவுகளை பிறருக்கு வெளிப்படுத்த உபயோகப்படுவதே சொல் இந்த சொல் எப்போதும் மிக அதிக அளவாக கடந்த கால அல்லது எதிர்காலத்தில் மட்டுமே இருக்கும்…

கடவுள் இருக்கிறாரா? 6

கடவுள் என்ற சொல்லில் என்னென்ன பொருள்கள் அமைந்திருக்கிறது என்றால் பாரம்பரிய மரபு அவரவர் நம்பிக்கைகள், ஆசைகள், அபிலாஷைகள் நிறைவேறும் எனும் ஆசை, கஷ்டங்கள், துயரங்கள், தீரும் எனும் நம்பிக்கை பூரணத்தை அல்லது பரிபூரணத்தை அறியும், அடையும் ஆசை

கடவுள் இருக்கிறாரா? 5

கடவுளை பற்றி ஆராய  நாம் நமது மனதை காலி செய்ய வேண்டும் மனதை காலி செய்வதென்றால் கடந்த காலத்தை மனதில் இருந்து அப்புற படுத்திவிட வேண்டும் கூடவே எதிர்காலத்தையும் இல்லாமல் காலி செய்துவிட வேண்டும் அப்படி செய்தால் என்ன நடக்கும் மனம் இல்லாமல் போயி விடும் அப்படி மனம் இல்லாது போன நிலையில் நாம் ஆராயும்போது சரியான முடிவு கிடைக்கும் அந்த முடிவு மட்டுமே சாஸ்வதமான சக்திய மாக இருக்கும் அப்படி ஆராய நமக்கு நிகழ்கால பிரக்ஞை…

கடவுள் இருக்கிறாரா? 4

எந்த ஆராய்ச்சி செய்வதற்கும் மனம் என்ற ஒன்று தேவைப் படுகிறது. இந்த மனதில் உள்ள உணர்வுகள் நமக்கு நம்பிக்கையையோ அல்லது அவநம்பிக்கையையோ தந்துவிடுகிறது. இந்த இருநிலைகளில் நாம் எந்த நிலைகளில் இருந்தாலும் நம்மால் முடிவு செய்யாமல் ஆராயமுடியாது. அந்த நிலையில் வரும் முடிவும் சரியானதாக இருக்காது.

சந்தோஷம் என்பது 3

மனிதன் தன் இயல்பை, சுதந்திரத்தை, சுகத்தை, மறந்து அல்லது தொலைத்து ஆண்டுகள் பலவாகிவிட்டது.  தனக்குள் இருக்கும் பல உணர்வு நிலைகளில் அவன் பல்வேறு துண்டுகளாக சிதறிபோய்விட்டான் இந்த துண்டுகள் இணைந்து மனிதன் முழுமையடைய வேண்டுமென்றால் எதனால் முடியும், எப்படி முடியும் 

கடவுள் இருக்கிறாரா? 3

நம்பிக்கையை கொண்டு கடவுளை ஆராய்ந்ததால் மனித குலம் பெற்ற பலன் இதுதான். உதாரணமாக நம்பிக்கை இருந்தாலும் இல்லாவிட்டாலும் சூரியனை அதன் ஒளியை அதன் வெப்பத்தை அறிய உணர முடியும் அல்லவா அதுபோலதான் கடவுளை பற்றிய நிலையும் எந்த நம்பிக்கையும் முன்னேற்பாடான முடிவுடன் ஆராயும் போது விஷயங்கள் உண்மையை வெளிப்படுத்துவது இல்லை அப்படியே அது வெளிப்படுத்தினாலும் நம்மாள் அதை சரியாக புரிந்து கொள்ள முடிவது இல்லை அதனால் நாம் எந்த நம்பிக்கையையும் இல்லாமல் இந்த விஷயத்தை ஆராய்வோம்.

கடவுள் இருக்கிறாரா? 2

கடவுளை அறிந்து கொள்ள நம்பிக்கை தேவையா? உண்மையில் அறிந்து கொள்வதைவிட கற்றுக்கொள்ளுதல் மேலானது அல்லவா நம்பிக்கைகளை கொண்டு கற்றுக்கொள்ளும் போது நம்பிக்கைகள் நம்மை ஒரு முடிவுக்கு அழைத்து செல்லுகின்றன அப்படி நம்பிக்கை அழைத்து சென்ற முடிவு சரியானதாக இருக்குமா என்ற ஐயம் குழப்பம் தான் உலகில் உள்ள இத்தனை மதங்களுக்கும் காரணம். அதனால் பிரிவுகள், பிரிவுகளால் பிரச்சனைகள் அதில் எல்லை மீறும் போது வன்முறைகள்

கடவுள் இருக்கிறாரா? 1

பொதுவாக இந்த வினாவரும் போது ஆன்மீகத்தில் உள்ளவர்கள் சொல்லும் பதில் நம்பிக்கை வையுங்கள் கடவுளை காணலாம், கடவுளை அறியலாம் அவர் இருக்கிறார் என்று அறியலாம் என்கிறார்கள். நம்பிக்கை இல்லாவிட்டால் இறைவனை மட்டுமல்ல எதையும் அறிய முடியாது என்கிறார்கள். நம்பிக்கை கொண்டு ஆராய்கிறோம் என்றால் என்ன அர்த்தம் முடிவு செய்து கொண்டு ஆராய்கிறோம் என்று அர்த்தம் அப்படி அந்த விதத்தில் ஆராய்ந்தால் சரியான முடிவு கிடைக்குமா? சந்தேகம்தான்,

தற்போதைய காலம் 2

நுண்ணிய உணர்வுகள் அனைத்தையும் அனைத்தையும் இழந்து விட்ட பின் நான் என்பதிலும் வெற்றி பெற்றேன் என்பதிலும் சக்கையை தவிர வேறு என்ன இருக்கிறது. யோசிக்க நேரமில்லை, யோசிக்க ஆசையில்லை சரியாக சொன்னால் யோசிக்க தெரியவில்லை வேறு எப்படி எடுத்துக்கொள்வது உழைப்பின் உன்னதம் சிந்தித்தலின் அழகு அதை செயல்படுத்தலில் உள்ள நளினம் இவையெல்லாம் இக்கால இளைய தலைமுறையினர் அறியாத ஒரு விஷயமாக ஆகிவிட்டதே அதனால் அவர்கள் வாழ்க்கையே அவர்களுக்கு அந்நியமாகிவிட்டதை அறியாதவர்களாக ஆகிவிட்டார்களே என்ன செய்வது அறிந்தவர்கள் வருத்தப்படதான்…

தற்போதைய காலம் 1

தற்போதைய காலம் உழைக்காது உயர்வு பெற இளைஞர்கள் முயலும் காலம். இப்போது உள்ள சூழ்நிலையில் பணம், பதவி மட்டுமே உயர்வு எனும் எண்ணமும் நானே எல்லாம். நான் மட்டுமே எல்லாம் எனும் மனோ பாவத்தை உண்டாக்கும் சூழ்நிலையே கொண்டிருக்கிறது, இதில் எளிதில் வெற்றி வேண்டும் எனும் எண்ணம் உயர கிளம்பி எல்லாவற்றையும் முடிக்கிறது. அல்லது அழிக்கிறது. எல்லாவற்றையும் என்பது அன்பு, பாசம், நட்பு, உறவு, தியாகம், பணிதல், திருப்தி, போன்ற விஷயங்களை தான் சொல்கிறேன்.

நிகழ்சிக்கு அர்த்தம்

நிகழ்சிக்கு அர்த்தம் காண முயலுவது காரியத்துக்கு காரணம் தேடும் பகுத்தறிவின் சாபக்கேடு. இதை ஏன் சாப கேடு என்று சொன்னார்கள் பகுத்தறிவு என்பது சாப கேடா பகுத்தறிவு எப்படி சாப கேடு ஆகும் இப்படி கேள்வி முளைத்து சிந்திக்கும் போது சில விஷயங்கள் விடையாய் வருகிறது அப்படி வந்ததை வைத்து பார்த்தால் பகுத்தறிவு சாப கேடு தான் என்ற முடிவுக்கு வரவேண்டியுள்ளது பகுத்து பார்க்கும் போது புத்தி அதிகமாய் வேலை செய்கிறது அப்படி வேலை செய்யும் புத்தி…

இக் கால வாழ்க்கை முறை

இக்கால வாழ்க்கை முறையில் வாழ்க்கைக்கு உண்டான மதிப்புகள் என்று எதுவும் இல்லை வாழ்க்கைக்கு உண்டான முக்கிய விஷயமான நியாயம், அநியாயம் என்ற ஒன்றும் இல்லை ஒரு மூர்க்கத்தனமான ஒட்டப்பந்தயத்தில் யார் ஜெயிக்கின்றானோ அவன் வெற்றியே எதையும் ஞாயப்படுத்தி காட்டுகிறது. வெற்றி அடைந்தவன் நிர்ணயிப்பதே வாழ்க்கை தர்மம். என்ன செய்வது இது சரியா என்று கூட யோசிக்கும் நிலையில் நாம் இல்லையே நம்மை சுற்றி நடப்பவைகளில் எத்தனை விஷயங்கள் நம் சிந்தனைக்கும் நாம் கற்றதிற்கும் சம்பந்தமில்லாமல் இருக்கிறது வெற்றியாளன்…

குற்றமில்லாத மனசுதான் 4

இப்ப புதுசா வந்துருக்கற விதி என்னன்னா யார் உரத்து பேசறாங்களோ அவங்க சத்தியம் பேசறாங்க அப்படிங்கறது தான் சத்தியத்துக்கே இது தான் கதின்னா உண்மைக்கு என்னன்னு சொல்லறது அடுத்தது குற்றம் குற்றம் அப்படின்னாலே ரெண்டு பேரோ அதுக்கு அதிகமாகவோ நபர்கள் சம்பந்தப்பட்டு இருக்கணும் சம்பந்தப்பட்டவங்க ஒன்னும் பிரச்னை இல்லை அப்படின்னு சொல்லிட்டா குற்றம் எங்கிருந்து வரும் உதாரணம் லஞ்சம்

குற்றமில்லாத மனசுதான் 3

அடிப்படையே மாறின பின்னாலே சரியாய் இருக்கோம் அப்படின்னு எப்படி சொல்லறது அதனால நாமலே ஒரு முடிவுக்கு வந்து இது தான் சத்தியம் அப்படின்னு முடிவு பண்ணிட்டோம் அந்த முடிவு என்னான்னா அவனவன் மனசுக்கு எது சரின்னு தோணுதோ அது தான் சத்தியம் அப்படிங்கறது தான் இதுல பாத்தா வேதம் சொன்னபடி இருக்கணும் அப்படிங்கற அவசியம் இல்ல நீ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் இதுனால என்னாச்சுன்னா இந்த காலத்துல எல்லாரும் சத்தியம் தான் பேசறாங்க எல்லாருமே உரத்துதான் பேசறாங்க…

குற்றமில்லாத மனசுதான் 2

சத்தியம் அப்படிங்கறது முன்னோர்கள் சொன்ன படி பாத்தா கடவுளால் அருளப்பட்ட அல்லது ரிஷிகளால் கிரகிக்கப்பட்ட விஷயங்கள் அதாவது வேதங்கள் சத்தியம் அப்படின்னு சொல்லறாங்க அப்ப வேதத்தின் படி வாழ்தலே சத்தியம் அப்படின்னு ஆகுது நாம இப்ப வேதப்படி வாழறோமா அப்படின்னு அவங்க அவங்கலே மனச தொட்டு கேட்டு பாத்துக்க வேண்டியது அப்படி கேட்டு பாத்தா இல்லை அப்படின்னு தான் பதில் வரும் நம்மனால அதை ஒத்துக்க முடியாது ஏன்னா நாம சத்தியம் தான் பேசறோம் அப்படிங்கற மனோநிலையில்…

குற்றமில்லாத மனசுதான் 1

குற்றமில்லாத மனசு தான் சத்தியத்தை சத்தமாக பேசும். உண்மையை உரத்துப் பேசும். இந்த வார்த்தைகள் என்ன சொல்ல வருது இதை பத்தி நாம ஒரு முடிவுக்கு வரணும் அப்படின்னா நமக்கு சத்தியம் அப்படின்னா என்ன உண்மை அப்படின்னா என்ன குற்றம் அப்படின்னா என்னங்கிறது நமக்கு தெளிவா தெரிஞ்சிருக்கணும். நாம வச்சிருக்கிற அகராதியில இந்த வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் நாம வச்சிருக்கோம் அப்படின்னு நமக்கு தெளிவா தெரிஞ்சாதான் நமக்குள்ள ஒரு முடிவுக்கு வரமுடியும் சரி இப்ப யோசிப்போம்

வாழ்க்கையில் நிர்பந்தம்

யாரோடும், எதனோடும் ஒட்டாத தன்மையோடு இருப்பவர்கள் சிந்திக்க வேண்டிய விஷயம் நாம உணவுக்கும், உடைக்கும், வம்ச விருத்திக்கும், அடுத்தவங்களை சார்ந்து இருக்க வேண்டிய நிலையில் இருக்கும் போது தனிப்பட்ட அப்படிங்கற விஷயமே இல்லாதா போயிருது நம்முடைய அந்தரங்கத்துடன் ஏதாவது ஒரு காரணத்திற்காக ஏதாவது ஒரு ஒரு சூழ்நிலையில் நாம் அடுத்தவரை சார்ந்து இருத்தல் என்பது நிர்பந்தம் இதை புரிந்து கொண்டால் வீண் வார்த்தைகளால் அடுத்தவரை காயப்படுத்தும் பழக்கம் நம்மை விட்டு சென்றுவிடும் அது சென்று விட்டாலே சுற்றம்…

கேள்விகேட்க ஆரம்பிச்சா

கேள்விகேட்க ஆரம்பிச்சா யார் கூடையும் ஒத்துப்போகமுடியாது. ஏன்னா கேள்வி கேக்குறது யாருக்கும் பிடிக்காது  அதனால மனசுக்குள்ள ஒரு கோபம் துளிர் விட்டு வளர முயற்சி பண்ணிட்டே இருக்கும் அதனாலேயே யார் கூடயும் ஒத்து போக முடியாது தூக்கம் வராது, புத்தி லோ, லோன்னு அலையும், சகலமும் தப்புன்னு படும். அனுபவம் நிறைய சொல்லித்தரும். உன் அனுபவம் உனக்குத் தெளிவைத் தரும். அப்ப உன் கோபம் என்னாச்சு அப்படின்னு பாரு உனக்கே சிரிப்பா வரும் இதுக்கா நாம கோபப்பட்டோம்…

வாழ்க்கையை நிர்ணயிப்பது

வாழ்க்கையை நிர்ணயிப்பது நமது திறமையோ, நமது அறிவோ, நமது கடமையோ அல்ல. அதை நிர்ணயிப்பது நமக்கு மீறிய சக்தி. அந்த சக்தி விரும்பும் பாதையில் வாழ்வதே நமது கடமை. விதியின் புயலில் மனிதர்கள் பலபடி எடுத்து வீசப்படுகிறார்கள். யார், யார் எங்கெங்கு மோதிக்கொள்கிறார்களோ, யார் கண்டது? இயற்கையின் விசித்திரத்தை நாம் அறிய முடியுமா? யாரே அறிவர்.

மன போராட்டம் தவிர்க்க

மனிதன் என்றுமே பணத்திற்க்கு அடிமையாக கூடாது. அப்படி அடிமையாகி விட்டால் மனபோராட்டத்தை தவிர்க்க முடியாது. மன போராட்டம் தவிர்க்கப்பட வேண்டும் என்றால் பணத்திற்க்கு மட்டுமல்ல இன்னும் பல விஷயங்களுக்கு அதாவது பெரியவர்கள் சொன்ன புலன் விஷயங்களுக்கு அடிமையாகக் கூடாது

வாழ்க்கையில் நிஜத்தைச் சந்திக்க

வாழ்க்கையில் நிஜத்தைச் சந்திக்க எப்போதும் தயாராக இருக்கவேண்டும். நிஜங்கள் தவிர்க்க முடியாதவை, வாழ்க்கையை விட்டு விலக்க முடியாதவை, விலக்க முடியாதவைகளோடு கை குலுக்குவதைத் தவிர வேறு வழியில்லை.

மனித முன்னேற்றத்திற்கு தேவை

மனித முன்னேற்றத்திற்கு தேவை அதிர்ஷ்டம் தான். ஆனால், அது ஏன் வருகிறது? எவரால் வருகிறது? எப்படி வருகிறது? எப்படி மாறுகிறது? என்பது மட்டும் மனித அறிவுக்கும் புலன்களுக்கும், அப்பாற்பட்டதாய் இருக்கிறது. உதாரணமாக பார்த்தால் அன்றய லிங்கன் முதல் இன்றய நரேந்திர மோடி வரை

வாழ்க்கையில் சந்தர்ப்பங்கள்

வாழ்க்கையில் சந்தர்ப்பங்கள் ஏன் வருகின்றன? எப்படி வருகின்றன? எதற்க்காக வருகின்றன? எப்போது வருகின்றன? யாருடன் நம்மை சேர்க்கின்றன? யாரிடமிருந்து நம்மை பிரிக்கின்றன என்பதை தெரிந்து கொள்ள முடிவதில்லை. ஏன்,

பயம் வேறு, பக்தி வேறு

பயம் வேறு, பக்தி வேறு தான். பயம் மனதின் உளைச்சலில் இருந்து முளைக்கிறது. பக்தி அன்பின் ஆழத்திலிருந்து முளைக்கிறது. இரண்டும் இணைவது கஷ்டம் என்றாலும், அப்படி ஏற்படவே செய்கிறது இவ்வுலகத்தில்.

எதற்குமே ஏற்ற தாழ்வு உண்டு.

வாழ்க்கையில் பணத்துக்கும் சரி, பதவிக்கும் சரி, உணர்ச்சிக்கும் சரி எதற்குமே ஏற்ற தாழ்வு உண்டு. அந்த ஏற்றதாழ்வுகளால் அடியோடு பாதிக்கப்படாதவன் யோகி ஆகிறான். அடியோடு பாதிக்கப்படுபவன் போகி ஆகிறான். அல்லது ரோகி ஆகிறான். சற்று பாதிக்கப் பட்டாலும், சமய சந்தர்ப்பங்களை உத்தேசித்து அவற்றினின்று சட்டென்று விலகிக் கொள்பவன் விவேகி ஆகிறான்.

துக்கம் ஏது?

எதையும் வெறும் கனவு, வெறும் மாயை, என்று நினைக்கும் அப்பியாசம் மட்டும் மனதிற்கு இருந்துவிட்டால் எப்படி கவலைகள் வரும்.  அத்தகைய அறிவாளிக்கு துக்கம் ஏது?

உச்ச கட்ட ரகசியம்

ஒன்றை அழித்து, ஒன்றை காப்பதுதான் ஆத்மிக ரகசியம். உலக பரிபாலனத்தின் உச்ச கட்ட ரகசியமும் அதுதான். இந்த ரகசியத்தை அறிந்து செயல்படுத்துபவர்கள் தான் அரசியல் ஆட்சியாளர்கள். துரதிஷ்ட்டவசமாக மக்கள் அழிவதும், ஆட்சியாளர்கள் அவர்கள் சம்பந்தபட்டவர்களை மட்டும் காப்பதுமாக ஆட்சி பரிபாலனம் நடைபெறுகிறது.

காதலும், வேதாந்தமும் ஒன்றா?

காதலும், வேதாந்தமும் ஒன்றா? ஆம் என்றால் வேதாந்தம் என்பது சிருஷ்டியின் தத்துவம். காதலும் சிருஷ்டியுடன் சம்பந்தப்பட்டது. இல்லையென்றால் வேதாந்தத்தில் உணர்வுகள் இருக்கும் தாமரை நீர் போல. காதலில் உணர்ச்சிகள் இருக்கும். புயலும், சூறாவளியும், பூகம்பங்களும் போல.

தர்க்க ரீதியில்

மனிதன் எந்த அநியாயத்தையும் தர்க்க ரீதியில் நியாயம் போல் காட்ட வல்லவன். அப்போது அவன் வேதாந்தம் பேசுவான், சாஸ்திரங்கள், புராணங்களை தனக்கு ஏற்றபடி உபயோகப் படுத்துவான். காரணம், மனிதன் உணர்ச்சிகளின் அடிமை. அவனின் உள் உள்ள சுயநலம் அப்படி அவனை ஆக்குகிறது

நவீன நாகரீகம்

ஒருத்தரை ஒருத்தர் அழித்துக் கொள்ளும் காட்டு மிரண்டிதனமே நவீன நாகரீகமாகிவிட்டது. இப்படி ஏன் தோன்றுகிறது எதனால் இப்படி தோன்றியது என்று சிந்தித்தால் சுற்றுப்புற சூழ்நிலையில் இருக்கும் நிலைகளே காரணம் என்று தோன்றுகிறது பணத்திற்க்குவேண்டி என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்னும் மனோபாவம் பதவிக்கு வேண்டி என்ன வேண்டுமானாலும் செய்யலாம் எனும் மனோ போக்கு பெரியவர்களை இலக்கியங்களை உதாசீனப்படுத்தும் பேச்சுக்கள் செயல்கள் உறவுக்கும்,உணர்வுக்கும் மதிப்பே இல்லாத சூழ்நிலைகள் தான் இப்படி தோன்ற வைத்திருக்கிறது எனக்கு ஏனோ அப்படிதான் தோன்றுகிறது

அடுத்தவரின் பாதிப்பு

ஒரு நபரின் வாழ்க்கையில் இன்னொரு நபரின் பாதிப்பு எந்த விதத்திலாவது இருந்தே தீரும். இதை நாம் நமக்குள் இறங்கி பார்க்கும்போதுதான் அந்த நபர் யார் என்பதே தெரியும். சமூகத்தில் அந்த பாதிப்பு ஏற்படுத்தும் மனிதர் ஆண் என்றால் மனைவியாகவோ, பெண் என்றால் கணவராகவோ இருக்க வேண்டும் என்ற ஆசையில் உண்டான நியதியே திருமணம். ஆனால் எல்லா தம்பதியருக்கும் அப்படி அமைகிறதா என்பது வினாவிற்குரிய விஷயம் தான் என்பதே உண்மை. அரசியல் தலைவர்கள், மத குருமார்கள், ஆன்மீக பேச்சாளர்கள்,…

வியாபார லக்ஷ்ணங்ள்

இந்த சமுதாயத்தில் சட்ட விரோதமாக பணம் சம்பாதிப்பது என்ற பேச்சுக்கே இடமேயில்லை சட்ட விரோதம் என்பது வியாபார லக்ஷ்ணங்களில் ஒன்று. இதை புரியாதவர்கள் வியாபாரத்தில்  நியாயம், தர்மம், வியாபாரத்தில் வெளிப்படை சட்டத்திற்க்குட்பட்ட வியாபாரம் என்றெல்லாம் பேசிக்கொண்டிருப்பார்கள். அப்படி பேசிக் கொண்டிருப்பவர்கள் உண்மையாகவே   பாவம்.

இப்பிறவி எடுத்தது

இப்பிறவி எடுத்ததே பூரணத்தை அறிய வேண்டிதான் யோகமெல்லாம் பார்த்தவுடன் வருவதல்ல!! கோடிக்கணக்கான ஜென்மத்தின் பயனால் வருவதாகும்!!! மனதை கொண்டு போய் மூலத்தில் சேர் என்றவுடன் சேருமா, சேராது மாயை எப்போது ஒழிகிறதோ அப்போதுதான் சேரும். வணக்கமும், யோகமும் எதற்கு பயன்படும் என்று உதாசீனம் செய்தால் ஒரு தொழிலும் பலியாது.

ஒரே இடத்தில் நில்

மற்றவர்களுடன் கூடி பேசுவதால் குடியா மூழ்கி போய்விடும் என்று நீ கேட்கலாம் இப்போது சொல்வதை கவனமாக கேள். 5 விதமான பொறிகள் ஒரு நிலையில் நிற்காமல் அங்கும் இங்கும் ஒடும். பேச்சால் பொறிகள் கர்வம் அடைந்து கனத்து விடும் அதனால் ஒரு நிலையில் நிற்க முடியாது. அப்படி பட்டவர்களுக்கு புத்தி கூறினாலும் அது அவர்கள் புத்திக்கு எட்டாது அதனால் யோகம் கைகூடாது. பல திக்கும் பார்க்காமல் பலதையும் பேசாமல் எச்சரிக்கையாய் ஒரே இடத்தில் நில் அப்போது யோகம்…