யோசிக்க 5
பொருளாதார விடுதலை: நாட்டின் பொருளாதாரத்தை சோஷலிச கட்டுபாட்டுத் தளைகள் சிலவற்றில் இருந்து விடுவித்து குறைந்தளவு தாராளமயமாக்கம், நமக்கு 7 முதல் 9 சதவிகிதம் வருடாந்திர பொருளாதார வளர்ச்சி பெறும் நிலையைக் கடந்த 20 வருடங்களில் ஏற்படுத்தியுள்ளது. அவசியத் தேவையாக இன்னும் கூடுதலான தாராளமயமாக்கம் செய்யப்பட வேண்டும். ஆனால், அரசாங்கத்தின் பொருளாதார ஆட்சிமுறைகளில் முன்னேற்றம் காணாமல், முழு தாரளமயமாக்கம்கூட வளர்ச்சியை நீடிக்கப் போதுமானதாக இருக்காது.
