காலில் சங்கிலியுடன் அனுமன்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அமைந்துள்ளது மேல்முடியனூர். இங்கு ஆதிகேசவப் பெருமாள் கோவில் இருக்கிறது. இந்த ஆலயத்தில் ஆஞ்சநேயருக்கு தனிச் சன்னிதி உள்ளது. இந்த ஆஞ்சநேயரின் கால், கல்லால் செதுக்கப்பட்ட சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளது. ராம அவதாரம் முடிந்து, ராமபிரான் வைகுண்டம் புறப்படத் தயாரானார். அப்போது தன்னுடன் அனுமனையும் வரும்படி அழைத்தார். ஆனால் அனுமனோ, “பூலோகத்தில் எங்கெல்லாம் ராமகீர்த்தனம் கேட்கிறதோ அங்கேயே இருக்க விரும்புகிறேன்” என்று கூறிவிட்டார். ராமர் மீண்டும் அழைத்தால், அவர் மேல் உள்ள பக்தியில் மனம்…

திருச்செந்தூர் செந்திலாண்டவன் கோவில்

முருகப்பெருமானின் ஆறு படைவீடுகளில் ஒன்று திருச்செந்தூர் செந்திலாண்டவன் கோவில் இங்குள்ள கடலில் தினமும் நண்பகல் வேளையில் கங்கை வந்து நீராடுவதாக ஐதீகம். இதனால் அந்த நேரத்தில் கோவில் அர்ச்சகர்கள், கடலுக்கு தீபாராதனை காட்டுவார்கள். அப்போது கடலில் நீராடினால், கங்கையில் நீராடிய பலனைக் கொடுக்கும்.

ஸ்ரீவாஞ்சியம்

ஸ்ரீவாஞ்சியத்தில் குப்த கங்கை என்ற திருக் குளம் உள்ளது. இந்த திருக்குளத்திலும் கார்த்திகை மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடினால், கங்கையில் நீராடிய பலனைப் பெறலாம்.

ஸ்ரீதரஐயாவாள் திருமடம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ளது திருவிசநல்லூர் என்ற ஊர். இங்கு ஸ்ரீதரஐயாவாள் திருமடம் இருக்கிறது. இந்த மடத்திற்குள் தீர்த்தக்கிணறு ஒன்று உள்ளது. இதில் கார்த்திகை மாத அமாவாசை நாளில் கங்கை நீர் பொங்கி வெளியேறும். அப்போது நீராடினால் புண்ணிய பலன் கிடைக்கும்.

மயிலாடுதுறை மயூரநாதர் கங்கையில் நீராடிய பலன்

மயிலாடுதுறையில் உள்ள மயூரநாதர் ஆலயத்தின் முன்பாக உள்ள காவிரியின் துலா கட்டத்தில், ஐப்பசி மாதம் முழுவதும் நீராடினால், கங்கையில் நீராடிய முழு பலனும் கிடைக்கும். கார்த்திகை முதல் நாள் நீராடினாலும் அந்தப் பலனைப் பெறலாம்

திருவெள்ளியங்குடி கருடாழ்வார்

கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருவெள்ளியங்குடி என்ற தலத்தில் கருடாழ்வார் நான்கு கரங்களுடன் கைகளில் சங்கு, சக்கரம் தாங்கி காட்சி தருவது வேறு எந்தத் தலத்திலும் கிடையாது சங்கு, சக்கரம் பெற்றதால் பெருமாளின் சக்தியே தன்னிடம் வரப்பெற்றவராய் கருடாழ்வார் இங்கு திகழ்கிறார்.

அருள்மிகு பருத்தியூர் ராமர் ஆலயம்,

 திருவாரூர் மாவட்டம் கொடவாசல் தாலுகாவில் உள்ளது. சூரியன் சிவனை எண்ணி தவம் இருந்த இடம், ராம லக்ஷ்மணர் சூரிய நமஸ்காரம் செய்த இடம் பருத்தியூர். தெற்கு நோக்கியுள்ள சன்னதியில் பரவசமூட்டும் பருத்தியூர் ராம பரிவாரம். ராமாயண சொற்பொழிவுகள் செய்து நூற்றிற்கும் மேல் பட்டாபிஷேகங்கள் நடத்தி ப்ரவசன சக்ரவர்த்தியாகத் திகழ்ந்த பிரம்மஸ்ரீ பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரி அவர்கள் கட்டிய ஆலயம் இது.

கீழமங்கலம் காளஹஸ்தீஸ்வரர் கோவில்

தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனையில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் கீழமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ளது காளஹஸ்தீஸ்வரர் கோவில் இந்தக் கோவிலில் அஷ்ட தட்சிணாமூர்த்திகள் அருள் புரிகிறார்கள். இவர்களில் ஸ்ரீஞான தட்சிணாமூர்த்தி கிழக்குத் திசையிலும், ஸ்ரீயோக பட்டாபிராம தட்சிணாமூர்த்தி வட கிழக்கிலும், ஸ்ரீசக்தி தட்சிணாமூர்த்தி தென்கிழக்கிலும், ஸ்ரீயோக தட்சிணாமூர்த்தி தெற்கிலும், ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி தென்மேற்கிலும், ஸ்ரீமேதா தட்சிணாமூர்த்தி மேற்கிலும், ஸ்ரீஆசிந தட்சிணாமூர்த்தி(பரசுராமருக்கு வில்லும் அம்பும் வழங்கியவர்) வடமேற்கிலும், ஸ்ரீவர தட்சிணாமூர்த்தி (வேதத்துக்கு குரு) வடக்கிலும் எழுந்தருளியிருக்கிறார்கள்.

திருக்கண்ணங்குடி என்ற திவ்ய தேசத்தில்

திருக்கண்ணங்குடி என்ற திவ்ய தேசத்தில் இரண்டு கைகளையும் கட்டிக் கொண்டு தரிசனம் தரும் கருடனை தரிசிக்கலாம். இந்தக் காட்சி வைகுண்டத்தில் கருடன் எழுந்தருளியுள்ள காட்சி மற்ற எல்லா திவ்ய தேசங்களிலும் இரண்டு கரங்களையும் குவித்து வணங்கும் கருடாழ் வாரைத்தான் காணமுடியும்.  

உபதேசத் திருத்தலங்கள் 2

ஆலங்குடி: சுந்தரர் இந்தத் தலத்தில் ஸ்ரீதட்சிணா மூர்த்தியை வழிபட்டு, பஞ்சாட்சர உபதேசம் பெற்றார். சிதம்பரம்: பைரவரின் பிரம்ம தத்துவத்தை உபதேசித்த தலம். திருப்பனந்தாள்: அம்பாள், சுவாமியிடம் ஞானோபதேசம் பெற்றது. திருக்கடவூர்: பிரம்மன் ஞானோபதேசம் பெற்றது. மயிலாடுதுறை: குருபகவானிடம் நந்தி உபதேசம் பெற்ற ஊர். திருவானைக்கா: அம்பிகை ஞானோபதேசம் பெற்ற திருத்தலம்.

உபதேசத் திருத்தலங்கள்! 1

சிவபெருமானின் உபதேசம் நிகழ்ந்த திருத்தலங்களைத் தரிசிக்க அறியாமை நீங்கும், கல்வி-கலைஞானம் ஸித்திக்கும் சிவத்தலங்கள் உத்திரகோசமங்கை: உமையம்மைக்கு இறைவன் வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசித்த தலம் . ஓமாம்புலியூர்: இந்தத் தலத்தில் ஸ்ரீதட்சிணா மூர்த்தி, உமாதேவிக்கு, பிரணவப் பொருளை உபதேசித்த தலம் . இன்னம்பர்: அகத்தியர், இறைவனிடம் இலக்கண உபதேசம் பெற்ற தலம்.

வால் இல்லாத ஆஞ்சநேயர்

ராமேஸ்வரம் ராமநாதர் கோவிலில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் வால் இல்லாத ஆஞ்சநேயர் திருக்கோவில் அமைந்துள்ளது. ராமர் பிரதிஷ்டை செய்து வழிபடுவதற்காக, ஆஞ்சநேயர் காசிக்கு சிவலிங்கத்தை தேடிச் சென்றார். அவர் வருவதற்கு தாமதம் ஆனதால், சீதாதேவி மணலில் செய்து கொடுத்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து ராமபிரான் வழிபட்டு முடித்து விட்டார். அதன் பிறகு வந்த ஆஞ்சநேயர், தன்னுடைய வாலால் மணல் லிங்கத்தை அகற்ற முயன்றதாகவும், அந்த முயற்சியின் போது, ஆஞ்சநேயரின் வால் அறுந்து போனதாகவும் ஒரு சாரார்…

ஆதி பைரவர் தலம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அமைந்துள்ளது திருத்தளிநாதர் ஆலயம். வான்மீகி முனிவருக்கு அருள் வழங்கிய ஆலயமாகவும், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர் போன்றவர்களால் பாடல்பெற்ற தலமாகவும் இது விளங்குகிறது. சிவபெருமானின் கவுரி தாண்டவத்தைக் காண்பதற்காக மகாலட்சுமி தவம் இருந்த இடமும் இதுவே ஆகும். பைரவ மூர்த்தங்களில் முதன்மையான ஆதி பைரவர் தோன்றிய அருட்தலமும் இதுதான்.

யோக நிலையில் காட்சி தரும் ஸ்ரீ ராமபிரான்

நெடுங்குணம் எனும் ஊரில் மிகவும் பழமை போற்றும் ராமர் கோவில் உள்ளது. இந்த திருக்கோவிலில் உள்ள ராமர் தனது கோதண்டம் எதுவும் இல்லாமல் அமர்ந்த நிலையில் வலது கை சின் முத்திரையுடன் தனது கண்களை முடியவாறு யோக நிலையில் காணப்படுகிறார்.

ராமேஸ்வரம் ராமநாதர் கோவிலில் உப்பு லிங்கம்

ராமேஸ்வரம் ராமநாதர் கோவிலில், ராமநாதர் சன்னிதிக்கு பின்புறம் உப்பு லிங்கம் உள்ளது. இந்த லிங்கம் வந்ததற்கு ஒரு கதை கூறப்படுகிறது. ஒரு முறை சிலர், ‘இந்தக் கோவிலில் உள்ள லிங்கம் மணலால் ஆனது அல்ல என்றும், அப்படி மணலால் செய்யப்பட்டது என்றால், அபிஷேகத்தின் போது கரைந்திருக்க வேண்டும் என்றும் வாதம் செய்தார்கள். அந்த நேரத்தில் பாஸ்கரராயர் என்ற அம்பாள் பக்தர், தண்ணீரில் எளிதில் கரையும் தன்மையுடைய உப்பில் ஒரு லிங்கம் செய்து, அதற்கு அபிஷேகம் செய்தார். ஆனால்…

குமரன் :திருவிடைக்கழி

தன் பக்தனான மார்க்கண்டேயனை ‘என்றும் 16’ வயதுடன் இருக்க ஈசன் அருளிய தலம் திருக்கடவூர் இந்த ஆலயத்தில் இருந்து சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது திருவிடைக்கழி என்ற திருத்தலம். இங்குள்ள குரா மரத்தின் அடியில்தான் ராகு பகவான், முருகப்பெருமானை வழிபட்டு பேறுபெற்றார் என்கிறது தல புராணம் இந்த ஆலயத்தில் உள்ள சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், நடராஜர், பிரதோஷ நாயகர், சண்டேஸ்வரர் என அனைத்து வடிவங்களும் முருகப்பெருமானாகவே காட்சியளிப்பது ஆலயத்தின் தனிச் சிறப்பாகும். தெய்வானைக்கு, இந்த ஆலயத்தில் தனிச்…

அனந்தமங்கலம் ஆஞ்சநேயர்

திருக்கடையூர் அருகே உள்ளது அனந்தமங்கலம் என்ற ஊர் இங்கு எழுந்தருளியிருக்கும் ஆஞ்சநேயருக்கு நெற்றிக்கண் உள்ளது. சிவபெருமானைப் போல நெற்றிக்கண்ணுடன் காணப்படும் இந்த ஆஞ்சநேயரை வழிபாடு செய்தால் வேண்டிய வரங்கள் கிடைக்கும்  

பதினாறும் அருளும் ரம்பாபுரி நாதர்!

திருவள்ளூர் மாவட்டம், திருஇலம்பையங் கோட்டூரில் அமைந்திருக்கிறது அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் ஆலயம். இங்கே மேற்கு நோக்கி, தனிச்சந்நிதியில் அருளும் ஸ்ரீரம்பாபுரி நாதர் 16 ஒளிப்பட்டைகளுடன் கூடிய லிங்கத்திருமேனியராக அருள்வது, விசேஷ அம்சம். இவரைத் தரிசித்து வழிபட்டால் பதினாறு பேறுகளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

திருநல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர்

திருநல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) திருக்கோவிலில், 6 நாழிகைக்கு ஒரு முறை சிவலிங்கம் வர்ணம் மாறுகிறது

ஒரே கருவறையில் 3 நரசிம்மர்கள்

சிங்கிரிகுடி தலத்தில் 16 கைகளுடன் திருமால், நரசிம்ம அவதாரம் எடுத்து எழுந்தருளியுள்ளார். நரசிம்மரின் கோபத்தை தணிக்கும் வகையில் நரசிம்மரின் இடப்புறம் இரணியனின் மனைவி நீலாவதி, வலதுபுறம் மூன்று அசுரர்கள், பிரகலாதன், சுக்கிரன், வசிஷ்டர் ஆகியோர் உள்ளனர். வடக்கு நோக்கியபடி யோக நரசிம்மர், பாலநரசிம்மர் உள்ளனர். இவ்வாறு ஒரே கருவறையில் மூன்று நரசிம்மர் அருள்பாலிப்பது சிறப்பாகும்

திருக்கழுக்குன்றத்தின் தெப்பக்குளத்தில்

திருக்கழுக்குன்றத்தின் தெப்பக்குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு தோன்றுகிறது. சிவனுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை கழுகு உண்ணும் அதிசயத்தையும் இங்கே பார்க்கலாம்

மேற்கு நோக்கிய சிவ திருத்தலங்கள் 8

அருள்மிகு  நீலகண்டேஸ்வரர், இருகூர், கோயம்பத்தூர் மாவட்டம் அருள்மிகு  திருமுருகநாதசுவாமி, திருமுருகன்பூண்டி, கோயம்பத்தூர் மாவட்டம் அருள்மிகு  இரத்தினகிரீஸ்வரர், ஐயர்மலை, கரூர் மாவட்டம் அருள்மிகு  அர்த்தநாரீஸ்வரர், திருச்செங்கோடு, ஈரோடு மாவட்டம் அருள்மிகு  திருக்காளத்தீஸ்வரர், திருக்காளத்தி, ஆந்திரா

மேற்கு நோக்கிய சிவ திருத்தலங்கள் 7

 அருள்மிகு  கைலாசநாதர், கற்குடி, திருச்சிராப்பள்ளி மாவட்டம் அருள்மிகு  உய்யகொண்டார், உய்யகொண்டான் திருமலை, திருச்சிராப்பள்ளி மாவட்டம் அருள்மிகு  வம்சோத்தாரகர், பெருங்களூர், புதுக்கோட்டை மாவட்டம்  அருள்மிகு  காசி விஸ்வநாதர், திருப்பரங்குன்றம், மதுரை மாவட்டம் அருள்மிகு  மன்னீஸ்வரர், அன்னூர், கோயம்பத்தூர் மாவட்டம்

மேற்கு நோக்கிய சிவ திருத்தலங்கள் 6

அருள்மிகு  தர்மபுரீஸ்வரர், பழையாறை, தஞ்சாவூர் மாவட்டம் அருள்மிகு  இராமநாதசுவாமி, கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம் அருள்மிகு  உக்தவேதீஸ்வரர், திருத்துருத்தி (குத்தாலம்), தஞ்சாவூர் மாவட்டம் அருள்மிகு  தாயுமானவசாமி, திருச்சிராப்பள்ளி அருள்மிகு  ஜம்புகேஸ்வரர், திருவானைக்காவல், திருச்சிராப்பள்ளி மாவட்டம்

மேற்கு நோக்கிய சிவ திருத்தலங்கள் 5

அருள்மிகு  விஸ்வநாத சுவாமி, தட்டாத்தி மூலை, திருவாரூர் மாவட்டம் அருள்மிகு  கோணேஸ்வரர், குடவாயில், திருவாரூர் மாவட்டம் அருள்மிகு  அபிவிருத்தீஸ்வரர், அபிவிருதீஸ்வரம், திருவாரூர் மாவட்டம் அருள்மிகு  கண்டீஸ்வரர், திருக்கண்டியூர், தஞ்சாவூர் மாவட்டம் அருள்மிகு  இராமலிங்கேஸ்வரர், பாபநாசம், தஞ்சாவூர் மாவட்டம்

மேற்கு நோக்கிய சிவ திருத்தலங்கள் 4

 அருள்மிகு  சுவர்ணபுரீஸ்வரர், செம்பனார்கோயில், நாகப்பட்டினம் மாவட்டம்  அருள்மிகு  கடைமுடிநாதர், கீழையூர், நாகப்பட்டினம் மாவட்டம்  அருள்மிகு  தர்மபுரீஸ்வரர், குருகத்தி, நாகப்பட்டினம் மாவட்டம்  அருள்மிகு  பார்வதீஸ்வரர், திருத்தெளிச்சேரி, காரைக்கால் அருள்மிகு  மனுநாதேஸ்வரர், மருதவஞ்சேரி, திருவாரூர் மாவட்டம்

அதிசயம் நிறைந்த ஆலயங்கள்

அதிசயம் நிறைந்த ஆலயங்கள் ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் உள்ள கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும் சிங்கத்தின் வாய் பகுதியில் ஒரு கதவு தென்படும். அதன் வழியாக கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம். ஆனால் மேலேயிருந்து பார்த்தால் நாம் குளிப்பது தெரியாது.

திருச்செந்தூரில் உள்ள 24 தீர்த்தங்கள் பெயர் விவரம்  5

21 சேது தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர்க்குச் சகல பாதகத்தினின்றும் நீக்கி நன்மையைக் கொடுத்தருளவல்லது. 22 கந்தமாதன தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர்க்குப் பாவங்களைப் போக்கி பரிசுத்தத்தைத் தர வல்லது. 23 மாதுரு தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர்க்கு அன்னையைப் போன்று ஆசீர்வதித்து அதிலும் பன்மடங்கு அதிகமாக பலனைக் கொடுக்கும். 24. தென் புலத்தார் தீர்த்தம் – இதில் ஒரு தரம் மூழ்கி எள்ளுத் தண்ணீரும் இறைத்தவர்களுக்கு இம்மை மறுமையும் சிறந்து விளங்க…

திருச்செந்தூரில் உள்ள 24 தீர்த்தங்கள் பெயர் விவரம்  4

16 முனிவர் தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் ஜகத்ரட்சகனைக்கண்ட பலனைப் பெறுவர். 17 தேவர் தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோருக்கு காமம், குரோதம் லோபம் மோகம் மாச்சரியம் என்னும் ஆறு குற்றங்களை நீக்கி ஞான அமுதத்தை நல்கும். 18 பாவநாச தீர்த்தம் – இத்தீர்த்தம் குற்றமில்லாத முனிவர்களால் சபிக்கப்பட்ட சாபங்களை விலக்கி அனைத்துப் புண்ணியார்த் தங்களையும் அளிக்கவல்லது. 19 கந்தப்புட்கரணி தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் சந்திரசேகர சடாதரனுடைய திருவடியை முடிமிசைச் சூடும்…

திருச்செந்தூரில் உள்ள 24 தீர்த்தங்கள் பெயர் விவரம்  3

1 1வயிரவ தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் நீராடியோர் சரஸ்வதி, சோனை முதலிய நதிகளில் மூழ்கியவர் அடையும் பலனை அடைவர். 12 துர்க்கை தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் இம்மையிலே அடையும் துன்பத்தைப் போக்கி நன்மையைப் பெறுவர். 13 ஞானதீர்த்தம் – இந்தத் தீர்த்தம் இறைவனைப் பரவுவோருக்கும் பரவுவதற்கு நினைத்தோர்க்கும் நன்மையைக் கொடுத்தருளும். 14 சத்திய தீர்த்தம் – இந்தத் தீர்த்தமானது களவு, கள்ளுண்டல், கொலை, பொய், என்கின்ற ஐந்துடன், அகங்காரம், உலோபம், காமம், பகை,…

திருச்செந்தூரில் உள்ள 24 தீர்த்தங்கள் பெயர் விவரம்  2

6 திக்கு பாலகர் தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் கங்கை, யமுனை, காவிரி முதலிய தீர்த்தங்கள் கொடுக்கும் பலனைப் பெறுவர். 7 காயத்ரீ தீர்த்தம் – இந்தத் தீர்தத்தத்தில் மூழ்குவோர் அநேக வேள்விகளைச் செய்தவர் அடைகின்ற பலன்களைப் பெறுவர். 8 சாவித்ரி தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர்க்குப் பிரமாதி தேவர்களாலும் காண்பதற்கு அரிய உமாதேவியின் பொன்னடிகளைப் பூஜித்த பலனைப் கொடுக்கும். 9 சரஸ்வதி தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர்க்கு சகல ஆகம புராண…

திருச்செந்தூரில் உள்ள 24 தீர்த்தங்கள் பெயர் விவரம்  1

1 முகாரம்ப தீர்த்தம் – இதில் மூழ்குவோர் கந்தக் கடவுளின் கருணை அமுதத்தைப்பருகுவர். 2 தெய்வானை தீர்த்தம் – இந்த தீர்த்தத்தில் மூழ்குவோர் ஆடை அணிகலன், போஜனம், தாம்பூலம், பரிமளம், பட்டு, பூ அமளி என்கின்ற இன்பத்தைப் பெறுவர். 3 வள்ளி தீர்த்தம் – இந்தத் தீர்த்தம் ஒருமையுள்ளத்துடன் பிரணவ சொரூபமாய் பிரகாசிக்கின்ற கந்தப்பெருமானின் திருவடித்தாமரையைத் தியானிக்கும் ஞானத்தைக் கொடுக்கும். 4 லட்சுமி தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் வட திசைக்கு அதிபரான குபேரனும் அடைவதற்குரிய…

மேற்கு நோக்கிய சிவ திருத்தலங்கள் 3

 அருள்மிகு  மருந்தீசர், திருஇடையாறு, விழுப்புரம் மாவட்டம் அருள்மிகு  வீரட்டீஸ்வரர், திருக்கோயிலூர், விழுப்புரம் மாவட்டம் அருள்மிகு  சிஷ்டகுருநாதர், திருத்துறையூர், கடலூர் மாவட்டம் அருள்மிகு  வைத்தியநாதீஸ்வரர், வைதீஸ்வரன்கோயில், மயிலாடுதுறை மாவட்டம் அருள்மிகு  அமிர்கடேஸ்வரர், திருக்கடையூர், நாகப்பட்டினம் மாவட்டம்

மேற்கு நோக்கிய சிவ திருத்தலங்கள் 2

 அருள்மிகு  திருமேற்றளீஸ்வரர், திருக்கச்சி மேற்றளி, காஞ்சீபுரம் மாவட்டம் அருள்மிகு  காசி விஸ்வநாதர், கிருஷ்ணசமுத்திரம், திருவள்ளூர் மாவட்டம் .அருள்மிகு  ஜலநாதீஸ்வரர், தக்கோலம், வேலூர் மாவட்டம் 9)அருள்மிகு வாலீஸ்வரர், குரங்கனில்முட்டம், திருவண்ணாமலை மாவட்டம் அருள்மிகு  அருள்நாதீஸ்வரர், அரகண்டநல்லூர், விழுப்புரம் மாவட்டம்

மேற்கு நோக்கிய சிவ திருத்தலங்கள். 1

 அருள்மிகு கபாலீஸ்வரர், திருமயிலை, சென்னை அருள்மிகு மருந்தீஸ்வரர், திருவான்மியூர், சென்னை அருள்மிகு இருதயாலீஸ்வரர், திருநின்றவூர், சென்னை அருள்மிகு பாலேஸ்வரர், பாலேஸ்வரம், செங்கல்பட்டு மாவட்டம் அருள்மிகு வராஹீஸ்வரர், தாமல், காஞ்சீபுரம் மாவட்டம்

பஞ்ச நமஸ்காரங்கள்

:1) ஏகாங்க நமஸ்காரம் : தலை மட்டும் குனிந்து வணங்குதல் 2) துவிதாங்க நமஸ்காரம் : இரு கைகளையும் தலைக்கு மேல் குவித்து வணங்குதல் 3) பஞ்சாங்க நமஸ்காரம் : ( பெண்கள் மட்டுமே செய்ய வேண்டும் ) இரு கைகள் இரு முழந்தாள்கள் சிரசு ஆகிய ஐந்து அங்கங்கள் பூமியில் பதிய வணங்குதல் 4) சாஷ்டாங்க நமஸ்காரம் : இரு கைகள் இரு முழந்தாள்கள் சிரசு மார்பு ஆகிய ஆறு அங்கங்கள் பூமியில் பதிய வணங்குதல்…

கும்பாபிஷேகத்தின் வகைகள்.

ஆவர்த்தம் – ஓரிடத்தில் புதிதாக ஆலயம் அமைத்துப் பிரதிஷ்டை செய்யப்படும் மூர்த்திகளுக்குக் கும்பாபிஷேகம் செய்யப்படுவது. அனாவர்த்தம் – பூஜை இல்லாமலும் ஆறு, கடல் இவற்றால் சிதிலமடைந்திருந்தாலும் அக்கோயிலைப் புதிதாக நிர்மாணம் செய்து கும்பாபிஷேகம் செய்வது. புனராவர்த்தம் – கருவறை, பிரகாரம், கோபுரம் முதலியன பழுது பட்டிருந்தால் பாலாலயம் செய்து அவற்றை புதுப்பித்து அஷ்டபந்தனம் சார்த்தி பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்வது.

மீனாட்சி அம்மன் ஆலயத்தில் முக்குறுணி விநாயகர் தோன்றிய வரலாறு

திருமலை நாயக்கர், மதுரையை ஆட்சி செய்த காலகட்டம் அது. அந்த மன்னனுக்கு தீராத வயிற்று வலி உண்டானது. பல வைத்தியங்களைப் பார்த்தும், அது சரியாகவில்லை. எனவே தன்னுடைய வயிற்றுவலி நீங்கினால், மீனாட்சி அம்மன் ஆலயத்திற்கு ஒரு தெப்பக் குளம் கட்டித்தருவதாக வேண்டிக்கொண்டார். வேண்டுதல் நிறைவேறியதும், தெப்பக் குளம் அமைக்கும் பணி தொடங்கியது. குளம் தோண்டும் பணியின் போது, நிலத்துக்குள் இருந்து  விநாயகர் சிலை கிடைத்தது. அவரை மூலவர் சன்னிதிக்கு செல்லும் வழியில் தெற்கு நோக்கியபடி பிரதிஷ்டை செய்தனர்.…

தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஔவையார் ஆலயங்கள் 3

சேலம் மாவட்டத்தில் ஆலத்தூர், கல்வராயன்மலை, கராங்காடு, உத்தமசோழபுரம், பசுபதிபாளையம் ஆகிய இடங்களில் ஔவையார் ஆலயங்கள் இருக்கின்றன

தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஔவையார் ஆலயங்கள் 2

தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூா், தாழக்குடி, பூதப்பாண்டி, நாவல்காடு, இடும்பாவனம், துளசியாபட்டினம், திருவையாறு, குத்தாலம் ஆகிய இடங்களில் ஔவையார் கோவில்கள் காணப்படுகின்றன

தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஔவையார் ஆலயங்கள் 1

 கன்னியாகுமரி மாவட்டம் முப்பந்தல், நெல்லிமடம், முல்லைவாடி, குரத்தியறை, ஆதிச்சபுரம், தோவாளை ஆகிய பகுதிகளில் ஔவையாருக்கு ஆலயங்கள் உள்ளன.

அஞ்சலிவரத ஆஞ்சநேயர்

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டிக்கு அருகிலுள்ள மேட்டுப்பட்டியில் அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள மூலவரான ஆஞ்சநேயர் 16 அடி உயரத்தில் கைகளைக் கூப்பி வணங்கிய நிலையில் காட்சியளிக்கிறார். இந்த சிலை மிகப்பெரிய சாளக்கிராமக் கல்லால் செய்யப்பட்டது.

ஈக்காடு பஞ்சவர்ணேஸ்வரர்

திருவள்ளூரிலிருந்து செங்குன்றம் செல்லும் சாலையில், ஈக்காட்டில் அமைந்துள்ளது அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில். இக்கோயில் கருவறையில் அருள்பாலிக்கும் சிவபெருமான் காலை, முற்பகல், நண்பகல், பிற்பகல் மற்றும் மாலை நேரம் என ஐந்து வேளைகளில், ஐந்து நிறங்களில் காட்சியளித்து, அன்பர்களுக்கு அருள்பாலிப்பதால் இப்பெருமானுக்கு ‘பஞ்சவர்ணேஸ்வரர் என்பது திருப்பெயர்.

திருப்பதி மலைகளில் வீற்றிருக்கும் ஐந்து ஸ்ரீநிவாசர்கள்

திருப்பதி திருமலையில்1.த்ருவ ஸ்ரீநிவாசர், 2. போக ஸ்ரீநிவாசர், 3. கொலுவு ஸ்ரீநிவாசர், 4. உக்ர ஸ்ரீ நிவாசர், 5. மலையப்பர் என ஐந்து ஸ்ரீநிவாசர்கள் வீற்றுள்ளனர். இவர்களை பஞ்சபேரர்கள் என்று அழைக்கின்றனர்.

விருஷப மலை – அஞ்சன மலை-ஆனந்த மலை

விருஷப மலை: விருஷபன் என்ற அசுரன், இங்கு சுவாமியை வணங்கி மோட்சம் பெற்றான். அவனது பெயரில் இது ‘விருஷப மலை’ எனப் பெயர் பெற்றது. அஞ்சன மலை: ஆஞ்சநேயரின் தாய் அஞ்சனை. தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க ஆதிவராகரை வேண்டி தவமிருந்தா ள். அதன் பயனாக ஆஞ்சநேயரைப் பெற்றாள். இவளது பெயரில் ஏற்பட்ட மலை ‘ அஞ்சன மலை’ எனப்படுகிற து. ஆனந்த மலை: ஆதிசேஷன், வாயு பகவானுக்கிடையே போட்டி ஏற்பட் டபோது, மகாவிஷ்ணு நடுவராக இருந்தார்.…

வேதமலை கருட மலை:

வேதமலை: வேதங்கள் இங்கு மலை வடிவில் தங்கி எம்பெருமானை (ஸ்ரீனிவாசன்) பூஜித்தன. எனவே இது ‘வேத மலை’ எனப்பட்டது. கருட மலை: இங்கு சுவாமியை வணங்க வந்த கருடாழ்வார் வைகுண்டத்திலிருந்து ஏழுமலையை எடுத்து வந்தார். அதனால் இது ‘கருட மலை’ எனப் பெயர் பெற்றது.

வேங்கட மலை:

வேங்கட மலை: ‘வேம்’ என்றால் பாவம், ‘கட’ என்றால் ‘நாசமடைதல்’. பாவங்களைப் போக்கும் மலை என்பதால் இதற்கு ‘வேங்கட மலை’ என்று பெயர். இம்மலையில் வெங்க டாசலபதியாக (ஸ்ரீனிவாசன்) மகாவிஷ்ணு காட்சி தருகிறார்.

முருகனின் வடிவங்கள். 3

வள்ளி கல்யாணசுந்தரர் –  திருப்போரூர் முரகன் கோவில் தூண் ஒன்றில் இவரது திருவுரும் இருக்கிறது. பாலசுவாமி – திருச்செந்தூர், திருக்கண்டியூர், ஆண்டாள் குப்பம் ஆகிய தலங்களில் பாலசுவாமி திருவுருவம் இருக்கிறது. சிரவுபஞ்சபேதனர் – திருநெல்லிக்கா, திருக்குறங்குடி, திருநளிபள்ளி ஆகிய இடங்களில் இவரது திருவுருவம் உள்ளன. சிகிவாகனர் – மயில் மீது இருக்கும் முருகன் அருட்கோலம் இது.  ஆலயம் பலவற்றில் அழகுற அமைந்திருக்கும் திருவடிவம்.

முருகனின் வடிவங்கள். 2

குமாரசாமி – கங்கை கொண்ட சோழபுரத்தில் சிவன் கோவிலில், இவருக்குப் பஞ்சலோக விக்கிரகம் இருக்கிறது. சண்முகர் – திருச்செந்தூரில் உள்ள முருகன் அருட்கோலம் சண்முகர் திருவடிவமாகும். தாரகாரி – ‘ தாரகாசுரன் ‘ என்னும் அசுரனை அழித்ததால் முருகப் பெருமான் இந்தத் திருநாமத்தைப் பெற்றார்.  உலகமாயைகளில் இருந்து விடுபட வழிசெய்யும் திருக்கோலம் இது.  விராலி மலையில் உள்ள முருகன் கோவிலில் தாரகாரி அருள்கிறார். பிரம்மசாஸ்தா – காஞ்சிபுரத்தில் உள்ள குமரக்கோட்டம், ஆனூர், பாகசாலை, சிறுவாபுரி ஆகிய இடங்களில்…

முருகனின் வடிவங்கள். 1

சுப்பிரமணியர் – நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருவிடைகழியில் உள்ள முருகப்பெருமான் ஆலயத்தில் அருளும் மூலவர் ‘ சுப்பிரமணியர் ‘ ஆவார். கஜவாகனர் – திருமருகல், மேல் பாடி, சிதம்பரம் நடராஜர் கோவில் கீழைக்கோபுரத்தில் யானை மீது இருக்கும் முருகப் பெருமானை தரிசிக்கலாம்.  இவரை ‘ கஜவாகனர் ‘ என்கிறார்கள். சரவணபவர் – சென்னிமலை மற்றும் திருப்போரூர் திருத்தலங்களில் சரவணபவர்’  திருவுருவை காணலாம்.  கார்த்திகேயர் – கும்பகோணத்தில் உள்ள கும்பேஸ்வரர் கோவிலிரும், தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயத்திலும் கார்த்திகேயர் திருவுருவம்…

நூற்று ஒன்று சாமி மலை

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ளது கோட்டையூர். இங்குள்ள நூற்று ஒன்று சாமி மலை மீது உள்ள குகையில் ஒரு அடி உயரம் கொண்ட கல்லால் ஆன அகல் விளக்கு இருக்கிறது. இதில் இளநீர் விட்டு தீபமேற்றினால் அது பிரகாசமாக எரியும் அதிசயத்தைக் காணலாம்.

ஒரு ஆவுடையார்.. இரண்டு லிங்கம் :

ஆந்திர மாநிலம் காளேஸ்வரம் என்ற திருத்தலத்தில் காளேஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் ஒரே ஆவுடையார் மீது இரண்டு லிங்க மூர்த்தங்கள் அமைந்துள்ளது. இது மிகவும் அபூர்வமான, வித்தியாசமான அமைப்பாக உள்ளது. இந்த லிங்க மூர்த்தங்கள் முறையே காளேஸ்வரர் என்றும், முக்தேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகின்றன.

தனியாக முருகப்பெருமான்

கரூர் அருகே உள்ளது வெண்ணெய் மலை என்ற திருத்தலம். இந்த மலைமீது வீற்றிருந்து அருள்பாலிக்கிறார் முருகப்பெருமான். ஆனால் ஒரு விசித்திரம் என்னவென்றால், இங்கு அருளும் முருகப்பெருமான் தன்னுடைய வேல், மயில் இல்லாமலும், தனது தேவியர்களான வள்ளி- தெய்வானை ஆகியோர் இல்லாமலும் தனியாக வீற்றிருந்து அருள்புரிகிறார்.

காலாங்கி நாதரின் ஜீவ சமாதி

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலின் முன்புறம் தீர்த்தக்குளம் அருகே கொண்டுள்ளார் இடபேஸ்வரர் . இதுதான் காலாங்கி நாதர் ஒளி ஐக்கியம் பொருந்திய இடமாகும் .. எதிரே கரூரார் சித்தரின் படம் மாட்டப் பட்டுள்ளது காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் அன்னதானம் வழங்கும் இடத்தின் அருகே காலாங்கி நாதர் சமாதி பீடம் உள்ளது

மனித முக விநாயகர்:

திருவாரூர் மாவட்டம், கூத்தனூர் அருகே  உள்ளது முக்தீஸ்வரர் ஆலயம். இந்த கோயிலில் அருள்பாலிக்கும் விநாயக பெருமான் மனித முகத்துடன் ஆதி விநாயகர் என்ற பெயரில் தனிச் சன்னதியில் காட்சியளிக்கிறார்.

ரோம மகரிஷி ஜீவசமாதி அருள்மிகு மயிலாண்டவர் திருக்கோவில்.

திருஒற்றியூரில் உள்ள எல்லை அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. முதலில் அங்கே  சென்று, அந்த தெருவிலே சுமார் 50 மீட்டர் தொலைவு சென்றால் அங்கே,பல கடை மற்றும் வீடுகளுக்கு இடையில் ஒரு கோவிலுக்கான வாயில் இருக்கும். அங்கே வழிகாட்டி பலகையும் இருக்கும். அதனுள்ளே  2 அல்லது 3 வீடுகள் தாண்டி சென்றால், ரோம மகரிஷி ஜீவசமாதி இருக்கும்.

குழந்தை வடிவில் நந்தி

சிவன் கோவில்களில் இறைவனின் சன்னதிக்கு எதிராக நந்தியம் பெருமான் வாகனமாக வீற்றிருப்பார். அனைத்து சிவாலயங்களிலும் இது போன்ற அமைப்பில் தான் நந்தியை தரிசனம் செய்ய முடியும். ஆனால் திருச்சியில் உள்ள உண்ணக்கொண்டான் மலைமீது உள்ள உஜ்ஜீவநாதர் கோவிலில் குழந்தை வடிவத்தில் நந்தியம் பெருமானை தரிசனம் செய்யலாம். இந்த ஆலயத்தில் ஆதிபராசக்தியே ஜோஷ்டாதேவியாக அருள்பாலிப்பதாக ஐதீகம். இந்த அம்பிகையின் கையில் நந்திகேஸ்வரர், குழந்தை வடிவத்தில் வீற்றிருக்கிறார்.  

யனமதுரு ஸ்ரீ பார்வதி அம்பிகா சமேத சக்தீஸ்வரர் ஆலயம்

உலகில் வேறு எங்கும் காண இயலாத வகையில் தலைகீழாய்  சிரசாசனத்தில் சிவன் காட்சி தரும் அதிசய திருக்கோவில் ஆந்திர மாநிலம் பீமாவரம் அருகில் உள்ள யனமதுரு ஸ்ரீ பார்வதி அம்பிகா சமேத சக்தீஸ்வரர் ஆலயம் ஆகும்.  

எட்டியத்தளி அகஸ்தீஸ்வரர் கோவில்

புதுக்கோட்டை, அறந்தாங்கியிலிருந்து, 5 கி.மீ தூரத்திலுள்ளது எட்டியத்தளி அகஸ்தீஸ்வரர் கோவில். இது 2000 ஆண்டுகள் பழமையானது. இறைவியின் திருநாமம் அகிலாண்டேஸ்வரி.

மயானேஸ்வரர்

திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் உள்ள திருவிற்குடி மயானேஸ்வரர் ஆலயத்தில் சக்கரம் ஏந்திய சிவபெருமானை தரிசிக்கலாம். இத்தலம் சிவபெருமானின் எட்டு வீரச்செயல்கள் நிகழ்த்தப்பட்ட, அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றாகும்.

திருக்காரவாசல்

 திருக்காரவாசல் என்ற திருத்தலம்.திருவாரூர் அருகே உள்ளது, இங்கு கண்ணாயிரநாதர் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள இறைவன், நான்முகனான பிரம்மனுக்கு, ஆயிரம் கண்களோடு தரிசனம் தந்தவர் ஆவார். இந்த இறைவனை அரைக்கீரை தைலத்தால் அபிஷேகம் செய்து, அத்திப்பழம் நைவேத்தியம் செய்து வணங்கினால், கண் உபாதைகள் நீங்கும்.

சூரியன் வழிபடும் சிவன் கோவில்

ஒவ்வொரு ஆண்டும் ரத சப்தமி அன்று சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி வீசுகிறது. இத்தகைய அதிசயம் அம்ருதாபுரா அம்ருதேஸ்வரா கோவிலில் தான் நிகழ்கிறது. இது கர்நாடக மாநிலம், சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரேயில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது. கி.பி.1196-ம் ஆண்டு ஒய்சாலா மன்னர் அமித்தையாவால் அழகிய சிற்பக்கலையுடன் இக்கோவில் கட்டப்பட்டது.

விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர்

வேலூர் அருகே விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோவிலில் உள்ள தூணின் தென்பக்கத்தில் அரை சந்திர வடிவில் 1 முதல் 6 வரை மற்றும் 6 முதல் 12 வரை எண்கள் செதுக்கப்பட்டுள்ளன. அதற்கு மேற்புறம் உள்ள பள்ளத்தின் வழியே ஒரு குச்சியை நீட்டும்போது, குச்சியின் நிழல் எந்த எண்ணில் விழுகிறதோ அதுதான் அப்போதைய மணி ஆகும்.

பெருமாள் கோவில்களில்

பெருமாள் கோவில்களில் நவக்கிரக சன்னிதி இருப்பதில்லை. ஆனால், தருமபுரியில் இருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாப்பாரப்பட்டி எனும் ஊரில் அமைந்திருக்கும் அபீஷ்ட வரதராஜர் கோவிலில் நவக்கிரகங்கள் உள்ளன. அதோடு அந்த நவக்கிரகங்கள் பெண் வடிவில் காட்சி தருவதும் ஆச்சரியமான ஒன்றாகும்.  

மகாதேவர் ஆலயம்

கோட்டயம் மற்றும் திருவனந்தபுரத்துக்கு இடையே கோட்டயத்தில் இருந்து சுமார் நாற்பது கிலோ தொலைவில் உள்ளதே மகாதேவர் ஆலயம். அது சிவபெருமானின் ஆலயம். கொச்சினில் இருந்து சுமார் முப்பது கிலோ தொலைவில் இருக்கும். ஆலயத்தில் நான்கு பிராகாரங்கள். அனைத்தும் கறுப்புக் கல்லில் கட்டப்பட்டு உள்ளன. ஆலயத்தில் உள்ள சிவ லிங்கத்தின் உயரம் ஐந்து அடி. பரசுராமர் அமைத்த ஆலயம்

வெள்ளெருக்கு விநாயகர் கோவில்

சென்னைக்கு அருகில் உள்ள ஒரகடம் எனும் ஊரில் வெள்ளெருக்கு விநாயகர் கோவில் உள்ளது. கோவில் நிலத்தில் வெள்ளெருக்கஞ் செடிகள் வளர்க்கப்படுகின்றன.    

குலசை முத்தாரம்மன்

ஆலயத்தின் சிறப்புகள் சிவபெருமானுடன் சேர்ந்து அமர்ந்த கோலத்தில் அம்மன் இருக்கும் அரிய காட்சியை இந்த ஆலயத்தில் தரிசிக்க முடியும். இறைவன்- ஞானமூர்த்தீஸ்வரர். அம்பாள்- முத்தாரம்மன். சிவன் கோவில்களில் நந்தி இருக்கும். ஆனால் குலசையில் அம்மனுக்கு எதிரே சிம்மம் உள்ளது இங்குள்ள முத்தாரம்மன் சிலை, கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியில் உள்ள சிற்பியின் கனவில், அம்பாளே சென்று செய்யச் சொன்னதாக தல வரலாறு சொல்கிறது. அம்மை நோயை தீர்க்கும் ஆற்றல் கொண்ட தெய்வம் என்பதால், இந்த அன்னைக்கு ‘முத்தாரம்மன்’ என்ற…

சுவாமிமலை

தமிழ் வருடங்கள் அறுபதையும் படிகளாகக் கொண்ட படைவீடு சுவாமிமலை தந்தை – மகன் பிரச்சினைக்குத் தீர்வு காணத் தரிசிக்க வேண்டிய ஆலயம் இதுவாகும்.  

திருத்தணி

சூரபத்மனை வென்ற பிறகு, முருகப்பெருமான் சினம் தணிந்து அமர்ந்த இடம்  திருத்தணி சினம்கொண்டவர்கள் குணம் மாறவும், சிநேகம் கொள்ளவும், செல்ல வேண்டிய இடம் திருத்தணியாகும்.  

சக்கரத்தாழ்வார்

சக்கரத்தாழ்வார்  மதுரை மாவட்டத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருமோகூர் திருத்தலம். தனி சன்னிதியில் 16 கரங்களுடன் வீற்றிருக்கும் சக்கரத்தாழ்வார் திருக்கோலம், பார்ப்பவர் நெஞ்சை கொள்ளை கொள்ளும் திவ்விய தரிசன காட்சியாகும். இவரது 16 கரங்களிலும் பல்வேறு ஆயுதங்கள் உள்ளன. இவரது பின்புறம் நரசிம்மர் சங்கு, சக்கரத்துடன் காட்சி தருகிறார். இந்த சக்கரத்தில் உள்ள 6 வட்டங்களில் 154 எழுத்துக்களும், 48 இறைவன் திருவுருவங்களும் அமைந்துள்ளன. இவரை தரிசனம் செய்வதால் பில்லி, சூனியம், ஏவல், கொடும்…

108 திவ்யதேசங்களில்

108 திவ்யதேசங்களில் முதன்மை ஆலயமான ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீரங்கநாதப் பெருமாளுக்கு அமாவாசை, ஏகாதசி, மாதப்பிறப்பு ஆகிய நாட்களில் வெந்நீரால் அபிஷேகம் செய்வார்கள். வேறு எந்த திவ்ய தேசத்திலும் இதுபோல் செய்வதில்லை

சோட்டானிக்கரை பகவதி அம்மன்

சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஒரு நாளுக்கு மூன்று விதமான ஆடைகள் அணிந்து மூன்று வடிவங்களில் காட்சி தருகிறாள். காலையில் வெண்ணிற ஆடையுடன் சரஸ்வதி தேவியாகவும்; உச்சி வேளையில் செந்நிற ஆடையுடன் லட்சுமி தேவியாகவும்; மாலையில் நீல நிற ஆடையில் துர்க்கா தேவியாகவும் காட்சி தருகிறாள். இந்த மூவகை தரிசனத்தைக் காண்பவர்கள் நினைத்தது நிறைவேறும்.

தலையில் சக்கரம் உள்ள நந்தியம்பெருமான்

வேந்தன்பட்டி கிராமத்தில் (புதுக்கோட்டை) உரையும் நெய் நந்தீஸ்வரர் கோவிலில் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால், இந்த கோவிலில் உள்ள நந்திக்கு நெய் அபிஷேகம் செய்யப்படும், ஒரு எறும்போ, ஈயோ வந்து மொய்த்து அந்த நெய்யை தீண்டுவதில்லை. நந்தியம்பெருமான் தலையில் ஒரு சக்கரம் உள்ளது, அதுவே இதற்கு காரணம் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். நந்தியம் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுகிற நெய்யானது, கோவிலுக்குள் இருக்கும் கிணற்றில் சேகரிக்கப்படுகிறது. அங்கும் ஒரு பூச்சியும் மொய்ப்பதில்லை.

தெய்வம் ஒன்று.. வடிவம் மூன்று

கேரளா மாநிலம் வைக்கத்தில் மகாதேவர் ஆலயம் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் உள்ள சிவபெருமான் ஒவ்வொரு வேளையிலும் ஒவ்வொரு வடிவில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். அதிகாலை தொடங்கி காலை 8 மணி வரை தட்சிணாமூர்த்தியாகவும், உச்சிப் பொழுதில் வேடுவ வடிவிலும், மாலையில் பார்வதி, விநாயகர், முருகப்பெருமான் ஆகியோருடன் குடும்ப சகிதமாகவும் காட்சி தந்து அருள்பாலிக்கிறார்.

ஓட்டமட காளியம்மன்

ராமநாதபுரத்திலிருந்து சத்திரக்குடி செல்லும் சாலையில் தீயனூர் கிராமத் தில் கம்பீரமாக காட்சி தந்து அருள்பாலிக்கிறாள் ‘ஓட்டமட காளியம்மன்’. பக்தியோடு பக்தர்கள் சமர்ப்பிக்கும் கல்லையும் காணிக்கையாக ஏற்று அருள்புரியும் கருணை நாயகி இவள். ஒவ்வொரு முறையும், இப்பகுதியில் இருக்கும் நெடுஞ்சாலை வழியாக பாலங்கள், வீடுகள் கட்ட ஜல்லி மற்றும் செங்கற்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களின் ஓட்டுநர்கள், அவற்றிலிருந்து சிறுபகுதியை காணிக்கையாக அம்மனிடம் வைத்து வழிபாடு செய்துவிட்டுச் செல்வார்கள். இதனால் அவர்களின் பயணமும், கட்டுமானத் தொழிலும் விபத்துகளோ, தடைகளோ எதுவும்…

மதுரை மீனாட்சி அம்மன்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் கீழ் கோபுரத்தின் நடுவிலிருந்து மேல் கோபுரத்தை நோக்கி ஒரு கோடு போட்டால், அது சிவலிங்கப் பெருமான் வழியாகச் செல்லும். அது போல் வடக்கு – தெற்கு கோபுரங்களுக்கிடையே கோடிட்டுப் பார்த்தால், அது சுந்தரேசர் சன்னதியை இரண்டாகப் பகிர்ந்து செல்லும். இந்த அமைப்பு அக்கால சிற்பிகளின் அபரிமிதமான திறனை வெளிப்படுத்துகிறது.

அதிசய முருகர்

தர்மபுரி மல்லிகார்ஜூனேஸ்வரர் ஆலயத்தில் வீற்றிருக்கும் முருகப்பெருமான் வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறார். பொதுவாக முருகப் பெருமான் மயிலில் அமர்ந்தபடியோ, அல்லது மயிலின் அருகில் நின்றபடியோ தான் ஆலயங்களில் வீற்றிருப்பார். ஆனால் இந்த ஆலயத்தில் உள்ள முருகப்பெருமான் திருவுருவம், ஐயப்பன் போல் குந்தளமிட்ட நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. இவர் அருகில் இருக்கும் மயிலின் அலகில் பாம்பு ஒன்று காணப்படுகிறது. மற்றொரு பாம்பு படமெடுத்த நிலையில் முருகனுக்கு ஆதார பீடமாக உள்ளது.

கல்யாண சுப்ரமணியர்

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையத்துக்கு அருகில் உள்ளது பச்சைமலை முருகன் கோயில். பழநி முருகனைப் போலவே மேற்கு நோக்கி தங்க பீடத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார், இங்குள்ள கல்யாண சுப்ரமணியர். இவருக்கு தாராபிஷேகம் செய்வது விசேஷம்  108 லிட்டர் பால் கொண்டு அபிஷேகித்து, 11 முறை ருத்ரம் ஓதி வழிபடுவதால் நீண்ட ஆயுள், குழந்தை பாக்கியம் ஆகிய வரங்கள் கிடைக்கும் 

அதிசய கருடன்

நாச்சியார் கோயிலில் கல் கருடன் சன்னிதி உள்ளது. ஒன்பது நாகங்கள் அவர் உடலில் இருப்பதால், நவக்ரஹ தோஷம் நிவர்த்தி ஆகும். கல் கருடனே உத்ஸவத்தில் வலம் வருவார். அதன் எடையை ஆரம்பத்தில் 8,16,32,64 பேர்கள் வரை சுமப்பதும், திரும்ப கோயிலில் நுழைந்து கர்ப்பக்கிருஹம் செல்லும்பொழுது 64, 32, 16, 8 பேராகப் படிப்படியாகக் குறைந்து கடைசியாக நான்கு பட்டர்கள் மட்டும் சுமப்பதும் ஒரு அதிசயம் என்றால், கருடன் உத்ஸவத்தில் வீதிஉலா வரும் பொழுது கருடனுக்கு வியர்ப்பதும், பட்டர்கள்…

வல்லக்கோட்டை முருகன் கோவில்

செல்வ வளம் தரும் வல்லக்கோட்டை முருகன் கோவில் காஞ்சிபுரத்தில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும், கிழக்கு தாம்பரத்தில் இருந்து முடிச்சூர், ஒரகடம் வழியாக 28 கிலோமீட்டர் தூரத்திலும், ஸ்ரீபெரும்புதூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் வல்லக்கோட்டை திருத்தலம் உள்ளது.

கால பைரவர் வழிபாடு

கால பைரவருக்கு தாமரைப்பூ மாலை, வில்வ மாலை, தும்பைப்பூ மாலை, சந்தன மாலை ஆகியவை  உகந்ததாக கூறப்படுகிறது. வாசனைப் பூக்களில் மல்லிகைப் பூவை தவிர்த்து மற்ற அனைத்து பூக்களும் பைரவருக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன. அபிஷேகப் பிரியரான சிவபெருமானின் அம்சம் என்பதால், பைரவருக்கு சந்தன அபிஷேகம் மிகவும் உகந்ததாக கூறப்படுகிறது. அதனுடன் வாசனை திரவியங்களான புனுகு, அரகஜா, ஜவ்வாது, கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ. பச்சை கற்பூரம் ஆகியவையும் அபிசேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

சொர்ண ஆகர்ஷண பைரவர்

சுவர்ண கால பைரவர், செல்வத்திற்கு அதிபதியான பைரவரை சொர்ண ஆகர்ஷண பைரவர் என்றழைக்கின்றார்கள். இந்த திருக்கோலத்தில் இடது கையில் கபாலத்துக்கு பதிலாக அட்சய பாத்திரம் இருக்கிறது. ஸ்வர்ணம் (தங்கம்) தந்தருளியவர் என்பதால் கபாலத்தை, அட்சய பாத்திரமாக வைத்திருப்பதாக சொல்கிறார்கள். இவரிடம் வேண்டிக் கொள்ள வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. இவர் இரண்டு நாய் வாகனங்களுடன் காட்சி தருவது மற்றொரு சிறப்பு.

கால பைரவர்

காசி மாநகரில் காவல் தெய்வமாகவும் காக்கும் கடவுளாகவும் காலபைரவர் திகழ்கிறார். காசியில் பைரவருக்கு வழிபாடுகள் முடிந்த பிறகுதான் காசி விஸ்வநாதருக்கு வழிபாடுகள் நடைபெறும் வழக்கம் உள்ளது. காசி யாத்திரை செல்பவர்கள் கங்கையில் நீராடி வழிபட்டு இறுதியாக காலபைரவரையும் வழிபட்டால் தான் காசி யாத்திரை செய்ததன் முழுப் பலனும் கிட்டும் என்பது விதியாகும்.

காசி மாநகரில் அஷ்ட(எட்டு) பைரவர்கள் 8

சம்ஹார பைரவர் சம்ஹார பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் எட்டாவது தோற்றமாவார். இந்த பைரவர் காசி மாநகரில் த்ரிலோசன சங்கம் கோவிலில் அருள்செய்கிறார். நாயை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் ராகு கிரக தோஷத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான சண்டிகை விளங்குகிறாள்.

காசி மாநகரில் அஷ்ட(எட்டு) பைரவர்கள் 7

பீக்ஷன பைரவர் பீக்ஷன பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி ஏழாவது தோற்றமாவார். இந்த பைரவர் காசி மாநகரில் பூத பைரவ கோவிலில் அருள் செய்கிறார். சிங்கத்தை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் கேது கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான சாமுண்டி விளங்குகிறாள்.

காசி மாநகரில் அஷ்ட(எட்டு) பைரவர்கள் 6

கபால பைரவர் கபால பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஆறாவது தோற்றமாவார். இந்த பைரவர் காசி மாநகரில் லாட் பசார் கோவிலில் அருள் செய்கிறார். கருடனை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சந்திர கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள்.  இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான இந்திராணி விளங்குகிறாள்.

காசி மாநகரில் அஷ்ட(எட்டு) பைரவர்கள் 5

உன்மத்த பைரவர் உன்மத்த பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஐந்தாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் பீம சண்டி கோவிலில் அருள்செய்கிறார். குதிரையை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் புதன் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான வராகி விளங்குகிறாள்.

காசி மாநகரில் அஷ்ட(எட்டு) பைரவர்கள் 4

குரோதன பைரவர் குரோத பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் நான்காவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் காமாட்சி கோவிலில் அருள்செய்கிறார். கருடனை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சனி கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான வைஷ்ணவிவிளங்குகிறாள்.

காசி மாநகரில் அஷ்ட(எட்டு) பைரவர்கள் 3

சண்ட பைரவர் சண்ட பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் மூன்றாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் துர்க்கை கோவிலில் அருள்செய்கிறார். மயிலை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் செவ்வாய் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான கௌமாரிவிளங்குகிறாள்.

காசி மாநகரில் அஷ்ட(எட்டு) பைரவர்கள் 2

ருரு பைரவர் ருரு பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் இரண்டாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் காமாட்சி கோவிலில் அருள்செய்கிறார். ரிசபத்தினை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சுக்கிரனின் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான காமாட்சி விளங்குகிறாள்.

காசி மாநகரில் அஷ்ட(எட்டு) பைரவர்கள்  1

காசி மாநகரில் திசைக்கொன்றென விளங்கும் எட்டு பைரவர்கள் அஷ்ட பைரவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். சில கோவில்களில் பைரவிகளுடன் இணைந்து தம்பதி சகிதமாகவும் இந்த பைரவர்கள் காட்சிதருகிறார்கள். அசிதாங்க பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் முதன்மையானவர் ஆவார். இப்பைரவர் காசி மாநகரில் விருத்தகாலர் கோவிலில் அருள்செய்கிறார். அன்ன பறவையினை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் குருவின் கிரக தோசத்திற்காக அசிதாங்க பைரவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான பிராம்ஹி விளங்குகிறாள்.

காசியை சுற்றி உள்ள 12 சூரிய கோவில்கள் 12

மயூகாதித்யர் கங்கைக்கரையில் உள்ள பஞ்ச கங்கா காட் அருகில் மயூகாதித்யர் என்னும் சூரியக்கோவில் உள்ளது.  புராண காலத்தில் சூரியன் இங்கு கபஸ்தீஸ்வரர், மங்களகவுரி என்னும் பெயரில் சிவ – பார்வதியை பிரதிஷ்டை செய்து லட்சம் ஆண்டுகள் தவமிருந்து வழிபட்டார்.  மனம் இரங்கிய சிவன், சூரியனுக்கு ‘மயூகன்’ ( என்றும் அழியாதவன் ) என்று பெயர் சூட்டினார்.  காசிக்கு சென்றால், காசி விஸ்வநாதரை தரிசிப்பதோடு அங்குள்ள சூரியக் கோவில்களையும் வழிபட்டால் சகல நலமும் பெறலாம்.

காசியை சுற்றி உள்ள 12 சூரிய கோவில்கள் 11

விருத்தாதித்யர்      விருத்தன் என்னும் வேதியர் சூரியனை வழிபட்டதால் முதுமை நீங்கி மீண்டும் இளமை அடைந்தார்.  விருத்தன் வழிபாடு செய்த    விருத்தாதித்யர் காசியிலுள்ள மீர்காட்டில் கோவில் கொண்டிருக்கிறார்.

காசியை சுற்றி உள்ள 12 சூரிய கோவில்கள் 10

சாம்பாதித்யர் கிருஷ்ண அவதாரத்தின் போது, கிருஷ்ணருக்கு மகனாக பிறந்தவனின் பெயர் சாம்பன். இவன் ஒரு முறை தொழு நோய் பாதிப்புக்கு உள்ளானான். தனது மகனின் துன்பத்தைக் கண்ட கிருஷ்ணன், சூரியனை வழிபடும்படி மகனுக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து காசிக்கு வந்த சாம்பன், சூரிய பகவானை வழிபட்டு நோய் நீங்கப் பெற்றான். அவன் வழிப்பட்ட சூரியனை, காசியில் சாம்பாதித்யர் என்ற பெயரில் காண முடியும்.

காசியை சுற்றி உள்ள 12 சூரிய கோவில்கள் 9

கேசவாதித்யர் காசியில் உள்ள வருணா சங்கமத்தில் சூரியன் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக காசி காண்டம் கூறுகிறது. திருமாலின் அருளால் சூரியன் அமைத்த சிவலிங்கம் இது. இங்கு அருள் புரியும் சூரியன் ‘கேசவாதித்யர் ‘ எனப்படுகிறார்.

காசியை சுற்றி உள்ள 12 சூரிய கோவில்கள் 8

உத்திர அர்க்கர் காசிக்கு வடக்கிலுள்ள ‘அலேம்புரா’ என்னும் இடத்தில் உத்திர அர்க்க குண்டம் என்னும் சூரிய தீர்த்தம் உள்ளது. வக்ரியா குண்டம்’ என்றும் இதைக் கூறுவர். இந்த தலத்தில் ஒரு ஆடும், ஒரு பெண்ணும் தவமிருந்து சூரியனின் அருளைப் பெற்றனர். இங்குள்ள சுவாமிக்கு ‘ உத்திர அர்க்கர் ‘ என்பது பெயர்.

காசியை சுற்றி உள்ள 12 சூரிய கோவில்கள் 7

திரவுபதி ஆதித்யர் சூரியன் அளித்த அட்சய பாத்திரத்தின் மூலம் திரவுபதி அனைவருக்கும் அன்னமிட்டாள். அவள் வழிபட்ட சூரியக்கோவில் காசியிலுள்ள அட்சயபீடத்தில் உள்ளது. சூரியனுக்கு திரவுபதி ஆதித்யர் என்று பெயர்.

காசியை சுற்றி உள்ள 12 சூரிய கோவில்கள் 6

சுஷோல்கர் ஆதித்யர் கருடன் தன் தாய் விநதையுடன் சூரியனை வழிபட்டு அளப்பரிய பலம் பெற்றார். அதன் விளைவாக விஷ்ணுவின் வாகனமாகும் பேறு கிடைத்தது. தாயும் மகனும் வழி பட்ட சூரிய பகவானை ‘சுஷோல்கர் ஆதித்யர்’ என்று அழைக்கின்றனர். காசியிலுள்ள திரிலோசனர், காமேஸ்வரர் கோவில் பிரகாரத்தில் இந்த சூரியனுக்கு சன்னிதி உள்ளது.

காசியை சுற்றி உள்ள 12 சூரிய கோவில்கள் 5

எமாதித்யர் சூரியனின் மகன் எமதர்மன் தன் சக்தியை அதிகரிக்க விரும்பி, சூரியக் கோவில் கட்டியதாக புராணங்கள் கூறுகின்றன. எமாதித்யர் என்னும் பெயரில் இங்கு அருளும் சூரியனுக்கு காசி சங்கடா காட்டில் கோவில் உள்ளது.

காசியை சுற்றி உள்ள 12 சூரிய கோவில்கள் 4

விமலாதித்யர் தொழுநோயால் அவதிப்பட்ட விமலன் என்ற மன்னன், முனிவர்களின் ஆலோசனைப்படி சூரிய பகவானை வழிபட்டான். அவனுக்கு காட்சியளித்த சூரியன், இனி உன் வம்சத்தில் யாருக்குமே தொழுநோய் வராது என அருள் புரிந்தார். காசியில் கதோலியா என்ற இடத்திற்கு அருகிலுள்ள ஜங்கம்பாடியில் சூரியனுக்கு கோவில் உள்ளது. இவருக்கு ‘விமலாதித்யர் ‘ என்ற பெயர்.

காசியை சுற்றி உள்ள 12 சூரிய கோவில்கள் 3

லோலார்க்கர் மன சஞ்சலம், துன்பத்தை தீர்த்து வைப்பவர் என்பதால் சூரியனை ‘ லோலார்க்கர் ‘ என்று அழைப்பர். காசியிலுள்ள அதிசங்கமத்தில் இவருக்கு கோவில் உள்ளது. இங்குள்ள ‘லோலார்க்க குண்டம்’ என்னும் குளம் புகழ்மிக்கது.

காசியை சுற்றி உள்ள 12 சூரிய கோவில்கள் 2

அருணன் காசியப முனிவரின் மனைவி விநதை, இரண்டு பிள்ளைகளை பிரசவித்தாள். முதல் பிள்ளை அருணன், இரண்டாவது பிள்ளை கருடன், சூரிய பகவானை வழிபட்ட அருணன், அவரது தேரை செலுத்தும் சாரதியாகும் பேறு பெற்றார். காசி திரிலோசனர் கோவிலில் அருணன் வழிபாடு செய்த சூரிய பகவான் ‘அருணாதித்யர்’ என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.

காசியை சுற்றி உள்ள 12 சூரிய கோவில்கள். 1

கங்காதித்யர் கங்கையை பூமிக்கு வரவழைத்தவர் பகீரதன், இவர் தன்னுடைய முன்னோர்கள் நற்கதி அடைவதற்காக ஆகாயத்தில் இருந்த கங்கையை பூமிக்கு கொண்டு வந்தார். கங்கை பூமிக்கு வந்ததை அறிந்த சூரியன், இங்கு வந்து கங்கையை வழிபட்டார். அவர் வழிபட்ட சூரியக் கோவில் லலிதாகாட் படித்துறை அருகில், கங்காதித்யர் என்ற பெயரில் அமைந்துள்ளது.

ஓதி மலை முருகன் கோவில்

சத்தியமங்கலம் அருகே 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஓதி மலை, இங்கே பழமையான முருகன் கோவில் அமைந்துள்ளது . ஒதிமலையில் உலகிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் ஐந்து முகங்களும் , எட்டு கரங்களும் கொண்ட ஸ்ரீ முருகபெருமான் அருள்பாலிக்கிறார் . ஆறுபடை உள்பட முருகபெருமான் வீற்றிருக்கும் மலைகளிலேயே இதுதான் மிகவும் உயர்ந்தது. கோவில் 1800 செங்குத்தான படிகளை கொண்டது, . புஞ்சைப்புளியம்பட்டி யிலிருந்து சிறுமுகை -மேட்டுப்பாளையம் செல்லும் வழி அல்லது பவானிசாகரில் இருந்து சிறுமுகை…