ஸ்ரீ ராஜராஜேஸ்வரி பிரார்த்தனா டிரஸ்டின் குறிக்கோள்கள்
தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்
-
அன்பின் ஆற்றலை மக்களுக்கு உணர்த்துதல்
-
உடலின் சிறப்பையும், உடல் ஆரோக்கியமாக இருக்கும் அறிவை போதித்தல்.
-
சுய கட்டுப்பாட்டையும் அதனுடைய மேன்மையையும்,மகத்துவத்தையும் மக்கள் அறியும்படி செய்தல்.
-
அறிவிற்கும், புத்திக்கும், அன்பிற்கும் உண்டான நிலைகளை உணர்த்துதல்.
-
ஒவ்வொரு குடிமகனின் தலையான கடமை நாட்டை போற்றுதலும், நாட்டை வளர்ச்சிக்கு உரிய பாதையில் செலுத்துவதற்கு உண்டான பொறுப்பை மனதில் பதிய வைத்தல்.
-
அன்போடும், அறத்தோடும் வாழும் வாழ்க்கை தான் சிறந்தது என்பதை மக்கள் மனதில் பதிய வைத்தல்.
-
உடல் நலத்திற்கு முக்கியத்துவம் தருவது போல் உள்ளத்தின் மேன்மைக்கும் உண்டான யுக்திகளை கற்றுக் கொடுத்தல்.
-
கல்வியின் சிறப்பை எல்லோரும் அறிய ஊக்குவித்தல்.
-
நம் நாட்டின் அரும்பெரும் கலைகளை பாதுகாக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தை உருவாக்குதல்.
-
நாட்டிற்கும், வீட்டிற்கும் உள்ள தொடர்பை மக்களுக்கு அறிவித்தல், அதை உணர்த்துதல்.
-
தியானத்தையும், பிரார்த்தனையையும் அதனுடைய சக்திகளையும் மக்களுக்கு போதித்தல்.